Blog Archive

Saturday, June 23, 2007

190..பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு எட்டு

வேடிக்கையில்லா வாழ்வு வித்தியாசம் இல்லாமல் போய்விடும்னு நினைச்சு ஆரம்பித்த விளையாட்டு இந்த எட்டுப் பதிவுனு சொன்னாங்க

கொத்தனார் கீதாம்மாவை எட்டுப் போடச் சொல்ல அவங்க என்னைக் கைகாட்டி விட்டாங்க

இவர்கள் எல்லாம் வலை உலக ஜாம்பவான்கள்

எதை எழுதினாலும் சுவை பட எழுதி நம்மைப் படிக்க வைத்து விடுவார்கள


நானோ இன்னும் கைநாட்டு நிலையிலிருந்து முன்னேறவில்லை.

இன்று ஆறு மணிக்கு எழுந்திருந்தேன். பல தேய்த்தபிறகு

காப்பி குடித்தேன்.

பக்கத்துவீட்டு மரத்தில் குயில் குவியது.... என்று நிதர்சன*? உண்மைகளை எழுதும் ஒரு நாட்குறிப்புவாதி.

இங்கு எழுதப்போகும் எட்டு குறிப்புகள் என் வாழ்க்கையின்

முக்கிய சம்பவங்கள் நான் நினைப்பவைகளை பதிவிட நினைக்கிறேன்.


1,பிறந்தது,வளர்ந்தது,மணந்தது என்று வேறு வேறு மாறுபட்ட சூழ்னிலைகளில்
தென் இந்தியாவின் தண்ணீர்வளம் குன்றிய பல மாவட்டங்களில் இருந்ததால் நீரின் மேன்மை ,அருமை தெரிந்தே வாழ்க்கை அமைந்தது.
இன்றும் நீரிறைக்கும் பம்ப் வேலை செய்யவில்லை என்றால் சிறிது ரிப்பேர் மெகானிசமும் தெரிந்துவைத்திருக்கிறேன்.ஒரு கார்மெகானிக்கின் மனைவி என்பதால் ஸ்பானர்,பாக்ஸ் ஸ்பானர்,வண்டி எப்போ நின்னால் என்னமாதிரி
தொந்தரவால இருக்கக் கூடும் என்ற விஷயமெல்லாம் கொஞ்சம் தெரியும்.:-)
வனாந்தரங்களில் கார் நின்று அருகிலிருந்த குடிசைகளில் நீரும்,பன்னும் உண்ட நாட்கள் சில...மறக்கமுடியாதவை
2,கல்வி,



ஸ்ரீவில்லிபுத்தூர்,திருமங்கலம்,திண்டுக்கல்,சென்னை
இந்த நகரங்களில் கற்ற தமிழும் ஆங்கிலமும் இன்றைய

இந்தப் பதிவு வரை கொண்டுவிட்டிருக்கின்றன.

கைம்மண் அளவு என்று கூடச் சொல்ல முடியாது.ஆனால் படித்தறியும் புத்தியாவது இருக்கிறதே என்று சந்தோஷப்படுகிறேன்.



3,கடவுள் நம்பிக்கை

காலையில் நாங்கள் எழும்முன்னே எங்கள் தந்தை சொல்லும்
கடவுள் வாழ்த்துப்பாடல்கள் அரைத்தூக்கநிலையிலேயே மனப்பாடம் ஆகிவிட்டன..
அவைதாம் இன்னும் எனக்குத் துணையாக இருக்கின்றன.

இந்த நம்பிக்கை இல்லாமல் என் வாழ்வை நினைக்க முடியாது.



4,சகமனிதர்களை நம்புதல்

இதுவும் தந்தை கொடுத்த பாடம்தான்

சந்தேகத்தோடு தொடங்கும் எந்த உறவும் நிலைக்காது .

என்ற வாக்கியம் மறக்க முடியவில்லை.எத்தனையோ தடவை இந்த நம்பிக்கை பொய்த்திருக்கிறது. இருந்தும் அவ்வாறு நடந்த பிறகும்,இ ந்த அறிவுரையின் ககரணத்தால்
இரண்டு மூன்று நாட்களில் மறந்தும் விடுவேன்.



5,மறக்க முடியாத நிகழ்வு.



திருச்சியில் எங்கள் நான்கு வருடத் தங்கலின் போது

நானும்,என்கணவரும் குழந்தைகள் மூவரையும் அழைத்துக் கொண்டு முக்கொம்பு என்னும் இடத்துக்குப் போயிருந்தோம்

காவிரியில் வெள்ளம் அப்போது.

கரையின் படிகளில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது,

தண்ணீரில் எங்கள் பிம்பங்களைப் பார்த்து ரசிக்கும் வேளையில்

எங்கள் சின்ன மகன் மூன்றுவயதுக் குழந்தை

பாப்பா என்று கைநீட்டியவன் அப்படியே தலை குப்புற

10அடி ஆழத்தில் விழுந்து விட்டான்.

பையா என்று நான் அலற வாய் திறக்கும் முன் அப்படியே தண்ணீரில் பாய்ந்தவர் எங்க சிங்கம்தான்.

அடுத்த நொடியில் குழந்தையை மேலெ கொண்டுவந்துவிட்டார்.

அன்று நாங்கள் பட்ட திகில் இபோதும் நடுங்குகிறது நினைத்தால்.

இவரும் தண்ணீரைப் பார்த்து பயப்படுபவராகவோ

நீச்சல் தெரியாதவராகவோ இல்லாமல்

ஒரு தைரியசாலியாக எனக்குக் கை காட்டியது

அந்தப் பெருமாள் தானே.அவன் கருணைக்கு இது ஒரே ஒரு எடுத்துக்காட்டுதான்.
6, பயணங்கள்,
சென்னை எழும்பூர்செண்ட்ரல் இந்த இரண்டு நிலையங்களிலிருந்து
புறப்படும் இரண்டு ,மூன்று வண்டிகளைத்தவிர மற்ற விவரம் அதிகமாகத் தெரியாது. அந்த நிலை மாறி இப்போது மீனம்பாக்கம் , பழகிவிட்டது.அதுவும் காலத்தின் மாற்றம்தான்.
7,நண்பர்கள்,சினேகிதிகள்
எனது முதல் வகுப்பிலிருந்து பதினோராம் வகுப்புவரைகிடைத்த அருமையான தோழிகள் ,பகிர்ந்து கொண்ட ரகசியங்கள் அநேகம்.அந்த நினைவுகள் வாழ்வின் மீது நம்பிக்கைக்கு இன்னும் உரம் கொடுக்கின்றன.
8,வலைப் பதிவுகள்
நல்ல மனிதர்களால் நிரம்பியகுடும்பத்தில் எண்ணிக்கை குறைந்து, குழந்தைகளும் வேலை நிமித்தமாகத் தொலதூரங்களில் வாழக்குடிய இந்தச் சூழலில் தமிழ்மணமும்,தேன்கூடும் இன்னும் பிற இணையஇதழ்களும் எனக்குக் கிடைத்த வரம். இந்த இணையத்தினால் எனக்கு இப்போது வரவு நட்பும் மகிழ்ச்சியும்.
எப்போதும்போல் வந்து படித்தவர்களுக்கு நன்றி:)))
நான் 8 விளையாட்டுக்கு அழைக்க விரும்பும் நண்பர்கள்,
1..நானானி,
2அம்பி,
3காட்டாறு,
4ராதா ஸ்ரீராம்,
5,ராகவன்,
6,Jeeves
7,delphin victoria,
8,யோசிப்பவர்.
நேரமும் விருப்பமும் இருந்து விளையாடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
விளையாட்டின் விதிகள்:


1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும
OPTIONAL:2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்

.3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

40 comments:

ramachandranusha(உஷா) said...

வல்லிம்மா, (ஆனா நான் உங்களைக்கூப்பிடும் பெயர் வேறு :-)
இரண்டு வருஷம் இருக்கும் இல்லையா., சென்னை வந்தால் போன் செய்யுங்கள் என்று நீங்கள் நம்பர் தந்ததும், நீங்கள் ஆணா பெண்ணா என்றுக்கூட தெரியாமல் ஊரூக்கு கிளம்பும் நேரம் அவசரமாய் போன் அடித்து பேசியப்பொழுது இனிய
அதிர்ச்சியாய் இருந்தது, நீங்கள் உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டப்பொழுது.
அன்று தயங்கி தயங்கி பேசியவர் எழுத ஆரம்பித்து எவ்வளவு முன்னேற்றம்? ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறது.

துளசி கோபால் said...

ஹை.......... சிம்பிள் & ஸ்வீட்.

ஆனா..உங்க பேச்சு 'க்கா'!!!! ( ச்சும்மா)

நான் கூப்புடலாமுன்னு இருந்தவங்க
எல்லாரையும் நீங்க விட்டுவைக்கலை:-)

வல்லிசிம்ஹன் said...

அன்பு உஷா,ரேவதி என்பதுதான் என்பெயர்.
முஞாக்கிரதை முத்தண்ணியா இருக்கணும் என்று யாரொ புத்திமதி சொல்ல அத்துழாய் என்று ஆரம்பித்தேன். பிறகு திருவேங்கடவல்லி என்ற(நாமகரணம் செய்யப் பட்ட) பெத்தப் பெரிய பேரை வல்லியாகச் சுருக்கிக்கொண்டேன். இப்போ வல்லிம்மாவும் ஆயாச்சு.
ரொம்ப நன்றிப்பா. இரண்டுவருஷமும் ஆகிவிட்டது. காலத்துக்கென்ன,ஓடிவிட்டது..யாருக்காக நிற்கப்போகிறது,
எனக்கே அதிசயமாகத்தான் இருக்கிறது:-))

வல்லிசிம்ஹன் said...

வாங்கோ துளசி,இன்னிக்கும் நேற்றும் இந்த சிஸ்டம் படுத்தின பாடு.சாமி....
எல்லாம் ஜெர்மன்ல வருதுப்பா.
நான் எழுதின பதிவும் பின்னூட்டமும் தமிழில தெரியுது.
ஆனா போஸ்ட் கமெண்ட் ங்கிற இடத்தில் ஜெர்மன் வார்த்தை நிக்குது. முழிமுழினு முழிச்சு,அதே சாமி அருளாலே யூசர் டிஃபைண்டு க்ளிக்கினேன்,.
இப்போவும் கொஞ்சம் தகறாறுதான். நன்றிப்பா.நான் கூப்பிட்டதிலேயும் ராகவன் எழுதிட்டார்.
ஆல் இன் த கேம்தான்:)))))

Jazeela said...

எட்டில் அந்த மறக்க முடியாத சம்பவத்தைதான் மறக்கவே முடியாது. நிஜமாவே திகில்தான்.

G.Ragavan said...

ஆகா...ஜோதியில நீங்களும் ஐக்யமாயிட்டீங்களா! :) எட்டு எல்லாரையும் தப்பிக்க விடாம வளைச்சு போடுது போல.

மீனம்பாக்கம் பழகீருச்சுன்னு சொன்னீங்க. இது எங்க அம்மாவுக்கும் பொருந்தும். பஸ், டிரெய்ந்தான் முந்தியெல்லாம். இப்ப என்னடான்னா அப்பாவை ஊர்ல விட்டுட்டுத் தனியாவே சிங்கப்பூருக்குப் போய்ட்டு வர்ராங்க :) இந்தத் துணிச்சல் நல்லதுதான்.

உங்கள் அழைப்பிற்கு நன்றி. நானும் எட்டு பதிவு போட்டிருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஜெசீலா,அந்த நிகழ்ச்சிக்கப்புறம் பையனுக்குஒரு மாதம் பயத்தினால ஜுரம் வேற வந்தது. ச்சில நினைவுகளுக்கு மாற்று சந்தோஷமான நிகழ்ச்சிகளை நினைப்பதுதான்:-))

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராகவன்,இந்தத் தைரியம் வேணத்தான் இருக்கு.
இந்த ஊருப் பெண்கள் முதியவர்கள் எல்லோரையும் பார்த்தால் இத்தனை உரமெப்படி வருதுனு யோசிப்பேன். நாட்டுடைய வளர்ச்சியும்,சிந்தனை,கலாச்சாரம் எல்லாமே வேறயா இருக்கிறதுதான் காரணம்.

தருமி said...

//ஸ்ரீவில்லிபுத்தூர்,திருமங்கலம்,திண்டுக்கல்,...//

ஏங்க அப்படியே பேச்சோட பேச்சா இந்த இடங்களையெல்லாம் நகரங்களா ஆக்கிட்டீங்க... மக்கள்ஸ் என்னடானா எங்க மருதய கூட கிராமம் அப்டிங்றாங்க !!

வல்லிசிம்ஹன் said...

மருத கிராமமா..யார் சொன்னது.
போனப் போகட்டும் இன்னமும் மரியாதை கொடுக்கும் மக்கள் இருக்குமிடம் மதுரைன்னுதான் என்

மனசில நினைவு. நாகரீகம் இருக்குமிடந்தானே நகரம்.இன்னும் சென்னையில் என்னால் ஒட்ட முடியவில்லை என்பதற்குக் காரணமே ,கிராமங்களிலிருந்து வந்த மனுஷி என்பதாலொயொ என்னவோ:-))

வல்லிசிம்ஹன் said...

Delphine, you shd come out and share. you have so much information and goodthoughts
and the rest of the tamil speaking world should know that life is beyond likes and dislikes and there is still something to Hope for. Try your best.thank you.

ambi said...

என் தம்பியும் இதே மாதிரி தாமிரபரணியில் பல தடவை மூழ்கி முத்தெடுத்தவன். :)

ஆஹா! இரும்பு அடிக்கற இடத்துல என்னை மாதிரி ஈய எல்லாம் வேற கூப்பிட்டு இருக்கீங்க. சரி, முயற்சி பன்றேன். :p

குட்டிபிசாசு said...

ஒன்னும் எழுத தெரியாதுனு சொன்னீங்க!! எட்டும் நல்லா இருக்கு!!

வல்லிசிம்ஹன் said...

அம்பி,
யாருப்பா இங்க கொல்லன்.
ஈனு ஒருத்தர் வந்து இருக்காரு.
கொஞ்சம் பாருங்க.:)))))
அம்பி காது குத்தலாம்,இத்தனை பெரிசா குத்தமுடியாது...:

நீங்க எழுதியேதான் ஆகணும். பதிவுக்கு வெயிட்டிங்க்க்க்க்க்க்க்க்க்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் குட்டிப் பிசாசு.
நிஜமாவே நல்லா இருந்ததா.

ரொம்ப நீளமா எழுதிடுவேனோனு பயந்தேன். ஏதோ உங்களுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கு. சின்னதா நிறுத்திட்டேன்:))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

முக்கொம்பு அனுபவம் திக்திக்....

காவரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடியதா? அதை நீங்க பாத்தீங்களா? ஹூம்ம்ம்ம்ம்ம்!
முக்கொம்பில் இருந்து திருவரங்கம் வரை ஆற்று மணலில் நடந்தே சென்ற நாட்கள் எல்லாம் நினைவுக்கு வருகிறது!

//இதுவும் தந்தை கொடுத்த பாடம்தான்//

இப்படியே சொல்லிக்கிட்டு இருந்தா எப்பிடி? தந்தையைப் பற்றி ஒரு ஸ்பெஷல் பதிவு ரெடி பண்ணுங்க வல்லியம்மா!:-)

ilavanji said...

// சந்தேகத்தோடு தொடங்கும் எந்த உறவும் நிலைக்காது //
// இந்த நம்பிக்கை இல்லாமல் என் வாழ்வை நினைக்க முடியாது //
// அந்த நினைவுகள் வாழ்வின் மீது நம்பிக்கைக்கு இன்னும் உரம் கொடுக்கின்றன //

பளிச்சுன்னு சொல்லியிருக்கீங்க! இயல்பான 8! :)

வல்லிசிம்ஹன் said...

வரணும் ரவி.
ஆமாம், முக்கொம்புலேயும்,கல்லணையிலேயும் நிறையத் தண்ணீர் ஓடும். 30 வருடங்களுக்கு முந்திய நிகழ்ச்சி.நீங்களும் அங்கே இருந்திருக்கிறீர்களா. இவருக்கு என்னை மாதிரி திகைத்து நிற்க எல்லாம் முடியாது. ரங்கநாதன் தான் காப்பாத்தினார்.
அப்பாவைப் பற்றி எழுதலாமே.எழுதுகிறேன்.நன்றிமா.

ambi said...

//நீங்க எழுதியேதான் ஆகணும். பதிவுக்கு வெயிட்டிங்க்க்க்க்க்க்க்க்க்.
//

தங்கள் உத்தரவு. (விதி யாரை விட்டது?) :p

இந்த வார கடைசிக்குள் முடிக்க பார்க்கிறேன். எக்கசக்க வேலை(ஆபிஸ், வீடு ரெண்டுலயும் தான்) :)

வல்லிசிம்ஹன் said...

வரணும் இளவஞ்சி.

சிலசமயம் தேவை இல்லாமல் வார்த்தைகளை அடுக்குகிறேனோ என்று சந்தேகம் வரும்.

உங்களுக்குச் சரியென்று தோன்றியது சந்தோஷமே.

இலவசக்கொத்தனார் said...

வல்லிம்மா, சூப்பர் 8!!

அதிலும் உங்க நம்பர் நாலுக்காகவே தலை வணங்குகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அம்பி, எப்ப வேணா எழுதுங்கோ.சூப்பராத்தான் இருக்கும்.கல்யாண மொய் வரிசையே இன்னும் முடியலை.

அதனால இந்த 8 போடறது பலவித வேலைகளுக்கும் நடுவில் செய்துவிடவேண்டிய ஒண்ணு.மறுபடி வெயிட்டிங்க்க்க்க்.....:)))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் கொத்ஸ்.
8 போடணும்னால் தயக்கமாகத் தான் இருந்தது.

வகை பிரித்து எழுத விஷயமா இல்லை.
வகையா எழுதத்தான் பயிற்சி வேண்டும்.
அதற்காக உங்களுக்கும், கீதாவுக்கும் ரொம்பவே நன்றி.

காட்டாறு said...

வல்லியம்மா... சரின்னு சொல்ல முடியல... மன்னிச்சிக்கோங்க.... அம்மா வந்திருக்காங்க... குழந்தையை வீட்டுல விட்டுட்டு கணனியோட உட்கார்ந்திருக்க முடியுமா? சொல்லுங்க? காலையில 7:30 மணிக்கு கிளம்பினா, வீடு வர மாலை 7:30 ஆகிவிடும். எட்ட நான் எப்போ எட்டுறதும்மா... நீங்க அழைத்து வேண்டாம் சொல்ல மனது வரவில்லையாயினும்... அதனால... விளையாட்டு முடிந்தாலும், என்றாவது ஒரு நாள் (நவம்பர் முடிந்ததும்) எழுதி விடுவேன். இப்போதைக்கு வேறு யாரையாவது எட்டு போட வைத்து விடுங்கள்.

யோசிப்பவர் said...

அழைத்ததற்கு ரொம்பவும் நன்றி அம்மா!! நேரமும், விருப்பமும் நிறையவே இருக்கிறது. ஆனால் பதிவுகளிடுவதில் இப்பொழுது டெக்னிக்கலாக எனக்கு சில சிரமங்களிருப்பதால் இந்த முறை இதில் கலந்து கொள்ள விரும்பவில்லை. ரொம்பவும் மன்னிக்கவும்!!!:(

Geetha Sambasivam said...

அட, எட்டி வந்து ஒரு வாரத்தை போட்டுட்டேன்னு சொல்லக் கூடாது? இன்னிக்குத் தற்செயலா வந்தேன். :( சரி, போகிறது, நல்ல எட்டுத்தான், முக்கொம்பு எட்டும் சேர்த்துத் தான். காவிரிக்கரையிலேயே வளர்ந்திருப்பாரோ சிங்கம்? பையன் பயப்படாமல் இருந்தானே, அதுவே பெரிசு!

@ஆப்பு, சமையல் உத்தியோகமா? ஜமாய்ங்க! ரொம்பவே சந்தோஷமா இருக்கு, கேட்கவே, இனிமையா இருக்கு! :P

வல்லிசிம்ஹன் said...

காட்டாறு,அம்மாதான்முக்கியம். பரவாயில்லை.
அப்புறமே போடலாம். 12 மணி நேரம் வெளிலன்னா
வீட்டில நேரம் குறைந்துவிடுமே.டேக் கேர்.

வல்லிசிம்ஹன் said...

வரணும், யோசிப்பவரே.
நன்றி.

நீங்க எட்டு போட்டால் எப்படி இருக்கும்னு யோசிச்சேன். நல்லாவே இருந்தது.

அப்புறமாவே பார்க்கலாமே.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா. பதிவு போட்டுட்டூ சொல்லணுமா.

அட.சாதாரண பதிவு மரியாதை கூட தெரியலையே.

மன்னிக்கணும்பா. அம்பி எப்படிப் போடறார்னு பார்ப்போம்.
சிங்கம் பாம்பே ஆளு.
நீச்சல், நம்ம மெரினா பூல்தான்.
பையனுக்கு இன்னும் கூட நினைவு இருக்கு.

யோசிப்பவர் said...

//நீங்க எட்டு போட்டால் எப்படி இருக்கும்னு யோசிச்சேன். நல்லாவே இருந்தது.
//
நான் எட்டு போட்டால் எட்டு மாதிரியேதான் இருக்கும். சில சமயங்களில் ஒன்பது மாதிரியும் இருக்கும். இதனாலேயே கணக்கு பரிட்சையில் பல மார்க்குகள் குறைந்ததுண்டு. அது சரி, நீங்கள் இந்த 8 போடுவது பற்றித்தானே சொன்னீர்கள்?;-)

மெளலி (மதுரையம்பதி) said...

இன்றுதான் படிக்க முடிந்தது....மிக அருமை வல்லியம்மா/ரேவதியம்மா....

வல்லிசிம்ஹன் said...

இதென்ன இந்த யோசிப்பவர் சொல்றதும் ஒரு மார்கமாவே போறதே.
நாங்க சொன்னது இந்த ஒண்ணு,ரெண்டு ,,மூணுல வர எட்டுங்க.
பதினெட்டுப் புராணம் மாதிரி பதிவெட்டு...:)))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி.
ரொம்ப நாளாக் காணொமேனு பார்த்தேன்.
நிறைய வேலையா.

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
நானானி said...

வல்லிம்மா!
மொதொ மொதொ என்னைய அழைச்சிட்டீய..அந்த மருவாதைய
காப்பாத்தப் பாக்குறேன்.ரொம்ப நன்றி!

வல்லிசிம்ஹன் said...

நன்றி,
நானானி.
சொன்ன எட்டு பேரில மூணுபேரு ஜகா வாங்கிட்டாங்க.
நீங்களாச்சும் நம்மளைக் கண்டுகிட்டீங்க.

குறுக்குத்துறை முருகன் காப்பாத்துவார்மா.:))))

காட்டாறு said...

// வல்லிசிம்ஹன் said...
காட்டாறு,அம்மாதான்முக்கியம். பரவாயில்லை.
அப்புறமே போடலாம். 12 மணி நேரம் வெளிலன்னா
வீட்டில நேரம் குறைந்துவிடுமே.டேக் கேர். //

புரிஞ்சிகிட்டதுக்கு நன்றி வல்லிம்மா! தவறாமல் உங்க எல்லாப் பதிவும் வாசிக்கிறேன் (கூகிள் ரீடரில்). மறுமொழி தான் கொடுக்கமுடியவில்லை... வேலை மதிய வேளையில் வாசிப்பதால். ;-)

நானானி said...

வல்லி!
சிந்துபூந்துறை செல்வியம்மனும் காப்பாத்திவிடடாள்! என் எட்டு, எட்டாக
இருந்ததா..? கோணலாக இருந்ததா?

வல்லிசிம்ஹன் said...

நானானி,

அதெப்படி நல்லா இருக்கானு நீங்க கேக்கலாம்...

நல்லா இருக்கத்தானே எழுதறோம். அழகா வளைவா எட்டு போட்டு இருந்தீங்க.
நல்ல திருப்பங்களோட நல்லா இருந்தது.
நானானி செல்லிஅம்மனை பத்தியும் எழுதுங்கோ.