Blog Archive

Sunday, January 13, 2008

எழுதியதில் பிடித்தது(கண்மணி அழைப்பு)

கண்மணி 'டாக்' செய்து அழைத்துவிட்டார்.

நீங்கள் எழுதியதில் மிகச் சிறந்தது என்று எண்ணும்

'பெஸ்ட்'

பதிவுகளை முதலும்,ரன்னர் அப் என்றும்

வகைப்படுத்திச் சொல்ல வேண்டும் பதிவிட

வேண்டும் என்று கேட்டிருந்தார்.



உங்களுக்கும் இப்போது அவைகளைப்

பகிர்ந்து கொள்கிறேன்.



முதலில் என்னை எனக்கே அறிமுகப்படுத்தியது

இந்தத் தமிழ்மணப் பதிவுகள்தான்.

நாமெல்லாம் நினைவுகளில் நிறைய வாழ்பவர்கள்.

அதுவும் மறக்க முடியாத சில நிகழ்ச்சிகள்

நம்மை மீண்டும் மீண்டும் சுவைக்கச் சொல்லும்.

சிலது சிலுசிலுப்பாக மனசைத் தடவிக் கொடுக்கும்.



சில சம்பவங்கள் மனதில் பதிந்து அவ்வப்போது மிரட்டும்.



அவற்றையெல்லாம் உறவுகள் ,குழந்தைகள் ,சினேகிதர்கள்

இப்படி கூட்டம் போடும்போது பேசிக் கொள்வதுதான்.

மனது இலேசாகிவிடும்.

இப்போது அதற்கு இணையமும் கிடைத்தபிறகு

தூள் கிளப்பக் கஷ்டமே இல்லை.



முதலில் நான் தேர்ந்தெடுப்பது



''ரசமும் நானும் பில்வாக்கரும்''



http://naachiyaar.blogspot.com/2007/01/blog-post_16.html

அனுபவம் புதுமை வகையில் வெகு நாள் எண்ணிச் சிரித்தது இந்த நிகழ்ச்சி.

உங்களுக்கும் பிடித்திருந்தால் சொல்லுங்கள்:))

அடுத்ததும் அதற்கு அடுத்ததாக


ரன்னர் அப்களாக இரண்டு பதிவுகளைக் கொடுக்கிறேன்.


ஏனெனில் ஒரு பதிவு பெற்ற அம்மா அப்பாவைப் பற்றியது. இன்னொன்று காப்பாற்றிய தெய்வத்தைப்


பற்றியது..


ஜயா நாராயணன் கல்யாண வைபோகமே


http://naachiyaar.blogspot.com/2007/08/blog-post.html





வேறு யாரும் துணை இல்லாத போது

http://naachiyaar.blogspot.com/2006/09/blog-post_27.html



நன்றி கண்மணி. இந்தச் சந்தர்ப்பம் நீங்கள் கொடுத்ததால் என்னையே நான் திரும்பிப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
ஒரே ஒரு வித்தியாசம்.
இந்தக் காக்கைக்கு க் கொஞ்சம் கூடுதலாகவே பொன்குஞ்சுகள்:)

நான் அழைக்க விரும்புபவர்கள்,

அம்பி,
கோபிநாத்,
தி.ரா.ச,
ஜிரா ராகவன்,
இ.கொத்ஸ்,
கீதா சாம்பசிவம்

இவர்கள் பதிவுகள் அனைத்துமே பெஸ்ட் தான்.
இருந்தாலும் த பெஸ்ட் என்று ஒன்றும் இருக்கும்:))
எதிர்பார்க்கலாம். வாருங்கள் நண்பர்களே.

26 comments:

வல்லிசிம்ஹன் said...

கலர் கலராகப் எழுதாமல் போய்விட்டோமே என்று இப்போது
தோன்றுகிறது:)


அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
இனிய பொங்கல் நல் நாள் வாழ்த்துகள்.

கண்மணி/kanmani said...

நன்றி வல்லியம்மா
பழையவற்றை அசை போடுவதும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதும் சுவாரஸ்யமானது உங்கள் பதிவுகளைப் போல!
இது நம்மை நாமே திரும்பிப் பார்த்துக் கொள்ளுதல் அதனால் எல்லா பதிவுகளுமே பொன் குஞ்சுகள் தான்;)

என் ஜனவரி மாதத்து பதிவில் [2007 என்னைக் கவர்ந்த பதிவர்கள்] படிக்கலையா இன்னும்.உங்களை சொல்லியிருப்பேன் பாருங்கம்மா

கோபி அக்கா ஏன் உன் பேரை பெஸ்ட் டேக்ல அழைக்கலேன்னு இப்ப புரிந்திருக்கும்.
வல்லியம்மாக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும் :)


பொங்கல் வாழ்த்துக்கள் வல்லிம்மா

கோவி.கண்ணன் said...

//அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
இனிய பொங்கல் நல் நாள் வாழ்த்துகள்.//

உங்கள் இல்லத்தினர் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் !

இலவசக்கொத்தனார் said...

வல்லிம்மா, இன்னும் ஒரு தொடர் விளையாட்டா? கமிட் பண்ணிக்கிட்ட பதிவு எல்லாமே போட்டு முடிக்கலையே. கொஞ்சம் டயம் குடுங்கம்மா....

பாச மலர் / Paasa Malar said...

ரசித்து எழுததீருக்கிறீர்கள்...ரசம், கல்யாணம்,பருத்தி..எல்லாமே..அருமை..பில் வாக்கர் மஞ்சள் தண்ணீர் சமாச்சாரம், குதிரைக்கு வயிறு சரியில்லாதது..எனக்கே மறக்க முடியாது என்று நினைக்கிறேன்...

வல்லிசிம்ஹன் said...

மனம் நிறைந்த பொங்கல்வாழ்த்துகள் கண்மணி.
இன்னும் நிறைய அழகா எழுதி எல்லாரையும் மகிழ்விக்க
வாழ்த்துகள் சொல்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கண்ணன்.

ஆரோக்கியமும் மனமகிழ்ச்சியும்
நிறைந்த நாட்கள் தொடற,
இந்தப் பொங்கலும்
வரும் பொங்கல்களும் வளமாயிருக்க வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

கொத்ஸ்,
பரவாயில்லம்மா.

நேரம் வந்ததும் எழுதுங்க.

வல்லிசிம்ஹன் said...

பாசமலர்:)0
வாங்க.
உங்களுக்கு ரசித்துப் படிக்க முடிந்தது சந்தோஷமா இருக்கு.

நன்றி. நானும் இனிமேதான் உங்க பதிவுகள் எல்லாம் படிக்கணும்.

Geetha Sambasivam said...

சரியாப் போச்சு போங்க, ஏற்கெனவே சிஷ்யகேடிகள் என்னைத் தேடிட்டு இருக்கிறதாலே முகத்தைக் காட்டாமல் இருக்கேன், இதிலே எந்த மொக்கை நல்ல மொக்கைனு வேறே எழுதினால் அவ்வளவு தான்! :)))))))))

Geetha Sambasivam said...

2நாட்களில் முயற்சி செய்கிறேன் வல்லி. பொங்கல் முடியட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

கோபிநாத் said...

ஆஹா...அழகான பதிவுகள்..;))

கண்டிப்பாக எழுதுகிறேன்..ஆனா பதிவுகள் இருந்தால் தானே! ;))

\\கோபி அக்கா ஏன் உன் பேரை பெஸ்ட் டேக்ல அழைக்கலேன்னு இப்ப புரிந்திருக்கும்.
வல்லியம்மாக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும் :)\\

அக்கா வல்லியம்மாவுக்கு வலையுலக பிள்ளைகள் அனைவரையும் பிடிக்கும்.
அதில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சியே ! ;)

வல்லிசிம்ஹன் said...

நன்றி கீதா.
பொங்கல் பொங்கி வளம் பெருகட்டும்.

இரண்டு நாட்கள் கழித்துப் பார்க்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

கோபிநாத்.
வலைச்சரத்தில எழுதினதாகச் சொன்னாங்களே.
சும்மாவா.
நீங்க பதிவு எழுதி பெஸ்ட் கண்ணா பெஸ்ட் எழுதித்தான் ஆக வேண்டும்:))

தி. ரா. ச.(T.R.C.) said...

வல்லியம்மா இப்படி கவுத்திட்டீங்களே?
நீங்கள் எழுதியதில் மோசமான பதிவை போடுங்கள் என்று சொல்லியிருந்தால் மொத்த பதிவையும் அப்படியே ஒட்டு மொத்தமா போட்டிருப்பேனே.இப்போ என்ன பண்ணறதுன்னு தெரியலை. தனியா புலம்பும் அளவுக்கு வந்தாச்சே.இதுக்குதான் புதுசா பதிவே எழுதக்கூடாதுங்கிரது. எனக்கு வேணும் எனக்கு வெணும்......

வல்லிசிம்ஹன் said...

அட ராமச்சந்திரா.
இப்படி ஒரு தருமிப் புலம்பல் செய்யற அளவுக்கு இங்க யாரு என்ன சொல்லிட்டார்கள்???

இவ்வளவு தன்னடக்கமா:))
தயவு செய்து எழுதுங்க சார்.

SurveySan said...

thank you.
recorded here
http://surveysan.blogspot.com/2008/01/2007.html

வல்லிசிம்ஹன் said...

சர்வேசன்,
நன்றி.
இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

ambi said...

உங்கள் சித்திர ராமன் தொடரும் எனக்கு ரொம்ப பிடிக்கும். :)

நீங்கள் குடுத்த வீட்டுபாடத்தை முடிச்சாச்சு. :)

sury siva said...

"உங்களது படைப்பில் நெ.1 எது ? ரன்னர் அப் 1, 2 எது?
அட் லீஸ்ட் ஆறுதல் எது? "
என்ற கேள்விகளை தத்தம் தாய் தந்தையரிடம்
கேட்டு, அதறகான் பதிலைப் போடுவதற்கு,
நம்மிடம் எத்தனை பேருக்கு தைரியம் இருக்கிறது?

மேனகா சுப்புரத்தினம்.
தஞ்சை.

வல்லிசிம்ஹன் said...

அம்பி, தான்க்ஸ்.

வேலை நிறைய இருக்கும் இருந்தாலும் அம்பி பதிவிட்டால் நன்றாக இருக்கும்னு தோன்றியது.
இதோ படிக்கிறேன்....

வல்லிசிம்ஹன் said...

நன்றி மேனகா.

உண்மைதான். மற்ற படைப்புகள் பெயரைக் குறிப்பிடாததில் வருத்தமே.

எல்லோருக்கும் சிரிக்க அல்லது மகிழ வைக்கும் பதிவுகளையே எழுதினேன்.

சொந்தக் கதை சோகக் கதைனு சிலது எழுதிட்டேன்.
அதைப் படிக்கும் போது.
வேண்டாமோ என்று தோன்றுகிறது.

காட்டாறு said...

அய்யோ.. எப்படி இந்த பெஸ்ட் பதிவை படிக்காமல் விட்டுப்போனேன்னு விரைவா போய் பார்த்தால்.. நான் வலையுலகில் வலம் வர ஆரம்பித்த புதிதில் எழுதியிருக்கீங்க. :-) அதுக்கென்ன.. இப்போ தான் வாசிச்சிட்டேனே.

வல்லிசிம்ஹன் said...

வரணும் காட்டாறு,
எந்த பெஸ்ட் பதிவைச் சொல்றீங்க.

பில் வாக்கர் கதையா:)))
நன்றிம்மா.

G.Ragavan said...

கலர்கலரா எழுதலைன்னா என்ன...கண்ணியமா எழுதுறீங்கள்ள...அதுதான் நீங்க பட்டியல் போட்டுருக்கீங்க.

அழைப்புக்கு நன்றி. ஆனா என்னோட பதிவுகள்ள தேர்ந்தெடுக்க முடியுமான்னு தெரியலை. :(

வல்லிசிம்ஹன் said...

ராகவன்,
உங்க பதிவில கலர் இருக்கு. :))

அதனாலதான் நீங்களும்
குறிப்பிட்டுச் சொல்லணும்.

நான் கலர்னு சொல்றது இந்த ஹைலைட் செய்து வார்த்தைக்கு ஒரு கலர் போடறாங்களே அதை:))
சரியா.

ஆனா,ஆவன்னா எல்லாம் வேணாம்.
நீங்க எழுதுங்க. இன்னிக்கு சனிக்கிழமைதானே. நேரம் இருக்கும்:))