Blog Archive

Thursday, May 24, 2007

அன்பு மகளுக்கு அம்மா




அன்பு பாப்பா,
வயதானாலும் பெற்றபெண் எப்பவுமே பாப்பாவாக இருப்பது நம்ம குடும்பங்களில் வழக்கம்தான்.

அனேகமாக எல்லாக் குடும்பங்களிலும் ஒரு பாப்பா,ஒரு அம்பி,ஒரு தங்கச்சி என்று பெயர் கொண்டவர்கள் இருப்பது புதிது இல்லை.
நம்ம வீடும் அப்படித்தான்.
பெயரினால் முதிர்ச்சி கூடுவதோ குறைவதோ இல்லை என்பதற்கு பாப்பாக்கள் எடுத்துக்காட்டு.
என் அம்மா,உன் பாட்டி வளர்ந்த சூழலில் அம்மா வீட்டில் வேலைகளை முடித்துப் ,,புகுந்த வீட்டில் வேலை செய்யவே
புறப்பட்டாளோ என்று நான் நினைப்பேன்.

அப்படி ஓயாமல் ஒழியாமல் ஏதாவது செய்து கொண்டே இருப்பாள்.
வேலை இல்லாத நேரம் நிட்டிங், எம்ப்ராய்டரி, பட்டன் தைக்கும் வேலை
என்று நேரம் ஓடும்.
அதனால் நான் தேர்ந்த தையல்  தெரியாத ஆள்  ஆனேனா என்று தெரியாது.
எனக்கு நூலும் ஊசியும் பிடிக்காமலே போனது.~


என் பாட்டி(இன்னுமொரு உழைப்பாளி)யிடம் சொல்லுவேன்,
உன்னை மாதிரி இப்படிக் கார்த்தாலே எழுந்து உடம்பு வலிக்க வலிக்க வேலை எல்லாம் செய்ய மாட்டேன்..
கலெக்டர் உத்யோகம் தான் எனக்கு.
நகத்தில அழுக்குப் படாமல் வாழ்க்கையை சந்தோஷமாகக் கழிப்பேன்.
சுற்றிலும் தமிழ் நாவல்கள்,ரேடியோ,கொறிக்க வத்தல் வடகம்
இது மாதிரிதான் அமைத்துக் கொள்வேன்.
பாட்டி கேட்டுவிட்டுச் சிரிப்பார்.

நானும் வந்து பார்க்கிறேன் நீ எப்படிக் குடித்தனம் பண்றேனு...
விடாப்பிடியாக கல்லூரியை எட்டிவிட்டேன்.
கோடைவிடுமுறையிலேயே மணம் பேசி அடுத்த தையில் திருமணம்.
ஸோ, அம்மா கலெக்டர் கனவு பி.யூ.சியுடன் முடிந்தது.
அதற்கெல்லாம் வருத்தமே படவில்லை.
என்ன இடம் தானே மாறியது.~
~
எனக்கு தேவையான  புத்தகங்கள் அப்பா வாங்கித் தந்தார்.
எல்லாம் ஆங்கிலம்.
நமக்கு கழுதைக்குக் காகிதத்தின் மேல் எவ்வளவு மோகமோ அதற்கு ஒரு பிடி மேலேயே ஆசை படிக்க.
உன் அண்ணன் பிறக்கும் வரை என் அரசாங்கம் நன்றாகவே நடந்தது.
அதற்குப்பின்னால் ஒரு சிடு சிடு அம்மா
என்னுள் புகுந்து விட்டாள்.
தொடர்ந்து நீயும் உன் தம்பியும் வந்ததில் அம்மாவின் கற்பனை உலகம் கீழே
வந்துவிட்டது.

அப்பவும் உங்கள் நோட்டுப்புத்தங்களும்,புத்தகங்களும்
என் எழுத்துப்பசிக்கு உணவு போட்டன.
இவ்வளவு பீடிகையும் எதற்கு என்று நீ யோசிக்கலாம்.
குடும்பவாழ்க்கை ஆரம்பித்துக் கொஞ்ச நாட்கள் சம்பாதிக்க முடிந்து இப்போது மீண்டும் வீட்டில் புதிதாக வந்து இருக்கும் குழந்தையைக் கவனிக்க வேண்டிய சூழல் உனக்கு.
சுதந்திரம் குறைந்த இந்த நாட்களில் செய்ய முடியாத
எல்லாப்பணிகளுக்கும் நிறைவேற்ற முடியாத ஆசைகளுக்கும் ஏக்கம் வரத்தான் செய்யும்.

உனக்கோ குழந்தைகளைக் காப்பகத்தில் விட மனமில்லை.
அடுத்த வழி மேற்கொண்டு எப்படி முன்னேறுவது என்ற கேள்விக்குறிக்குக் கொஞ்ச நாட்கள் விடுதலை கொடுத்து விடு.

குழந்தைகள் நமக்குக் கிடைத்த வரம் என்பதை நீயும் அறிவாய்.
அவர்கள் வளரும் காலத்தில் ஒரு அம்மாவின் ஆதரவு எத்தனையோ
விதங்களில்,வகைகளில் அவர்களை நேர் பாதையில் அழைத்துச் செல்லும்.
அன்பும் அரவணைப்பும் கிடைக்கப் பெறும் குழந்தைகள் வழிதவறி நடக்க வாய்ப்புகள் குறைவு.

அதனால் மீண்டும் சம்பாதிக்கவும், திறமையை வளர்த்துக் கொள்ளவும் நேரம் வரும் வரை,
இப்போது கிடைத்திருக்கும் காலத்தைக் குழந்தைகள் பாதுகாவலுக்குச் செலவழித்துவிடு.
ஐம்பத்தெட்டு வயதில் அம்மாவின் எழுத்தாசை நிறைவேறியது.
அதுபோல மகளின் ஆடிட்டர் கனவும்
இதோ இன்னும் சில வருடங்களில் நிறைவேறிவிடும்.(நிறைவேறியது)
முயலுவோம்,வெற்றியும் காண்போம்..
மகிழ்ச்சியுடன் மகள் வாழ,
அதைப் பார்த்து நானும் மகிழ மிக ஆசைப்படுகிறேன்.
பிறிதொரு சமயம் இதேபோல நீயும் உன் மகனிடம் பேசுவாய்.

17 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

ஏதோ புரிந்த மாதிரி இருக்கு வல்லியம்மா....வேற ஒண்ணும் சொல்லத்தெரியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

மௌலி வாங்க.
மகள் கிட்ட பேசறது மகனுக்கும் புரியறதே அதிசயம்தான்.
உங்களுக்கும் நான் சொன்னது சரினு படுகிறதா...

Dubukku said...

ரொம்ப டச்சிங்காக இருந்ததும்மா....எனக்கு ரொம்ப பிடிச்சது. தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன். நன்றி
http://www.desipundit.com/2007/05/24/amma/

வல்லிசிம்ஹன் said...

வரணும் டுபுக்கு,

ஒரே சந்தோஷமா இருக்கு. இயல்பா நம்ம லைஃப்லே நடக்கறது. நீங்க நேரம் எடுத்து அதைப் படிச்சதுதான் எனக்கு நன்றாக இருக்கிறது.

ரொம்ப நன்றி.

வல்லிசிம்ஹன் said...

டெல்ஃபின் நம்மைப் பிராக்டிகலாகச் சிந்திக்க வைத்துவிடுகிறது வாழ்க்கை... .இல்லையா.
அசந்து போகாமல் இருக்க நம்முடைய ஃபிலாசபி உதவும்.

Geetha Sambasivam said...

கண்ணில் ரத்தம் வரச் செய்து விட்டது. ஆனால் என் மகளுக்கு நான் ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியிலோ தான் சொல்ல வேண்டும். என்ன இருந்தாலும் தாய்மொழியில் உணர்ச்சிகளை வடிக்கிற மாதிரி அன்னிய மொழியில் முடியுமா? ஆகவே எனக்குள் நானே நடைப் பயிற்சி போகிறபோது நினைத்துக் கொள்வேன். அவர் வந்தால் இருவரும் பகிர்ந்துப்போம். :(((((((((((((((((((((((((((((((((((((((((((

வல்லிசிம்ஹன் said...

கீதா, நம்ம கொடுத்துவச்சதினாலே தமிழ் படிக்க முடிந்தது.

எங்க பசங்க படிக்கும்போது விகடன்,கல்கி படித்துக் கொஞ்சம் தமிழ் புரியும்.

இதை நான் எழுதினதே எங்க அம்மாவையும் அவளது தியாகத்தையும் நினைத்துத்தான்.

இதெல்லாம் தொடரும் கதையாகிவிடக்கூடாது.
இப்போதான் ஸ்டே அட் ஹோம் அப்பாக்களும் இருக்கிறார்களே.
நிலைமை மாறும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

enakkunnu yaro etho solramathiri irukku ,:)
good post.

வல்லிசிம்ஹன் said...

இது எல்லா மகள்களுக்கும் பொருந்தும் முத்துலட்சுமி.

ஏதாவது ஒரு ஏக்கம் பெண்கள் மனத்தில இருக்கும்.அந்தச் சுடர் நம்மளைச் சாதிக்க வச்சுட்டால், இன்பம்.

இல்லாததையே நினச்சு ஏங்கினா இருக்கிற சந்தோஷமும் போயிடும்.
என்னையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

//மௌலி வாங்க.
மகள் கிட்ட பேசறது மகனுக்கும் புரியறதே அதிசயம்தான்.
உங்களுக்கும் நான் சொன்னது சரினு படுகிறதா... //

நீங்க சொல்வது ரொம்பவே சரின்னு படுகிறது வல்லியம்மா!!!....

காலம் மாறினாலும், சில விஷயங்களில் நாம் ஒரு தலைமுறைக்குள்ளாக எல்லா மாற்றங்களையும் பார்க்க முடியாது....முந்தைய-வருகிற தலைமுறைகளையும் கவனித்து ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது சில விஷயங்களில்....

சில விஷயங்களில், நேரங்கடந்தாலும் நீங்கள் கூறும் அந்த சுடர் சாதிக்க வைத்தால் அது இரட்டிப்பு மகிழ்ச்சிதான்...

தி. ரா. ச.(T.R.C.) said...

அடடே தேவலமே எனக்கு போட்டியா உங்க மகள் வரப்போறாங்களா. வாழ்த்துக்கள்.
உண்மையான வார்த்தைகள். அனுபவம் பேசுகிறது. அதுசரிஅந்த லவ குசா ஆடிட்டர் பெயர் என்னவோ?

வல்லிசிம்ஹன் said...

அவங்க இன்னும் சிபிஏ அந்த ஊருக்காகப் பாஸ் பண்ணனும்.

அப்புறம் தான் எல்லாப் பிளானும்.
அவங்களுக்கு லவகுசாவோட மூணாவது பாட்டி பேரு.
அம்பி உள்ளூரில இருக்காரா,ஹனிமூன் முடிஞ்சுடுத்தா.

நாமக்கல் சிபி said...

நன்றாக இருக்கிறது வல்லியம்மா!

//அன்பும் அரவணைப்பும் கிடைக்கப் பெறும் குழந்தைகள் வழிதவறி நடக்க வாய்ப்புகள் குறைவு.அதனால் மீண்டும் சம்பாதிக்கவும், திறமையை வளர்த்துக் கொள்ளவும் நேரம் வரும் வரை,இப்போது கிடைத்திருக்கும் காலத்தைக் குழந்தைகள் பாதுகாவலுக்குச் செலவழித்துவிடு. //

அருமையான அவசியமான வரிகள்!

பாரதிய நவீன இளவரசன் said...

//ரொம்ப டச்சிங்காக இருந்ததும்மா....எனக்கு ரொம்ப பிடிச்சது. //

really touching indeed.....

i am reminded of Kannadasan's expression of the sorrows of our womenfolk through the following lullaby (film: Chithi)

"Kaalamithu kaalamithu kannurangu magalae.. kaalamithai thavara vittal thookkamillai magaLae, thookkamillai magaLae..."

வல்லிசிம்ஹன் said...

மௌலி, வாழ்க்கையில் நல்ல புரிதலும் பொறுமையும்வர ஏகப்பட்ட சிரமங்களைக் கடக்கணும்.

பெரியவங்க வழிகாட்டுதல் இருக்கணும்.கேக்கிறதும்,விடறதும் அவங்க சாய்ஸ்.

வல்லிசிம்ஹன் said...

பா.மா.பிரின்ஸ்
ரொம்ப நன்றி.

என் தந்தையும் எனக்கு நிறைய அறிவுறைகள் சொல்லி இருக்கிறார்.
அவர் இல்லாத இந்த நேரத்தில் அவைகளை நினைத்து மானசிகமாக நன்றி சொல்கிறேன்.
சித்தி படத்தில வர இந்தப்பாடல் மனப்பாடம் எங்களுக்கு}((~~}¦|

வல்லிசிம்ஹன் said...

சிபி வரணும்.
இப்படி எல்லோருக்கும் ஒத்துக்கொள்ளும்ப்படியான சூழ்னிலையில் நாம் இருக்கிறோம்னு தெரிகிறது.
நன்றிமா.