About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Tuesday, August 21, 2007

அய்யொ பாவம்னு சொன்னா ஆறு மாசம் பாவம்

இந்த ஊருக்கு வந்தவுடன் வெளியில் போகும் வரும் ஆட்களைப் பார்த்து ரொம்பக் கவலையாய் இருக்கும். அதுவும் வீடு இருக்கும் பகுதியில் நிறைய பள்ளிக்கூடங்கள்.
வேலை செய்பவர்கள்.
இந்தியாவுக்குத் திரும்பி அனுப்பப்படும் தினக்கூலியாட்கள், எல்லொரும் அவஸ்தைப் படுவதை வீட்டுக்குள்ளிருந்தே பார்க்க முடியும்.

என்ன விடிவு காலம் வருமோ ,பாவமே என்று சொல்லிக் கொண்டிருப்பேன்.
அடுத்த நாள் நானே மாட்டிக் கொள்வேன் என்று நினைக்கவில்லை.:))

வீட்டில் மருமகளுக்கு புது ஆடைகள் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து,
நானும் சிங்கமும் சாயந்திரம் ஒரு நான்கு மணி வாக்கில்
கிளம்பினொம்.
நாங்க போக நினைத்த இடம் ஃபாப் இந்தியா எனும் இந்திய அரசின் விற்பனைக் கூடம்.
அங்கு நம் ஊருத்துணிகள், படுக்கை விரிப்புகள், ரெடிமேட் உடைகள் எல்லாம் வெகு நேர்த்தியாகக் கிடைக்கும்.

அழகாகவே இருக்கும்.
அது இருக்குமிடம் மன்கூல் ரோடு என்ற இடம்.
அதுவும் தெரியும்.
பையன் கிட்டச் சொல்லாமல்,மருமகளிடம் மட்டும் சொல்லிவிட்டு
நாங்கள் கீழே இறங்கி வெளியே வந்தோம்.
முகத்தில் ஓங்கி அறைந்தது போல ஒரு அனல்காத்து சூழ்ந்தது. வெய்யில் சுள்ளென்று உறைக்கவும், டாக்சியைப் பிடிக்க அருகிலிருந்த ப்ளாட்ஃபார்Mஇல் நின்றோம்.

அப்பவே கையிலிருந்த பாதி பாட்டில் தண்ணீர் காலி.
இப்படி ஒரு உஷ்ணமா, சாமினு நினைத்தபடி நல்ல வேளையாக அங்கே வண்டியை (டாக்சி)நிறுத்தின மகானுபாவனை ஆசீர்வதித்தபடி, நாங்க போக வேண்டிய மன்கூல் ரோட் பற்றிச் சொன்னோம்.
எங்க சிங்கத்துக்கு வழக்கமாக எல்லா இடமும் அத்துபடி.
அன்று மட்டும் அவருக்கு....வெயில் காரணமோ என்னவொ இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதாகச் சொல்லி, பணத்தைக் கொடுத்துவிட்டு

இறங்கச் சொன்னார்,
இறங்கின இடம்,ரோடு எல்லாம் சரிதான்.
அந்தக் கடையைத்தான் காணவில்லை.
'' I am sure ma. this is the place.
they must have pulled the building down'' என்றவாறு நடக்க ஆரம்பித்தார்.
வழக்கம்போல பின் தொடர ஆரம்பித்தால் வெய்யிலும், காற்றும் காலையும், உடலையும் சுடுகின்றன.
தண்ணீர் தீர்ந்து,அது வேற எனக்குக் கடுப்பாக இருந்தது.
உங்களுக்கு எப்படித் தெரியாமல் இருக்கும்.
நாந்தானெ ரெண்டு பேரில தொலைந்து போற டைப்.. நீங்க எப்படி மறக்கலாம்னு முணுமுணுத்தபடி போனேன்.
இதோ இவரைக் கேட்கிறேன் அவரைக் கேட்கிறேன் என்று எல்லாரையும் கேட்டு, ஒரு கறுப்புக் கண்ணாடி பதித்த பெரிய அபார்ட்மெண்ட் பக்கம் நின்றோம்.
இப்போது இறங்கின இடத்திலிருந்து ஒரு கிலொமீட்டராவது வந்திருப்போம்.
சரி. இத்தோடு இன்னிக்கு உண்டான ஒரு மணி முடிகிறது. மீண்டும் நாளை பார்க்கலாம்.:)

பாடம்.......... கண் போன போக்கில் கால் போகக் கூடாது.
போகாத இடந்தனிலே போக வேண்டாம்.
மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்......;0)))


Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal