Blog Archive

Thursday, November 15, 2007

250,சின்னக் குழந்தை சேவடி போற்றி..


பாடல்:
சொல்லாத நாளில்லை
குரல்:
டி எம் சௌந்தரராஜன்
வரிகள்:
ராகம்:
தாளம்:
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே உன்னைச்(சொல்லாத)

கல்லாத எளியோரின் உள்ளமுன் ஆலயமோ

கழல் ஆறு படைவீடும் நிலையான ஜோதியுன்னைச்(சொல்லாத)

இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்இணையில்லா நின் திருப்புகழினை நான் பாட

அன்பும் அறனெறியும் அகமும் புறமும் நாட

அரஹரசிவ குக மால் மருகா எனஅனுதினம் ஒருதரமாகினும் உன்னைச்(சொல்லாத)




நேற்று டி டி பொதிகையில் சூரசம்ஹாரக் காட்சியை மாலை வேளைச் சூரியனும் கடலும் மஞ்சளும் நீலமுமாக மினுமினுக்க,

முருகன் ,கந்தன்,குமரன்,வேலன்,தண்டாயுதபாணி,அழகன்,
அகங்காரம்,ஆணவம் உருக்கொண்ட
சூரபதுமனை சம்ஹாரம் செய்த காட்சி!!!
கடல் ஆரவாரம்,
அடியார்களின் வெற்றிவேல் கோஷம்,
உண்மையாகவேத் திருச்செந்தூர்க் கடலோரம்
செந்தில்நாதன் அரசாங்கம் ஆகக் காட்சி கொடுத்தது.
இந்த அழகை வர்ணிக்க என் வார்த்தைகள் போதாது.
நன்றி இந்த நேர் ஒளிபரப்புக்கு.
நேரில் போய்ப் பார்க்கமுடியாதவர்களுக்கு
தூர்தர்ஷன் செய்த உபகாரம் மறக்க முடியாது.















Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

20 comments:

ambi said...

//நேரில் போய்ப் பார்க்கமுடியாதவர்களுக்கு
தூர்தர்ஷன் செய்த உபகாரம் மறக்க முடியாது//

உண்மை, பல நேரங்களில், பொதிகை இந்த சன், ஜெயா, விஜய் டிவிகளை விட தரமான, நிகழ்ச்சிகளை சத்தம் போடாமல் வழங்கி கொண்டிருக்கிறது.

என்ன, தற்கால மாமியார்கள் மாதிரி சரியான மார்கடிங்க் தான் பண்ண தெரியலை, :p

துளசி கோபால் said...

இன்னிக்குதான் கந்த சஷ்டியா?

ரெண்டாவது படம் ரொம்பவே அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அம்பி, வரணும்.
அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது நேத்திக்கு.

வர்ணனை செய்தவர்களும் சுவாமியைப் பற்றி மட்டும் பேசினார்கள்.
தன் குரல் மகிமையைச் சில பேர்
காட்டி நம்மை ''மெர்சல்'' ஆக்கிடுவார்கள்.
நேற்று எல்லாம் சரியாக அமைந்தது.

நீங்கள் சொல்வது உண்மை. விளம்பரம் இல்லைன்னா
என்ன செய்தாலும் சோபிக்காது.
நேர்மையும்,அன்பும் மட்டும் போதாது. எடுத்துச்
சொல்ல தெரியணும்.:))))
நமக்கு அது வராது இல்லையா. நெல்லையாச்சே.

வல்லிசிம்ஹன் said...

வரணூம் துளசி. நேற்றுத்தான் சஷ்டி.

ஒரு ஃப்ளுக்க்கில டிடி பார்த்தேன்.

நல்லவேளை. அப்போதான் ஆரம்பித்து இருந்தது.
எல்லாப் படமும் கூகிள் ஆண்டவந்தான்.:))

நானானி said...

வல்லிம்மா! அடுத்த வருடம் திருச்செந்தூருக்கே போய் ஆறுமுகனுக்காக ஆறு நாள் தங்கி சஷ்டி விரதம் இருக்கலாமென்றிருக்கிறேன். ரொம்ப நாள் ஆசை!!
TMS-ன் முருகன் பாடல்களுக்கு உருகாதவர் யார்?

மெளலி (மதுரையம்பதி) said...

ஆம் என்வீட்டிலும் பார்த்திருக்கிறார்கள். என் செல்வமகள் நேற்றிரவு அவள் மொழியில் இந்த நிகழ்ச்சியினை வர்ணித்தாள்..... :-)

/சொல்ல தெரியணும்.:))))
நமக்கு அது வராது இல்லையா. நெல்லையாச்சே.//

என்னது நெல்லைக்காரர்களுக்கு பேச வராதா?. வல்லியம்மா நீங்க இத அம்பியுடன் சேர்ந்து சொன்னா நீங்க சொல்லறதை எப்படி நம்புவது...அம்பி-தம்பி பேச்சை சில-பல தரம் கேட்டவன் என்ற முறையில் இத என்னால ஒத்துக்க முடியாது. :-)

Geetha Sambasivam said...

"பொதிகை"த் தொலைக்காட்சி தான் நான் விரும்பிப் பார்க்கும் ஒரே தொலைக்காட்சி, ஆகையால் நானும் நேற்றுப் பார்த்தேன், நிகழ்ச்சி முடியும் வரையிலும். இளம்பிறை மணிமாறனின் வர்ணனை மிக அழகாய் இருந்தது. தீபாவளிப் பட்டி மன்றமும் பொதிகை திரு ஒளவை நடராசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, அருமையான நிகழ்ச்சி, காலத்துக்கு ஏற்றது, வட்டார வழக்கா, பழமொழியா, விடுகதையா என்ற தலைப்பில்! மற்றொரு பட்டிமன்றம் வாழ்க்கையில் கலையின் தாக்கம் பற்றியது, அதுவும் அருமையான நிகழ்ச்சி.

நல்ல பதிவு படங்கள் அருமை, தேடித் தேடி எடுத்துப் போட்டிருக்கிறீர்கள். நல்லாவே இருக்கு. அப்புறம் நெல்லைக் காரங்களுக்குப் பேச்சு வராதா? பேச்சை நிறுத்த மாட்டாங்கனு இல்லை சொல்லணும்? :P

வல்லிசிம்ஹன் said...

நானானி,

நேத்திக்குப் பொதிகை பார்த்தீங்களா.

கட்டாயம் அடுத்த வருஷம் சொல்றதைச் செய்திடுவீங்க.
முருகன் துணை.

வல்லிசிம்ஹன் said...

மௌலி,

குழந்தை பேச்சில் அழகான கதை கிடைத்து இருக்கும்.:)
மார்கெடிங் பேச்சு வராதுனு சொன்னேன்.
அவ்வளோதான்:))))
மத்தபடி பேச்செ உயிர் மூச்சு.

வல்லிசிம்ஹன் said...

கீதா,
உண்மைதான். சலிப்பில்லாமல் பொதிகை பார்க்கலாம்.
அந்தக் கால ரேடியோ நிகழ்ச்சிகள் போல.

நன்றிப்பா. நிஜமாவே தேடித்தான் போட்டேன்.

பேச்சு நிறுத்த மாட்டாங்க தான் நெல்லைக் காரங்க.
ஆனாலும் ஒண்ணே சொன்னாலும் உறுதியாவே சொல்லுவாங்க இல்லையா அம்பி:))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அக்கா!
அருமையான பாடல்...
"இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்"
அவனருளே எல்லாம்.
இங்கே பொதிகை கிடையாது; எல்லாம் சூரியனே!!!

வல்லிசிம்ஹன் said...

வரணும் யோகன்.இந்த சிடியில் உள்ள 16 பாடல்களும் ரத்தினங்கள்.

இந்தப் பாடலும்,
''அத்தரும் ஜவ்வாதும் அள்ளித் தெளித்தாலும் அங்கம் மணக்கவில்லையே''
முருகய்யா என்றும் உருகிப் பாடுவார் டிஎம் எஸ்.
என் வாழ்வில் மிகக் கஷ்டமான நாட்களில் இவர் பாடல்கள் அமைதி கொடுத்திருக்கின்றன. கொடுக்கின்றன.

சூரியனாவது வருகிறது இல்லையா. சாமியும் கூட வராரானு பார்க்கலாம்.:))

தி. ரா. ச.(T.R.C.) said...

அருமையாண பாடல் இது. இருந்தாலும் எனக்கு பிடித்தது நினைத்தபோது நீ வரவேண்டும் பாட்டுதான்
என்னது நெல்லைக்காரர்களுக்கு பேச வராதா?. வல்லியம்மா நீங்க இத அம்பியுடன் சேர்ந்து சொன்னா நீங்க சொல்லறதை எப்படி நம்புவது...அம்பி-தம்பி பேச்சை சில-பல தரம் கேட்டவன் என்ற முறையில் இத என்னால ஒத்துக்க முடியாது
மௌளி சார் நீங்களாவது அம்பி தம்பி பேச்சை கேட்டவ்ர்தான் நானோ கேட்டு கெட்டவர்.அவர்களுக்கு நான் வைத்தபேரே வாதபி--வில்வளன். அகஸ்தியர் கதை தெரியுமில்லையா?

வல்லிசிம்ஹன் said...

வாதாபி--வில்வளனா>:)))
அப்படியா சேதி!!! மகா சாதுனு நினைச்சேனே:))

சே சே இருக்காது தி.ரா.ச சார்.:))

நாகை சிவா said...

அட நேத்து சூரஹம்பாரமா? ஹ்ம்ம்ம் இங்க இருந்தா எது தான் தெரியுது.

நம்ம ஊருக்கு அருகில் தான் கந்தன் வேல் வாங்கிட்டு போவார்....(சிக்கல்)

தாத்தா இருந்த வரை காலையில் சிக்கல் போயிட்டு சிங்காரவேலனை தரிசுத்து விட்டு தான் அடுத்த வேலை.

திருசந்தூர் கடலோரம் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.

வல்லிசிம்ஹன் said...

ஆமா சிவா.அந்தப் பாட்டு எல்லாரையும் கவருகிற மாதிரி


அப்படி ஒரு தெய்வ கானம்.
சின்ன வயசில கொடுத்து வைத்தது.
அதனால தான் முருகனை சேவிக்க முடிந்தது.
இனியும் மனசில இருப்பான்.தி.ரா.ச சார் சொன்ன மாதிரி நினைத்தபோது அவன் வந்து நின்றால் எப்படி இருக்கும்!!!

மெளலி (மதுரையம்பதி) said...

//மௌளி சார் நீங்களாவது அம்பி தம்பி பேச்சை கேட்டவ்ர்தான் நானோ கேட்டு கெட்டவர்.அவர்களுக்கு நான் வைத்தபேரே வாதபி--வில்வளன். அகஸ்தியர் கதை தெரியுமில்லையா//

நன்னா தெரியும் டிஆர்சி சார்....நீங்க எனக்கு பெரியவர், நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். ஹி ஹி ஹி...

G.Ragavan said...

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனை விளங்குவள்ளிக் காந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை வல்லியம்மாவின் பதிவில் பார்ப்பதும் பெருமகிழ்ச்சி.

தேவையான பொழுது கண்டிப்பாக வருவான். இது அனுபவத்தில் உணர்ந்தது.

நல்லதொரு அருமையான பாடல். பக்தியில்லாமால் இந்தப் பாடல் பாடப்பட்டிருந்தால் இவ்வளவு சிறப்பாக வந்திருக்காது.

வல்லிசிம்ஹன் said...

மௌலி,
அம்பி-தம்பி கதை இப்படி அலைகிறதே:))

நாம் பேசுவதைக் கேட்க,
நம்மிடம் நம் அலைவரிசையில்
பேச ஆள் கிடைக்காதது குறையோ:)0
அதனாலத் தான் எழுதுகிறோமோ.????

வல்லிசிம்ஹன் said...

ராகவன்,

உண்மை உண்மை.
அதுவும் ஒவ்வொருவருக்கும்
ஏதாவது ஒரு பாடலில் லயிப்பு வந்து இருக்கும்.
முக்கியமாக
'
வெல்லும் ஒரு வேல் ஏந்தி,
வினையாகும் திரை நீக்கி''
என்ற பாடல் மனதைக் கலங்க வைத்துத் துலங்க வைக்கும்.

பாடலைக் கேட்டுத் தெளிந்தால் அவன் வந்துவிட்டான் என்றுதானே அர்த்தம்.
நன்றி ராகவன்.