Blog Archive

Wednesday, October 31, 2007

வான் வலைப் பூக்கள்...வார்த்தைகள்

நல்ல வார்த்தைகள் சொல்லப் படும்போது வீட்டிலிருக்கும் அஸ்து தேவதைகள் ஆசீர்வதிக்குமாம்.

நல்லது அல்லாத சொற்கள் வேண்டாம் என்பது மூதுரை.
முந்திய பதிவில், உணவு பழக்க வழக்கம்,மற்றும் வலிநிவாரண மாத்திரைகளின் விளைவுகளைப் பற்றி
ஒரு புராணம் எழுதி இருந்தேன்.
எல்லாரையும் பயமுறுத்திவிட்டுப் பிறகு ஒரு டிஸ்க்ளெய்மரும் போட்டேன்.



''Allthat begins well ends well''ரொம்பப் பிடித்த வரிகளில் இது ஒன்று. இன்க்யுரபிள் ரொமாண்டிக் என்ற பட்டப் பெயர் வைத்தாலும் சரிதான்.
சுபம்(சுபமாக கல்யாணத்தில் முடிந்து) போட்டாத்தான் படம் பார்க்கவும் பிடிக்கும்.

சரோஜாதேவி தனியாளாக எழும்பூர் ப்ளாட்ஃபாரத்தில் காதலிலே தோல்வியுற்றாள் பாட்டுக்கு நிழலோவியம் போல் நடப்பதைப் பார்த்துப் பாதிப்படத்திலேயே வெளியே வந்த ஞாபகமும் இருக்கிறது.:)))






இந்த எல்லாப் பில்ட் அப் புக்கும் காரணமாக இருப்பது, இன்று நான் வாங்கின ஆல் க்ளியர் ரிபோர்ட்.
டாக்டரம்மா'' எல்லாம் நல்லா இருக்கு. எண்ணை மத்திரம் சாப்பிடாதே.
பசித்தால் வெள்ளரி,தக்காளி சாப்பிடு.
சாக்கலேட்,
குக்கீஸ்,மிளகாய் பஜ்ஜி எல்லாம் கண்ணால பார்த்துக்கோ.
வேக வைத்த கடுகு போடாத காய்கறி ,தண்ணீர் விட்ட மோர்.... இப்படி போகிறது இந்த லிஸ்ட்.
புதிதாக ஒண்ணும் இல்லை.






ஆதலால் இனி கவலை இல்லை. அடுத்த ஆண்டு பரிசோதனையின் போது அறுவைப் பதிவு போடாமல் உங்களையெல்லாமல் காப்பாற்றுவதாக வேண்டுதலும் செய்து கொண்டேன்.


Posted by Picasa

24 comments:

வல்லிசிம்ஹன் said...

உடல்நலனில் அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி.
உடல் நலம் காக்கும்படி அங்உடன் சொன்ன என் நண்பர்,நண்பிகளுக்கும்
நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்க வேண்டும்.

நாகை சிவா said...

தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் நலம் என்றும் நலமாக இருக்க வாழ்த்துக்கள் :)

உங்கள் ஆசீர்வாதத்துக்கு நன்றி :)

துளசி கோபால் said...

அப்பாடா.............

வயித்துலே (தண்ணீர் விட்ட ) மோர் வார்த்ததுக்கு நன்றிப்பா:-)

Baby Pavan said...

எல்லாப் பில்ட் அப் புக்கும் காரணமாக இருப்பது, இன்று நான் வாங்கின ஆல் க்ளியர் ரிபோர்ட்.
என்றும் நலமாக இருக்க வாழ்த்துக்கள்

சாக்கலேட்,
குக்கீஸ்,மிளகாய் பஜ்ஜி எல்லாம் கண்ணால பார்த்துக்கோ.
வேக வைத்த கடுகு போடாத காய்கறி ,தண்ணீர் விட்ட மோர்.... இப்படி போகிறது இந்த லிஸ்ட்.
புதிதாக ஒண்ணும் இல்லை.
For about 1 year I was eating boiled vegetables only for past one month my mother is allowing me to eat whatever I want. My father and me are eating chocolates and icecream without my mothers knowledge

இலவசக்கொத்தனார் said...

ஏன் கடுகு தாளிக்கக் கூடாது? எண்ணையினாலா?

இலவசக்கொத்தனார் said...

ஆல் க்ளியர் ரிப்போர்ட்டுக்கு வாழ்த்துக்கள்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

வல்லிம்மா,

பின்னூட்டம் போடாம வாசித்துவிட்டுப் போகிற ஆட்களில் நானும் ஒருத்தி. :)

நல்ல சேதி சொன்ன இந்த இடுகைல நன்றி சொல்லத் தோணிச்சு. அதான். :)

-மதி

வல்லிசிம்ஹன் said...

அன்பு சிவா நன்றி.

நம் கையில் ஆரோக்கியம் இருக்கும் வரையிலாவது ,,,,
சரியாகக் கவனம் கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆசைதான் இதற்குக் காரணம்.

வருமுன் காப்போம் கதைதான்.இறைவன் கொடுத்த உடல்.
ஒரு கோவில். பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
இதெல்லாம் என் பெற்றோர் கருத்து.
ஒழுங்காகப் பின் பற்றி இருக்க வேண்டும். இப்போதும் ஒன்றும் தப்பில்லை.
கவனம் தேவை.
நீங்களும் உங்கள் குடும்பமும் நோயற்று நிறை வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி,
நல் வார்த்தைகளுக்கு நன்றிப்பா.
பாலும் ஒரு காரணமாம் என் வயிற்று வலிக்கு.

லாக்டோஸ் டாலரன்ஸ் போறாதாம்:)))

அறுபது வயதில் தயிருக்கு ஆசைப்படுவானேன்???
பசியும்(பசிக்கு உணவும்) ஜீரணமும் சரியா இருந்தாப் போறாதா:)))

வல்லிசிம்ஹன் said...

Baby Pavan,
I am so sorry for your last year's diet.
But it must have done you some good.

all the best for a HAPPY HEALTHY LIFE.
Thank you for this visit.

வல்லிசிம்ஹன் said...

இ.கொ.
நன்றிம்மா.
கடுகு+எண்ணை (எனக்கு)நல்லது இல்லைனு தோன்றுகிறது.

நான் தயிர் சாதம் செய்தால் பசங்க ,ஏம்மா கறுப்புத் தயிர்சாதம் பண்ணறே.
அப்டீனு ஒரு கிண்டல் கேள்வி போடுவார்கள்.

அப்படி ஒரு பைத்தியம் கடுகு மேல.

ஹாஸ்பிடலில் இருந்த டயடீஷியன் எல்லாம் கேட்டு,அப்புறம் தான் இந்த புத்திமதி கொடுத்தாங்க.
இது எக்ஸ்ட்ரீம் கேஸுக்குத் தான்.
நல்லா இருக்கற்றவங்க எப்படி வேணும்னாலும் சாப்பிடலாம். காரம் குறைக்கணும். அவ்வளவுதான்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மதி.

பின்னூட்டம் வரலைன்னால் யாருமே படிக்கலை போலிருக்கேனு முன்னால் கவலைப் படுவேன்.
இப்போ கொஞ்சம் தேறிட்டேன்:))
எழுத வேணும்னு ஒரு உணர்வு
உந்தும்போதுதானே எழுதுகிறோம்.
எழுதின பிறாகு உண்மையாக எல்லோருக்கும் போய்ச் சேர்ந்தால் திருப்தி.

நானும் பல பதிவுகள் படிக்கும் போது சில சமயம் என்ன பதில் எழுதுவது என்று விழிப்பது சகஜம்:0000))

வந்ததற்கும் சொன்னதற்கும் ரொம்ப நன்றிப்பா.

ambi said...

உங்கள் ஆசீர்வாதத்துக்கு நன்றி :)

ஆல் க்ளியர் ரிப்போர்ட்டுக்கு வாழ்த்துக்கள். :))

*ahem, what about sweets..? :p

வல்லிசிம்ஹன் said...

ahemmmmmmmmmmmm
well Sir,

the sweets ,I say the sweets are eatables (only) for really old people like me:))
they prep you up, life looks more beautiful...

well life shd be long and sweet:)

So I intend to take a bite (tiny)
everyday.
Fridays are auspicious.I am allowed bathaam payasam on that day:)))0 thank you Ambi.

கோபிநாத் said...

\\ஆல் க்ளியர் ரிபோர்ட்.\\

வாழ்த்துக்கள் அம்மா ;))

\\நண்பர்,நண்பிகளுக்கும்
நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்க வேண்டும்.\\

நன்றிம்மா ;)

மெளலி (மதுரையம்பதி) said...

//இன்று நான் வாங்கின ஆல் க்ளியர் ரிபோர்ட்.//

நல்ல தகவல் நன்றி வல்லியம்மா........

Geetha Sambasivam said...

வாழ்த்துக்கள், வல்லி, சோதனை முடிஞ்சு ரிப்போர்ட் நல்லா வந்தாலும், நீங்க ஜாக்கிரதையாவே இருங்க, அதுவும் சொன்ன மாதிரி சாப்பிடுங்க, சாப்பிடலாம், முடியும்னு சொல்றதே நல்லது. நல்ல ரிப்போர்ட் தான் வந்திருக்கு, இறைவனுக்கு நன்றி.

நானானி said...

வல்லிம்மா!
உடல் நலம் நன்றாக இருக்கும் போதே
புளி,காரம்,எண்ணெய் ஏன் அரிசி கூட
குறைப்பது நல்லது.டாக்டர் சொல்லி செய்வதைவிட. நாங்கள் குறைச்சு ரொம்பநாளாச்சு. அப்ப நீங்க?

இனி உங்கள் ரூட் எப்போதும் ஆல் க்ளியராக இருக்க வாழ்த்துக்கள்!!!

தி. ரா. ச.(T.R.C.) said...

இதைத்தான் வாயைக்கட்டி வயத்தைக் கட்டி என்கிறார்களோ

எதுக்கும் கொஞ்சம் அலர்ட்டாகவே இருப்பது நல்லது.

சிங்கமும், உங்கள் தங்கமான இதயமும் இருக்கும் போது குறையொன்றுமில்லை கோவிந்தா

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா.
ரொம்ப ரொம்ப நன்றி.

உண்மையான வார்த்தைகள். செய்துட்டுக் கஷ்டப்படறதுக்கு, முதலிலேயே கவனமா இருந்துடலாம்.
இருக்கேன்:)))))

வல்லிசிம்ஹன் said...

வாங்க மௌலி. தான்க் யூ.எல்லலரும் நல்லா இருக்கட்டும்.
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் நானானி.
வருமுன் காத்தலே நல்லது,.

ஆனால் சில பேருக்குப் பட்டாத்தானே தெரிகிறது:))
இனிமேல் ஜாக்கிரதையாக இருப்பேன்.

வல்லிசிம்ஹன் said...

கோபி,
வாழ்த்துக்களுக்கு நன்றி,.
நீங்க எல்லாரும் கவனமா இருக்கணும்னு நினைச்சுக் கிட்டே தான் எழுதினேன்.
ஆரோக்கியமே பிரதானம்.

வல்லிசிம்ஹன் said...

த்வயி ரக்ஷதி ரக்ஷை ஹி கிமன்யை ஹி:

த்வயி சா ரக்ஷதி கொமன்யை ஹி//
என்று ந்ருசிம்ஹரைப் பற்றி ஒரு ஸ்லோகம் வரும். உன்னை விட்டா வேற யாரு கதின்னு.
அது போலத்தான்.
இரண்டு சிங்கங்களும் தான் எனக்குத் துணை.
வேற கவலை ஏன்????
ரொம்ப ரொம்ப தான்க்ஸ் மா.