About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Monday, September 17, 2007

குட்டிப் பூனை, பெரிய எலி


எங்க வீட்டில எலியார் மழை நாள் ஒன்றில் குடி வந்து இருக்கிறார்.இது ஒரு மே மாத அக்னி நட்சத்திர மழைக்காலம் வருமே(?:))அப்போது...தான் இவர் உள்ள வந்து இருக்கிறார்.


அவர் வந்தது தெரிந்து அதுவரை வெளியில் மிடுக்கு நடைபோட்ட பூனையார்,இப்போது வீட்டுக்குள் சகஜமாக உலவ ஆரம்பித்து இருக்கிறார்.மேலே .இருக்கிற படப்பூனை மாதிரி இல்லை. இது கறுப்புக்கும் சற்றே குறைந்த ,வெள்ளை வரிகள் போட்டுக்கொண்ட சாம்பல் பூனை.


சரியான சம்பல் பூனை கூட:))வந்தது முதல் ஒவ்வொரு மின் சாதனத்தையும்
சரி செய்துவிட்டுத் தான் இயக்க வேண்டி இருக்கிறது.

எ னக்கும் மின்சாரத்துக்கும் அத்தனை ஒத்துப் போகாது.எல்லா வசதிகளும் கொடுக்கும் பஜாஜ்,விஜய்,இன்னும் எத்தனையோ விளம்பரங்கள்


ஆதிகாலத்திலிருந்தே வருவது வழக்கம்.


பத்திரிகையில் பார்க்கும்போது கூட, கொஞ்சம் தள்ளி வைத்தே பார்ப்பேன்:)) தொட்டால் ஷாக் அடிக்குமோ என்கிற பயம்தான்.மேலே மொட்டை மாடியில் தேங்கின தண்ணீர் கசிந்து
கீழே உள்ள சாப்பாட்டு அறை விளக்கைச் சுற்றிச் சொட்ட ஆரம்பித்தது. இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் இவ்வளவு

மோசமாக வீட்டை வைத்து இருக்கிறீர்களா என்று கேட்காதீர்கள் .


அது அப்படித்தான்.
இப்போ பூனை எலி சமாச்சாரத்துக்கு வரலாம்.
நாங்க வந்து இறங்கி அடுத்த நாள் மழை வந்தது.
நம்ம வனாந்திரம் போயி வருஷக்கணக்கு ஆச்சா.??
அதில வீட்டு விஷயங்கள் மறந்து போச்சு.

அதிலையும்இந்த மழை சுகமான மழை.சத்தமில்லாத அழகான மழை... அதனால் ரசிப்பதில் இருந்து விட்டேன்.

திடீரென்று பூனை சீறும் சத்தம், எலி சார் தாவி அப்பள டப்பா உருண்டூ கீழே விழுந்து கடகட..

சாம்பனும் செல்லியும்(அவங்க பேரு) சண்டையில் சுற்றி வர,(அந்தத் தண்ணீரசொட்டி இருந்த இடத்தை மட்டும்


விட்டார்கள்.)


இவர்களை விரட்ட சிங்கம், போட்ட சத்தம் இன்னும் பெரிதாக இருந்தது.:)அதுவரை ஜாக்கிரதையாக இருந்த சாம்பன் திடீரென ஒரே தாவலில் கிறீச்னு சத்தம் போட்டு ஓடீ விட்டான்.


என்னடா இது திகில் சண்டையா இருக்கேனு, விளக்கை அணைக்க வந்த போது ச்விட்ச் போர்ட் கர்ர் என்று கர்ணகடூரமாக கத்தியது.


ஆளைவிடு!! இது ஏதோ மின் இணைப்பு வேலை. தப்பு கனெக்ஷன், ஷார்ட் சர்க்யூட் எல்லாம் புரிந்து,

வெளியில் ,மழையில் வழுக்காமல், போயி மெயின் போர்ட் (தடித்த) ஸ்விட்சை அணைத்தோம்.


பிறகு எப்போதும் செய்வது போல குழல்விளக்கைக் கழட்டி வைத்துவிட்டு,ட்ரிப் ஸ்விட்ச் ஆன் செய்து,

எலெக்டீஷியனைக் கூப்பிட்டு சரி செய்தாச்சு.
அதிலிருந்து, இப்ப இன்னிக்கு கம்யூட்டர் (எலி) மௌஸைக் கூட நான் திட்டுவதில்லை. அது மாட்டுக்கு திரை பூராவும் பயணம் செய்கிறது. போனால் போகட்டும் என்று விட்டு விட்டேன்:)))Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

22 comments:

துளசி கோபால் said...

எலி ஓடிவிளையாட நிறைய இடம் விட்டு வச்சுருக்கீங்க:-))))))

குசும்பன் said...

கொடுத்து வைத்தவங்க நீங்க மழைய பார்க்குறீங்க...:)))

மதுரையம்பதி said...

ஓ! அதனாலதான் எங்களையும் மீண்டும், மீண்டும் பூனை படததை பார்க்க வைத்தீர்களோ? :-)

நாகை சிவா said...

தொடர் கதையோ? அதான் ஒன்னும் புரியல.... :(

நாகை சிவா said...

:)

எத்தனை பிரச்சனைகளை தான் நீங்களும் சமாளிப்பீங்க போங்க....

வல்லிசிம்ஹன் said...

ஹா ஹா:))
அதை விடப் பிரமாதம் பார்த்தீங்களா.ஒரு பூனை படம் க்ளிக் செய்தால் பத்துப் பூனை படங்கள் வந்து இருக்கு;))0
நன்றி சிவா.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா துளசி,
ஒரே ஒரு படம் போட்டேன்மா.
இவ்வளவு படம் வந்திடுச்சு.
நீங்க சொல்ற மாதிரித் தான் இருக்கும். ஓடி விளையாடு எலியே !! அப்டின்னு பாடப்போறேன்:)))

வல்லிசிம்ஹன் said...

வரணும் குசும்பன்,
ஆமா நல்ல சேஞ்ச்.

கிளம்பற அன்னிக்கு உங்க ஊரு கூட நல்லாத்தான் இருந்தது.

காத்து அடிக்க ஆரம்பித்து இருந்தது.:))
நம்ம ஊரு ரொம்ப சுகமா இருக்கு...

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மௌலி, மீண்டும் கோகிலா மாதிரி.

பசங்களை மிஸ் செய்யப் போறோமேனு இவைகள் வந்து விட்டன:)))

வல்லிசிம்ஹன் said...

சிவா, எலி என்னமோ தொடர்கதை மாதிரித் தான் தெரியுது.

எனக்கே நான் எழுதினதைப் படிக்கக் கஷ்டமாத்தான் இருக்கு. :((
முற்றுப் புள்ளி காணோம்,கமா காணோம், எழுத்து ஒண்ணு ஒண்ணும் ரெண்டு தடவை வருது.
ஆனா பின்னூட்டம் சரியா டைப் ஆகுது.
முன்னால துளசி கூடச் சொன்னாங்க. பின்னூட்டத்திலேயே பதிவு போட்டுடுங்கன்னு.:)))))

ஆடத் தெரியாதவங்கனு ஒரு பழமொழி ஞாபகத்துக்கு வருது. அவங்கதான் மேடையைக் குற்றம் சொல்வாங்க. நானும் அது போலத்தான்:))))

கீதா சாம்பசிவம் said...

@வல்லி, க்ர்ர்ர்ர்ர்ர்., பின்னூட்டத்திலேயே பதிவு போடச் சொன்னது நானில்லை? துளசிக்கா அந்தப் பெருமை? ஹிஹி, அதான் நானே பெருமை அடிச்சுக்கிட்டேன். :P :P இவ்வளவு உயர்ந்த சிநேகிதமா? :D சரி, போகட்டும், பூனையை விட அதோட வாலின் ஆட்டம் ரொம்பவே நல்லா இருக்கு. எங்கே சுட்டீங்க?

வல்லிசிம்ஹன் said...

அய்யடா.
கீதா, சாரிப்பா.
நீங்க தான் சொன்னதா.
நீங்க போட்ட பின்னூட்டம் உங்களுக்கு ஞாபகம் இருக்குமா. சாமியே சாம்பசிவம்:)))
இந்தக் காயத்ரி பதிவில பேய் பார்த்ததில உளறிட்டேன்.(இல்லாட்ட மட்டும்!!)
பூனை ரொம்ப நாளைக்கு முன்னால கூகிள்ள சுட்டது:)))))
என்ன ஒரு தரம் சுட்டது நூறு தரம் ஆயிடுத்து.

delphine said...

என்ன வல்லி பூனை தனியா குந்தியிருக்கு?

ambi said...

//பத்திரிகையில் பார்க்கும்போது கூட, கொஞ்சம் தள்ளி வைத்தே பார்ப்பேன்//

:))))) ha haaaaa.

கடைசில யாரு ஜெயிச்சா? சாம்பரா? கீதாவா? சே! செல்லியா? :p

கீதா சாம்பசிவம் said...

வல்லி, அம்பி தானே அந்த எலி? ஆஹா, அந்த எலி பயந்து ஓடறதைக் கண்ணால் பார்க்க முடியலைன்னாலும், கற்பனை பண்ணிப் பார்த்துக்கறேன். அம்பி என்னைக் கண்டு ஓடறாப்பலேயே இருக்கு இதுவும். :P இது அம்பிக்கு, உங்களுக்கு இல்லை!

வல்லிசிம்ஹன் said...

சாம்பர் சார் ஜெயிக்கலை.
எலி செல்லி அவ்வப்போதுவிசிட்.

உண்மையாவே நமக்கும் கரண்டுக்கும் எட்டாம் பொருத்தம் அம்பி:)))

வல்லிசிம்ஹன் said...

கீதா, இன்னும் பத்து நாட்கள் இருக்கு. நானும் பார்க்கிறென் ,, இந்தப் பூனை எலி சண்டை சும்மா உதார் காட்டறதுக்கா,
இல்லை சாத்வீகப் போராட்டமானு:))))

தி. ரா. ச.(T.R.C.) said...

வல்லியம்மா நீங்க ஒருதரம் சொன்னா அது பத்து தரம் சொன்னாமாதிரி.

இலவசக்கொத்தனார் said...

ஒண்ணுமே புரியலை. என்ன விளையாட்டு இது?

வல்லிசிம்ஹன் said...

அதுவா கொத்ஸ்?
மொக்கை மொக்கைனு கேள்விப் பட்டு இருக்கீங்களா?

அதை எப்படிப் போடலாமுனு யோசிச்சேன்..ஓக்கேயா.
அப்போ இந்த எல்இ பூனை சண்டை வ்அந்தது.
நம்ம வீட்டுக்குள்ள ஏற்கனவே சிங்கமும் நானும் உன்னாலதான் என்னாலதான்னு சண்டை போடும்போது இதுகள் எப்படி வரலாம்.??????? அதுதான் ரெண்டையும் மையமா வச்சு நடந்த விவரத்தை எழுதினேன்.:)))
அவ்வளவுதான், விஷயம்.
நீங்க பதிவு படிச்சீங்களா, இல்லை பூனைப் படம் மட்டும் பார்த்தீங்களா:)))))))


நம்ம வீட்டூக்குப் பக்கத்தில இருக்கிற விவேகாநந்தா கல்லூரிக்கு ஏதோ அறுபதாவது ஆண்டு விழாவாம்.சொன்னாங்க......

வல்லிசிம்ஹன் said...

வரணும் தி.ரா.ச,

நூத்துக்கு நூறு உண்மை;))0

வல்லிசிம்ஹன் said...

வாங்க டெல்ஃபின்,
நிறைய நாளாச்சு பார்த்து.
ஆமா பூனைக்கு துணையா எலியைப் போடணும்னு நினைசேன்... அமையலை:)))00