Blog Archive

Tuesday, January 22, 2008

தனிக்குடித்தனம் ஆரம்பம்......1945 ..1


திருமணம் முடிந்து அவரவர்கள் ஊருக்கு வந்து சேர்ந்தார்கள்.
சிரஞ்சீவி நாராயணனுக்கு ஸ்ரீகாகுளம் ஊரில் முதல் போஸ்டிங்.
நெல்லையைத்தவிர,மதுரையும் சென்னையுமே கொஞ்சம் தெரிந்த அந்த பையனுக்கு,
நிறைய புத்திமதி சொல்லித் தாத்தா வண்டி ஏற்றிவிட்டார்.
அங்கு நடந்த சம்பவங்களை எங்கள் அப்பா சுவைபடச் சொல்லுவார். எனக்குத்தான் மறந்துவிட்டது.


அங்கிருந்த நெல்லை மாவட்டம் கயத்தாறு என்ற கிராமத்துக்கு தபால் ஆபீஸ் குமாஸ்தாவாகப்
பொறுப்புக் கொடுத்தார்கள்.
அப்பா(நாராயணன்) பாளையங்கோட்டையில் படித்தததாகச் சொல்லுவார். அவருடய கல்லூரிப் படிப்பும் அங்குதானா என்று தெரியவில்லை.
அந்தக் காலகட்டங்களில் இண்டர்மீடியட் இரண்டு வருடமும், இளங்கலைப் பட்டதாரியாவதற்கு இன்னும் இரண்டு வருடமும் தேவை.

அப்பாவின் கையெழுத்தும் ஆங்கிலத்தில் அவருக்கிருந்த ஆளுமையும் என்னை எப்பவுமே வியக்க வைத்திருகின்றன.

இப்போது அப்பா அம்மாசம்பந்தப் பட்ட சமாசாரங்களைச் சேகரிக்க மிச்சம் இருக்கும்
நாலைந்து பேரைக் கேட்பதற்குப் பதில் என் பெற்றோரிடம்
நான் ஏன் மனம் விட்டுப் பேசவில்லை என்று இன்னும் வருத்தமாக இருக்கிறது.

அவர்களும் அதுப்போல அனஸ்ஸ்யூமிங் வகைப்பட்ட மனிதர்களாக,வெகுளியாகக் கருமமே கண்ணாயினார் டைப்பாக இருந்திருக்க வேண்டாம்.
சரி கயத்தாறுக்குப் போகலாம் வாருங்கள்.

அங்கு ஒரு தனி வீடு பார்த்துக் குடித்தனம் வைக்க அப்பாவின் அம்மா பையனையும் அழைத்து வந்து விட்டார்.
அம்மா அதான் நம்ம கதா நாயகி சேச்சிப்பாப்பா அலையஸ் ஜெயா, தன் மாமாவின் துணையோடு,
புது வீட்டுக்கான பாத்திரப் பொட்டி,
கார்த்திகை விளகுகள் ...ஒரு பெரிய வாழைத்தண்டு விளக்கு என்பார்கள். திருவனந்தபுரம் டைப்.
அதே போல குட்டி அகல்கள் வெண்கல,பித்தளையிலானவை,
காரைக்குடி டப்பா என்று சொல்லக் கூடிய அரிசி,பருப்பு போட்டு வைக்கிற பெரிய டப்பாக்கள்.
ஊறுகாய் போட மஞ்சளும் வெள்ளையுமாக உயர ஜாடிகள்.
கொலு வைக்க பண்ருட்டிப் பொம்மைகள் என்று
ரெண்டு குதிரை வண்டியில் வந்து இறங்கிய பொருட்களைப் பார்த்துத்
திருவேங்கடப் பாட்டி சிரித்தாராம்.
தாத்தாவும் பாட்டியுமாக புதுத் தம்பதிகள் செட்டில் ஆக உதவி விட்டு,
அதலப் பாதாளத்தில் இருக்கும் கிணற்றில் தண்ணீர் சேந்தும் முறையும்
சொல்லிக் கொடுத்தாராம்.
மெட்ராஸ் பொண்ணு கிணத்தை எங்க பார்த்திருக்கப் போகிறது என்று அவர்களுக்கு வருத்தம்.
அத்ற்காக உதவிக்கு ஒருவயலில் வேலை செய்பவரிடம் சொல்லித் தினமும் இரண்டு குடம் தண்ணீர் எடுத்துக் கொடுக்கச் சொல்லி விட்டு வண்டி ஏறி திருநெல்வேலிக்குப் பயணமானார்கள்.
ஒன்பது கஜம் நூல் புடவையும் கட்டிக் கொண்டு ஒரு செல்லுலாய்ட் பொம்மை போல அம்மா நின்னதாக உறவுக்காரர் சொல்லுவார்.
அப்புறம் அம்மாவும் அப்பாவும் செய்த குடித்தனம் எப்படி என்பது அப்புறம் பார்க்கலாம்.:))

19 comments:

துளசி கோபால் said...

மீள் பதிவு?

படம் நல்லா இருக்குப்பா.

பாச மலர் / Paasa Malar said...

//இப்போது அப்பா அம்மாசம்பந்தப் பட்ட சமாசாரங்களைச் சேகரிக்க மிச்சம் இருக்கும்
நாலைந்து பேரைக் கேட்பதற்குப் பதில் என் பெற்றோரிடம்
நான் ஏன் மனம் விட்டுப் பேசவில்லை என்று இன்னும் வருத்தமாக இருக்கிறது//

என் அப்பா மறைந்த போது இதை நானும் உணர்ந்தேன்..அப்புறம் அம்மாவிடம் கேட்டு இருவரையும் பற்றி அதிக சேதிகள் அறிந்தேன்..

இலவசக்கொத்தனார் said...

இந்தப் பதிவை எல்லா பசங்க கிட்டயும் காமிக்கணும்.

கோபிநாத் said...

\\\ஒன்பது கஜம் நூல் புடவையும் கட்டிக் கொண்டு ஒரு செல்லுலாய்ட் பொம்மை போல அம்மா நின்னதாக உறவுக்காரர் சொல்லுவார்.
அப்புறம் அம்மாவும் அப்பாவும் செய்த குடித்தனம் எப்படி என்பது அப்புறம் பார்க்கலாம்.:))\\\

நினைவுகள் அழகான நகைச்சுவையுடன் இருக்கு... :))

வல்லிசிம்ஹன் said...

வரணும் துளசி. பதிவு புதுசுதான்.
விஷயம்தான் பழசு:))
படத்தில் அம்மா அப்பா. இன்னும் நல்லாப் போட வசதி இல்லை.

வல்லிசிம்ஹன் said...

வரணும் பாசமலர்.

வேற யாரோ கூட சொன்னாங்க. அம்மாவும் அப்பாவும் சாஸ்வதமா நம்மளோடயே இருப்பாங்கனு நினைச்சேன்னு.

அம்மாவோடு நெருங்கி யே இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

தமிழ் தெரிஞ்ச எல்லாப் பசங்களும் படிக்கட்டும்.
மத்தவங்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன்.
நீங்க எங்க வீட்டுப் பசங்களைத்தானே சொல்றீங்க:))

மெளலி (மதுரையம்பதி) said...

நல்லாயிருக்கு...

ஸ்ரீகாகுளம் பெயரே அருமைதான் நான் பார்க்காத ஆனால் பிடித்த ஊர்.

எழுதுங்க, கொத்ஸ் சொன்ன மாதிரி எல்லாரும் படிக்க வேண்டும்.

ambi said...

கல்கியின் அலையோசை போல கதையோட்டம் அல்லது நேரேஷன் தெளிவாக உள்ளது. :)

@இ.கொ: எல்ல பசங்க மட்டும் தான் படிக்கனுமா? அப்ப பொண்ணுங்க..? :p

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி.
நலமா...

ஸ்ரீகாகுளம் சிவன்ஸ்தலம் இல்லையா.

போரடிக்காமல் இருந்தால் எல்லாரும் படிப்பாங்க,.:))

வல்லிசிம்ஹன் said...

அம்பி:))
நன்றி. தான்க்ஸ். தன்யவாத்.
என்னப்பா கல்கி ரேஞ்சுக்குத் தூக்கிவிட்டாச்சு:))

உண்மையான சம்பவங்கள் எப்பவம் சலசலப்பு இல்லாம தான் போகும்!!

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோபிநாத்,

அவங்க இரண்டு பேர் மாதிரி சாந்த சுபாவம் கொண்டவர்களை நான் இன்னும் பார்க்கவில்லை.

ம்ம் பார்க்கலாம்:)))

Geetha Sambasivam said...

//இப்போது அப்பா அம்மாசம்பந்தப் பட்ட சமாசாரங்களைச் சேகரிக்க மிச்சம் இருக்கும்
நாலைந்து பேரைக் கேட்பதற்குப் பதில் என் பெற்றோரிடம்
நான் ஏன் மனம் விட்டுப் பேசவில்லை என்று இன்னும் வருத்தமாக இருக்கிறது.

அவர்களும் அதுப்போல அனஸ்ஸ்யூமிங் வகைப்பட்ட மனிதர்களாக,வெகுளியாகக் கருமமே கண்ணாயினார் டைப்பாக இருந்திருக்க வேண்டாம்.
சரி கயத்தாறுக்குப் போகலாம் வாருங்கள்.//


ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

வல்லிசிம்ஹன் said...

இதோ அடுத்தாற்போல் கயத்தாறுக்குப் போகலாம்.


சின்னஞ்சிறு சிறு குடூம்பம் எப்படி நடக்கிறது என்று.

ஜீவி said...

//இப்போது அப்பா அம்மாசம்பந்தப் பட்ட சமாசாரங்களைச் சேகரிக்க மிச்சம் இருக்கும்
நாலைந்து பேரைக் கேட்பதற்குப் பதில் என் பெற்றோரிடம்
நான் ஏன் மனம் விட்டுப் பேசவில்லை என்று இன்னும் வருத்தமாக இருக்கிறது.//

மனதைத் தொடும் உண்மை வாசகம்.
நிறைய பேருக்கு என்னைப் போலவே இந்த வருத்தம் இருக்கும் போல

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஜீவி.

பேசுவதற்கு என்று நேரம் ஒதுக்கிவைத்துப் பேச வேண்டியதுதான்.
நானும் அந்த முறையைப் பின்பற்ற முயற்சிக்கிறேன்.
பசங்களுக்கு நேரம் கிடைப்பது அப்போது போலவே இப்போதும் கடினமாகவே இருக்கிறது.;))
ஆனால் என்னைவிட அவர்கள் எத்தனையோ முயற்சி எடுத்து வருகிறார்கள். கிடைத்த நேரத்தை வீணாக்குவதில்லை.நல்ல குழந்தைகள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

வல்லியம்மா என்னைப் போன்று அப்பாவின் முகத்தையே பார்க்காதவர்கள் என்னபன்னுவது.

வல்லிசிம்ஹன் said...

கீதா,கயத்தாறூ விட்டாச்சு.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பார்க்கலாம்:))0

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச,
ரொம்ப வருத்தமா இருக்கு.
ஆனால் நீங்களே அப்பா இல்லாத குழந்தைக்கு அப்பாவாக,உங்க மனைவியே அம்மாவாகவும் இருப்பதால்
தந்தை ஸ்தானத்தைச் சிறப்பு செய்து விட்டீர்கள்.