About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Monday, November 19, 2007

251, வீட்டில விருந்தாளிங்க:))
தமிழில் எழுத ஆரம்பித்துத் தமிழ்மணத்திற்கு வந்து, புது உலகைக் கண்டுபிடித்தோம் என்று மகிழ்ச்சி. புதிததகத் தமிழ்வலைப் பூ ஆரம்பிக்கலாமே என்று சொன்னது நம்ம டீசசரம்மா.(வேற யாரு ஸ்ரீமதி துளசிகோபால்ங்க)
பின்னூட்டம் போட்டு வளப்படுத்தியது அவங்களும்,கீதா சாம்பசிவமும், அம்பியும் தான்.

அப்புறமா வந்தது வடுவூர் குமார்.:))இ.கொ இப்படி வரிசையா நம்ம வலை உறவுகள் கூடிக்கொண்டே போச்சு.அப்ப,
நாச்சியார் ஆரம்ப வரிகளாக '' வந்தவர்களுக்கும் வருபவர்களுக்கும்'' என்ற வார்த்தைகளை உபயோகித்தது
நினைவு வருகிறது.
அப்படி ஒரு நினைவு ஏன் வந்தது இப்போது ஆராய்ச்சி செய்யவில்லை:))
இந்த நாள் வீட்டுக்கு வந்திருக்கின்ற விருந்தாளிகள் மிகவும் இளையவர்கள்.
நமது கவனம் அவர்கள் பக்கம் இருந்தே ஆக வேண்டும்.
அபூர்வமாகத்தானே வருகிறார்கள்.
இதைத்தவிர வேறு சில குட்டிஸும் வரப்போவதாகக் கேள்விப்படுகிறோம்.
அதனால் வலைப்பூ ஆரம்பித்த நல்வேளை
வந்தவர்கள் வருபவர்கள் எல்லாம்
நலமோடு வாழ நம் பிரார்த்தனைகள்.
உறவுகள் நலம் பார்க்கவேண்டுமானால் கொஞ்சம் கணினி அருகில் வராமல் இருக்கவேண்டும்.
நமக்கே தெரியும் அதென்னவோ ஆணி களையறதுனு சொல்றாங்களே.
நமக்கும் இப்ப இந்தச் சுகமான வேலைகள்(ஆணினு சொல்லக் கஷ்டமாக இருக்கிறது) வருவதால்
சிறிய இடைவெளி விட வேண்டியதுதான்.:))
ஏனென்றால் ஒரு நிமிடம் இணையத்துக்கு வந்தால்
அது பலமணிநேரமாக நீள்வது தெரிந்த விஷயம்தானே!!!!!
மீண்டும் சந்திக்கும் வரை.......
கவலையற்று ஆரோக்கியமாக வாழ
வாழ்த்துக்களுடன்.


24 comments:

வடுவூர் குமார் said...

Want to visit for Deepawali but some how could not.
If possible we will meet next time.

வல்லிசிம்ஹன் said...

இந்த அன்புதான் நம் இணைய உரிமை,சொத்து.

கட்டாயம் பார்க்கலாம்.
நன்றி குமார்.

ambi said...

போட்ருக்கற படங்கள், எழுதி இருக்கற பதிவு எல்லாம் பாத்தா மறுபடி ஒரு துபாய் பயணம் மாதிரி இருக்கே! :)))

இப்படிக்கு
வாதாபி :p

துளசி கோபால் said...

ஒரு மாசம் லீவு சாங்ஷன் பண்ணி இருக்கேன். அதுக்கப்புறமும் வரலைன்னா, அப்பா அம்மாவைக் கூட்டிக்கிட்டு நேரில் வரணும்.

(ஒவ்வொருத்தரைப்போல லெட்டர் கொண்டு வரச்சொல்லமாட்டேனே)

குட்டீஸோடு எஞ்சாய் :-)))))

சுற்றுப்புறத்தில் ஒரு கண்ணும் கவனமும் வச்சுக்கிட்டாப் போதும். மேட்டரைத் தேத்திக்கலாம்.

விருந்தாளிகளுக்கு எங்கள் அன்பு.

இலவசக்கொத்தனார் said...

விருந்தாளிகள் தூங்கிய பின் இந்தப் பக்கம் வந்து அவர்கள் லூட்டிகளைச் சொல்லி எங்களைப் பரவசப்படுத்தலாமே.

அப்பப்போ வாங்க. என் பதிவுகளைப் படிக்க மட்டுமாவது!! (You shameless fellow என திட்டுவது கேட்கிறது. அதே சமயம் உங்கள் இதழ்களில் பூத்திருக்கும் புன்னகையும் தெரிகிறது!_

விடு ஜூட்! :))

மதுரையம்பதி said...

என்ன வல்லியம்மா, பேரன் வந்தாச்சா?.....

மதுரையம்பதி said...
This comment has been removed by the author.
குட்டிபிசாசு said...

வல்லி அம்மா,

வாழ்த்துக்கள்!!

வல்லிசிம்ஹன் said...

அம்பி:))
இப்போ பயணம் இல்லை. அதுக்குக் கொஞ்ச நாட்கள் இருக்கு.
பேரன்களும் பேத்தியம்மாவும் வந்திருக்காங்க.

வரப் போறாங்க.
இன்னோரு தங்கச்சியுடய கடைக்குட்டிக்கும்
அடுத்த வருஷம் விசேஷங்களாம்.அங்க வேற போகணும்:))

வல்லிசிம்ஹன் said...

டீச்சருக்கு லீவு லெட்டர் வேணாமா:)

என்ன டீச்சர்பா இவங்க'

ரொம்ப சாது.

இப்ப வீட்டு வரவேற்பறை குழந்தைகளுக்கு மட்டுமே !!சோஃபா எல்லாம் சுவத்தோட முட்டிக்கிட்டுத் தான் இருக்கு.!!

பாட்டி உட்கார மட்டும் ஒரு சி எம் சேர்:))

வல்லிசிம்ஹன் said...

புன்னகை தெரியறதா. இருக்கட்டும் இருக்கட்டும்.:0)0)

அதுங்க லூட்டி நேத்திக்கு மட்டும் பதினோறு மணி. ஜெட்லாக் வேற,.ஆட்டம்.

பத்துமணிக்கு தூக்கம் (சாமியாடற) போடறவங்க அப்படியே தூங்கிட்டொம்.

இதில பெரியவருக்கு(பேரன்) மெயில் பார்க்கணுமாம்:))

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி,
பேரன்கள் வந்திருக்காங்க.
ஸ்விஸ் அம்மா அடுத்தவாரம் வராங்க.
போன நவம்பர் 18 புதரகம். இந்த நவம்பர் இப்படி:))))

கோபிநாத் said...

மகிழ்ச்சி...மகிழ்ச்சி...குழந்தைகளுடன் குழந்தையாக கொண்டாடுங்கள் :))


எங்களை மறக்கமால் ;))

கீதா சாம்பசிவம் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள், பேரன்களுக்கும், பேத்திகளுக்கும். அனைவருடனும் பொழுது இனிதே கழிய வாழ்த்துக்கள். எல்லாரையும் கேட்டதாய்ச் சொல்லவும்.

நாகை சிவா said...

சந்தோஷம் தான் முக்கியம். போயிட்டு பொறுமையா வாங்க, இ.கொ. சொன்ன மாதிரி அப்ப அப்ப எட்டி பாருங்க :)

வல்லிசிம்ஹன் said...

கோபிநாத்,
எட்டிப் பார்க்காமல் இருந்துடுவோமா.:)))
படிக்க நேரம் உண்டாக்கிக் கொள்ளவேண்டியதுதான்.
நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

சிவா. வாங்கம்மா.

பொறுமையாத் தான் இருக்கணும். இல்லாட்டா வேலைக்காகாது.:)))


நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

கீதா,
உடல் நலம் சிறிதே சரியில்லைனு கேள்விப்பட்டேன்.
நம்ம ஊர் மழைக்கு இது சைட் ப்ராடக்ட்.

கண்டிப்பா என் மகள் உங்களை விசாரிப்பாங்க.
சொல்றேன்.
நன்றிம்மா.

delphine said...

குட்டிகளுடன் பாட்டியின் லூட்டி னு ஒரு பதிவு போடுங்க வல்லி.

வல்லிசிம்ஹன் said...

போட்டுடலாம் டெல்ஃபின்.

நினைத்துப் பார்ப்பதற்குள் ரெண்டு நாள் ஓடிவிட்டது.
எழுதத்தான் வேண்டும்:))

Baby Pavan said...

குட்டீஸ் சூப்பர்

வல்லிசிம்ஹன் said...

குட்டீஸ் எப்பவுமே சூப்பர்ததன் இல்லையா பேபி.:)))

கீதா சாம்பசிவம் said...

உடல் நலம் சிறிது சரியில்லையா? சரியாப் போச்சு போங்க, சிறிது தான் சரியா இருக்கு, பெரிதும் ஆகணும், கடவுள் அருளால். அதுக்குள்ளே நம்மாலே சும்மா உட்கார முடியாமல் வந்துட்டு இருக்கேன்.

வல்லிசிம்ஹன் said...

கீதா,
பெரிசாச் சொல்ல பயம். அதனால
சின்னதா சொன்னேன்:((
சீக்கிரம் சரியாகட்டும்.