About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Saturday, May 19, 2007

புரிந்த மனிதரும் புரியாத மொழியும்


இந்த ஊருக்கு வருவது ஒரு அலுப்பில்லாத நிகழ்வு.


பொட்டியைத்திற.


அங்கே போ, இங்கே போ விவகாரம் கிடையாது.
இறங்கினதும், பாகேஜ் கலெக்ஷன்,


வெளீயில் நடக்க வேண்டியதுதான்,


படிகள்


இறங்கினால் நாம் போக வேண்டிய ஊருக்கான வண்டி.


நம்ம ஊரிலிருந்து இந்த ஊர் வித்தியாசப்படுவது சத்தமில்லாமல் இருப்பது .
அதென்ன ,ஒரு குரலே எழும்பாமல் ஒரு மொழி பேசுவாங்களோ.~


அதுவும் முன்ன இருந்த இடத்தில மக்கள் அவ்வளவு மோசம் இல்லை
ஒரு ஹை, சொன்னா பக்கத்துவீட்டுக்காவது கேட்கும்.
இங்கே குழந்தைகூட அம்மாவைப் பார்த்துவிட்டு,அப்ரூவல்


வாங்கிண்டு தான் அழுகிறது


ஏகத்துக்குச் செழுமை.


விதவிதமான பூக்கள்.பாலுக்கும் அதன் கூடவே வரும் தயிர்,வெண்ணை


ஒன்றுத்துக்கும் குறைவில்லை.


முன்னரே சொல்லியபடி லாண்ட் ஆஃப் பிளெண்டி.


அதற்காக எல்லோரும் உடல் பெருத்து ,கனத்துக் காணப்படவில்லை.


அழகாக அளவோடுதான் இருக்கிறார்கள்.நல்ல ஆரோக்கியம். தொண்ணூறு


வயதுக் கிழவர்,கிழவிகளும் வாக்கிங் ஸ்டிக் உதவி இல்லாமல்


நிதானமாக நடக்கிறார்கள். வாழ்க்கைக்குத் தேவையான உற்சாகம்.சுதந்திரம்
எல்லாம்...சற்று மேலோட்டாமாக இருந்தாலும் , உணர முடிகிறது.
போக்குவரத்துக்குப் பயன்படும் டிராமில் ஏறினால்
வயதானவர்களுக்கும் ,குழந்தைகளுக்கும்,வளர்ப்புச் செல்லங்களுக்கும் முதலிடம்.
மீண்டும் பார்க்கலாம்.
11 comments:

வல்லிசிம்ஹன் said...

பின்னூட்டப்பெட்டி வந்துவிட்டது.

இனிமேல் ஓரோருதடவை பதிவு போடும்போதும் போஸ்டாப்ஷன்ஸ்
பார்க்கவேண்டும்.
புதுப்பாடம்.>

கீதா சாம்பசிவம் said...

பழசு, புதுசு எல்லாம் படிச்சேன். இந்த ஸ்விஸ் மக்களோட சுறுசுறுப்புக்குக் காரணம் என்னன்னு எங்கேயோ படிச்சிருக்கேன். நினைப்பு வரலை. சாக்லேட் நினைப்பாச் சாப்பிடுங்க. என்னோட பங்கும் சேர்த்து. காது போஸ்ட் பார்த்தேன். இந்த வாரம் எங்கே போனாலும் "காஆஆஆஆது வாஆஆஆஆஅரம்" ஆக இருக்கு. என்னோட காதில் கரப்புப் புகுந்து அவதிப் பட்டது நினைப்பு வந்தது, ஒவ்வொரு இடத்திலேயும். :D

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா.வேற யாரு காதைப் பற்றி எழுதினார்கள்_

பார்க்காமல் விட்டுவிட்டேனே.
அம்பி கல்யாணத்தைப் பற்றி யாரும் எழுதக்காணோமே.>.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்,கீதா
இவங்க சுருசுறுப்ப்புக்கு ஏதாவது காரணம் இருக்கணும்.
அதென்னவோ ,சாக்கலேட்டாக இருக்குமோ.

கீதா சாம்பசிவம் said...

முத்தமிழ்க் குழுமத்திலே ஒருத்தர் ஒரு பையன் காதிலே "சிலந்தி வலை" கட்டிக் குடும்பம் நடத்தினதைப் பத்தி எழுதி இருந்தாங்க. அதான் சொன்னேன். :)))))))
அப்புறம், இருங்க வரேன், இந்த ஸ்விஸ் காரங்க சுறுசுறுப்புப் பத்தி எழுதி இருந்த புத்தகம் என் கிட்டே இருக்கா, கொண்டு வந்திருக்கேனா பார்க்கறேன்.

G.Ragavan said...

இது எந்த ஊரு? அதச் சொல்லவே இல்லையே. ரொம்ப அழகான பட்டிக்காடாக இருக்கிறது. மிகவும் அழகாக. அருமை.

வல்லிசிம்ஹன் said...

இதுன்னா, அது பாசல்னுBASEL

என்கிற ஊரு.ஸ்விட்சர்லாண்ட்.
திடிர்னு வந்தா அப்படித்தான்

தோணும்.நானா இருந்தா ராகவன் என்ன எழுதி இருக்கார்னு பார்த்துகிட்டே இருப்பேன்.
ஹ்ம்ம்.என்னை மாதிரி சோட்டா ஆத்மி பதிவுக்கெல்லாம் ரெகுலரா விசிட் செய்தாலே புரியாது.

ஸ்மைலி போட்டுக்கவும்.
இப்ப இந்தப் பாட்டிதாத்தா இங்கே இருக்கோம். இன்னும் 2
மாதம் டேரா இங்கதான்.,\<<\\
நன்றி ராகவன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இங்கே நம் ஈழத் தமிழர் நிறைய இருக்கிறார்கள். மனிதரைப் புரிந்ததற்கு வாழ்த்துக்கள்!

ஷைலஜா said...

ஸ்விஸ்ஸா போயிருக்கீங்க? நான் சினிமாலதான் பாத்ருக்கேன் வல்லிம்மா wow!இந்தப்படமெல்லாம் அங்க எடுத்ததா?

வல்லிசிம்ஹன் said...

நன்றி,யோகன்.

நல்ல வெயில் வந்து விட்டது.
கால்வலி இல்லாத நேரம் வெளியில் போய் நல்ல மனிதர்களையும் பார்க்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

ஷைலஜா வாங்க.
நான் எடுத்த போட்டோ எல்லாம் இன்னும் அப்லோட் பண்ணலை. இது பழசு.