Blog Archive

Monday, March 10, 2008

எப்போது எழுதக் கூடாது?




என் பின்னூட்டப் பெட்டியில் ஏதோ சரியில்லை. கவிழ்த்து வைத்து விட்டேனானு பரிசோதனைப் பின்ன்ஊட்டமும் போட்டுப் பார்த்தேன்.
ம்ஹூம்.
சரியாகத்தான் இருக்கு. டெஸ்ட் கமெண்ட் வ்அந்து விட்டது.
அப்புறம்?? வேற என்ன காரணம் இருக்க முடியும்?
உம் எழுத்தில் பிழை இருக்கிறதுனு சொல்ல
ஒரு நக்கீரரோ, ஒரு சீத்தலைச் சாத்தனாரோ
இதுவரை நம் பதிவில் குட்டவில்லை.
பின் ஏன் இப்படியாச்சு...
புரியலையேப்பா,.
எழுதினதோ கொஞ்சம் சீரியஸ் டாபிக் தான்.குழந்தைகள்
அவரவர் வாழ்க்கையில் சந்திக்க நேரும் சில பிரச்சினைகள்.
இது கற்பனை துளியும் இல்லாத நிஜம்.
இப்போ நடக்கிற கரண்ட் சப்ஜெக்ட்!!
அதை யாருமேவா படிக்கவில்லை?
என்னப்பா இது.
மகா மோசமாப் போயிடுத்தே.
நாமும் விடுமுறைல போகணுமோ;)
என்ன எல்லாமோ யோசனை.
அப்படியாவது இந்த மனசு நீ ஒரு மொக்கைப் பதிவு போட்டுட்டேனு ஒத்துக்கறதா.
ஹ்ம்ம் நானாவது ........அப்படீனு புத்தி(ஈகோ,அகம்) எதுவேணா வைத்துக் கொள்ளலாம்:))
அப்போதான் ந்ஆன் செய்த தப்பு புரிந்தது.
என்ன தெரியுமா?
இது வீகெண்ட்.
அப்ப வீக் எண்ட் பதிவுனு தலப்பு வச்சிருக்கணும்.
நல்ல தலைப்பு வைக்காமல் பின்னூட்டம் எதிர் பார்க்கக் கூடாது.
அப்புறம் ஞாயிற்றுக்கிழமை பதிவு போடக் கூடாது.
அப்புறம் கீதாசாரம் சொல்றது போல
பதிவு போடலாம் பின்னூட்டம் கணக்குப் பண்ணக் கூடாது.
சக பதிவர்களே, என் இனிய நட்புகளே,(ஐஸ்)
நீங்கள் பின்னூட்டம் போடாதது உங்கள் தப்பு இல்லை
(பதிவு போட்ட நேரம்
தான் சரியில்லை:))



19 comments:

துளசி கோபால் said...

அது:-)

வல்லிசிம்ஹன் said...

அதே:)
அப்பாடி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! துளசி வாழ்க;)

ambi said...

//அப்ப வீக் எண்ட் பதிவுனு தலப்பு வச்சிருக்கணும்.
நல்ல தலைப்பு வைக்காமல் பின்னூட்டம் எதிர் பார்க்கக் கூடாது.
அப்புறம் ஞாயிற்றுக்கிழமை பதிவு போடக் கூடாது.
//

ஹிஹி, செம உள்குத்து. :p

போன பதிவை படிச்சாச்சு.

பதிவுக்கு தலைப்பு வைக்கறதே தனி டெக்னிக்.

உரிய தட்சணை(வேற என்ன சுட சுட கேசரி 2 பிளேட் மட்டும்) குடுத்தால் சொல்லிதரப்படும். :))

இலவசக்கொத்தனார் said...

இனிமேலாவது நல்ல நேரம் பார்த்துப் பப்ளிஷ் பண்ணுங்க.

வல்லிசிம்ஹன் said...

இப்படிச் சொல்லிட்டாப் போறுமா அம்பி????????
நீங்க தான் க்ளாஸ் எடுங்களேன்.
நிஜமாப்பா.

எனக்கு ஒண்ணு புரிஞ்சாகணும் ரேஞ்சில பினாத்தி இருக்கேன்.

சாரி சுரேஷ்:)
வகுப்பெடுத்தா அடுத்த வருடம் மார்ச் 10த் வரை கேசரி உண்டு:))))

வல்லிசிம்ஹன் said...

கொத்ஸ் சார்.
அடியேன் கேட்டுக்க ரெடி.

அப்படியே சென்னைல மிச்ச மீதி இருக்கிற ஜோசியர்களைக் கண்டு ஒரு மாசத்துக்கு வேண்டும் என்கிற நேரங்களை வாங்கிக்கிறேன்:))

தி. ரா. ச.(T.R.C.) said...

இதை நான்ஒத்துக்க மாட்டேன்.

காட்டாறு said...

நெத்தியடி. அம்மாடி.. இவ்ளோ இருக்கா? நல்ல நேரம் பார்க்க இங்கே தமிழ் காலெண்டர் கூட கிடையாதே. ;-)

காட்டாறு said...

சொல்ல மறந்துட்டேனே. சூப்புல ப்லாகர் சூப்பர்!

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச சார்,

எதை ஒத்துக்கலைனு சொல்லுங்கோ/.
ஞாயிற்றுக்கிழமை பதிவு போடலாம்னு சொல்கிறீர்களா:))

வல்லிசிம்ஹன் said...

காட்டாறு,
அம்மா பயமுறுத்தாதே ராசாத்தி. நெத்தியடியா!!!

அச்சு அசல் புலம்பல்மா..புலம்பல்.அழுவாச்சி.:)))
மொக்கை போடணும்னு உத்தரவு ஆகி இருந்தது.
அதான்...

Geetha Sambasivam said...

//வேற என்ன சுட சுட கேசரி 2 பிளேட் மட்டும்) குடுத்தால் சொல்லிதரப்படும். :))//

அலையாதீங்க அம்பி, கஜகேசரி யோகம்னு ஜோசியம் எழுதினாக் கூட அதிலே கூடவா கேசரி நினைப்பு? க்ர்ர்ர்ர்ர்ர்,. விளக்கெண்ணெய் தயாராக் காத்துட்டு இருக்கு.

வல்லி, நல்லாப் போட்டிருக்கீங்க படங்கள், உங்க வலைப்பக்கம் ரொம்ப நாளைக்கு அப்புறம்., (எப்போ? போன யுகமா? தெரியலை) இன்னிக்குத் திறந்தது. ப்ளாகருக்கு நன்றி. எல்லாம் ஒரு விளையாட்டுத் தான், கொஞ்சம் பொறுத்துக்குங்க, சில சமயம் ப்ளாகர் மெயிண்டனன்ஸ் சொல்லமலேயே செய்துட்டு இருந்திருக்கும், அதான் வரலைனு நினைக்கிறேன்,சரியாயிடும்.

வல்லிசிம்ஹன் said...

கீதா, ரொம்ப நன்றி.ப்லாக்கர் மெயிண்டெனென்ஸ்னா பொறுக்கலாம்.
தப்பே இல்லை. நீங்க ஏதும் படப்போட்டிக்கு அனுப்பலியா.
இந்தப் பதிவில எல்லாப்படமும் கூகிளார் கொடுத்ததுதான்.

Geetha Sambasivam said...

போட்டியா? நானா? அதிலெல்லாம் கலந்துக்கறதே இல்லை, கலந்துக்கணும்னு நினைச்சா அன்னிக்குப் பார்த்து ப்ளாகர் சொதப்பும்! வம்பா என்ன? :P

தி. ரா. ச.(T.R.C.) said...

உங்க மொக்கையெல்லாம் மொக்கைன்னு ஒத்துக்கமுடியாது.

எல்லார்போடும் மொக்கையெல்லாம் மொக்கையெல்லை
அவர் போட்டும் மொக்கையே மொக்கை

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான். உங்க படைப்புகளுக்குப் படங்கள் வேண்டாம். சொல்லும் விஷயங்களே அழகா இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச;))
யாரை நொந்துக்கிறீங்க இங்க.?
அவர்னா யாரு????

Subbiah Veerappan said...

////அப்புறம் ஞாயிற்றுக்கிழமை பதிவு போடக் கூடாது.
அப்புறம் கீதாசாரம் சொல்றது போல
பதிவு போடலாம் பின்னூட்டம் கணக்குப் பண்ணக் கூடாது.
சக பதிவர்களே, என் இனிய நட்புகளே,(ஐஸ்)
நீங்கள் பின்னூட்டம் போடாதது உங்கள் தப்பு இல்லை
(பதிவு போட்ட நேரம்
தான் சரியில்லை:))/////

வல்லியம்மா - இதற்கெல்லாம்
வருந்தலாமா?

All the days are not ours!
When the transit Moon is in the 6th, 8th & 12 place to our native rasi, that days are not good for the native!:-)))))

வல்லிசிம்ஹன் said...

ஆஹா. ஆசானே வந்துவிட்டார்.
ஆமாம் சார்.
கண்டிப்பா நான் அந்தப் பதிவு எழுதினது அஷ்டமியாவும்,
பப்ளிஷ் பண்ணினது பரணி கிருத்திகையாக்வும் இருக்கச் சாத்தியக்கூறுகள் அதிகம்.:))
இல்லாவிட்டால் எழுதினதுபோது புத்திமட்டான சந்தர்ப்பமும்

ஒரு காரணமாக இருக்கலாம்.
எல்லாவற்றுக்கு மேல தோல்வி என்பதை எதிர்கொள்ளமுடியாத சுபாவமும் ஒரு காரணம்.
அதுதான் உண்மை.
நன்றி சுப்பையா சார்.