Blog Archive

Tuesday, July 31, 2007

207 , 1943இல் ஒரு திருமணம்

207 , 1943இல்   ஒரு திருமணம்


பெண்ணுக்குப் பதிமூணு வயசாகிவிட்டது. திருமணம்                                  

செய்யவேண்டும்.சமவயதுள்ள பெண்களுக்கெல்லலம் மாப்பிள்ளை தேட ஆரம்பித்தாகிவிட்டது.



ஆனால் புஷ்பா என்கிற பாப்பாவுக்குப் படிப்பில் ஆசை.அவள் அப்பா
வீரராகவன், தன் பெண்ணின் அறிவிலும்,அழகிலும் ,அடக்கத்திலும் அகமகிழ்ந்து போவார்.
அவளை அமைதியான படித்த பையனுக்குத்தான் மணம் செய்து கொடுக்கவேண்டும்.

1943இல் பதிமூணு என்பது அவ்வளவு குறைந்த வயசில்லேயே.


கீழநத்தம் கிராமத்தைவிட்டு மதராஸ் பட்டணம் வந்ததில் வாழ்க்கைத் தரம் அவ்வளவாக உயரா விட்டாலும் கையைக் கடிக்காமல் நான்கு பசங்களையும் ஒரு பெண்ணையும் கொண்ட குடித்தனத்தை ஓரளவு நன்றாகவே நடத்த முடிந்தது.தங்கம் 13ரூபாய் ஒரு பவுன்.அதுதான் பெரிய செலவு. இருந்தாலும் வருடாவருடம் ஐந்து பவுனாவதுவாங்குவது வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அதுவும் அவர் செய்து கொண்டிருந்த உத்தியோகம் ஸ்கூலில் சயன்ஸ் மாஸ்டர்.

அதில் பெண்டாட்டிக்கும் குழந்தைகளுக்கும் துணிமணி வகையறாக்களுக்கு அளவாகவே செலவழிப்பார். சுற்றத்தினர் , தன்னொத்து ஊரைவிட்டு வந்தவர்களுக்கும் உதவுவார்.கிராமத்திலிருந்து வரும் நெல் விற்றப் பணத்தைச்

சிறுகச் சிறுகச் சேமித்து எக்மோர் பெனிஃபிட் ஃபண்டில் சேர்த்து வந்தார்.

நிலங்களில் வரும் வருமானத்தைக் கணக்கெடுக்க வருடாந்திர போன இடத்தில் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் ஸ்ரீ ஸ்ரீனிவாசன் என்பவரது முதல் புத்திரன் சிரஞ்சீவிநாராயணன் நல்ல வேலையில் இருப்பதாகவும்,

தற்போது சென்னையில் அக்கா வீட்டில் இருப்பதாகவும் செய்தி கிடைத்தது.
உடனே தன் தம்பியையும்,அண்ணாவையும் அழைத்துக் கொண்டு ,
பொன்னியம்மன் கோவில்லருகில் ,23ஆம் நம்பர் பஸ் பிடித்து

மயிலாப்பூருக்கு விரைந்தார். புஷ்பா என்கிற பாப்பாவைப் பெண்பார்க்க வருமாறு ஸ்ரீமதி பத்மாசனியிடம் ,தங்கள் குடும்ப விவரங்களைச் சொல்லி அழைத்தார்.

வீரராகவனின் நேரடீப் பேச்சில் மனம் கவரப்பட்டு அந்த அம்மாவும்,

தன் தாயார் தகப்பனார் இருவரையும் கலந்து பேசி அடுத்த வெள்ளிக்கிழமை பெண்பார்க்கப் புரசவாக்கம் வருவதாகச் சொன்னார்.இதில் என்ன வித்தியாசமான விவரம் என்றால் சௌபாக்கியவதி புஷ்பாவுக்கும் ,சி.நாராயணனுக்கும் ஜாதகமே இல்லை என்பதுதான்.
பின் எப்படிப் பொருத்தம் பார்த்தார்கள்?

9 comments:

Geetha Sambasivam said...

உங்க அம்மா அப்பா கல்யாணக் கதையா? ரொம்பவே விறுவிறுப்பாக இருக்கே! எங்க மாமனார், மாமியாருக்குக் கூட ஜாதகம் பொருத்தம் எல்லாம் இல்லைன்னு சொல்லுவாங்க! சொந்தம் என்பதால் கல்யாணம் பண்ணினாங்க போல் இருக்கு. ஆனால் எங்க அப்பா, அம்மாவுக்கு உலகிலேயே இல்லாத அளவுக்குப் பத்துப் பொருத்தமும் இருந்ததாய்ச் சொல்லுவாங்க. ம்ம்ம்ம்ம்ம், அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

துளசி கோபால் said...

'பாலங்கள்' நினைவுக்கு வருது.

ஜாதகம் இல்லாட்டாலும் கல்யாணம் முடிஞ்சதுதானே?

எனக்கும், கோபாலுக்கும் ஜாதகம் இல்லைப்பா. ஆனா மகளுக்கு இருக்கு:-)

ambi said...

எப்படிப் பொருத்தம் பார்த்தார்கள்?
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். :))

வல்லிசிம்ஹன் said...

அப்போது எல்லாம் அவ்வளவு மதிப்பு ஜாதகங்களுக்குக் கொடுக்கவில்லையோ கீதா....

முக்கால்வாசி கல்யாணம் உறவு விட்டுப் போகாமல் நடக்கும்.

பிரச்சினைனு வந்தாதான் ஜோசியரிடம் போவது என்று இருந்ததுனு தான் தோணறது.
உங்க அம்மாஅப்பா பத்துப் பொருத்தமா. ஹை.அப்ப ஜாலி லைஃபா...

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி. மனசுப் பொருத்தமும், பூக்கட்டிப் போட்டுப் பொருத்தமும் பார்ப்பாங்களாம்.

மனசு சரின்னுட்டா அப்புறம் வேற வேதனைக்கொ சஞ்சலத்துக்கோ இடம் ஏது.

பாலம் என்ன ஒரு அழகான கதை. எவ்வளவு உழைப்பு அதில் செலுத்தி இருக்காங்க அந்த அம்மா.
அதைக் கையில் எடுத்தால் கீழ வைக்க மனசு வராது.போய்ப் படிக்கணும் திரும்பவும்.

வல்லிசிம்ஹன் said...

அம்பி, கலயாணமும் நடந்தது. மனமொத்து நிறை வாழ்வும் வாழ்ந்தார்கள்.

இன்னிக்கே முடிஞ்சா அடுத்த பதிவையும் போடறேன்.

இங்கிருந்து கிளம்பிட்டாப் போகிற இடத்தில் இணைய இடத்தில் வசதி எப்ப்படியோ தெரியாது.:))))

வல்லிசிம்ஹன் said...

அதுதான் சொல்ல வந்தேன். டெல்ஃபின்.
ஜாதகங்களுக்கு மதிப்பு கொடுத்து ஒழுங்ககக் கணிப்பவரிடம் கொடுத்தால் நம்பலாம். ஏதாவது அரைகுறை ஆட்களிடம் கொடுத்து பயப்படுவது வேண்டாம்.
எல்லாத்துக்கு மேல கடவுள் நமக்குக் கொடுக்கும் டெஸ்டினியில் நம்பினால் போதும் என்று நினைக்கிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லாப்போகுது கதை.
இந்தகாலத்துலயே சிலர் மனப்பொருத்தம் இருகுடும்பத்துக்கும் இருந்துட்டா போதும்ன்னு நினைக்கிறாங்க ..நல்லது தானே.
எனக்கும் கூட பொருத்தமெல்லாம் பாக்கலை.

வல்லிசிம்ஹன் said...

வாங்க முத்துலட்சுமி, நடந்த கதை நல்லாத்தான் போச்சு.

ஜாதகம் அன்னியர்களுக்கு வேண்டும்.நெருங்கின சொந்தபதங்களுக்குள் அப்போது அவ்வளாவாகப்பார்த்து இருக்க மாட்டார்கள். நட்சத்திரம் சரியா இருந்தாப் போதும்னு விட்டுடு வாங்க. இல்லாட்டியும் மனசு புரிஞ்சுடுத்துனால் அதுக்கு அப்பீலே கிடையாது:))