About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Thursday, June 21, 2007

189,ஆறிய சினம் பலம் கொடுக்கும்......2இந்தக் கோபத்துக்குக் காரணமாயிருந்தது ரீடா.
ஒரு குட்டிக் குரங்கு.
ரொம்ப அழகான குட்டிதான்.இருந்ததலும் குணம் குரங்குகுணம்தானே.
சிங்கத்தோட தொழிற்சாலை அருகே இருந்த மின் கம்பத்தில் மாட்டி உயிரை இழக்க இருந்ததைக் காப்பாற்றி வீட்டுக்குக் கொண்டு வந்துவிட்டார்.
அதற்கு ரீட்டானு நாமகரணமும் ஆச்சு.
சீதாவுக்கு ரைமிங்கா ரீட்டாவாம்.:)))
இந்த ஐயாவோ எட்டு மணி சைரன் ஊதுவதற்கு முன்னால் ஏழு மணிக்கு
வேலைக்குப் போகிறவர்.
இரவு வரும் வரை யார் அதைப் பார்த்துக்கிறது.
எனக்கும் முதலில் ரொம்பப் பாவமாக இருந்ததால் சரி போனாப் போகட்டும்னு சரி சொன்னேன். சமையலறை
ஜன்னலுக்கு வெளியே கயிற்றில் கட்டி விட்டுப் பக்கத்தில் தண்ணீர்,ரொட்டி எல்லாம் வைத்துவிட்டுப் போயிருந்தார்.
அதுவோ அம்மா ஞாபகத்தில் யாரைப் பார்த்தாலும் பாய ரெடியாக இருந்தது. சகிக்க முடியாத உர் உர் சத்தம் வேற.
மேடையில் ஸ்டவ்விலொ ஹாட்ப்ளேட்டிலோ ஏதாவது சத்தம் கேட்டால் ஜன்னலுக்குத் தாவி என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டும்.
நான் ஏன் அப்புறம் அங்கே நிப்பேன்.ஒரே தாவு .கூடத்துக்கு வந்துவிடுவேன்.
பள்ளிக்கூடத்தில் லாங் ஜம்ப் செய்தது எத்தனை பயன்பட்டது பாருங்க.
அதுவோ கூடத்துக்கும் சமையலறைக்கும் நடுவில் இருந்த வராந்தாவில் வந்து உட்கார்ந்து கொண்டு ஆட்டம் காட்டும்.
இதனால் நஷ்டங்கள் பின் வருமாறு ,
1, கிழவி துணைக்கு வரமாட்டார்
2,சாப்பிடச் சமையலறைக்குப் போகமுடியாது.
3,இன்னும் சிரமமான விஷயம் வீட்டு வாசலும் ,வெளிமாடிப்படியும்
ரீட்டாவைத் தாண்டிதான்.
4,எல்லாவற்றையும் விட அன்று மாலை அன்பே வா போகலாம்னு ஒரு திட்டம்.
அந்த வயதில் இவை எல்லாம் பெரிய பிரச்சினை.
வீட்டில ரேடியோ கிடையயது.
படிக்க வேணும்னால் சாமர்செட் மாம்,எட்கார் ஆலன் போ,இன்னோரு பெயர் தெரியாத டூ விமென் என்ற ஒரு நாவல். சோஃபியா லொரென் நடித்து வெளிவந்த படத்தோட கதை.
மற்றதெல்லாம் துப்பறியும் சிங்கங்கள் பற்றிய நாவல்கள்
கொஞ்சம் நம்ம அறிவுக்கு எட்டாத விஷயங்கள்.
இந்த நேரத்தில்தான் மேலே வந்த தொழிற்சாலை வேலையாள்
குரங்கைப் பார்த்ததும் அப்படியே படியோரத்தில் நின்று ஐயா வெளியூர் போறாராம்.இன்னிக்கு இரவு வீட்டுக்கு வர மாட்டார் என்றதும்
ஓனு கூப்பாடு போடலாமானு இருந்தது.
அதுவும் தெரியாதே!!.
அப்புறம் எப்படிச் சமாளித்தேன் என்பது வேறு கதை.¨:-)


11 comments:

வடுவூர் குமார் said...

சாப்பிடச் சமையலறைக்குப் போகமுடியாது.
உங்கள் மேலுள்ள அக்கரையைத்தானே காட்டுது? இது.

வல்லிசிம்ஹன் said...

தேவுடா.

அக்கரையா. நானே சமைச்சு நானே சாப்பிடுவதே ஒரு கொடுமை.
அதைக் கூடச் சாப்பிட விடலை இந்தப் பெண் வாநரம்.அவர் அதர்குச் சின்ன கயிறாக் கட்டி இருந்தால் ஒத்துக்கலாம்.
இது ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நீளமான ரோப்.:-)))))

துளசி கோபால் said...

ஹை..........குரங்குக்குட்டியா?
எனக்கு ரொம்ப ஆசை. மகளுக்கும்தான் ஆசை.
ஒரு குட்டி வளர்த்தாக்கூடவே இருந்து சொல்றதெல்லாம் செய்யுமேன்னு
தோணல்தான்.

ம்ம்ம்ம்ம்ம்ம்..அப்புறம் என்ன ஆச்சு?

G.Ragavan said...

ஆத்தா ஆடு வளத்தா கோழி வளத்தா நாய் மட்டும் வளக்கலன்னு பழைய வசனம். இப்ப அத மாத்தனும் போல இருக்கே. :)))))))) சென்யோ"ரீட்டா"

வல்லிசிம்ஹன் said...

துளசி,
இப்ப எல்லாம் பிடிச்சிருக்கு.

தவளை,பேர் சொல்லாதது,பல்லியைத் தவிர எல்லாம் வளர்க்கலாம்.

அப்போ அது என்னைப் பார்த்துப் பயந்தது,நான் அதைப் பார்த்துப் பயந்தேன்.மியூச்சுவல் பயா.:))

வல்லிசிம்ஹன் said...

இந்த ரீடாம்மா வந்ததுக்கு அப்புறம்குழந்தைகள் வந்துட்டாங்க.

அதுக்கப்புறம் செடிகள்.

அப்புறம் மீனம்மா.

இப்ப பேரன்கள் பேத்தி.:--)))

வல்லிசிம்ஹன் said...

ராகவன்,அது சென்யோரீட்டா தான். ஆப்பிளும் தேனும் சாப்பிட்டு
இரண்டு நாள் ஆடித்து.
முன்
பின்னூட்டத்தில் உங்க பேர் விட்டுப்போச்சு.:-)))

ambi said...

ரீட்டாவா? பேரு நல்லா இருக்கே.
உங்க வீட்டு சிங்கத்துக்கு ரொம்ப தான் லொள்ளு.

இப்பவும் அத மாதிரி ரோஸி, ஜிம்மினு ஏதாவது வளக்கறீங்களா? நான் கொஞ்சம் யோசிச்சே வரேன் உங்க வீட்டுக்கு.
வானரம் கடிச்சா மருந்து வேற கிடையாது. :p

ஆனா என் தங்கமணிக்கு பிரச்சனை இல்லை, ஏற்கனவே ஒரு வானரத்துக்கு தான் வாக்கப்பட்டு இருக்கேன்!னு சொல்லிக்கறா. :)

கீதா சாம்பசிவம் said...

@ஆப்பு, ரொம்ப சந்தோஷமா இருக்கு, உங்களை நீங்களே ஐடென்டிஃபை செஞ்சிட்டதில், நான் வேறே தனியா வல்லிக்குப் பின்னூட்டம் போடணும்னு இருந்தேன். :P

@வல்லி, ஹிஹிஹி, நமக்கும் இந்த மாதிரி அனுபவம் எல்லாம் உண்டு, ஆனால் பாம்புகள் கூடக் குடித்தனம் செய்து!!!!!!

வல்லிசிம்ஹன் said...

அம்பி,
நம்ம எல்லோருக்கும் முன்னோர் இவங்கதான்,அனுமாரோட உடன் பிறப்புகள் எல்லாம் ஒத்துக்கிறேன்.
அதுக்காக இவங்களை எல்லாம் வளர்க்கமுடியுமா.

தங்கமணி உங்களை இப்படியெல்லாம் சொல்ல வாய்ப்பே இல்லை.
ஏனெனில் அவங்க சாய்ஸ் தப்பா ஆகிவிடுமே.
நளன் சொன்னானாம்,என் மனம் நாடுவதினாலேயெ இவள் உயர்ந்த பெண்மணியாக இருக்க வேண்டும் என்று. அதுபோலத்தான் நீங்கள் இருவரும்..:-))))

வல்லிசிம்ஹன் said...

கீதா,
அதுகள் தானாவர வகை.
இது நம்ம தேடி வரவழைச்சுக்கிறது.
அதான் வித்தியாசம்:-))