About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Monday, June 25, 2007

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி......3

முன் குறிப்பு...இந்தக் கதைக்கு ஆரம்பம் இரண்டு பகுதிகளாப் போட்டாச்சு. ரீட்டானு போடறது பக்கத்தில இருக்கிற குரங்கு அம்மா பேரு.
இப்ப என்ன செய்யறது. ரீட்டாவுக்கும்
எனக்கும் ரிலீஃப் வேணும்.
சாயங்கால சாப்பாடு செய்யணும்.சிங்கமும் வீட்டுக்கு வரரது. பக்கத்து ஸ்கூட்டர் ரிப்பேர் கடை கூடச் சாத்தியாச்சு.யாரை உதவிக்குக் கூப்பிடறது... என்று யோசித்தபடியே இருந்தபோதுதான் அந்தக் கதவு கண்ணில் பட்டது. வந்த ஒரு மாதமாத் திறந்து கூடப் பார்க்கவில்லை.
அந்தக் கதவுக்கு அந்தப் பக்கம் வீட்டுச் சொந்தக்காரர்களோட இடம் என்று தெரியும்.
சொந்தக்காரர்கள் சிங்கப்பூரிலோ மலேஷியாவிலோ இருந்தார்கள்.
எப்படியாவது கீழே போய்த் திருமேனியை அழைத்து இந்த ரீட்டாவைப் பிடித்துக் கட்ட வேண்டும்.
கதவு பூட்டாமல்தான் இருந்தது.தாழ்ப்பாள் விலக்கியதும் இருளோ இருள்.
டார்ச்சை எடுத்துக் கொண்டு கிழவியையும் ,திருமேனியையும் அழைத்தபடிக்
கீழே இறங்கினேன்.
பூட்டின வீட்டுக்குள் அவர்கள் எப்படி வருவார்கள் என்ற நினப்பில்லாமல்,
நான் போட்ட கூச்சலில் பக்கத்து வீட்டு ஆச்சி பயந்து,
திருடன் டார்ச் லைட் அடிக்கிறான்னு கத்த நிஜமாகத் திருடன் வந்துட்டானாக்கும் என்று நான் மீண்டும் மாடிக்கு ஓட,
இந்தக் கூத்தில் ரீட்டாவும் பயந்து கயிற்றை அறுத்துக் கொண்டு(கயிறா அது..,வெறும் நூல்)
இருந்த ஒரே சோஃபாவில் அது தாவி உட்கார்ந்து கொண்டது.
இப்போது சொல்லுங்கள் கோபம் வருமா வராதா.
இத்தனை சப்தம் ஆன பிறகு பக்கத்துவீட்டுப் பையன் மாடிப்படிகளிலிருந்து
ஒரு மாதிரி கத்தல் போட்டு மரக்கிளையைக் கையில் வைத்து அசைத்தான்.
தலையைத் திருப்பிப் பார்த்து ரீட்டா தன் இனத்தைச் சேர்ந்தவன் நினைத்தொ என்னவோ மொட்டைமாடியை நோக்கி ஓடவும்
நான் வாசல் கதவை அடைத்தேன்.
எட்டு மணிக்கு ஆஸ்வாசப் படுத்திக்கொண்டு பிறகு சமைத்துப்
படுக்க 10 மணியானது.
இதன் எதிரொலி அடுத்த நாள் நாம் முன்பே பார்த்த சினம் தணியாத புராணம்.
சிங்கத்துக்கு ரீட்டா புராணத்தைச் சொல்லலலம் என்றால் ,அவர் வேறு ஞாபகத்தில் புத்தகம் படிக்க உட்கார்ந்துவிட்டார்.
அதன்பலன் நான் பட்டினி.
அடுத்த நாள் வயிற்றுவலி.
மருத்துவர் விசிட். அப்புறம் தலைதீபாவளிக்கு மறுநாள்,மதுரையில் முதல் பையன் பிறந்தாச்சு.
சுபம்.

11 comments:

கீதா சாம்பசிவம் said...

நான் தான் ஃபர்ஷ்டா? ஆஹா, நெய் மணக்கும் சர்க்கரைப் பொங்கல் எனக்கே எனக்கு! குரங்கு படமும் சரி, வீட்டு படமும் சரி சூப்ப்பரோஓ சூப்பர்! அனுபவமும் நல்லா இருக்கு. என்னோட குரங்கு அனுபவம் எழுதலாமான்னு பார்த்தேன், பதிவா ஆயிடுமோன்னு பயம்! எழுதலை! :)))))))))))))))

வல்லிசிம்ஹன் said...

சரியான ஆளு நீங்க கீதா.பிள்ளையாரும் அதுவும் தான் கேள்விபட்டு இருக்கேன்.
உங்க பதிவுக்கென்ன குரங்கே நல்ல பதிவாயிடும்.
இந்த வீடும் புதுக்கோட்டை வீடு மாதிரித்தான்.ஆனா அது இல்லை.:-)))

G.Ragavan said...

:) ஒரு குரங்குக் குட்டி ஒங்கள என்ன பாடு படுத்தீருச்சு பாருங்களேன்..குரங்குன்னா சும்மாவா சொன்னாங்க. :)))))))))))))

துளசி கோபால் said...

ஹை......... மாடி வெராந்தா எல்லாம் நம்ம பூனா வீடு மாதிரி இருக்கு.

என்கிட்டேயும் ஒரு குரங்கு(கள்) கதை இருக்கு:-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

தலை தீபாவளிக்கு மறுநாளா? அப்போ ஐப்பசியில் ரெண்டு கொண்டாட்டம்னு சொல்லுங்க!

வீட்டின் படம் அருமை! ஒரு வின்டேஜ் டச்!

வல்லிசிம்ஹன் said...

ஆஹா, நான் பட்ட பாடு உங்களுக்குக் கொண்டாட்டமா இருக்கா.:))))))

ராகவன்,

இன்னும் வேற கதையெல்லாம் சொன்னா நல்லாவே சிரிப்பு வரும்.

வல்லிசிம்ஹன் said...

பாருப்பா.
துளசி ,
ஆளுக்கு ஆள் நூறு கதை வச்சிட்டூ சொல்ல மாட்டேங்கறீங்க.

இது கூகிள் வீடுப்பா.
1966ல நம்ம கிட்ட காமிராவெல்லாம் கிடையாது.
அச்சு அசல் இந்த மாதிரிதான் இருக்கும்.இப்பவும் இரண்டு வருஷம் முன்னால் திருச்சி போகும்போது புதுக்கோட்டை போய் இந்த வீட்டைப் பார்த்துட்டு வந்தோம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ரவி.

ஐப்பசி அமாவாசை,அப்புறம் விசாகம் அப்டீனு போகிறது.

இப்படியாகத்தானே அனுமான் ஜி அருள் செய்தார்னு காலாட்சேபம் முடிக்கிறேன்.:))

மதுரையம்பதி said...

கதை முடிஞ்சுது, கத்திரிக்காய் காச்சுது...

வல்லிசிம்ஹன் said...

கரெக்ட். மௌலி
தான் பெத்ததைத் தானே கொஞ்சுமாம் காதில்லாத கத்திரிக்காய்
என்று எங்க மாமியார் சொல்லுவாங்க.

காது என்பது கத்திரியோட குடைனு நினைக்கிறேன்..:)))

வல்லிசிம்ஹன் said...

கரெக்ட். மௌலி
தான் பெத்ததைத் தானே கொஞ்சுமாம் காதில்லாத கத்திரிக்காய்
என்று எங்க மாமியார் சொல்லுவாங்க.

காது என்பது கத்திரியோட குடைனு நினைக்கிறேன்..:)))