Blog Archive

Tuesday, September 04, 2007

எங்கும் கண்ணன்

தேவகி பெற்று,,
யசோதையிடம் வளர்ந்து,
பாண்டவருக்கு அடைக்கலம் கொடுத்து,
திரௌபதி மானம் காத்து,
அர்ஜுனனுக்கு ஞானம் அளித்துக்
கண்ணா எத்தனை வேலையடா உனக்கு.

கொஞ்சமெ கொஞ்சமானாலும் எங்க வீட்டுக் குட்டி தொட்டிலில் நீ தவழ்ந்து ஓய்வெடுத்துக்கொள்.

பாலும்,தயிரும்,வெண்ணையும்,அவலும்,
ஜீரணத்துக்குச் சுக்கும் தருகிறேன்.

வந்துவிடு.

என்றும் இருக்கும் உனக்கு இன்று மத்திரம் வாழ்த்துக்கள் சொன்னால் போதாது. என்றும் உன்னை நினைக்கும் மனம் மத்திரம் கொடு.
கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் நம் அனைவருக்கும்.

கண்ணனை நினைக்காத நாள் இல்லை.
நினைக்காவிட்டால் நாம் இல்லை.










Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

30 comments:

ambi said...

//கண்ணனை நினைக்காத நாள் இல்லை.
நினைக்காவிட்டால் நாம் இல்லை.
//

very True.
Happy Krishna jenmaashtami valli madam. :)

மெளலி (மதுரையம்பதி) said...

//என்றும் உன்னை நினைக்கும் மனம் மத்திரம் கொடு//

உண்மைதான் வல்லியம்மா....

எல்லோருக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்....

மெளலி (மதுரையம்பதி) said...
This comment has been removed by a blog administrator.
Hariharan # 03985177737685368452 said...

கிருஷ்ண பரமாத்மா எனும் Eternal Global Management Guru (be it political or self management)வின் பிறந்தநாள் கொண்டாட்ட வாழ்த்துக்கள் :-)).

இலவசக்கொத்தனார் said...

happy birthday krishna!!

பங்காளி... said...

உங்க கிருஷ்ணர் பத்தி நாங்களும் ஒரு பதிவு போட்ருக்கோம்...படிச்சி பாருங்க தாயே....

பங்காளி... said...

http://pangaali.blogspot.com/2007/09/blog-post_04.html

நளாயினி said...

மனசுக்கு நிம்மதி தந்த பதிவு. படங்களும் தான்.

Geetha Sambasivam said...

Happy Seedai,Happy Murukku!இங்கேயும் கோலம் போட முடியாது! என்ன செய்யலாம்? தமிழ்நாட்டிலும், சரி இந்தியாவில் எங்கே இருந்தாலும் சரி, பண்டிகைகள் கொண்டாடுவதில் வரும் மகிழ்ச்சி இங்கே இல்லைதான். நாம் மட்டுமே கொண்டாடிட்டு, யாருக்கும் ஒண்ணுமே கொடுக்க முடியாம, யாருமே நமக்கு ஒண்ணும் கொடுக்காம என்ன ஒரு பண்டிகை இது? :(((((((

Geetha Sambasivam said...

@பங்காளி, வல்லி பதிவிலே இருந்து உங்க பதிவுக்கு வரவே முடியலை! ம்ம்ம்ம்., அழையா விருந்தாளிகளை உங்க பதிவு விடாது போலிருக்கு! :)))))))

நானானி said...

கண்ணன் பிறந்த நாளன்று உங்களுக்கும் மற்றும் எல்லோருக்கும்
வாழ்த்துக்கள்!! வல்லி!
எங்கள் வீட்டு குட்டிக்கண்ணனுக்கு
கிருஷ்ணர் வேஷம் போட்டு (வேஷமென்ன அவனே கண்ணந்தானே!) சுவாமிக்கு அப்பம்,வெண்ணை,அவல் படைத்து முதல் முறையாக ஸ்ரீஜெயந்தி கொண்டாடினோம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

வல்லியம்மாவுக்கு கண்ணன் தரிசனம் செய்துவித்தமைக்கு நன்றி. கண்ணன் செய்யும் மற்ற வேலைகளை பாரதியார் வாயால் கேளுங்கள்


எங்கிருந்தோ வந்தான், 'இடைச்சாதி நான்' என்றான்;
''மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன் ...

வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;
சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்;
காட்டுவழி யானாலும், கள்ளர்பய மானாலும்; ...

இரவிற் பகலிலே எந்நேர மானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்போன்;
கற்ற வித்தை யேதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே!
ஆன பொழுதுங் கோலடி குத்துப்போர் மற்போர் ...

நானறிவேன்; சற்றும் நயவஞ் சனைபுரியேன்''
என்றுபல சொல்லி நின்றான் ''ஏது பெயர்? சொல்'' என்றேன்
கண்ணன் என்பார் ஊரிலுள்ளோர்

துளசி கோபால் said...

கி.ஜெ. வாழ்த்து(க்)கள் வல்லி.

நேத்து வீட்டிலும், கோயிலிலும், சத்சங்கத்திலுமுன்னு மூணு இடத்தில் கொண்டாடி முடிச்சாச்சு.

ambi said...

//நாம் மட்டுமே கொண்டாடிட்டு, யாருக்கும் ஒண்ணுமே கொடுக்க முடியாம, யாருமே நமக்கு ஒண்ணும் கொடுக்காம என்ன ஒரு பண்டிகை இது?//

@geetha paati, அட! இங்க பாருடா! படிகறது ராமயணம்! இடிக்கறது பெருமாள் கோவிலா? :)

முதல்ல எனக்கும், TRC சாருக்கும் சீடை முறுக்கு எல்லாம் அனுப்பி வைங்க. :)))

நீங்க ஊருக்கு வந்ததும் உங்களுக்கு என்ன தரலாம்?னு நாங்க யோசிச்சு வெக்கறோம். :p

வல்லிசிம்ஹன் said...

நன்றி நானானி. வீட்டுக்குக் கண்ணன், சாமி கண்ணன் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். ஸ்வாமி மட்டும் குழந்தை ரூபத்தில நம்ம கிட்ட வந்துட்டா அப்புறம் நமக்கு என்ன வேணும்!!!

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி,
நீங்களும் கண்ணனைப் பற்றி ஏதாவது புதுத் தகவல் கொடுப்பீர்களோ என்று பார்த்தேன்.:))

இந்தப் பண்டிகைகள் எல்லாம் நம்மை சுவாமியின் அருகில் கொண்டுபோகத்தான் இல்லையா.
அவன் கண்விழித்து நம்மைப் பார்த்து வினை தீர்க்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க ஹரிஹரன்.
மேனேஜ்மெண்ட் குருதான்.
இல்லாட்ட இத்தனை பிரச்சினைகளை இவ்வளவு தந்திரமா ஹாண்டில் செய்திருப்பாரா:))

ரொம்பப் பிடித்தது நீங்க கண்ணனை வர்ணித்தது.:))

வல்லிசிம்ஹன் said...

வரணும் இ.கொ.
உங்க க்ரீட்டிங்ஸ் தொட்டில் கிருஷ்ணன் கிட்டச் சொல்லிட்டுத் தொட்டிலையும் ஆட்டிவிட்டேன்.
சிரித்து விட்டுச் சரின்னார்.:))

வல்லிசிம்ஹன் said...

வரணும் துளசி,
நேற்று இரட்டைப் படி கொண்டாட்டமா:)

இங்கேயும் சிம்பிளாக கொண்டாடியாச்சு.
அடுத்த வருஷம் நம்ம ஊரிலதான் கிருஷ்ணரைக் கொண்டாடணும்:))

வல்லிசிம்ஹன் said...

பங்காளி,
ரொம்ப அருமையா லின்க் கொடுத்தீங்க.
படித்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
நல்லதொரு ஆராய்ச்சி.

முன்னால் என்ன நடந்தது என்று அறிந்து கொண்டால் தானெ இப்ப சரியா இருக்க முடியும்...
ரொம்ப நன்றிப்பா.
மேலும் ஏதாவது விஷயங்கள் தெரிந்தால் பதிவிடுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

கீதா, முறுக்கு சீடை எல்லாம் எடுத்துக் கொண்டேன்.
நன்றி.
அடுத்த வருஷம் ஜமாய்ச்சுடலாம்.

இந்தக் கோலம் போட முடியாமல் ,காவி செம்மண் போடாமல் எந்தப் பண்டிகை நிறைவு போறும்.
அதுவும் சிகாகோல அந்தக் குளிர்ல கூட, Fஉல்லாக் கவர் செய்து பொங்கலுக்குக் கோலம் வாசலில் அந்த பனியில் போட்டேன்.
இந்த ஊரில எதித்தாப்பில இருக்கிற லண்டன் கார அம்மா, தீபம் ஏத்தினால் போற வர ஜனங்களுக்கு இடைஞ்சல் என்று விட்டார்:(( நெருப்பு ஹசார்டாம்!!!!

போனப் போறது, பெருமாளுக்குத் தெரியாதா.

வல்லிசிம்ஹன் said...

இரவிற் பகலிலே எந்நேர மானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்போன்; //
இது போறுமே. அவனிருந்தால் ,
அவன் கூட இருப்பதற்கு
நமக்கென்ன குறை!!
நன்றி தி.ரா.ச.

வல்லிசிம்ஹன் said...

நன்றி நளாயினி.
எல்லப் படங்களும் கூகிள் ஆண்டவர் கொடுத்தார்,.:)

வல்லிசிம்ஹன் said...

அம்பி, நீங்கள் முறுக்கு சுத்தலையா.
பாரேன்.

பாவம் தங்கமணி.
தனியாவா வேலை செய்ய விட்டீர்கள்.
ஆனாலும் மோசம்:))))

மெளலி (மதுரையம்பதி) said...

//நீங்களும் கண்ணனைப் பற்றி ஏதாவது புதுத் தகவல் கொடுப்பீர்களோ என்று பார்த்தேன்.:))//

செளந்தர்ய லஹரி பதிவினை ஆரம்பித்துள்ளேன் வல்லியம்மா.....
http://sowndharyalahari.blogspot.com/

அதற்கு குறிப்பெடுப்பதில் இருப்பதால் இதனை விட்டுவிட்டேன்....ஆனால் பால முகுந்தாஷ்டகம் ஒரு பதிவாக அர்த்தத்துடன் பதிய ஆசைதான். முடிந்த சமயத்தில் செய்கிறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@மௌளி சார் எப்போ போடப் போறீங்க
பாலமுகுந்தாஷ்டகம். சீக்கிரம்.

கரார வ்ந்தேன பதரவிந்தம்
முகார விந்தேன வினிவே ஸ்யந்தம்
வடஸ்ய பத்ரஸ்ய புடே ஸ்யானம்
பாலம் முகுந்தம் மனஸாஸ் ஸ்மராமி

தாமரை போன்ற கைகளினால் தாமரையைப் போல் இருக்கும் கால்களை அன்றலர்ந்த தாமரை போல் இருக்கும் முகத்தின் பவள வாய்களில் கட்டை விரலை(பக்தர்களின் தலையால் வைத்து வணங்கப் பெற்றதால் அதி உள்ள பக்திரசத்தை)சுவைத்துக்கொண்டும்,
ஆலிலைமேல் படுத்துக்கொண்டு இருப்பவரும் குழந்தை க்ருஷ்ணனை மனதில் நினைக்கிறேன்
திங்களும் செவ்வாயும் திருச்சூர் செல்கிறேன் கண்ணன் அழைப்பு எப்படி என்று பார்க்கலாம்,

மெளலி (மதுரையம்பதி) said...

//கரார வ்ந்தேன பதரவிந்தம்
முகார விந்தேன வினிவே ஸ்யந்தம்//

தி.ரா.ச சார், நீங்களே எழுதிவிடலாமே...அழகாக ஒரு ஸ்லோகம் வந்துவிட்டதே? :-)

வல்லிசிம்ஹன் said...

Aravintha dhaLAya dhaakshan,
SriKannan,
amutham.
Bala Mukunthashtakam.
Semmaiyaaka Arambiththuvittathu.

eppadiyo padikkak kidaiththaal adhirshtam engaLukkuth thaan:)))

வல்லிசிம்ஹன் said...

T.R.C. sir,
Thirucchoorukku enakkuth therinthu second time pokiRIrkaL. inthath thadavaiyum
nalla dharisanam kidaikkattum.

kovil pathivu onRum ezhuthungaL.


arththam koduththathaRku nanRi.
anubaviththu padikka mudinthathu.

தி. ரா. ச.(T.R.C.) said...

அது சரி வல்லியம்மா ஆமாம் இது 3 தடவை.அங்கு ஆடிட்டிங் அதான்,கண்ணனையும் பார்கலாம்.
ஆனால் என்ன என் மீது கோபம் என் லக்ஷ்மி வந்தாள் பதிவுக்கு வரமாட்டேன் என்கிறீர்களே.வந்து உங்களுக்குப் பிடித்த பாட்டைக் கேளுங்கள்.