Blog Archive

Sunday, March 23, 2008

282,ஓ ராமா நின் நாமம்




திரு.மகராஜபுரம் சந்தானம் 'ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா'
என்று பாடும்போது எத்தனை புண்ணியம் செய்திருக்கிறார் இவர் இந்த ராம நாமத்தைப் பாட என்று நினைத்துக் கொள்வேன்.
கேட்பதற்கும் நமக்குக் காதுகளும் கொடுத்தாரே இந்த ராமன்!!
மகான்கள் பாடும் போதும் ,ராமனைப் பற்றி உபன்யாசங்கள் கேட்கும் போதும் இந்த பக்தியும் பற்றுதலும் எப்படி என்னுள்ளும் மற்றவர்கள் உள்ளத்திலும் வளர்ந்தது என்று உணரும்போது ஏற்படும் சிலிர்ப்பு சொல்ல முடியாதது.
வெறும் சாதாரண கடைநிலை மனுஷிக்கே இந்த உணர்வு வரும் என்றால்,
பக்த ராமதாஸ்,தியாகய்யா இவர்களின் பக்தியைய் என்ன சொல்வது.
ராமா உன்னை நேருக்கு நேர் பார்த்தவர்கள்,உன்னை தன்
ஒவ்வொரு அணுவிலும் உணர்ந்த இந்த மகானுபாவர்களை
எப்படி ஏற்றிப் புகழ்வது.!
எவ்வளவு கோடி முறை உன்னை நாவால் பூசித்தாலும்,மனசால் ஸ்மரித்தாலும்,உடலால் வணங்கினாலும் இந்த பக்தி கிடைக்குமோ ராமா.
எங்கே தேடினால் வருவாய்.
ராமா நீ
மதுராந்தக ஏரிக்கரையிலா
பத்ராசல சிறைச்சாலையிலா
தியாகய்யாவின் நிறைவிடத்திலா
பக்தர்களின் உள்ளத்தில் நிறைந்தவனே வெளியே தேட வேண்டாம் உன்னை. என்னுள்ளே இருக்கும் ராமனையே துதிக்கிறேன்.
வாழி பல்லாண்டு உன் சீதையுடனும்
உன் னுயிர்ச் சகோதரர்களுடனும்.
சிரஞ்சீவிஅனுமனுடன்
விபீஷண சுக்ரிவர்களோடு
இன்னும் எங்களோடு நீ இரு.
புது வருடச்
சித்திரை இரண்டாம் நாள் ராமன் மீண்டும் வருகிறான்.
அவன் வருவதற்கு ஆயத்தம் செய்ய வேண்டாமா?
அதற்குத்தான் இந்தப் பதிவு.:)

22 comments:

வெட்டிப்பயல் said...

//ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா'//

இது ஸ்ரீ ராமதாஸு பாடிய பாடல் தானே? "ஓ ராமா நீ நாமா எந்தோ ருச்சிரா"

இந்த பாட்டை கேட்டா தானா கண்ணுல தண்ணி வந்துடும்...

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் பாலாஜி.

எந்த ருசிரா ராமா ஏமி ருசிரா'
என்று பாடலை
பால முரளி க்ருஷ்ணாவும் பாடிக் கேட்டு இருக்கேன்.
மகாராஜபுரம் குரலில் ராமா எப்படி இருக்கே, என்னை இப்படி உருக வைக்கிறியே என்கிற பாவம் வெளிப்படும்.
இன்னும்
'என் மேல் உனக்கு எப்போ தயவு பிறக்கும் என்ற பாட்டும் கண்ல தண்ணி கேஸ்தான்...

இலவசக்கொத்தனார் said...

ராமர் வரும் பொழுது மெனு என்ன? சொல்லவே இல்லையே!!

வல்லிசிம்ஹன் said...

வரணும்மா கொத்ஸ்.
பத்திய ராமர்னு பிறந்துவீட்டு மெனு. நீர்மோர்,பானகம்,வடாபருப்பு அவ்வளவுதான்.கூடவே ராமர் பாடல்கள்.கற்பூரம் ஆரத்தி.

புகுந்த வீட்டில் ஸ்ரீராமாயணம், ஸ்ரீராமபட்டாபிஷேகம் படித்து,

வடை,பாயசம்னு கலயாண சமையல்;)உங்க வீட்டில எப்படிமா:)

jeevagv said...

இராம ரசம்!

இராமம் நல்ல நாமம்

துளசி கோபால் said...

மெனெக்கெடாமக் கொண்டாடும் பண்டிகை இது. என் ஃபேவரிட் கூட.

அதானே என்னைப் போல சோம்பேறிக்குப் பிரியமானது :-)))))))))))))))))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஜீவா.

அதில்லென்ன சந்தேகமே இல்லை.

அபயம் மித்ராத் அபயம் அமித்ராத்
அபயம் ஜ்ஞாதாத் அபயம் புரௌயக அபயன்நக்தம் அபயம் திவாநஹ
சர்வ ஆதா மம மித்ரம் பவந்து//
சர்வ ஆபத்திலிருந்தும் என்னக் காப்பாற்றும் மந்திரம் இது என்று தந்தை சொல்லிய மந்திரம் ராமம்.

ambi said...

கரக்ட்டா வந்தேன்.

அருமையான பாடல்.

ஜோ ஜோ ராமா கேட்டு இருக்கீங்களா? நான் ஒரு தடவை அப்படியே தூங்கிட்டேன். :))

மெனுவுல சூடா உளுந்து வடை கிடையாதா? :p

paattiennasolkiral said...

ஓ ராமா நின் நாமா என்ன ருசி !

இந்த அற்புதமான கீர்த்தனை பூர்வி கல்யாணி ராகத்தில்
அருணா சாயிராம் அவர்கள் பாடுவதை இங்கு கேளுங்கள்.

http://www.youtube.com/watch?v=1v0UIF8gOMQ

2.47 வரை அறிமுக நேரம். அதற்குப்பின்பு தான் பாடல் வருகிறது.

இதே கீர்த்தனை நித்யஸ்ரீ பாடுவது
www.musicindiaonline.com
ல் உள்ளது.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://movieraghas.blogspot.com

ஜயராமன் said...

அம்மணி,

மிக அழகாய் எழுதி இருக்கிறீர்கள். நன்றி.

ஆயிரம் பேர் பாடினாலும் எனக்கு மதுரை சோமு பாடும்போதுதான் அந்த நாமத்தின் ருசி மனதில் முழுதாய் ஆர்ப்பரிப்பதாய் தோன்றுகிறது. நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?

இராமபிரானை விட அவன் நாமத்துக்கு மகிமை அதிகம் என்று ஆஞ்சநேய புராணத்தில் வரும் ஒரு சிறு கதை நமக்கு காட்டுகிறது (ராமருடனேயே அனுமன் போர் புரியும் கதை..) நாம் வங்கிக்குப்போனால் பணம் தர மாட்டார்கள். ஆனால், நம் கையெழுத்து போனால் பணம் கிடைத்துவிடும் என்பது போல என்பார் என் தந்தை. நான் தேவியை விட்டாலும் விடுவேன், தம்பி லட்சுமணனை விட்டாலும் விடுவேன், ஆனால் என்னை நம்பிய பக்தர்களை கை விட மாட்டேன் என்கிறான் இராமாயணத்தில் ராமன். வால்மீகி நாரதரிடம் 16 குணங்களைச்சொல்லி அந்த குணங்கள் பொருந்தியவன் ராமனே என்கிறார் நாரதர். சந்திரனுக்கும் 16 கலைகள் (அமாவாசை முதல் பௌர்ணமி வரை...) அதுபோல நம் இராம-சந்திரனுக்கும் 16 குணங்கள். அதனால்தான் அவன் சூரியவம்சத்தில் உதித்த சந்திரன்!

அவன் நாமம் நம் மனதில் இருக்கும்வரை நமக்கேன் கவலை!

நன்றி

ஜயராமன்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அக்கா!
இவற்றைப் பலதடவை கேட்டுள்ளேன். ராமா என்ற சொல்லைத் தவிர எதுவும் புரிந்ததில்லை.
எனினும் ஒரு சுகானுபம் இதைக் கேட்கும் போது இருப்பதால் கேட்கிறேன்.

jeevagv said...

+ போட்டாச்சு!

வல்லிசிம்ஹன் said...

அம்பி,ஜோ அச்சுதானந்தா ஜோ ஜோ முகுந்தா பாட்டும்,

நீங்க சொல்கிற ஜோ ஜோ, ஊஞ்ஜலில் உட்கார்ந்து கேட்டால்
ம்ம் அமிர்தம்ம்ம்ம்ம்ம்ம்.

வல்லிசிம்ஹன் said...

இந்தப் பாருங்கடா. யாரோ ஒருத்தர் தன்னைச் சோம்பேறின்னு சொல்லிக்கிறார்.
துளசி, உங்க வீட்டுக்கு யாரோ ராமநவமிக்கு யாராவது சாப்பிட வரப் போறாங்கனு சொன்னாங்கப்பா.
அப்போ மெனு எப்படி இருக்கும்னு பார்த்தேன். கிருஷ்ண ஜயந்தியும் சேர்ந்து ராமநவமி வந்துடும்:)0

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மேனகா. நீங்க கொடுத்த லின்க் போய்ப் பாடல்களைக் கேட்டேன். மிக மிக நன்றி.
இந்தப் பாடலுக்கு இருக்கும் ஈர்ப்பு அப்படிப் பட்டது
அருணா சாயிராம் பக்திக்காகவே பிறந்தவரோ!!
மிக்க நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

யோகன், இசைக்கு மொழியே வேண்டாம் இல்லையா.
அந்த ஒரு நாமம் தவிர மற்றது எனக்கும் புரியாது.
இதுவாகத்தான் இருக்கும் என்று நானாக நினைத்துக் கொள்வேன். இருந்தாலும் ரசித்து ருசித்து எங்க வீட்டில் எல்லோருமே கேட்பர்கள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஜயராமன்.
முதலில் கேட்டது மதுரை சோமு
அவர்களின் ஓ ராமா வைத்தான்.
பின்னாட்களில் பி வி ராமன்&லக்ஷ்மணன் சகோதரர்கள் பாட்டு.
அதற்குப் பிறகுதான் மஹராஜபுரம் சந்தானம்:)
// அவன் நாமம் நம் மனதில் இருக்கும்வரை நமக்கேன் கவலை//
உண்மை உண்மை.

தி. ரா. ச.(T.R.C.) said...

ராம நாமம் ஜனம ரக்ஷ்க மந்திரம் தாமசம் செய்யாமல் ஜபித்திடு மனமே
காமகோடி ரூப ரமச்சந்திரனும் காமிதார்த்த பலத்தை தருபவனும் அவன் தான்
தியானஸ்வரூபனும் தியகராஜனால் பாடப்பெற்றவனும் ராமன் தான்.ராமனை நினைத்தால் ஏது பயம் ராமனின் கைகளில் நாம் அபயம். இதுவும் தியகராஜர் பாட்டுதான். அடணாவில்.

ராம நவமிக்கு நல்ல கட்டியம் கூறினீர்கள். வல்லியம்மா.பங்குனி மாதம் 27ஆம் தேதி உங்கள் வீட்டுக்கு நிச்சியம் ராமன் வருவான் ஆசிதர.அப்போது சொல்லுங்கள்

" என் பிரணநாதனே! என்னைக்காக்க என் வீட்டிற்கு நடந்து வந்தீர்களா! கமலக்கண்ணா.
உன் திருமுகத்தைப் பார்த்துகொண்டிருப்பதே என் வாழ்வென்று நான் மனத்தில் நினைத்துக்கொண்டிருக்கும் மர்மத்தை தெரிந்து கொண்டு என்னை காக்க நடந்து வந்தாயோ.
இந்திர நீலமணியை நிகர்த்த தேகப் பொலிவுடன் அழகிய மார்பில் அசைந்தாடும் முத்துமாலையைக் குவியலுடன், கையில் பற்றியுள்ள கோதண்டம் மற்றும் அம்புகள் இவற்றின் ஒளியுடன் பூமாதேவியின் மகளான சீதாதேவியுடன் என்னைக் காக்க நடந்து வந்தோயோ. தியகராஜனால் வணங்கப்பெறும் ராமனே"

தியகராஜரின் பெண் கல்யாணத்தின் போது அவருடைய சிஷ்யர் வாலாஜபேட்டை வெங்கடரமண பாகவதர் ஒரு சீதாராம பட்டாபிஷேக படத்தை பரிசாக கொண்டு வந்தார். அதைக் கேட்ட தியகராஜர் மண்டபத்தின் வாசலுக்கே வந்து" நன்னு பாலிம்ப நடசி உச்சினவோ நா பிராண நாயகா" என்று பாடினார்.

துளசி கோபால் said...

//நீங்க சொல்கிற ஜோ ஜோ, ஊஞ்ஜலில் உட்கார்ந்து கேட்டால்
ம்ம் அமிர்தம்ம்ம்ம்ம்ம்ம். //

ஒரு சின்ன கூடுதலான விவரம்

இதை இங்கே நம்ம வீட்டு ஊஞ்சலில் உட்கார்ந்து கேட்கணும்.ஆமாம்:-))))

எப்ப வர்றீங்க வல்லி?

வல்லிசிம்ஹன் said...

தி.ரா ச, பழைய காலத்தில் பென் பார்க்க வரும்போது மருகேலராவும், நடச்சி வச்சிதிவோவும் தான் பிரபலம்மாம். அம்மா சொல்லிக் கேள்வி:)
ராமச்சந்திரனும் கண்ணனும் வருவதுன்னா சும்மாவா.
வருக வருக என்று வரவேற்கிறோம்.

வல்லிசிம்ஹன் said...

இதோ அடுத்த வருஷம் வந்துடறோம்
பொண்ணு பிறந்த நாள் பரிசாக டிக்கட் வாங்கித் தராளாம்.
நியூசிலாண்ட் போயேன்மானு சொல்லறா.;)
துளசி ஊஞ்சல் ரெடியா!!!

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஜீவா +க்கு.:))