Blog Archive

Saturday, March 01, 2008

எழுதக்கூடாதது என்ன?



நாமும்தான் எழுத ஆரம்பிச்சு ஒரு ரெண்டு வருஷம் ஆகிறது.

பிடிச்ச பதிவு பிடிக்காத பதிவு ஒண்ணும் கிடையாது.

நம்ம பசங்களை நாமே குறை சொல்லக் கூடாது.


எனக்கும் என் சின்னத் தம்பிக்கும் ஒரு அன்யோன்யம் உண்டு.

நான் சொல்றதுக்கெல்லாம் அவன் ஆமாம் சாமி போடுவான்.


சின்னவயசில் வாங்கின குட்டுகள் நினைவில வச்சிருந்தானு நினைக்கிறேன்.


அதே போல அவன் அங்க போனோம்,இங்க போனோம்னு அவன் அலுவல் விஷயமாக சென்ற இடங்களில் சம்யோசிதமாக நடந்து ஏகப்பட்ட அன்னிய செலாவணி கண்டுபிடிச்ச வீரப் பிரதாபங்கள் சொல்லும்போது, உன்னை மாதிரி உண்டாடா'ன்னு நானும் சொல்லுவேன்,.

அது எங்களுக்கு ஒரு மியூச்சுவல் அட்மிரேஷன் சொசைட்டினு பெயர் வாங்கிக் கொடுத்து விட்டது:)) அதனால் நாம சொல்லும் எல்லாமே சுவாரசியமானது என்கிற நினைப்பு வந்து மனதில் தங்கி விட்டது.
வலைப்பூ ஒன்று ஆரம்பித்து அதில் அபிப்பிராயங்களை எழுத ஆரம்பித்ததும் சில பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள் நிறைய வரும்(10னு வச்சுக்கலாமெ:) ) சிலதுக்கு 2 வரும்.
அதில ஒண்ணு என்னுடைய பதிலாக இருக்கும்.:)
திடீர்னு ஒரு நாள் தம்பி கிட்ட பேரன் பிறந்த போது நான் செய்த அசட்டுக் காரியங்களையெல்லாம் சொல்லிச் சிரித்த போது,ஏய், எல்லாத்தையும் குறிப்பெடுத்து வை. என்னிக்காவது ஒரு நாள் நீ ஜர்னலிஸ்ட் ஆனா நீ கருப்பொருள் தேட வேண்டாம் பாரு,என்று சீண்டுவான்.
''ஒரு நாள்...!!'' என்று அண்ணாமலை லெவல்ல சபதம் சொல்வேன்.
படித்தவர்கள் எங்கள் புகுந்த வீட்டில் சற்றே அதிகம்.
எல்லா மொழியும் கலகலப்பாக வந்து போகும்.
காளிதாசன்,பர்த்ஹரி,,ரகுவம்சம்,ஸ்ரீ பாஷ்யம் என்றெல்லாம் விவாதிக்கப் படும்.
நானும் சமையலறையிலிருந்து பஜ்ஜி,போண்டா எல்லாம்
கொண்டு வந்து சாப்பிடக் கொடுக்கும் போது,
ஆவலாக இருந்தாலும் புரியாத காரணத்தால் நீட்டோலை வாசியா நெடுமரமாக நிற்க மனமின்றி,
வெங்காய பஜ்ஜியா, காலிஃப்ளவர் பஜ்ஜியா ஆராய்ச்சிக்குப் போய் விடுவேன்.
அதில் ஒரு வெகு தூர உறவினர், ''நீ ஒண்ணுமே பண்ணலியா அப்புறம்?? ''என்று கேட்டால்
கேள்வி புரிந்தாலும், இல்லையே டீ போடலாம்னு இருக்கேன்.' என்பேன்.
உலக மகா ( நகைச்சுவை )ஜோக் சொன்ன மாதிரி அவர் சிரிப்பார்.
அது போக என்னை,மாற்றி ஒரு அசாதாரண அறிவு ஜீவியாக மாற்ற இவர்கள் செய்த அத்தனை முயற்சியும் வீணாகின.
நமக்கு அப்போது சமையல்,வெளிவேலைகள்,குழந்தைகள்,பாடங்கள், துணிமணி மடித்து இஸ்திரி,ஒட்டடை இதற்கு நடுவே கந்தன் லைப்ரரி புத்தகங்கள். இதுவே போதுமானதாக இருந்தது.
ஆனால் பதிவுகளில் நீடித்து இருப்பதற்கு இவை போதாது,. இன்னும் நிறையப் படிக்க வேண்டும் தமிழை.
நேரம் இருக்கிறதே!!
சுஜாதா சார் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த புத்தகத்தையாவது இன்னும் ரெண்டு தடவை படிக்கலாம்.
பாவை விளக்கு படிக்கலாம்.
எப்படி எழுதினார்கள் என்று கொஞ்சமாவது தெளியலாம் இல்லையா.












Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal




Posted by Picasa

17 comments:

வல்லிசிம்ஹன் said...

இந்தப் பதிவை எழுத ஆரம்பித்தபோது இருந்த கரு வேறு.
சுஜாதா சார் மேலுலகம் கிளம்பிவிட்டார்னு தெரிந்ததும் எழுத வந்ததே மறந்துவிட்டது.
அதனால் மனதில் தோன்றியதை எழுதி விட்டேன். உங்களுக்குப் புரிந்தால் பின்னூட்டமிடுங்கள்.;))

Anonymous said...

\அதில் ஒரு வெகு தூர உறவினர், ''நீ ஒண்ணுமே பண்ணலியா அப்புறம்?? ''என்று கேட்டால்\\ ஒண்ணுமே பண்ணாம இருக்கறதும் ஏதாவது பண்ணறது தானே.

துளசி கோபால் said...

புரியாம என்ன?

பஜ்ஜி, போண்டாவைப் படிச்சதில் அப்ப இரூந்தே நீங்க வலைப்பதிவர் சந்திப்புகளைத் தொடங்கி இருக்கீங்கன்னு நல்லாவே புரியுது:-))))))

இப்ப இந்த //மியூச்சுவல் அட்மிரேஷன் சொசைட்டினு // இதுக்குப்பேர் முதுகு சொறிதலாம்:-))))

கோபிநாத் said...

\\எழுதக்கூடாதது என்ன? \\\

அப்படி ஒன்றும் இல்லை ;))

வல்லிசிம்ஹன் said...

சின்ன அம்மணி, நாம சும்மம இருக்கறதே சில பேருக்குப் பாரமாப் போயிடுதும்மா:)

வல்லிசிம்ஹன் said...

இன்னிக்குப் பாதி பதிவரை ஒருமிட்டங்கியில் நானும் மதுவும் பார்த்துட்டோம்.

சுஜாதா சார் மீட்டங்கியிலதான்.
அருமையா நடந்ததுப்பா.

வல்லிசிம்ஹன் said...

அதானே கோபி, நாம் எழுதப் பிறந்தவர்கள்.;)

மெளலி (மதுரையம்பதி) said...

//பஜ்ஜி, போண்டாவைப் படிச்சதில் அப்ப இரூந்தே நீங்க வலைப்பதிவர் சந்திப்புகளைத் தொடங்கி இருக்கீங்கன்னு நல்லாவே புரியுது:-))))))//

ரீப்பீட்டே!!!!

வல்லிசிம்ஹன் said...

அட, ஆமாம். மௌலி இப்படி ஒரு கோணம் இருக்குனு தெரியாமப் போச்சே:)

நன்றிம்மா.

ambi said...

//''ஒரு நாள்...!!'' என்று அண்ணாமலை லெவல்ல சபதம் சொல்வேன்.
//

ஹஹா! என்னால சிரிப்பை அடக்க முடியலை.

இவ்ளோ அழகா, நளினமா வார்த்தைகளை கோர்த்து எழுதற நீங்களே இப்படி சொன்னா, அப்ப நான் எல்லாம் எங்க போய் முட்டிக்கறது? (இது மியூச்சுவல் அட்மிரேஷன் இல்லை) :))

ஹூம் வெறும் காத்து தன் வருது. :p

நானானி said...

ஹாங்ஹாங்...ஒருமாரியாப் புரிஞ்சுது.
ஆமா..?'மியூச்சுவல் அட்மிரேஷன்'அப்டின்னா என்னா?
ஒருத்தர் முதுகை ஒருத்தர் சொறிஞ்சுக்கிறாதா?

வல்லிசிம்ஹன் said...

காத்துதான் வருதா:)
மியுச்சுவல்னு எப்படி சொல்ல முடியும்?
நீங்க தான் இநத வல்லிம்மா பாவம்னு கமெந்ட் போட்டு
அன்பு செய்றீங்க.

இனிமேக் கொண்டு நானும் அப்படி இருக்கக் கத்துக்கணும்.
ஆஹா சவால் விடறதில என்னை யாரும் மிஞ்ச முடியாது.
அப்பாப்போ மாத்திப்பேன் அவ்வளவு தான்:))

வல்லிசிம்ஹன் said...

நானானி அதெதான்.
நீ என்னைப் பாடற மாதிரி பாடு. பின்பாட்டு நான் பாடறேன் சொல்ல மாட்டோமா அதுதான்..:)

Deepa said...

வல்லிசிம்ஹன்
PiT க்கான பதிவை தூக்கிட்டீங்களா..?
page not found ன்னு வருது.. slide show லெ யும் உங்க படங்கள் காணாமல் போயிடுச்சு..
please confirm and clarify ( இதை தமிழில் எப்படி சொல்லரதுன்னும் சொல்லிடுங்க... I have to use this very frequently.. especially during contest season)..
:-)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம், தீபா:)
அந்தப் படங்களைக் கொஞ்சம் பின் நவீனத்துவம்(போஸ்ட் ப்ரொடக்ஷன்)
செய்யலாம்னு
ஆரம்பித்து சொதப்பல் ஆச்சு.
அதனால் டெலிட் செய்துட்டு புதுசா ஒரே ஒரெ ஒரு படம் போட்டிருக்கேன்.

நன்றிபா.
please confirm and clarify.

நீங்கள் என்ன புரட்டல் திரட்டல் செய்தீர்கள் என்று உறுதிப்படுத்தவும்:))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அக்கா!
//அதில் ஒரு வெகு தூர உறவினர், ''நீ ஒண்ணுமே பண்ணலியா அப்புறம்?? ''என்று கேட்டால்
கேள்வி புரிந்தாலும், இல்லையே டீ போடலாம்னு இருக்கேன்.' என்பேன்//

இந்த நளினத்தை ரசித்தேன்.இவை பெண்களுக்குக் கைவந்த கலை போல்

வல்லிசிம்ஹன் said...

வரணும் யோகன்.

கண்டிப்பா இது ந்அளினமானு தெரியாது. அவங்களும் நம்மை ஏதோ கடுப்பாகச் சொல்ல வராங்கனு தெரிகிறது.
நாமும் அந்த ரீதியில் பதில் சொல்ல வேணாம்.
கடைசியில் நாம சொன்னதுதான் நிக்கும். அதனால் அந்த நிமிஷம் சட்டுனு ஒரு பாதுகாப்பு வார்த்தை
வந்துவிடுகிறது.
குடும்பம் பல்கலைக் கழகம்னு தனே சொல்கிறார்கள். நிறையக் கற்றுத்தருகிறது.:)