About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Tuesday, August 21, 2007

வெய்யில்க்கேற்ற நிழலுண்டு....2

இன்று பிறந்த நாள் காணும் சக வலைப்பதிவர் தேசிகனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
அவர் வழியாகத் தான் வலைப்பதிவுகள் பற்றி அதிகம் கற்றுக்கொண்டேன்.
நன்றி தேசிகன்.

தண்ணீரும் தீர்ந்தாச்சு.
வெய்யிலும் உக்கிரமாகக் காற்றோடு தாக்குகிறது..
சரி இனிமேல் தேடிப் பயன் இல்லை, என்று
நாங்கள் திரும்பவும் வந்த வழியே திரும்பினோம்.
இங்கே புது மெட்ரோ சிஸ்டம் வரப்போவதால்
அது வரப்போகும்
இடங்களிலெல்லாம் வெட்டி வைத்து இருக்கிறார்கள்.
அப்படி ஒரு பாதையில் போய்
நங்கள் பஸ் நிறுத்தம் எங்க இருக்கும் என்று தேடி வந்தோம்.
சிங்கத்துக்கு பஸ் ரூட்டெல்லாம் மனப்பாடம்.
போன தடவை இங்கே வந்த போது குளிர்காலமாக இருந்த்தால்
நிறைய இடங்களை சிறப்பாக நாசர் ஸ்கவேர் என்ற இடம் நன்றாக அலசி இருக்கிறார்
அங்கே இவருக்கு வேணும் என்கிற ஹார்ட்வேர் எல்லாம் கிடைக்கும்.
அப்படியே இதோ வந்தாச்சு அதோ வந்தாச்சு என்று புர்ஜுமான் ஷாப்பிங் செண்டர் வரை வந்துவிட்டோம்.
நல்ல வேளையாக அங்கே ஒரு பஸ் நிறுத்தம் தென்பட்டது.
அங்கிருந்து டாக்ஸி பிடிக்கலாம் என்று கை காண்பித்தால் ஒரு வண்டியும் நிற்க மாட்டேன் என்கிறது.
சிங்கத்துக்கு உண்மையாகவே என்னைப் பற்றிக்கவலை வந்து விட்டது.
பசி வந்துவிட்டால் அதற்கு அப்புறம் ஒரு அடி எடுத்து வைப்பது கூட சிரமம்.
கையிலோ ரஸ்க், பிஸ்கட் என்று ஒண்ணும் இல்லை.
டாக்ஸி நிற்காத போது அழகான துபாய் போக்குவரத்து ஏசி பஸ் ஒன்று வந்து நின்றது.
எனக்குத் தயக்கம் ,இது நம்ம வீடு வரை போகுமா, என்று. பக்கத்துக் கடையில் தண்ணீர்
வாங்கப்போன சிங்கம் அங்கிருந்தே பஸ்ஸில் ஏறும்படி கைகாட்டுகிறார்.
எனக்கு முன்னபின்னத்(நம்பர்) தெரியாம எப்படி இந்த பஸ்ஸீல எப்படி ஏற என்று தயங்கும்போது,
'' அம்மா, ஏறுங்க. ஐய்யா வரவரை நான் பஸ்ஸை எடுக்கலை''ன்னு குரல் கேட்கிறது.
எந்த சாமிடா இப்படிக் குரல் கொடுக்குது , அதுவும் தமிழ்ல!! என்று யோசித்தபடி உள்ள எட்டிப் பார்த்தேன்.
சிரித்தபடி அந்த ஓட்டுனர் மீண்டும்,''உள்ள வாங்கம்மா, மயக்கம் வந்துடும்''
என்றார்.
ஏன்மா இப்படி வெய்யில்ல வந்தீங்க. எந்த ஊரு. எனக்குத் தஞ்சாவுர்.
இதோ சாரும் வந்துட்டார்.
உக்காருங்க. முதல்ல தண்ணீர் குடிங்க. அப்புறம் டிக்கட் எடுக்கலாம் என்று வரிசையாக
கட்டளைகள் அன்பாகப் போடுகிறார்.
நாங்களும் உட்கார்ந்ததோம் ஒரு வழியாக. கூட்டம் இருந்தாலும்,
டிரைவர் இருக்கையிலிருந்து பேச்சு தொடர்ந்தது.
அம்மா நம்ம ஊருக்காரங்க நேரம் பார்த்து வெளில வரணும்.
இந்தாங்க இந்த டிக்கட்டுகளை வாங்கிட்டுப் பணம் அந்த ஆளுகிட்ட அனுப்பங்க.
எங்க கராமா போறீங்களா?
என்றார். இல்லப்பா இன்னும் தள்ளி என்றதும், வீட்டுக்கு எவ்வளவு பக்கமோ
அங்க இறக்கி விடறேன். என்று சிரித்தார். இறங்கும் வரை எங்க பூர்வீகம்,தன் ஊர் என்று
அழகாகத் தமிழில் பேசி வந்தார்.
அவர் பெயரைக் கேட்டுக்கொள்ளவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது.
அந்த வெய்யிலி பஸ்ஸின் குளுமை என்ன ஆஸ்வாசப்படுத்தியது.
எங்கே எல்லாமொ சுற்றிவிட்டு வீட்டு அருகில் உள்ள ரஷீத் ஹாஸ்பிட்டல் பக்கம்
வண்டியை விட்டு
இறங்கினோம்.
தஞ்சாவூர்க்காரருக்கு நன்றி சொல்லித்தான்:)
அவர் மீண்டும் நம்ம பஸ்ஸீல நீங்க ரெண்டு பேரும் வரணும்மா. பார்க்கலாம்
என்று வண்டியைக் கிளப்பிச் சென்றார்.
இந்ததமிழ் எப்படி ஒரு சோர்வான சமயத்திலிருந்து
நம்மை மீட்டது பார்த்தியா என்று யோசித்தேன்.
அதன் பிறகு வெளி வெய்யிலுறைக்கவில்லை.

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal
Post a Comment