About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Tuesday, July 03, 2007

195,தண்ணீர் விட்டே துவைத்தோம்

முன்னால போட்ட பதிவில இருந்த குழம்பு ஒண்ணும் ஆபத்தான விளைவுகள் ஏற்படுத்தி இருக்காதுன்னு நினைக்கிறேன்.

ஏனெனில் அதைவிட ஆபத்தில மாட்டிக்கொண்டேன் இன்று.-))இந்த ஊரில் வாடகை அதிகம் தெரியும். பையன் முதலில் இருந்த இடம் சிறியது. திருமணம் ஆனதும் சற்றே பெரிய இரண்டு படுக்கை அறைகளும் இரண்டு குளிக்கும் அறைகளும் கொண்ட வீட்டுக்கு வந்ததும் சௌகரியம் தான்.ஆனால் துவைப்பதற்கு ஒரு ப்ளாக்கிற்கு(BLOCK) ஒரு துவைக்கும் யந்திரமும் உலர்த்தும் டிரையரும் ,ஏகப்பட்ட கொடிகள்(துவைத்ததை உலர்த்தத்தான்) கட்டிய இரண்டு அறைகள்.ஆறு வீடுகளுக்கு வாரத்தில் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை . நம்ம டர்ன் அடுத்த வாரம் முதல் நாள் வரும்.

ஆடைகள் நிறைய சேர்ந்து போச்சே.

கைக்குழந்தைக்காரியைத் தொந்தரவு செய்யக் கூடாது, என்ன ஒரு பெரிய கம்ப சூத்திரமா,

அப்படின்னுட்டு, நாமே செய்யலாம்னு ஒரு நல்ல(¨¨!!!!) யோசனை வந்ததால், மகனிடம் செய்முறையெல்லாம் கற்றுக்கொண்டேன்.

அவனும் சொல்லிக் கொடுத்துவிட்டு அலுவலகம் கிளம்பினான்.அவன் சொல்லும்போது புரிந்தது.

அப்புறம்தான் கொஞ்சமே கொஞ்சம் ஸ்டெப்ஸ் கன்ஃப்யூஸ் ஆகிட்டது. இப்பப்பார்க்கலாம்...


முதல்லே இந்தப் பூத மெஷினுக்கு ஒரு அடைப்பான்.
இது எதுக்குனு தான் தெரியலை. நம்ம ஊர் மாதிரி கதவைத் திறந்தோமா,துணியைப் போட்டாமா,கதவைச் சாத்தினோமோ,பட்டனைத் தட்டினோமா கிடையாது.

தோய்க்கிறதுக்கு ஒரு கார்ட்.

ஒரு ஃபுல் லோடு தோய்க்கிறதுக்கு இரண்டு fரான்க்.மொத்தமா பணம் கட்டி வாங்கிட்டு, சலவைக்குச் சலவை அந்த மீட்டரில் போட்டு எடுக்கணும்.
மஷினோட வாயில எல்லாத்துணியும் போட்டு விட்டுக் கதவைச் சார்த்தி, உஷ்ணம்,துணிமணிகளோட வகைக்கேத்தமாதிரி ஏதோ ஒரு ஜெர்மன் வார்த்தை...அதில இந்தக் குமிழி யைத் திருப்பணும்.

அப்புறமா கார்டு போட்டு........இங்கதான் தப்பு வந்திது.
நம்ம ஊர் மின்விசிறி மாதிரி ஸ்விட்ச். அதை வலது பக்கம் திருப்பும்படி இன்ஸ்ட்ரக்ஷன். நான் செய்தா அது ஆன் ஆனாத்தானே. ????
தண்ணி வர சத்தமும் கேக்கலை
சரிடா எதுக்கும் கார்டை இன்னோருதடவை போடலாம்னா அது கீ கீ கீனு அலற ஆரம்பித்தது. சாமி சரணம்னு அவசரமா வெளில எடுத்தேன்.சத்தம் நின்னது.
ஆனால் காலில் சில்லென்னு தண்ணீர்.

இங்கேதான் எல்லாம் சுத்தக்காரங்களாச்சே. இது எங்கேருந்து வருதுனு பார்த்தால் அந்த அடைப்பான் கார்க் இருக்கே அதுவழியாச் சும்மா கலகலனு சிரிச்சுகிட்டு தண்ணீர்.

நாந்தான் அதைச் சரியா மூடவில்லைனு புரிந்தது. கையில தோய்க்க எடுத்துப் போன சிங்கத்தோட டர்க்கிடவலை அப்படியே அங்க போட்டுப் பிழிஞ்சேன் பிழிஞ்சேன் அப்படி ஒட்டப் பிழிஞ்சப்புறம்தான் ,நிம்மதி ஆச்சு. இல்லைன்னால் மகனுக்கும் மருமகளுக்கும் யார் பதில் சொல்றது.

நம்ம அசட்டுக் கௌரவம்தான் என்னாவது.

அடுத்தாற்போல நாளைக்குத் தோய்க்க வரப் போற மேல்வீட்டு இத்தாலிக்காரம்மா பெல் அடித்து"you did not dry the place"னு சொல்லிக் காமிப்பாங்க.

ஏற்கனவே சிங்கம் செய்யற கரடிக்கு (!!!) ஆபத்து வந்து விலகி இருக்கு.
( அது இன்னோரு கதை:))))...மரத்தில சிற்பம் செதுக்கறதுல நம்ம ஐயா
எக்ஸ்பர்ட். மரத்தில செதுக்கணும்னா உளி மரத்தில பதியணும். அதுதானே முறை? இவரு செதுக்க ஆரம்பிச்சு பத்து நிமிஷத்துல மேல் வீட்டிலேருந்து டும்டும்டும்னு தலைமேலவிழற மாதிரி ஒரு டமால்னு சத்தம்.
"I am waiting for the other shoe to fall"னு சொல்லாத குறையா மேலேயே, நாங்க அத்தனை(பேத்தி,மருமவ,மகன்,நான்,சிங்கம்) பேரும் பார்க்கறொம்.
டக்டக்னு செருப்பு சத்தம். படில அத்தனை வேகமா அந்தம்மா இறங்கிப் போறாங்க.......


அப்புறம் ஒண்ணுமே இல்லை. கொஞ்ச நேரம் கழித்து மகன் மெயில் எடுத்துவர கீழே போய்விட்டு வரும்போது ஒரு நோட்டீஸ் ஒட்டீருக்குப்பா. யாரோ ஒருத்தர் காலைல எட்டு மணிக்குச் சத்தம் போட ஆரம்பிக்கிறார்.
"எனக்குத் தூக்கமே வரலை. நிறுத்தச் சொல்லுங்க. " அப்படினு பிரிண்ட் செய்து ஒட்டிட்டாங்கனு சிரிக்கிறான்.


இந்த ஊர்ல அதான் வழக்கமாம். நேர முகத்தைப் பார்த்துக் கம்ப்ளெயினிங் எல்லாம் கிடையாது. ஆன்னா,ஊன்னா போர்டில போயி முட்டிப்பாங்க போல....
வேற வழியில்லாம சிங்கம் உளியைக் கீழ வச்சுட்டாரு பையனுக்கு மனசாகலை. இந்த வீட்டெல்லாம் பார்த்துக்கிற யாசிலின் அப்படீங்கற நல்ல மனுஷர்கிட்டச் சொல்லித் தனி அறை(Storage cellar) ஒண்ணை வாடகைக்கு ஏற்பாடு செய்து கொடுத்து விட்டான்.


அது இருக்கட்டும். இப்ப நம்ம கதை தண்ணீரிலத் தத்தளிக்கீறது இல்லயா
இங்க வரலாம். உடனே மேல வந்து சிங்கத்தைச் சத்தம் போடாம கீழே வரச்சொல்லி அந்த ஸ்டாப்பரைத் திருகி மூடச்சொன்னேன். அசட்டுக்கு அறு பது நாழியும் வேலைனு நினச்சிருப்பாரோ என்னமோ.
 பாவம் .. நல்லா அழுத்தி மூடினப்புறம்,அதிசயமாக உடனே மெஷின் ஒட ஆரம்பித்துவிட்டது.
என்ன உடனே உனக்கு உன் நண்பர்களுக்கெல்லாம் சொல்லணுமே நான் வேணா அடுத்த லோட் போடட்டுமானு கேட்டார்.
சரின்னு சொல்லி இருப்பேன். என்ன இருந்தாலும் வேலை முடிக்காமல் கம்ப்யூட்டர் பக்கம் வரக் கூடாதுனு சபதம் போட்டு இருக்கோமே நானும் என் மனசாட்சியும். அதனாலே பெருந்தன்மையா விட்டு விட்டேன்..:)))

இனிமே  எனக்குத் தெரியும்னு சொல்லிட்டுத்தான்   முடித்தேன் கதையை.

38 comments:

அபி அப்பா said...

:-)) எழுத்து நடை அழகோ அழகு!

லக்ஷ்மி said...

//அதனாலே பெருந்தன்மையா விட்டு விட்டேன்..:))) //
என்ன ஒரு பெருந்தன்மை. படிக்கற எனக்கே தாங்கலையே, ஐயா அங்கேயே ஆனந்த கண்ணீர் விட்டிருக்கணுமே.... ;)

கலக்கலான நடை வல்லி அம்மா. தொடருங்கள்.

இலவசக்கொத்தனார் said...

நடத்துங்க. இந்த அனுபவ பாடங்கள்தான் மறக்காது. அடுத்த முறை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே சிங்கத்துக்கிட்ட டெலிகேட் பண்ணிடுவீங்க இல்லை.

எதனை எவன் செய்வான் (சரி, வயசுக்கு மரியாதை குடுத்து) எதனை எவர் செய்வார் என ஆராய்ந்து அதனை அவர் கண் விடல்!! :))

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா, கிண்டல் செய்யலியே...

இந்தக் கணீனில பின்னூட்டம் நல்லா வருது.
பதிவுதான் சொதப்பல்.
க் போட்டு அ னா போட்டால் க தானே வரணும். இங்க க கனு இரண்டு தடவை வருது.
சொல்லக் கூடாது.
ஆனாலும் ரொம்ப திக்கல் பதிவாப் போச்சு.பின்னூட்டம் பாருங்க எழுத்துப் பிழையே இல்லை.:))

வல்லிசிம்ஹன் said...

வாங்க லக்ஷ்மி,

இன்னும் புலம்பி இருப்பேன். இந்த லாப்டாப்புக்கு ஆங்கிலத்தில்தான் ஸ்மைலி போட முடிகிறது. யூனிக்கோடில் வராது. அதனால ஷார்ட் ஃபார்ம் துவையல்.:)))))

நளாயினி said...

அடடா நல்லாவே கலக்கிறீங்க. எல்லாம் சுவிற்சலாந் காத்துபட்டதாலோ. நல்லாவே எழுதுறீங்கள்.

கோவி.கண்ணன் said...

// அதுவழியாச் சும்மா கலகலனு சிரிச்சுகிட்டு தண்ணீர்.
நாந்தான்னதைச் சரியா மூடவில்லைனு புரிந்தது. //

அம்மா,

உங்க நகைச்சுவை உணர்வு வியக்கவைக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கொத்ஸ்.
அனுபவம் தான்

அதென்னவோ நிஜம்.
சொன்ன பேச்சைக் காதில வாங்கிக்கலாம்.
அப்போ கோசாவி மாதிரி இருக்க வேண்டியது,அப்புறமா இதுவா அதுவானு தொந்தரவு,
வாலு மட்டும் நுழையலைனு சொல்லறது.

நம்ம சிங்கத்துக்கு கிட்ட எந்த பாச்சாவும் பலிக்காது.ஒரு நாள்,மிஞ்சிப்போனால் ரெண்டு நாள். அப்புறம் ஆளு நேரம் பார்த்துக் காணாமப் போயிடுவார்.:)))

வல்லிசிம்ஹன் said...

ஆமா ஆமா,, காத்தோ கறுப்போனு சொல்லுவாங்க இல்லையா.

இங்க இருக்கறவங்க அவ்வளவளவாச் சிரிச்சு நான் பார்க்கலை.
அதனாலேயே எழுதலாம்னு தோணுதோ:)))

வல்லிசிம்ஹன் said...

கண்ணன், எனக்கே பயம் ஜாஸ்தியாப் போச்சுனா கொஞ்சம் உளறுவேன்.

பழங்காலத்தில் தாத்தாகிட்ட்ட வாய்ப்பாடு சொல்லுவதிலிருந்து ஆரம்பித்தது.
ஒண்ணு சிரி, இல்லாட்ட வாய்ப்பாடு சொல்லுனு கண்டிப்பார்.
சிரிச்சுகிட்டே வாய்ப்பாடு சொன்னா எப்படி இருக்குமுனு நினைப்பேன்:))))

delphine said...

மிக அழகா எழுதி இருக்கீங்க வல்லி...
சிங்கம்தான் பாவம்..

வல்லிசிம்ஹன் said...

ஆஹா உண்மையெல்லாம் எழுதினா சிம்பதி அந்தப் பக்கம் போகுதே..
வரணும் டெல்ஃபின்.:)))

G.Ragavan said...

முந்தி பெல்ஜியம்ல இருந்தப்ப இப்பிடித்தான். அங்க நாலஞ்சு மெஷின் இருக்கும். எதுலயாவது காசப் போட்டு தொவைக்கனும். அதுவே தொவச்சு...காய வெச்சிக் குடுத்துரும். நாங் கொஞ்சம் வீம்பாச்சா...அப்பல்லாம் கைலி கெட்டுறது. அதுலயே போயி துணியப் போடுறதும்..எடுக்குறதும்...மக்கள் நெனச்சிருப்பாங்க..எந்தூர்ரா இவன்னு :)))) ஆனா இப்ப கைலியே மறந்து போச்சு. பஜ்ஜாமாதான்.

நம்ம நல்ல வேளைக்கு இங்க நெதர்லாந்துல வீட்டுக்குள்ள வாஷிங்மெஷின் இருக்கு. :) தப்பிச்சேன்.

இந்த பதிவுல ஸ்பெஷல் என்ன தெரியுமா? பொதிஞ்சிருக்குற நகைச்சுவைதான். படிக்க நல்லாயிருந்தது.

துளசி கோபால் said...

நல்ல ருசியான துவையல்:-))))))

இதென்ன கெட்டிச் சட்னியா தண்ணி விடாம அரைக்க?

இப்பச் சிரிச்சுக்கிட்டே 13ஆம் வாய்ப்பாடு சொல்லுங்க பார்க்கலாம்:-)

வல்லிசிம்ஹன் said...

வாங்க துளசி. 13 தானே கஷ்டமான வாய்ப்பாடு.
14 இண்டு 3ம் 13இண்டு 4ம் குழம்பும்.

அந்த இடத்தில கொஞ்சம் நிறுத்திட்டு மறுபடி கடகடனு வண்டி ஓடும்.

அதென்னவோ டிஷ் வாஷர் வச்சவங்க வாஷிங் வச்சுக் கட்டணும்னா இன்னோரு 300fரான்க் ஆகுமாம். நம்ம க்ரௌண்ட் fளோர் வீடு. அதனால சௌகரியமாப் போச்சு. மூணாவது மாடினால் பாத்டபில் தோச்சு இருப்பேன்.:))

ambi said...

//நாளைக்குத் தோய்க்க வரப் போற மேல்வீட்டு இத்தாலிக்காரம்மா பெல் அடித்து"you did not dry the place"னு சொல்லிக் காமிப்பாங்க.
//

ha haaaaaaaaaaaa :))))
கலக்கலான நடை வல்லி அம்மா. தொடருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராகவன்.
இங்கேயும் இன்னும் கொஞ்சம் ஊரைவிட்டுத் தள்ளிப் போனால் புதுசாக் கட்டற வீட்டுக்கெல்லாம் இந்த மெஷினையும் உள்ளடக்கிக் கட்டறாங்க.

இந்த இடம் நகரத்துக்குப் பத்து நிமிடம் தொலைவில் இருக்கு. அதான் சௌகர்யம்.
நகைச்சுவை சில சமயம் நமக்குக் கை கொடுக்கிறது. உங்களுக்கும் இந்தத் தொந்தரவு வந்ததா.
இங்கே இந்த முறைவாசல்தான் சிரமமா இருக்கு:)))

காட்டாறு said...

வல்லியம்மா, இத்தனை நாளுக்கப்புறம் பதிவுகள் பக்கம் வந்தா... உங்கள் நடையழகே மாறிப்போச்சே. கலக்குறீங்க. நடத்துங்க... நடத்துங்க.

வல்லிசிம்ஹன் said...

அம்பி, இந்த ஊரில எல்லாம் சுத்தம்,டிஜிப்ளின்,நோ சத்தம் ...குளத்தில போற அன்னம் கூட மியூசிக்கலா க்ராக்குனு சத்தம போடும்.:))
ஊருக்கேத்த வேஷம் போடணும் இல்லியா. இந்த மாடிவீட்டு மாமி ராயல்வம்சம் மாதிரி நடந்துப்பாங்க.

வல்லிசிம்ஹன் said...

காட்டாறு ஓடறத நிறுத்திட்டு இங்க வந்திச்சா.ஏதோ காதல் கதையெல்லாம் சொல்றாங்களேனு பார்த்துட்டு வந்தேன்.
நன்றிப்பா.:)))

கீதா சாம்பசிவம் said...

ஹிஹிஹிஹி, வல்லி, எனக்குச் சமமா யாருமே இல்லையேன்னு வருத்தப்பட்டுட்டு இருந்தேன், அசட்டுத் தனத்துக்குத் தான், நல்லவேளை, கை கொடுப்பாள் தோழி!ன்னு காமிச்சுட்டீங்க! ரொம்பவே ஆனந்தமா இருக்கு! :)))))))))))))))))))))))))))))))

கீதா சாம்பசிவம் said...

வல்லி, பேசாம பின்னூட்டம் பக்கத்திலேயே பதிவு எழுதிட்டு காப்பி, பேஸ்ட் பண்ணிடுங்களேன்! :)))))))))))) த த த தப்பு வராது! :D

வல்லிசிம்ஹன் said...

இடுக்கண் வந்தால் சிரிக்கணும்...அதற்காக இன்னோருத்தரோட இடுக்கணுக்கும் சிரிக்கணுமா.:)))..

நல்லாருக்கே நாயம்

கீதா நீங்கதான் உங்க அனுபவத்தை எழுதலை.
நாங்களும் கொஞ்சம் தெரிஞ்சுப்பொமில்லையா.:))

இலவசக்கொத்தனார் said...

//கோசாவி//

வல்லிம்மா, அது என்ன கோசாவி? இது வரை கேள்விப்பட்டதே இல்லையே. கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்.

ambi said...

//கீதா நீங்கதான் உங்க அனுபவத்தை எழுதலை.
நாங்களும் கொஞ்சம் தெரிஞ்சுப்பொமில்லையா//

@valli madam,
அட கீதா பாட்டி பத்தி எங்கிட்ட கேளுங்க, நான் சொல்றேன் தனி மெயில் போதுமா இல்ல தனி பதிவுல வரணுமா?

வல்லிசிம்ஹன் said...

உண்மையாவா கீதா... செய்யலாமானு பார்க்கிறேன். அப்பாடி சோழவந்தானா சும்மாவா,சூப்பர் ஐடியா. தான்க்ஸ்பா.

வல்லிசிம்ஹன் said...

கொத்ஸ் இதுக்கும் அப்பாவைத்தான் கூப்பிட வேண்டி இருக்கு...கதைகள் நிறைய சொல்லுவார். அப்போ இந்தக் கோசாவி என்கிற அதிமேதாவியைப் பத்தி சொல்லுவார்.

வாலு மட்டும் நுழையலகதையில் சட்டாம்பிள்ளையாக் கோசாவி இருப்பான். வாத்தியார் ஐய்யா பாடம் நடத்தும் போது கவனிக்காமல் மோட்டுவளையில் எலி ஓடுவதைப் பார்ப்பான்.
கரெக்டா அந்த நேரத்துல வாத்தியார் என்னடா கோசாவி நான் சொன்னது காதில நுழைஞ்சுதானு கேட்பார். அப்போது எலி வளைக்குள் நுழைந்து கொண்டிருந்தது. வால் மீதி இருந்தது.சார் கேட்டதும் வால் மட்டும் நுழையலை சார் என்கிறான். இது போல் நிறைய கதைகள்.:)))))

வல்லிசிம்ஹன் said...

அம்பி நீங்கதான் எழுதுங்களேன்.

காமெடி பஜார் நடத்தலாம்.:))

நானானி said...

தண்ணீர் விட்டு துவைத்தீர்களா? அல்லது துடைத்தீர்களா?....தரையை!
கற்பனை செய்து பார்த்தேன்!!
நல்ல காமெடி!!வல்லி!

வல்லிசிம்ஹன் said...

நானானி,வரணும்.

இங்க பாருங்களேன்.ரூல்ஸ்
1,துவைத்து முடித்த பின்னால் மெஷினைத் துடைக்கணும்,
2,தரையைத்துடைக்கணும்,
3,
தரையைத் துடைத்த துணியை கசக்கி அலசி பேசின்ல காய வைக்கணும்,
அப்புறம் பேசினை டிஷ்யூவால துடைக்கணும்,
டிரையரில் இருக்கும் அந்த லிண்ட் விழற டிராயரையும் வெளில எடுத்துச் சுத்தம் செய்துட்டுத் தான் வெளில வரணும்.
அஃப்கோர்ஸ் 12 மணிநேரம் நமக்கு வாஷிங் டைம் கிடைக்கும்.
எனக்கு என்ன பயம்னா,இந்தியப் பெண் வந்தது.அழுக்காக்கிட்டுப் போச்சுனு சொல்லக் கூடாது இல்லையா
அதுதான்.

தி. ரா. ச.(T.R.C.) said...

அசட்டுக்கு அருபது நாழியும் வேலைனு நினச்சிருப்பாரோ

நினைக்கிறவர்கள்தான் அசடு.நாளுக்கு நாள் நல்லா மெருகு ஏறிகிட்டே போகுது.இன்னும் எத்தனை நாளுக்கு ம்ய்லாபூர் ஆஞ்சனேயரை பார்க்காமல் இருப்பதாக உத்தேசம்

வல்லிசிம்ஹன் said...

டி.ஆர்.சி சார், எங்க காணோம் உங்களை..
தமிழ் மணம்பக்கமே பார்க்க முடியலியே..

அனுமார் மனசிலேயே தான் இருக்கார். அவரையும் லஸ்பிள்ளையாரையும் விட்டா நமக்கு வேற யாரு. கடமைதான் இங்க உட்கார வச்சிருக்கு. வந்த பிறகு எங்கள் தங்க சிங்கத்தை இனிமேல் வெளியூர் போலாமானு கேக்கவே முடியாதபடி ஆகிவிட்டது:))))
ரொம்ப நன்றி தி.ரா.ச.

பாலராஜன்கீதா said...

//"I am waiting for the other shoe to fall"னு சொல்லாத குறையா மேலேயே நாங்க அத்தனை(பேத்தி,மருமவ,மகன்,நான்,சிங்கம்) பேரும் பார்க்கறொம்.//

http://www.worldwidewords.org/qa/qa-wai1.htm

[Q] From Linda Rodina: “I am interested in the origin of the phrase, waiting for the other shoe to drop. Would you know about this phrase?”

[A] Curiously, few of my reference works even mention this phrase. When they do, it’s usually in the form drop the other shoe!, meaning “go on, say the next obvious thing!”, which seems to have been known for most of the twentieth century.

There was a discussion about your form of the phrase among members of the American Dialect Society some time ago, to no very positive effect, though it was established that it has been around for a long time. Barry Popik found a cartoon about Hitler in the New York World-Telegram for 15 February 1943 entitled “Waiting for That Other Shoe to Drop!”, indicating that the phrase was by then well enough known to be something of a catchphrase. More recently, he found an even older example in the New York Times of March 1921: “If nine out of ten of us hadn’t heard that ‘drop that other shoe’ chestnut and molded our lives accordingly for the sake of the neighbor below us, what would be the end of us?” So it was old even then.

Its source would seem to be the following story. A man comes in late at night to a lodging house, rather the worse for wear. He sits on his bed, drags one shoe off and drops it on the floor. Guiltily remembering everyone around him trying to sleep, he takes the other one off much more carefully and quietly puts in on the floor. He then finishes undressing and gets into bed. Just as he is drifting off to sleep, a shout comes from the man in the room below: “Well, drop the other one then! I can’t sleep, waiting for you to drop the other shoe!”. This may come from music hall or vaudeville, though it would seem that nobody has been able to tie it down more precisely.

பீட்டருக்கு மன்னிக்கவும்
:-)

ambi said...

//காமெடி பஜார் நடத்தலாம்//

ha haaaaa :)))) already going on :p

வல்லிசிம்ஹன் said...

வரணும், பாலராஜன் கீதா.
புரிஞ்சாப் போதும் பீட்டரா இருந்தா என்ன.

இது பழைய ஜோக் இல்லையா. இதுக்கு இவ்வளவு சரித்திரமே இருக்குனு உங்க பதிலில் இருந்து தெரியறது.
இந்த சைட் அட்ரஸ் கொடுத்ததற்கு நன்றி.
ஒன் மோர் ப்ளேஸ் டு விசிட்.

வல்லிசிம்ஹன் said...

அம்பி,ஒத்துக்கிறேன். நீங்க நடத்தற பஜார் நல்லா இருக்கு. இன்னோரு ஐட்டமா கீதா கதைகள்னு போடுங்களேன்னு தான் சொல்றேன்.:))))

ambi said...

//இன்னோரு ஐட்டமா கீதா கதைகள்னு போடுங்களேன்னு தான் சொல்றேன்//

ஹிஹி, எனக்கு நோ ப்ராப்ளம், ஆனா பாட்டி அழுதுடுவாங்க. :p

வல்லிசிம்ஹன் said...

கீதா சாரி, சாரி.
நான் உங்களை அழவைக்க மாட்டேனு உங்க அப்பாகிட்டப் ப்ராமிஸ் பண்ணி இருக்கேன்.

இந்த அம்பி தான் உங்களை வம்பு செய்கிறார்.:)))