About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Wednesday, November 21, 2007

அம்மா,குழந்தை+அன்பு


அன்பு எத்தன அழகு மிக்கது எனறு அறிய அருமையான
அனுபவம் ஒன்று கிடைத்தது.
என்
சில காலைகள் தவிர அநேகமாக எல்லாக் காலைகளுமே சன்ஸ்கார்
தொலைக் காட்சியின் சஹஸ்ரநாம துதியுடன் ஆரம்பிக்கும்.
அத்துடன் த்யானம், உடல் பயிற்சி
என்று தொடரும்
இன்றும் நேற்றும் அந்த பயிற்சி முகாமில் ஒரு அன்னையும் அவரது மூன்று வயது மகனும்
பங்கு கொண்டார்கள்.
அந்த மகனையும் கையில் வைத்துக் கொண்டு வெகு தீவிரமாக சின்சியராக
அவங்க செய்ததும்,
செய்ய முடியாத பகுதிகளில் மகனுக்குப் பயிற்சி கொடுத்ததும்,
அந்தக் குட்டியும் ஜிவ் ஜிவ் என்று குதித்துவிட்டு அம்மா முகத்தை''சரியா அம்மா என்று ஆமோதிப்பை எதிர்பார்க்கும் அழகும்,
அவள் அதை வாரி அணைத்துக் கொண்டுமீண்டும் பயிற்சிகளைத் தொடருவதும்
வெகு அழகாக இருந்தது.
தேகப் பயிற்சிக்கு நடுவே ஓய்வு எடுக்கும் நேரங்களில் அவன் அம்மாவை அணைத்தபடி கண்களை மூடிக் கொள்ளுவதும்(ச்சும்மா):))
அதி அற்புதமாக இருந்தது.


அந்த அம்மா,குழந்தையை வீட்டில் விட்டு வந்து இருக்கலாம்.
ஒருவேளை அவனைக் கவனிக்கச்  சரியான ஆள் இல்லையோ.
வேலைக்குப் போகும் அம்மாவோ
அதனால் கிடைக்கும் நேரத்தைக் குழந்தையுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினாளோ...
ஒன்றும் தெரியாது.
நாளைக்கும் அவர்கள் வந்தால் பார்க்கக் காத்துக் கொண்டிருப்பேன்.:)))
இதில் லாஃபிங் தெரபியும் இருந்தது.
காமிரா வைத்திருப்பவர் அந்தக் குழந்தையைத் தேடிக்
கண்டுபிடித்து அவனோடேயே லயித்த அழகையும் சொல்ல வேண்டும்.

22 comments:

ambi said...

//அந்த அம்மா,குழந்தையை வீட்டில் விட்டு வந்து இருக்கலாம்.
ஒருவேளை அவனைக் கவனிக்க்ச் சரியான ஆள் இல்லையோ.
//

அவங்க வீட்டு ரங்கு சமையல் பண்ணிட்டு இருந்திருப்பாரு, இல்லாட்டி பாத்ரம் தேய்ச்சுண்டு இருப்பாரு அதான் குழந்தை இருந்தா வேலை கெடும்!னு இந்தம்மா குழந்தையையும் அழைச்சுண்டு வந்ருக்காங்க. :)))

அந்த காமிராகாரை அப்படியே அந்தம்மா வீட்டு கிச்சனுக்கும் போகஸ் செய்ய சொல்லுங்க. நான் சொன்னது நிஜம்னு தெரியும். :p

இம்சை said...

பாப்பா சூப்பர்

துளசி கோபால் said...

இதெல்லாம் தொலைக்காட்சியில் வர்றதா?

பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்குப் படமும் பதிவும்.

நானானி said...

நான், உங்கள் மகளோ பேரனோ அல்லது மருமகளோ பேரனோ என்று நினைத்தேன்!!படத்தில் அன்பு வழிகிறது.

மதுரையம்பதி said...

அழகான படங்களுடன்அருமையான செய்தி....நன்றி

வல்லிசிம்ஹன் said...

அம்பி, ஏற்கனவே பெனாத்தலாரின் பதிவைப் படிச்சுட்டு நொந்து போயிருக்கேன்.

இப்ப வாதாபியும் பாத்ரம் தேய்க்கிறதைப் பத்திச் சொன்னா எப்படி. தேய்ச்சாலும் தப்பில்ல.
வாரிசுகளைக் காப்பாத்துற அம்மாக்களை நிம்மதியா இருக்க விடணூம்:)))))

வல்லிசிம்ஹன் said...

இம்சையாரே.
உங்க வீட்டுப் பாப்பாவும் இப்படித்தானே இருக்கும்:))

வல்லிசிம்ஹன் said...

துளசி, அதுக்குத்தான் ஒரு நடை வந்துட்டுப் போகணும்கிறது.

ஆங்க எக்ஸர்சைஸ் செய்யற அழகை விட ஜனங்களை ஃபோகஸ் செய்யறதுதான் இன்னும் நல்லா இருக்கு:))
ஆர்ட் ஆஃப் லிவிங் வகுப்பு.

வல்லிசிம்ஹன் said...

நன்றி நானானி.
யாதும் ஊரெ. யாவரும் கேளிராச்சே நமக்கு,.
அம்மாவும் பிள்ளைகளும் நெட்டில கிடைச்சாங்க.:))

இன்னும் ரெண்டு படம் தேடாம போனேனே.!!!

வல்லிசிம்ஹன் said...

வாங்க மௌலி.
என்னமோ இந்தக் காட்சியைப் பார்த்ததும் எழுதணும்னு தோன்றியது.
துளசி அட்வைஸ்:)))

கீதா சாம்பசிவம் said...

அம்பி சொந்த அனுபவத்தை "நொந்த அனுபவம்" ஆகப் பகிர்ந்துக்கறார். விடுங்க, எந்த சானலில் வருது? சன்ஸ்கார் சானலிலா? நான் காலம்பர போடறது பொதிகை தான், அப்புறம் எப்.எம்.கோல்ட் அலைவரிசையில் பாடல்கள் எல்லாம் சூப்பரா வரும். அது தான் பின்னணி எப்போவுமே, மத்தியானம் 11-00, மத்தியானம் 1-00, 3-00, சாயங்காலம் 5-00 மணினு கச்சேரி வரிசையா வரும். கேட்டுட்டே வேலை செய்யலாம். எப்போவாவது படம் பார்க்கிறது உண்டு,. அன்னிக்குனு ஏதாவது சொதப்புவாங்க!!!! எல்லாம் நேரம் தான்!!!!! :))))))

நாகை சிவா said...

குழந்தைகள் என்றாலே அன்பு தானே.. அதிலும் தாயும் + குழந்தை கேட்கவா வேண்டும் :)

கோபிநாத் said...

அழகான கவிதை போல இருக்கு பதிவு ;))


@ கீதா சாம்பசிவம்
தலைவி அப்படி இப்படின்னு பின்னூட்டத்தில் ஒரு பதிவே போட்டுட்டிங்க ;)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா.கார்த்தாலை தூக்கம் வரதில்லை.
4.30லிருந்து சன்ஸ்கார்.
அப்புறம் பொதிகை.

அதுக்கப்புறம் வேலையைப் பொறுத்து பாட்டோ சினிமாவோ.

அமைதியாக் காலைப் பொழுது ரொம்பப் பிடிக்கும்.சத்தமில்லாம உட்கார்ந்து ரசிக்கணும்.:)

வல்லிசிம்ஹன் said...

கரெக்டா சொல்லிட்டீங்க சிவா.
அம்மா,பாப்பா ரெண்டு பேஎரும் அத்தனை அமைதியா தேகப் பயிற்சி செய்துகொண்டே சந்தோஷமாச் சிரிக்கிறதே ஒரு அழகான நிகழ்வா இருக்கு.
நினைத்து நினைத்துப் பார்க்கிறேன்:))

வல்லிசிம்ஹன் said...

அம்மா என்றால் அன்பு...
அன்பு என்றால் கவிதைனு பாடலாமா கோபி??:))

இலவசக்கொத்தனார் said...

சில சமயங்களில் இது போன்ற விஷயங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல தோன்றும் இல்லையா.

அம்பி பாவம் அவரோட நிலையில் இருந்து சொல்லி இருக்கிறார்.

முத்துலெட்சுமி said...

cute baby beautiful mama.. :)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கொத்ஸ்.

நானும் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு அஷ்டாவதானம் செய்து இருக்கிறேன்.
ஆனால் இது இன்னும் புதுமையாக
பொயட்டிகா இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

Absolutely,
Muthulekshmi.

IT was a good sight.loving mama and baby.

தி. ரா. ச.(T.R.C.) said...

பதிவே வல்லி அம்மா போட்டது. அதுலே அம்மா குழந்தை வராமல் வேறு எதில் வரும். ஊரில் இல்லை உடுப்பி கிருஷ்ண தரிசனம் அற்புதம்.
நாளை சோத்தனிகரா பகவதி மிடிதுக் கொண்டு ஞாயிறு வந்து சாவுகாசமா பதி போடறேன்.

வல்லிசிம்ஹன் said...

மகா ப்ஒறாமையா இருக்கு தி.ரா.ச சார்.
என்ன ஒரு உத்தியோகம்!!!
வேலைக்கு வேலை. பக்திக்கு பக்தி.
:0)00
உடுப்பி க்ருஷ்ணன் என்ன சொன்னான். இதில பகவதி வேற. அம்மே நாராயணா.தேவி நாராயணா.