Blog Archive

Tuesday, September 11, 2007

நம்மூர் மக்கள் வெளிநாட்டில்

ஊரை விட்டு வெளியில் வந்து உழைக்கும் எல்லோருக்கும் இந்தப் பதிவைச் சமர்ப்பிகிறேன்.

இது ஒன்றும் சுலபமான வேலை இல்லை.
நம் சுயத்தைக் கொஞ்சமாவது விட்டுக் கொடுத்துத் தான் வெளிநாடு வர வேண்டி இருக்கிறது.

யாரும் சும்மா இருப்பதற்குப் பணம் கொடுக்கப் போவதில்லை. 500டிர்ஹமோ
5000 டாலரோ, இல்லை 10000 fரான்க்ஸோ ஏதாக இருந்தாலும் ஒவ்வொரு துளி நேரத்துக்கும் உழைத்தால் தான் பிழைக்க முடியும்.

நேற்று ஒரு கடைசி நேர வேலையாக வெய்யிலில் வெளியே போக நேர்ந்தது.
இங்குதான் டாக்ஸி காரர்கள் கொஞ்சம் கலர் பார்த்துத் தான் நிறுத்துகிறார்கள். அவர்களுக்கு மேற்கத்தியர்களால் லாபமும் நிறைய.
அவர்களைக் குறை சொல்ல முடியாது.
எங்க்ளுக்காக வண்டியை நிறுத்திய இளைஞன்
பக்கத்து ஊர்க்காரன்.

நீங்கள் வெய்யிலில் நிற்பதைப் பார்த்து நிறுத்தினேன்.
என்று சொல்லிவிட்டு சொந்தக் கதை சோகக்கதையைச் சொல்லி முடித்தார்.
ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பிடத் தான் தனக்கு நேரம் இருப்பதாகவும் மற்ற நேரம் அலைவதற்கே சரியாக இருப்பதாகவும் சொன்னார்.

இவர் தனி ஆளில்லை. இது போல நம் அண்டை மானிலக்காரர்களும் ஒரு தமிழ்க்காரரையும் பார்த்தொம்.
அவர்களாவது குளிரூட்டப்பட்ட வண்டியில் பயணம் செய்து , காவலுடன் மல்லுக்கட்டி, வண்டி சொந்தக்காரருக்குப் பணம் கட்டிப்
பிழைக்கிறார்கள்.
மற்றொரு நாள் இந்த ஊரு பஸ்ஸில் வர வேண்டிய கட்டாயம்.
டாக்ஸி கிடைக்கவில்லை.
அங்கே பஸ் நிறுத்தத்தில் காத்திருப்போர்கள் அனைவரும்
அத்தனை பொறுமையாக வெய்யிலில் வாடுவதைப் பார்த்தால் கஷ்டமாக இருந்தது.
குறித்த நேரத்துக்கு வண்டி வருமா தெரியாது.

அத்தனைக்கும் நடுவில் ஊருக்குப் போன் செய்து பெண்டாட்டியோ, அம்மாவொ பேசிவிட்டால் முகத்தில் அத்தனை மலர்ச்சி.
நம்மைப் பார்த்தால் பாபா,மாஜி என்று நிழலில் உட்கார இடம் தந்து
தாங்கள் வெய்யிலில் நிற்கும் குணம்.

இதற்கு நேர் மாறாக இறங்கும்போதே வண்டியை ஓட்டிவிட்ட பஸ் ஓட்டுனர்,
எந்த தேசமோ தெரியாது, நம்மூராக இருக்க முடியாது...

ஒரு செகண்ட் தாமதித்து இருந்தாலும் நடந்திருப்பது வேறாக இருந்து இருக்கும்.
சிங்கம் விழாமல் பிடித்துக் கொண்டார்.
திகில் அனுபவம்:(((


நாங்களாவது கொஞ்ச நாட்கள் இருந்து விட்டு,
வந்துவிடுகிறோம்
.
இங்கெ இருப்பவ்ர்கள் பிழைப்புக்காக வந்த இடத்த்தில்
முன்ஜாக்கிரதையோடு
எச்சரிக்கையாக இருந்து நல்ல வளத்தோடு வாழ வேண்டும்.



அக்கரைப் பச்சை செழிப்பாகவே இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இந்திய நாட்டை விட்டு ,சொந்த மக்களைப் பிரிந்து வாழும் எல்லோரும் சுகமாக இருக்கட்டும்.



Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

32 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

உள்ளேனம்மா....

வல்லிசிம்ஹன் said...

Present pottu vitten Mouli.:)))
thank you.

Geetha Sambasivam said...

கொஞ்ச நாளைக்கு வெளிநாட்டுக்கு வேலை விஷயமா வந்துட்டுப் போறவங்க பாடு பரவாயில்லை. மத்தவங்க எதைத் தேடி வந்தாங்கன்னும் புரியலை! எதைத் தேடி ஓடறாங்கன்னும் புரியலை! வாழ்க்கையின் இனிய ரசங்களை, அது தரும் இனிய சுகமான நினைவுகளையும், மகிழ்வுகளையும் தொலைத்துவிட்டுத் தேடி ஓடறாங்களோன்னும் தோணுது! மொத்தத்தில் வெளிநாடு வாசம் என்பது "அக்கரைக்கு இக்கரை பச்சை" தான்! :(((((((((((((((((((

Geetha Sambasivam said...

நல்லபடியாப் போயிட்டு வாங்க வல்லி, இறை அருளால் சென்னையில் சந்திக்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

Kattayam paarkkalaam Geetha.

Inge iruppavarkaL santhoshamaakath thaan irukkiRArkaL.
Illai, iruppathu polath therikiRathu.....
Eppadiyo manam NiRaivodu paNamum sambaathiththu,
makizcchiyoodu irukkattum.

வல்லிசிம்ஹன் said...

Namma ooru kuppai koottum vishayam paarththeerkaLA.:((

appadiyorumaNam kamazhum idamaaki vitathu Chennai.!

துளசி கோபால் said...

கீதா சொன்னதுபோல, எதைத் தேடியும் நாமாக ஓடுவதில்லை.
நமக்கு ஆண்டவன், அங்கத்துத் தண்ணியைக் குடிக்க வச்சுட்டான்.
'நீர்வழிப்படும் புணை போல வாழ்க்கை ஓடுது'
யார்யார் எங்கே, எப்போ, எப்படி எல்லாம் அவன் போட்ட கணக்கு.

பத்திரமா ஊர்போய்ச் சேர்ந்ததுக்கு வாழ்த்து(க்)கள் வல்லி.

ambi said...

சில உண்மைகள் கசக்கும். என்ன செய்வது?
பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை!னு அவ்வையார் (கீதா பாட்டி இல்லை) சொல்லி இருக்காரே. :p

பத்ரமா சென்னைக்கு வாங்க! (இல்லாட்டி, வந்தாச்சா?)

நாகை சிவா said...

தானை தலைவி(லி) கீதா சொன்னதை வழிமொழிகிறேன்...

ஏதை தேடி ஒடுகிறோம் என்பது தெரியாமலே ஒடி கொண்டு இருப்பவர்கள் தான் அனேகம். அவர்களை குறை கூறவும் முடியாது, சூழ்நிலைகள் அப்படி....

அப்ப ஊருக்கு கிளம்பியாச்சா... இந்தியாவில், சென்னையில் சந்திக்கலாம்... விரைவில்...

பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

வந்துவிட்டேன். துளசி:))

நன்றி.
என் இனிய இயந்திரா.... கம்ப்யுட்டரும் நலம் அதுதான் பெரிய விஷயம்!!!

வல்லிசிம்ஹன் said...

அம்பி இன்று மதியம் தான் வந்தேன்.
வீடு சுத்தம் நிறைய செய்ய வேண்டி இருக்கு.
பரவாயில்லை.
ஹோம் ஸ்வீட் ஹோம்!!!!!

வல்லிசிம்ஹன் said...

வரணும் சிவா.
நீங்களும் வந்திருக்கீங்களா.

சூழ்னிலைதாம்பா காரணம்.
எங்க இருந்தாலும் நல்லா சந்தோஷமா இருக்கணும்.

இருப்பாங்க.

தி. ரா. ச.(T.R.C.) said...

ஸ்வாகதம் வல்லியம்மா மயிலாபூர் சதனா ஸ்வாகதம். மெதுவாக வந்து குருவாயூரப்பனை பாருங்கள். 1ஒ திங்கள் அயல் நாடுகளில் சுற்றுபயணத்தை முடித்துகொண்டு வ்ந்து ரெஸ்ட் எடுங்கள். வெளிநாடுகளில் வேலை செய்வது எளிதான விஷயம் இல்லைதான்.

Ms Congeniality said...

very true..kashtam dhaan..neenga badhramaa vandhu serndhadhu romba sandhosham :)

மெளலி (மதுரையம்பதி) said...

//வீடு சுத்தம் நிறைய செய்ய வேண்டி இருக்கு.
பரவாயில்லை.
ஹோம் ஸ்வீட் ஹோம்//

கண்டிப்பாக ஒரு நிம்மதி-சந்தோஷம் மனதில் வந்திருக்கும்....சுத்தம் செய்ய ஆள் எல்லாம் கிடைத்ததா?

ஆமா உங்க மீனாக்ஷி எப்படி இருக்கா?..போய் பார்த்தீர்களா..வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்தாச்சா?....

வல்லிசிம்ஹன் said...

Amaam, meenaakashiyaip paarththuttu vanthaacchu.
viittukkuk kootti varavendum.

innum periya thotti vaanggi eduththukkaNum.

veLila vaccup paarththukkalaamnu solRAr.

enakkuth thaan yosanaiyaa irukku.:((
paarkkalaam .O))
ALellaam irukkaangga.

absconding.
varuvaanga...
they were free until today. ippo velainnu sonnaa kashtamaaththaane irukkum;)
it is ok.

வல்லிசிம்ஹன் said...

Amaam, meenaakashiyaip paarththuttu vanthaacchu.
viittukkuk kootti varavendum.

innum periya thotti vaanggi eduththukkaNum.

veLila vaccup paarththukkalaamnu solRAr.

enakkuth thaan yosanaiyaa irukku.:((
paarkkalaam .O))
ALellaam irukkaangga.

absconding.
varuvaanga...
they were free until today. ippo velainnu sonnaa kashtamaaththaane irukkum;)
it is ok.

மடல்காரன்_MadalKaran said...

மனதை மறைத்து மயங்காமல்
குணத்தை வைத்து குறையாமல்
சினத்தை சிறுத்து சிதையாமல்
பணத்தை பார்த்து சிதறாமல்
பாசம் உரைத்து உறங்காமல்
உண்மை உணர்ந்து உருகாமல்
தேசம் விட்டுப் போனாலும்
நேசம் விட்டுப் போகாமல்
நிலையாக காலம் கனிய காத்திருந்து
கற்பனை பூத்திருந்து
காகிதப்பூவாய் கருகாமல்
வாசம் வீசி வேலையுடன் வாழும்
எல்லோருமே நலமுடன் வாழ
உங்களுடன் நானும் பிரார்த்திக்கிறேன்.

G.Ragavan said...

உண்மைதாங்க. எல்லாரும் எங்கயிருந்தாலும் நல்லாயிருக்கட்டும். நீடு வாழட்டும். பீடு வாழட்டும்.

ரவி said...

//வாழ்க்கையின் இனிய ரசங்களை, அது தரும் இனிய சுகமான நினைவுகளையும், மகிழ்வுகளையும் தொலைத்துவிட்டுத் தேடி ஓடறாங்களோன்னும் தோணுது! ///

ரிப்பீட்டேய் !!!!!

இலவசக்கொத்தனார் said...

ஆசீர்வாதங்களுக்கு நன்றி வல்லிம்மா. அப்புறம் திட்டாதீங்க. அந்த கனவு போஸ்டுக்கு கையே வரலை. இன்னுமேதான் எழுதணும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வல்லி அக்கா!
எனக்கு ,எங்களை நினைத்தால் கண்ணதாசனின் ,'தரை மேல் பிறக்கவைத்தான்' பாடல் பொருத்தம் போல் இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மிஸ்.congeniality:)))
spelling righடாஆ

நன்றி.வந்தாச்சு. இனிமே களத்தில க்உதிக்க வேண்டியதுதான்:))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் கொத்ஸ் சார்.

திட்டலை, திட்டலை.

எல்லோரும் படிக்கும்படி சந்தோஷமாக எழுதுங்கோ.
எப்ப வேணும்னாலும்.:))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் மடல்காரன்.
மடலா கவிதையா.

நலமே வாழணும்.
நன்றி

வல்லிசிம்ஹன் said...

யோகன், அது ரொம்ப மனசை உருக்கும் பாட்டு.

கலங்கும் அந்தப் பாட்டைக் கேட்டால்.
இசை, பாடல், குரல் எல்லாமே

நெகிழ்ச்சியாக இருக்கும்.
ஒரு நாள் போவார்
ஒரு நாள் வருவார்,
ஒவ்வொரு நாளும் துயரம்.

ஒரு சாண் வயிற்றை வளர்ப்பவர்
உயிரை ஊரார் நினைப்பது சுலபம் என்று போகும் இல்லையா அந்தப் பாடல். படகோட்டி.
நன்றி நினைவு படுத்தியதற்கு.

பல கண்டங்களுக்குத் தமிழன் போயாச்சு பிழைப்பைத் தேடிக் கண்டம் அனுபவித்தபடி.
சுதந்திரம் எப்போதோ.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராகவன்.அதே அதே:)))

வல்லிசிம்ஹன் said...

வாங்க ரவி. உண்மை. கீதா மாதிரி அருமையா எடுத்துச் சொல்ல யாரு!!!!

பாரதிய நவீன இளவரசன் said...

நல்ல பதிவுக்கு நன்றி.

பிழைக்க வந்த இடத்தில் பல அல்லல்கள்பட்டு, ஒரு நாலு காசு சேர்த்த திருப்தியில், இரண்டு மூன்று வருடம் கழித்துக் குடும்பத்தாரைக் காணவரும் அந்த நாடு திரும்பும் அப்பாவி இந்தியனிடம், விமான நிலயத்தில், நமது customsகாரர்கள் நடந்து கொள்ளும் கீழ்த்தரமான செயல்களை என்னவென்பது? அங்கனம் மிரட்டியும் உருட்டியும் கையூட்டாகவும் வெளிநாட்டுப் பொருட்களைப் பெறும் இந்த வெள்ளைக்காலர் கனவான்கள் இந்தப் பதிவைப் படித்துவிட்டாவது திருந்தட்டும்.

வல்லிசிம்ஹன் said...

உண்மை இளவரசன்.
இப்போது எவ்வளவோ தேவலை. முதல் தடவை திரும்பியபோது நாங்கள் இறங்கிய போது கையீல் வைத்திருந்த மெண்டோஸ் பறிபோன அழகை என்ன சொல்வது.

நல்லவர்களையும் பார்த்து இருக்கிறோம்.
நன்றி, ..

அமர பாரதி said...

வல்லி அவர்களே, எந்த ஊரைப்பற்றி சொல்கிறீர்கள்?

வல்லிசிம்ஹன் said...

அமர பாரதி, நான்க்கல் 40 நாட்கள் துபாயில், வந்து இருந்தோம். அதைஇ பற்ற்த்தான் எழுதி இருக்கிறேன்.