About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Tuesday, June 26, 2007

193,அப்பா என்ற ஒரு மனிதர்

இந்தப் பதிவுக்கு ஒரு முன்னோடி இங்கே..

http://kurungudi-valli.blogspot.com/2006/05/appa30th-may-1921-3rd-february-1996.html
இந்த மாதம் முடிவதற்குள் மூன்று அப்பா பதிவுகள் பார்த்தாச்சு


அந்த வகையில் பார்த்தால் அப்பாக்களுக்குத் தனியிடம்.


அதென்னவோ பெண்கள் ஒடுவது தந்தையிடம் தான


ப்ஃப்ராய்டு தியரிக்கு எல்லாம் அப்பாற்பட்டது இமுதலில் இந்தத் தியரியில் எனக்கு நம்பிக்கையும் இல்லை


அம்மா கண்டிப்பு,அப்பா பாசம் இரண்டுமே இல்லை என்றால் நாமெல்லாம் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது.

எங்க அப்பா ரொம்பச் சாதாரண மிடில் க்ளாஸ் தந்தை.

தனக்குக் கிடைக்காத எல்லா சௌகரியங்களும் தன் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டி சகல முயற்சிகளையும் மேற்கொண்டவர்.

திருக்குறுங்குடி ஸ்ரீனிவாச நாராயணன்...பேருக்கேற்ற நெடிய உருவம். சாத்வீகமான கண்கள்


சிரித்த முகம்.நல்ல உழைப்பாளி. காணி சோம்பல் கோடி நஷ்டம் என்ற கொள்கைப்படிவளர்ந்தவர். அப்பாவின் அப்பா ,அம்மா இருவருமே உறவினர்கள்.

தாத்தா சிறுவயதில் பெற்றோரை இழந்து சிற்றன்னையின் அரவணைப்பில் வளர்ந்தவர்.


அவருக்குச் சிற்றன்னையின் குழந்தைகள் மூத்த அண்ணா என்பதைக் குறிக்கும் முத்தண்ணா என்றே பெயர் நிலைத்தது.

அந்த முறையில் பிற்காலங்களில் தங்கை மிகப் பெரிய தொழிலதிபரின் மனைவியாகி இருந்தாலும் மேற்கொண்டு தனக்கு ஆதாயம் தேடிக்கொள்ளாத மகா அறிவாளி.கண்டிப்புப் பேர்வழி. நேர்மைவழியிலிருந்து சிறிதும்


மாறாத குணம்படைத்தவர்.

தோட்டியிலிருந்து தொண்டமான் வரைனு ஒரு பழமொழி பாட்டி சொல்லுவார்.


அத்தனை பேரும் சினேகிதர்கள். தாத்தா ஸ்ரீவைகுண்டம் தபால் அலுவலக மேலாளர். அங்கேதான் அப்பாவும்,அவரின் மூத்த சகோதரிகளும் தம்பிகளும் வளர்ந்தார்கள்.படித்தார்கள்.

அந்த காலத்திலேயே மேல்சாதி,மற்ற சாதி என்ற வேறுபாடுகள் கிடையாது

தாத்தாவுக்கு. பிற மதத்தவருக்கும் வீட்டில் சாப்பாடு உண்டு.மாட்டுவண்டியில் வந்துபோகும் பக்கத்து ஊர் தபால் ஊழியர்கள் எல்லோருக்கும் வீட்டில் இருப்பது பகிர்ந்து கொடுப்பார் பாட்டி, என்று என் தந்தை சொல்லுவார்.


ஐந்து குழந்தைகள் படிக்க வைக்க முடியும் என்ற நிலையில் தாத்தாவின்


பணநிலைமை இருந்திருக்காது.


அத்தைகளுக்குக் கல்யாணம் ஆன கையோடு பிள்ளைகளைப் பாளயங்கோட்டையில் படிக்க வைத்துத் திருநெல்வேலிக்கு வந்து

வண்ணாரப்பேட்டையில் முதலியார் ஸ்டோர்ஸ் என்ற வரிசைவீடுகளில் ஒன்றில் புதுக் குடித்தனம் ஆரம்பித்தார்களாம்.


கல்லூரிப் படிப்பு தொடர்ந்தது.

முதலில் படித்து முடித்தகையோடு அப்பாவுக்கு டி.வி.எஸில் வேலை, கிடைத்து

ஸ்ரீகாகுளம் என்ற இடத்துக்குப் போகச் சொன்னதும்,

தாத்தா மறுத்துவிட்டாராம்.

தனக்கு அறுபது முடியும் வேளையில் பையனை அத்தனை தொலைவு அனுப்ப மனமில்லை.அப்பாவும் மறுபேச்சுப் பேசவில்லை.தாத்தா சொல்படி தபால் அலுவலகத்தில் ஒரு குமாஸ்தாவாக


வேலைக்கு 40 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்துவிட்டார்.1941 என்று நினைக்கிறேன். அடுத்த வருடம் வெள்ளயனே வெளியேறு போராட்டத்துக்குப் போஸ்டர் ஒட்டியதாகவும் (சுவற்றில் எழுதி இருக்கலாம்) ஒரே ஒரு நாள் ஜெயில் வரை போய் வந்ததையும் சிரித்துக் கொண்டே சொல்லுவார்.அதற்குமேலாக ஏதும் செய்ய தாத்தாவின் அனுமதி இருந்திருக்காது.20 வயதில் வேலைக்குச் சேர்ந்தவர் 1978 டிசம்பர் வரை அலுப்புத் தட்டாமல்வேலைசெய்தார்.அப்பாவைப் பற்றி எழுதி இருக்கிறேன் என் இன்னோரு பதிவில். அது பதிவு செய்வதற்காக எழுதப்பட்ட எழுத்து. ஒரு பின்னூட்டமும் இருக்காது. ப்ளாக்தேசம் பக்கம் போகிறவர்கள்குறைவு என்று நினைக்கிறேன்.இப்பவும் ரவிகண்ணபிரான் தான் காரணம் இந்தப் பதிவுக்கு. நாங்கள் மூவர் பிறந்தோம் அம்மாஅப்பா குழந்தைகளாக. எனக்கு மூத்த குழந்தை ரங்கராஜன் என்ற பேரோடு 10 மாதங்கள் மட்டுமே பூமியை ஸ்பரிசித்துவிட்டுப் போனது.அந்தக் குழந்தையைப் பற்றி இருவரும் என்ன கனவு கண்டார்களோஇவ்வளவு பாசம் அப்பா மேல் நாங்கள் வைக்கக் காரணம் அம்மாவின் இம்மிகூடப் பிசகாத விஸ்வாசம்தான். ஒருவருக்கொருவர் இவ்வளவு புரிதலோடு இருந்த தம்பதிகளை நான் பார்த்ததில்லை. நான் பெரிசு நீ பெரிசு ஈகொவே கிடையாது.சில நாட்கள் முன்னால் சிகாகோவில் பெண்ணின் வீட்டுக்கு வந்திருந்த ஒரு முதியவர்,பேச்சுவாக்கில் தபால் துறையின் பொன்னான நாட்களில் எங்கள் நாட்கள் ஓடின. இப்போது அந்த மதிப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை உன்னைப் பபர்த்தால் என் பழைய நண்பர் நினைவுக்கு வருகிறார் என்று விசாரித்து இருக்கிறார். எங்க தாத்தாவும் போஸ்ட்மாஸ்டர்தான் என்று சொல்லவும்.,"நாராயணன் சார் பேத்தியா நீ.அவரை மாதிரி உண்டா.எங்களுக்கெல்லாம் நம் நாட்டுக் கொடிமேல் பற்று வர அவர்தான் காரணம்.சுதந்திர,குடியரசு தினங்களில் கொடி ஏற்றிப் பாட்டு பாடி, பேசவும் செய்து உற்சாகம் கொடுப்பார்.E.D. Packers(கடைநிலை ஊழியர்கள்)அத்தனை பேருக்கும் ஊக்கம் கொடுத்து தேர்வு எழுதி முன்னுக்குவரச் செய்தார்."நல்ல மனுஷர்மா..என்று பெருமையோடு சொல்லவும் மகள் எனக்கு உடனே தொலைபேசிவிட்டாள்.அநேகமாக குழந்தைகளுக்குத் தாத்தாவின் அருமை தெரியும் என்றாலும் அவருடைய தொழிலின் மீது அவருக்கு இருந்த பக்தி,கோட்பாடுகள் எல்லாமே நேர்மை வழியில் ஏற்பட்டவை.

எங்களுக்கும் ஏதாவது கொஞ்சமாவது நல்ல குணங்கள் வந்தன என்றால் அது அப்பா நடந்து கொள்வதைப் பார்த்துத் தான்.

அனாவசியமாக யாரைப் பற்றியும் வார்த்தைகள் விட மாட்டார். "words have a way of returning to you sometimes in your life. so be very careful

when you think of talking."

இதுதான் அவர் எப்பவும் சொல்வது.

அப்பாவின் கடவுள்பக்தி அளவிடமுடியாதது. ஸ்ரீராமன் பாதம் திண் சரணாகக்கொண்டவர். தன் தந்தை சொன்ன ஒரு வார்த்தையைக் கூட விடாமல் ,மறக்காமல் நிறைவேற்றியவர்.

சில காலம் எங்கள் வாழ்க்கையில் சில பல தொந்தரவுகள் வரும்போது அசராமல் உதவி செய்வார். நான் வருத்தப் படக்கூடாது என்று

ஒரு கை தருவது இன்னோரு கைக்குத் தெரியாமல் உதவுவார்.

பிள்ளைகள் படிப்புக்காக மட்டுமே பாங்கில் கடன் வாங்கி அடைத்தவர்.

மற்றபடி கடன் என்ற வார்த்தைக்கே இடம் கொடுக்காதவர்.

என் சம்பளத்தைவிட என் பென்ஷன் அதிகம் அம்மா என்று சிரிப்பார்.

ராமேஸ்வரம் புயல் அடித்த 1967ஆம் வருடம் அங்கே வந்த அத்தனை தந்திகளையும் ,அந்தக் கடுங்காற்றில் கைவிட்டுப் பறக்கும் குடை சகிதம் தன் மகனுடைய உதவியோடு கொண்டு போய்க் கொடுத்து எல்லாருடைய நன் மதிப்பையும் பெற்றவர்.

அவர் மேற்பார்வையில் இருக்கும் அலுவலகத்தில் தூசி தும்பு பார்க்கமுடியாது. அழகப்பாநகர் ,காரைக்குடியில் அந்தத் தபால் அலுவலகத்துக்குப் பரிசு கிடைத்தது.இப்படி எத்தனையொ.

ரிடையர் ஆகி வீடு கட்டி வத பிறகு அப்பா சும்மா இருந்தநாட்களே கிடையாது. கொலு பொம்மைகள் செய்வார். காஸ் அடுப்பைப் பழுது பார்த்து வண்ணம் அடிப்பார். வரைவதிலும் ,கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதிலும்....எங்களுக்காகச் செய்வார்.

அவரைப் பற்றி ச் சொல்ல ஒரு பதிவு போதாது.

இருந்தாலும் எனக்கு அவரிடம் ஒரே ஒரு குறை உண்டு.என் மகள் திருமணத்திற்கு பார்த்த சத்திரத்திற்கு வார் அறுந்த செருப்போடு வந்து பணம் கட்டியவர்

அடுத்த நாள் உடல்நலம் சீரில்லாமல் போய் அதற்கு அடுத்த நாள் மறைந்தார்.அவருக்குப் பிடித்த பெருமாள் பாதங்களைத் தேடிப் போயிருப்பார். இது கூட எனக்குத் தொந்தரவாகச் செய்யவில்லை. திருமணம் நல்ல படியாகத்தான் நடந்தது. எல்லாம் அப்பா சொல்படி இறைவன் சித்தம்.

இந்த நீண்ட பதிவைப் படித்தவர்களுக்கு என் நன்றி.


35 comments:

வல்லிசிம்ஹன் said...

தந்தைக்கு மகள் ஆற்றும் கடனாகத் தான் இந்தப் பதிவை இட்டேன்.
நீண்ட பதிவாகி விட்டது.

G.Ragavan said...

தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லைன்னா...தந்தை சொல் மிக்க மந்திரமில்லைங்க. அப்பா அப்பாதான்.
படிக்கவே பெருமையா இருந்தது. இதைக் கண்டிப்பா ஒங்க தந்தையும் படிச்சுப் பாசத்துல ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டிருப்பாரு.

கீதா சாம்பசிவம் said...

கண்ணீரோடுதான் படிக்க முடிந்தது. அருமையான அப்பா, அருமையான அம்மா, அருமையான மகள்! அருமையான பதிவு! வாழ்த்துக்கள் 200ஐ எட்டுவதற்கும் சேர்த்துத் தான்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராகவன்,
முதலில் டெலிபோன் வந்ததிலிருந்து
,
ஓய்வு பெறும் நேரத்தில் தன் அலுவலகத்துக்கு டெலிப்ரிண்டர் வந்தது பற்றி ஒரே ஆனந்தம்.
சரஸ்வதி பூஜை,ஆயுதபூஜை எல்லாம் கலகலப்பாகக் கொண்டாடுவார்.
எல்லோரையும் நேசிக்கக் கற்றவர்.

வல்லிசிம்ஹன் said...

200 ஆவது பதிவாகவே போட்டு இருக்கலாமோ..
அப்படியெல்லாம் அப்பாவைப் பதிவிட முடியாது.

ஆதர்சம்,இதற்கு உருவம் அப்பாவாகத்தான் இருக்க முடியும் கீதா.
வாழ்த்துக்களுக்கு நன்றி.

துளசி கோபால் said...

மனசுக்கு ரொம்ப நிறைவான பதிவு.

அப்பாவை மறக்கமுடியாமச் செஞ்சுட்டார்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

சொன்ன வண்ணம் செய்த நாச்சியார்! :-)
தந்தை அன்பு வண்ணம் அழகாகப் பதிந்தீர்களே!

//இவ்வளவு பாசம் அப்பா மேல் நாங்கள் வைக்கக் காரணம் அம்மாவின் இம்மிகூடப் பிசகாத விஸ்வாசம்தான்//

எவ்வளவு உண்மையான வார்த்தை!
எனக்கு நீ, உனக்கு நான், நமக்குக் குழந்தைகள்-ன்னு வாழ்வதே ஒரு தவம் தான் வல்லியம்மா!
முழுப் பதிவும் படிச்சு முடிச்ச பிறகு, நெஞ்சுக்குள் ஒன்று உட்கார்ந்து கொண்டது!

வல்லிசிம்ஹன் said...

துளசி,
சென்றதடவை பதிவிட்டபோது அவரைப் பற்றி யாரும் கமெண்ட் போடலியேனு நினைச்சேன்.
அதற்கு என் எழுத்து மேல்தான் தவறு.
அப்பாவுக்கு இதனால் நஷ்டமோ லாபமோ இல்லை என்று தேற்றிக் கொண்டேன்..நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ரவி.
அப்பாவின் 74 வருட வாழ்க்கையில் நிறைய அநுபவங்கள்.
அதை எல்லாம் எழுதினால் சுவாரஸ்யம் இருக்குமோ இருக்காதோ. வீணாகப் போய் விடக்கூடாது.
நன்றி,
என்னை இந்தப் பதிவு எழுத வைத்த புண்ணியம் உங்களுக்குக் கொடுத்தேன்.

ambi said...

//காணி சோம்பல் கோடி நஷ்டம் என்ற கொள்கைப்படி வளர்ந்தவர். //

(ஹ)அப்பா! எவ்வளவு சத்யமான வார்த்தைகள்.

என் தாத்தாவும் இதே மாதிரி குணாதிசயங்கள் கொண்டவர். அவர் பெயர் தான் எனக்கு, டுபுக்கு போன்ற அவரது பேரன்களுக்கு.

அவர் பெயரை காப்பற்ற வேண்டும்! என்ற பயம் இன்னும் இருக்கிறது.

நீங்கள் சித்திர ராமன் எழுதியதின் ரகசியம் இப்போ தெரிகிறது. மனசுக்கு ரொம்ப நிறைவான பதிவு.


நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்! என பாட தோன்றுகிறது.(என் தாத்தாவை நினைத்து தான்) :p

வல்லிசிம்ஹன் said...

அம்பி,
இந்த நினைப்பு இருந்தால் போதும். நேசமுடையாரை நெஞ்சில் நினை என்றும் சொல்லுவார்கள்.

வரும் தலைமுறைக்கு வழிகாட்டிகள் மூத்தவர்கள்தான். அவர்கள் ஏற்பாடு செய்த ராஜபாட்டையீல் நடப்பது மிகவும் எளிது.
மனசு தடுமாறாமல் போனால் மகிழ்ச்சி நிச்சயம்.தாத்தா பேர் வைப்பது ,பாட்டி பேர் வைப்பது எல்லாமெ ஒரு பாதுகாப்புக்காகத்தான் என்று சொல்லுவார்கள். உங்களுக்கும் டுபுக்குக்கும் பெயர்க் காரணமாக இருக்கும் தாத்தா நிறைய ஆனந்தப்படுவார்.பெருமைப் படுவார்.

மதுரையம்பதி said...

மனதைத் தொட்ட அருமையான பதிவு......

// தங்கை மிகப் பெரிய தொழிலதிபரின் மனைவியாகி இருந்தாலும் மேற்கொண்டு தனக்கு ஆதாயம் தேடிக்கொள்ளாத மகா அறிவாளி//

வல்லியம்மா, உங்களுக்கு அத்தை முறை அல்லவா?...பெயர்?....

கீதா சாம்பசிவம் said...

தொழிலதிபர் குடும்பம் உங்களுக்குச் சொந்தமா? ஒரே ஊராக இருக்கும், கேட்கலாம்னு நினைச்சேன். ரொம்பவே அடக்கமாய்த்தான் இருக்கீங்க, இத்தனை பெரிய ஆளாக இருந்தாலும்! மனம் நிறைவாய் இருக்கு!

வல்லிசிம்ஹன் said...

எனக்கு அத்தைப்பாட்டி,மௌலி.
தாத்தாவும்,அவங்களூம் பெரியப்பா,சித்தப்பா குழந்தைங்க.
அவங்க சொக்கிகுளம் . தாத்தா பழங்கானத்தம்.எண்பது வயசிலேயும்,அவங்க வண்டி அனுப்புவாங்க,, போய் சௌகர்யம் விசாரித்துவிட்டு வருவார். தன் தனித்தன்மையை விட மாட்டார்.. மனசாலே பெரியவர்,
அந்த ஒன்று விட்ட அத்தைப்பாட்டி
பேரு லக்ஷ்மி..

வல்லிசிம்ஹன் said...

கீதா,
அடக்கம் எல்லாம் சொல்ல முடியாதும்மா.
உறவு.அவ்வளவுதான்.பெரிய இடம்...இதிலே நாம ஒதுங்கி இருந்தா நமக்குப் பெருமை.

நம்ம காலிலே சொந்தமா நிக்கணும்..சிங்கம் இன்னும் கிட்ட் உறவு அவங்களுக்கு.எங்க மாமியாருக்கு அவங்க சொந்த அத்தை.மாமியார் எனக்கு அத்தை:)))))தனிமடல் விளக்கம் பிறகு.

மதுரையம்பதி said...

ஆகா!, நினைத்தேன், அதனால்தான் கேட்டேன்....


என் தந்தைக்கு வேலையில் முதல் 15 வருடங்கள் படியளந்தவரின் மனையாள்....எங்களது குடும்பத்தில் இன்றும் போற்றி வணங்கும் தம்பதியல்லவா திரு ஸுந்தரம் அண்ட் திருமதி லெக்ஷ்மியம்மாள்....

அவர் பள்ளியில் படித்தவன் தான் நான்.

மதுரையம்பதி said...

அதுமட்டுமா?, நானும் எனது காரியரில் முதல் 3 வருடங்களை அவர் ஸ்தாபித்த முதல் கம்பெனியில் தான் கழித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அந்த அத்தைப் பாட்டியின் முகத்தில் சிரிப்பைத் தவிர வேறு எதையும் நான் பார்த்ததில்லை.வாழ்க்கையில் பலவித முரண்பாடுகளைச் சந்தித்த மகாலக்ஷ்மி.

இருந்தும் தன் முத்தண்ணா குடும்பத்தின் மீது அத்தனை பாசம்.
நம்ம மதுரைக்கே அந்த குடும்பத்தால் நல்ல பேரு மௌலி.
எங்க தூரத்து உறவினர்கள் கூட அங்கே வேலை செய்து நிறைய முன்னுக்கு வந்தார்கள்.
எங்க சிங்கமும் தன் உழைப்பை அந்தக் கம்பெனிக்கு 20 வருடங்கள் கொடுத்தார். பிறகு சொந்த ஒர்க்ஷாப் ஆரம்பித்தார்,.அவர்வேலையில் சேர்ந்த வருடம்1958 விலகிய வருடம் 1977.நன்றி மௌலி,மனசு நிறைய சந்தோஷமாக இருக்கிறது.

இலவசக்கொத்தனார் said...

நல்லாச் சொல்லி இருக்கீங்க. பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி.

நானானி said...

வல்லி!
கண்ணோரம் கசிந்து விட்டது.அப்பா பற்றி எழுத எல்லோருக்கும் ஆயிரமிருக்கும். உங்கள் பதிவு ஓர்
ஆதர்ச தந்தையை கண்முன் காட்டியது
பின்னோட்டங்கள் படித்த பிறகு நாம்
கொஞ்சம் நெருங்கி விட்டோம் என்று
நினைக்கிறேன். உங்கள் அத்தை குடும்பத்தோடு என் த்ந்தை நெருங்கிய
நட்பு வைத்திருந்தார்.பிசினஸினசிலும்
முக்கிய வாடிக்கையாளராகவுமிருந்தார். அவ்ர்கள் பிள்ளைகளும் அப்பாவிடம்
மிகுந்த மதிப்பு வைத்திருந்தார்கள்.
அத்தை மகள் மதுரையிலிருந்து சிவசைலம்-காந்திகிராமத்துக்கு போகும் வழியில் எங்கள் வீட்டுக்கு வந்து எங்களோடு ஒன்றாக அமர்ந்து
அம்மாகையால் சாப்பிட்டுவிட்டுத்தான்
செல்வார்கள்! உங்கள் பதிவைப் படித்ததும் பழைய நினைவுகள் எல்லாம் கிளர்ந்தெழுந்தன.நீண்ட பின்னோட்டமாகிவிட்டது.

வல்லிசிம்ஹன் said...

நீங்கள் சொல்லும் காந்திகிராமம் அம்மா மிகச் சிறந்த புத்திசாலி. தீர்க்கதரிசி.

எத்தனை நபர்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்திருக்கிறார்.
அத்தை என்பது அத்தைப்பாட்டி நானானி.

சொல்லிக்கொள்ளும் உறவு.மற்றபடி அது மிக மிக உயரமான இடம்.
எங்கள் தாத்தா வழியிலேயே நாங்களும் மிக நெருக்கமாக இருந்தாலும்
தள்ளியேதான் இருப்போம்.
எங்க வீட்டுக்காரருக்கும் அதுதான் பிடிக்கும்.

ராகவன் சொன்னதுபோல எங்க அப்பா இந்தப் பின்னூட்டங்களைப் பார்க்கலியே என்று இருக்கு.
நன்றி நானானி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கொத்ஸ்.
ரொம்ப நீண்ட எழுத்தாகி விட்டது.
இந்த அம்மா அப்பா பந்தம் அப்படி நம்மைக் கட்டிப்போடுகிறது.

மங்கை said...

ஹ்ம்ம்ம்..அப்பா அப்பா தான் வல்லிம்மா

கீதா சாம்பசிவம் said...

டி.எஸ்.கிருஷ்ணா தான் எங்க மாமா வீட்டுக்கு விளக்கேற்றியவர். இன்று வரை எங்கள் குடும்பத்தில் பலருக்கு விளக்கேற்றும் புண்ணியத்தைச் செய்து வருகின்றனர். ஏர்வாடியில் இருந்த எஸ்டேட்டை என் மாமியின் அப்பாதான் நிர்வகித்து வந்தார்கள். திருமதி அமபுஜம் கிருஷ்ணா அவ்வளவு நெருக்கம் அவங்க எல்லாருக்கும். ரொம்பவே சந்தோஷமா இருக்கு வல்லி, ரொம்ப சந்தோஷம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பெருமைப்படத்தக்க அப்பா!

வல்லிசிம்ஹன் said...

நன்றி மங்கை.

ஆமாம்,அப்பாக்களுக்கு ஈடு அம்மாக்கள்தான்.
வீட்டில அம்மா செய்யும்,காட்டும் அன்பு அப்பாக்களுக்குப் பெரிய
ஆதரவு.

அம்மா அப்பா நல்லா இருக்கணும்,அவரைப் பார்த்துக்கொள்ளத் தானும் நல்லா இருக்கணும்னு வேண்டிப்பாங்க..

வல்லிசிம்ஹன் said...

கீதா, திரு.டி.எஸ்.கிருஷ்ணாதான்,
எங்க வீட்டுக்காரரையும்

லண்டன் அனுப்பிப் பயிற்சி கொடுத்து தொழிற்சாலையில் சேர்த்துக் கொண்டார்.
எங்க வீட்டுக்கும் விளக்கேற்றிவைத்தது அவர்தான்.
அந்தக் குடும்பம் மிகச் செழுமையாக,ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி யோகன்.
அவர் கொடுத்த கல்வி நல்லவர்களோடுப் பேசும் வழக்கத்துக்கும் பயன்படுகிறது.

வல்லிசிம்ஹன் said...

கீதா,
ஏர்வாடியை மறக்கமுடியாது.
திருமதி.கிருஷ்ணாவின் அபரிமிதமான அன்பையும் மறக்கமுடியாது.

பேசும்போதே கண்ணா எப்படிமா இருக்கேனு தான் வார்த்தைகள் வரும்.
அருமையான மனுஷி.

தி. ரா. ச.(T.R.C.) said...

வல்லியம்மா மிகச் சிறந்த பதிவு.
தந்தையின் பாசமே இல்லாமல் வளர்ந்த என் போன்றவர்களுக்கு அரு மருந்து.என் மாமாவும் தான் தபால்களை தானே தூக்கிக் கொண்டு மலைகளில் வசிக்கும் மலைவாழ்மக்களுக்கு கொடுத்துவிட்டு வருவார். நானும் கூடச்செல்வேன்.அவர் இறந்த போது கூட்டம் கூட்டமாக மலை வாழ்மக்கள் வ்ந்து மரியாதை செலுத்தியது கண் முன் நிற்கிறது

வல்லிசிம்ஹன் said...

வரணும் தி.ரா.ச. உங்க மாமாவும் தபால் இலாகாவா..

இவர்களுக்கெல்லாம் எப்படித்தான் இத்தனை உண்மையான உழைப்பு இருந்திருக்கிறது.
உங்க மாமாவை பற்றிக் கேட்க ரொம்பப் பெருமையா இருக்கு.
அந்த உழைப்பின் பலனை அனுபவித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

ஜெஸிலா said...

ஒரு பாச மிகுந்த மகள் தந்தையைப் பற்றி கொள்ளும் பெருமிதங்களை நெகிழ்வோடு படித்துவிட்டு கடைசி வரிகளுக்கு வரும் போது பாரமாகி போனது மனது. நிஜமாவே எல்லா அப்பாகளும் மாமனிதர்கள் தான்.

வல்லிசிம்ஹன் said...

என் பிறவி முடியும் வரை என் தந்தையை நான் மறக்கக்கூடாது ஜெசிலா.

எங்களைத் தட்டியே வளர்த்தவர்.
நன்றி.அவருக்குப் பிரதியாக ஒன்றும் செய்ய முடியவில்லை,அவரது கோட்பாடுகளையாவது மீறாமல் இருக்க வேண்டும்.

Sasi Kala said...

எப்பேர்பட்ட மனிதர் வல்லியம்மா உங்கள் தந்தை!!

//வரும் தலைமுறைக்கு வழிகாட்டிகள் மூத்தவர்கள்தான். அவர்கள் ஏற்பாடு செய்த ராஜபாட்டையீல் நடப்பது மிகவும் எளிது.//

சத்தியமான வார்த்தைகள்.
நீங்கள் முதலில் எழுதிய அப்பாவை பற்றிய பதிவின் லிங்க் கொடுக்க முடியுமா?

என் தந்தை இருந்தவரை children எங்கள் நால்வருக்கும் பெரிய சுவர் போல் இருந்தார் (ஆம் இருந்தார்). என் அம்மா வின் பிரிவிற்கு பின் 2 ஆண்டுகளில் அவரும் அம்மாவிடம் சேர்ந்து விட்டார் . அம்மா ஒரு குழந்தை போல .அப்பா பெரிய படிப்பாளி உழைப்பாளி கடைசி மூச்சு வரை உழைத்துக்கொண்டிருந்தாங்க . Both of them are very genuine souls .straight forward ..கள்ளம் கபடு தெரியாது . இன்னமும் கஷ்டம்வரும் காலங்களில் அப்பா இல்லையே என்று தான் போகும் ...
உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன் . அப்பப்போ பின்னூட்டம் வரும் .என் அப்பா அம்மாவைப்பற்றி யாரிடம்மும் இப்படி கூறியதில்லை. . என்னமோ உங்களிடம் பகிர்ந்து கொள்ள தோன்றியது.
உங்களிருவரின் 1947 -ல் புகைப்படம் பார்த்தேன் அழகிய ஜோடி என்று தோன்றியது. :) . getting to know about your husband through your சில சில் நினைவுகள்,and learning a lot too . I was born in 1966 . Is your first child 1966 born .?
நீங்கள் எத்திராஜில் படித்தீர்கள் என்று அறிந்தேன் .எனக்கும் அங்கு இடம் கிடைத்தது . ஆனால் என் cousin vaishnav - சேர்ந்ததால் நான் அங்கு சேர வேண்டியது ஆயிற்று. துணை இருக்கும் என்று தான் :(
உங்களைப் போல எனக்கும் தோட்டம் மிக பிடிக்கும் ஆனால் இடம் தான் இல்லை . படிக்கும் காலத்தில் செடி செடி என்று அலைவேன் .
மிக நீண்ட பின்னூட்டமாக போய் விட்டது .
I leave it to your choice to publish or not . but please do reply . :)

s.sasikala

வல்லிசிம்ஹன் said...

னன்பு சசிகலா, இத்தனை நாட்களுக்குப் பிறகு அப்பாவின் பதிவுக்குப்பதில் வருவது மிகவும் நெகிழ்ச்சி. அம்மா அப்ப்பாவைப் போற்றுபவர்கள் ஒருபோதும் நஷ்டப்படுவதில்லை. உங்களது அம்மா அப்பாவை நான் பார்க்கவில்லையே என்றிருக்கிறது. எங்கள் மகனுக்கும் உங்கள் வயதுதான்.இன்றுடன் பதிவு எழுத ஆரம்பித்து எட்டு வருடங்கள் ஆகின்றன. எங்கள் அப்பாவைப் பற்றி ஆங்கிலத்தில் பதிவொன்றில் எழுதி இருந்தேன். அது இப்போது கிடைக்குமா என்று தெரியவில்லை. வருடா வருடம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒரு பதிவு என்று போட்டுக் கொண்டிருந்தேன் போனவருடம்தான் நிறுத்தினேன்.சசிகலா மிக நன்றி. முடிந்தால் லின்க் பார்த்து அனுப்புகிறேன்.