Blog Archive

Monday, February 20, 2012

கிராண்ட் கான்யான் ...அசைபோடவைத்த படங்கள்

க்ராண்ட் கான்யான் ஸ்கைவாக்











அரிசோனா மாநிலம் வரண்ட பாலைவனத்தின் எல்லையில் இருக்கிறது.
இது நான் முன்னால் படித்தது.
இப்போது பீனிக்ஸ் அப்படித் தெரியவில்லை.
புதிய வெகு நாகரீகமான நகரமாக மினுமினுப்புடன் இருக்கிறது.
ஒரு நாள் அங்குத் தங்கிவிட்டு வாடகைக்கு
எடுத்த காரில் செடோனா நோக்கிப் புறப்பட்டோம்.
வழிநெடுக இந்த நாட்டின் பிரம்மாண்டத்தை
அதிசயத்தபடி பயணம்.
உலகத்தின் அத்தனை மூலை முடுக்கிலிருந்து வந்தவர்கள் இந்த நாட்டை மேம்படுத்தி
இருக்கிறார்கள். இன்னும் செய்து கொண்டு
இருக்கிறார்கள்.
அதில் விளைவது சப்பாத்திக் கள்ளீகள்தான்.
ஆனால் அவைகளின் வகைகளும், பூக்களும் ஆயிரக் கணக்கில்.
எனக்கு கத்தாழை,கள்ளிச் செடிகள் வீட்டுக்கு
ஆகிவராதவை என்ற நினைப்பு.
சென்னை வீட்டில்(சிங்கம்) நிறைய வளர்த்தாலும்
பக்கம் போயிப் பேசி எல்லாம் செய்ய மாட்டேன்.
இங்கே அரிசோனா , ப்ஃஈனிக்ஸில் ,ஆராய்ச்சிப் பண்ணை ஒன்றில் 300 வருடங்கள் வயதான காக்டஸ் வகைகளைப் பிரமாண்டமான அளவில் பார்க்கும்போது,
அதிசயத்திலும் அதிசயமாக இருந்தது.
ஒரு கள்ளிப் பூவில் குளிர்ப்பானம் கூட செய்து சாப்பிடுவார்களாம்.



எல்லாவிஷயத்தையும்
ஏர்போர்ட்டில் பார்த்த ஒரு பெண் (நியூயார்க்)
சொன்னாங்க,.
அவங்க ஹண்ட்க்ளைடரில்
போவதற்காக அங்கே இருந்து வந்து இருக்காங்களாம்.
யூ ஷுட் ட்ரை தட்
என்று புன்னகைத்துவிட்டுப் போச்சு அந்தப் பொண்ணு,.
ஒரு பக்கம் சிரிப்பு.
ஒரு பக்கம் ஆசை.
அப்படியே மனசார பறந்துவிட்டு மறுபடி பயணத்துக்கு
வண்டிக்குள் வந்துவிட்டேன்.
'எர்த் கால்லிங் அம்மா.
எர்த் கால்லிங் அம்மா''
இது என் பெண்.
ஏம்மா அப்பாப்போ எங்கெயோ போயிடரியே.
இதோ செடோனா வந்தாச்சு.
உன்னுடைய மிஸ்டீக் பவர்ஸ் எல்லாம் வொர்க் ஆவரதா பாரு''
என்று சிரித்த வண்ணம் இறங்கினார்கள்.
பவர்ஸ் இருக்கட்டும். முதல்ல ஒரு பில்டர் காப்பி கிடைக்குமா கேளுனு சொன்னபடி
காணாமப் போன கைகால்களைக் காண்டுபிடிச்சு இறங்கினேன்.
மரத்துப் போச்சு எல்லாம். தப்பா நினைக்காதீங்க.
கண்ணைப் பறிக்கும் அழகு.
சிவப்ப்பில் தோய்ந்த மண் குன்றுகள்.
அருமையான மணம் சூழ்ந்த வீதிகள்.
கலப்படமான மனிதர்களின் கூட்டம்.
பழைய கால வெஸ்டர்ன் படங்களின் போஸ்டர்கள்.
நேடிவ் அமெரிகன்ஸ் நிறையப் புழங்கும் இடம் என்பது கச்சிதமாகத் தெரிந்தது.
அங்கங்கே மயங்கிய நிலையில் சில
நபர்கள் சிரித்துக் களித்துக் கொண்டிருந்தார்கள்.
யயருக்கும் அவர்களால் தொந்தரவு இல்லை.
கடைகள்.
முத்து,மாணிக்கம்,பச்சை,அமேதிஸ்ட்,ஓபல்
இன்னும் விதம் விதமான ரத்தின வகைகள்.
சிலது போலி.
சிலது நிஜம்.
நம்ம ஊரிலேயெ பாண்டி பசாரில் பார்க்காததா:-)
இந்த ஊருக்குச் சொந்தக்காரங்க அதான் நேடிவ் இந்தியர்கள்
அன்போடு கலகலப்பாக இருக்கிறார்கள்.
என்னுடைய புத்தக அறிவை வைத்துக்கொண்டு
நீ செயினீ க்ருப்பா
நீ அபாச்சியா
நீங்க peacepipe பிடிக்கிற வழக்கமெல்லாம் விட்டாச்சா/
என்றேல்லாம் கேட்க ஆசை.
நல்லா இருக்காதேனு விட்டு விட்டேன்.
சிங்கம் எப்பவுமே ஆன் கார்ட்:-)
எதையாவது செய்து பேசி விடுவேனோ என்று.
அப்படியும் ஒரு சூவினீயர் கடையில் ஒரு நேடிவ்
இந தியப் பெண்மணி என்னிடம் அவளுடைய வாழ்க்கை கதையயே சொல்லி விட்டாள்.
அவளுக்கும் என்னை மாதிரி பேரன் பேத்தி வேணுமாம்.
ஆனால் பெண்ணை வற்புறுத்த மாட்டாளாம்.
நாந்தான் படிக்கலை.
அவளாவது படிக்கட்டும் என்று விச்தாரமாக்ப் பேசிக் கொண்டிருந்தாள்.
உலகம் முச்சூடும் இதுதான்
பெண்கள் நிலை!!
அங்கிருக்கும் சிவப்பு மண்ணுக்கு பெண்சக்தி என்று பெயராம்.
இங்கு கொஞ்ச நாட்கள் இருந்தால் இழந்த
உடல் நலத்தைத் திருப்பி பெறலாம்
என்று நம்புகிறார்கள்.
மாற்று நலச் சிகித்சை இங்கே வெகுவாகப்
பயன்படுத்தப் படுகிறது.
மிக அமைதியான இடம்.
எனக்கென்னவோ திருப்பதிக்க்ப் போகும்போது அந்த மலைச் சிகரங்கள் காவல் தெய்வம் போலவும்,
அங்கே இருப்பவர்களுக்கு நிம்மதி கூடுவது போலவும் தோன்றும்.
அதே மாதிரி ஒரு நல்ல வைப்ரேஷன் இந்த இடத்திலும் இருக்கிறது.
அங்கே தங்க இடம் கிடைக்காத்தால் மீண்டும் மலைப் பாதையில் பயணித்து
fளாக்ஸ் டாஃப் என்ற ஊருக்கு வ்அந்தோம்.
அங்கிருந்து க்ராண்ட் கான்யான் 2 மணி நேர
பயணம்.
போகும் வழி எல்லாம் ஆத்தங்கரையும்,
பள்ளத்தாக்கும்,
மலைக்காடுகளும் தான் துணை.
நடுவில் குவிஸ்னோசில்
ஒரு மண்டகப்படி.
சூடான சாண்ட்விச்சை ரசித்தபடி மேலே பயணித்து வந்து சேர்ந்தோம்.
மணி இரவு எட்டு.
இயற்கை அதிசயத்தைப் பார்க்க.நேரம் சரியில்லை
இருட்டில் என்ன செய்ய/
இருக்கவே இருக்கு ஐமாக்ஸ்.
நாளைக்குப் பார்க்கலாமா?












ஐமாக்ஸ் பெரிய திரையில்
கிராண்ட் கான்யான் பிறந்த கதையைச் சொல்லுவார்கள் என்று ஆசையுடன் போன எனக்கு அதன் நிகழ்கால
மூவாயிரத்துச் சொச்ச கதையைக் காண்பித்தார்கள்.
ஏதோ அட்வெஞ்சர் படம் பார்த்த நினைவு வந்தது.
இருந்தாலும் வரலாறு தானே.
ரசிக்கும்படியாகவும் இருந்தது.
கொஞ்சம் ரீல் கொஞ்சம் ரியல் என்று 30 நிமிடப் படம்.
அதிரடியாக ஓடும் கொலராடோ நதி இத்தனை ஆழத்தில் இருக்கிறதே என்று வருத்தமாக இருந்தது.
நேரே பார்க்க முடியாவிட்டால் ,
என்ன பலன்?
இந்தப் பள்ளத்தாக்கு,(?)
ஒரு மைல் ஆழம்.
விஸ்தீரணம் 277 மைல்கள் நீளமும்
கிட்டத்தட்ட 12 மைல்கள் அகலமும்
இடத்துக்கு இடம் வித்தியாசமாக இருக்கும் என்றார்கள்.
மலையைச் சுற்றி வர 7 நாட்கள்
கூட எடுக்கலாமாம்.
அங்கேயும் குடி இருப்பவர்கள்.
ஹோட்டல்கள்,
காபின் அமைப்பில் இருந்து கொண்டு நடப்பவர்கள்.
பூகோள ஆராய்ச்சி செய்பவர்கள்,
விடுமுறை கழிக்க வந்தவர்கள்,
என்று ஒரு சிறிய நகரமே இயங்குகிறது.
வயதானவர்கள் நல்ல உடல் நலத்தோடு
இரு கைகளிலும் வாக்கிங் ஸ்டிக் உதவியோடு கீழே இறங்கிக் கொண்டிருந்தார்கள்.
போக மூன்று, ஏறி வர ஐந்து மணிநேரம் என்று நல்ல ஆரோக்கியத்தில்
இருப்பவர்களுக்கே
அவ்வளவு நேரம் ஆகுமாம்.
நமக்குத் தான் இன்னோரு வீக்னஸ் உயரமாச்சே.
என்னுடைய உயரம் பத்தி சொல்லலை.
க்ராண்ட் உயரத்தைச் சொல்கிறேன்.
வியூ பாயிண்ட் என்று ஏகப்பட்ட இடங்கள்.
அதிலேருந்து பார்க்கும்போது ஏஞ்சல் கான்யான் தான் ரொம்பப் பிடித்தது.
மேலிருந்து பார்க்கும்போது அதுபாட்டுக்கு ஒரு குட்டிக் கான்யானாகப் போய்க் கொண்டே இருந்தது.
நல்ல பச்சை நிறத்தில் கீஈஈஈஈஈஈஈஈஈழேஏஏஏ
கொலராடொ நதி நெளிந்து கொண்டிருந்தது.
அதில் வெள்ளைநிற ராபிட்ஸ் (rapids) நுரைத்துக் கொண்டுபோவதும் தென்பட்டது.
river rafting நடக்கிறது.
மியுல்ஸ் எனப்படும் கோவேறு கழுதைகள் கட்டிவைக்கப் பட்டுக் காத்திருக்கின்றன.
நானென்ன வைஜயந்திமாலாவா.
பாட்டுப்பாடவா கேட்டுக்கொண்டே
அதுமேல் போக.
கண்ணால் எல்லவாற்றையும் ஆசீர்வாதம்தான் பண்ணமுடியும்:-)
எதற்கு என்கிறீர்களா.
அங்கே வந்த இரட்டை நாடி தேகங்களைச்
சுமந்து கொண்டு நடக்கணும்.
கால் வழுக்காமக் கொண்டுபோய்ச் சேர்க்கணூம்.
இதுக்கெலாம்தான். அதுகள் பாவம்தானே.
எனக்கென்னவோ சு. என் சுந்தரி கதையில் நாகேஷ் விரட்டப் பின்னாலேயே போகும் குதிரை
தான் ஞாபகம் வந்தது.;-0)
எனக்கு அதுமாதிரி ஏறிப் பயணம்
செய்ய முடியாதேங்கிற பொறாமையாக் கூட
இருக்கலாம்:-)
இப்படியாகத்தானே சுற்று முற்றும் பார்க்கும்போடு,
கிடைத்த கூழாங்கற்கள்,
மரத்துண்டுகள் எல்லாவற்றையும் பொறுக்கிக்
கொண்டோம் நானும் என் பேரனும்.
அவ்வப்ப்போது
மலை முனையில் காலைத் தொங்கப்போட்டுக்
கொண்டுப் போஸ் கொடுக்கும் ஜோடிகள், காளைகள்
கன்னிகள் எல்லோரையும் வேடிக்கை பார்த்தேன்.
வியர்டூனு சொல்ல முடியாது.
அதற்கு மேலோர்கள் அவர்கள்.
கரணம் தப்பினால் மரணம்
என்ற நிலையில் ,
புகைத்தபடி,
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதானு பாட வேண்டுமா:-)
ஓ.இவர்கள் அனைவரும் 'ஹார்லீ டேவிட்சன்
பைக்கர்ஸ்.'
இவங்க தனி உலகத்தைச் சேர்ந்தவர்கள்.
அதற்குப் பிறகு வருண ராஜா வந்துவிட்டார்.
அதனால் படங்களை அடுத்த பதிவில் போடுகிறேன்.








நாங்க பயனம் செய்தது தெற்குப் பக்காத்துக்கு.
வடக்குப் பக்கத்தில் மலை யிலிருந்து ஒரு பாலம் கட்டி இருப்பதாகவும்.
கண்ணாடித் தரையாக இருப்பதால் , பள்ளத்தாக்கின்
கீழ்க் கடைசி வரை பார்க்கலாம் என்று சொன்னார்கள்.
அதென்னடாவென்றால்,
தெற்கிலிருந்து 250மைல்
பயணம் செய்யவேண்டும் என்று தெரிந்தது.
சப்பென்றாகிவிட்டது.
இந்த தேசம் உண்மையாகவே ரொம்பப் பெரிசுதான் ஒத்துக்கத்தான் வேண்டும்.
கொலராடோ நதி பாய்ந்து இந்தப் பள்ளத்தாக்கு உருவாகி இருக்கிறது எல்லோருக்கும் தெரியும்.
அது இன்னும் அரித்துக் கொண்டிருக்கிறது.
சில இடங்களில் சிறு ஓடை. சில இடங்களில் வெள்ளம்
நுரைத்துக் கொண்டு ஓடுகிறது.
அனுபவிக்கத் தெரிந்த வலிமையான மனிதர்கள்
ஏறி இறங்கி, காம்ப் போட்டுக்கொண்டு
சந்தோஷப்படுகிறார்கள்
மற்றவர்கள் என்னை மாதிரி எழுதுகிறார்கள்.:-)
பூலோகத்துக்கு இறங்க வேண்டிய நாள்
வந்துவிட்டது.:-)





http://www2.nature.nps.gov/air/webcams/parks/grcacam/grcacam.cfm

மேலெ இருக்கும் லின்க் க்ளிக் செய்தால் மேற்கொண்டு விவரம்அறியலாம்.
என்னுடன் கூட வந்து தெரிந்துகொண்டவர்களுக்கு
மிகவும் நன்றி.

26 comments:

ப்ரசன்னா (குறைகுடம்) said...

//வடக்குப் பக்கத்தில் மலையிலிருந்து ஒரு பாலம் கட்டி இருப்பதாகவும்.கண்ணாடித் தரையாக இருப்பதால் , பள்ளத்தாக்கின்கீழ்க் கடைசி வரை பார்க்கலாம் என்று சொன்னார்கள்.//

அருமையான அனுபவம் இது. முதலடி எடுத்து வைக்கும்போது லைட்டா கால் உதறுது :-) இதைப்பற்றிய எனது இடுகை:


http://kuraikudam.blogspot.com/2007/04/skywalk.html

வடுவூர் குமார் said...

அந்த பாலம் (அது பாலமா?நடைப்பாதை தான் சரியாக இருக்கும்) போய் புகைப்படம் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.250 மைல் உங்களுக்கெல்லாம் ஒரு தூரமா?
இவ்வளவு ஆழம் இருக்கே! பங்கி ஜம்ப் எதுவும் இங்கு கிடையாதா?

வல்லிசிம்ஹன் said...

will definetely look into yr blog Prasanna.
sorry to reply in English.

THIS IS A new computersystem.
thats why.

வல்லிசிம்ஹன் said...

yes Kumar. it is a walkway.
called Skywalk.

I f we could have flown to Grandcanyon
it would be different and taking a rentalcar and driving would have been easy.

things did not happen that way:-(
no worry.
IvvaLavu paarththathe pothum.

ambi said...

அடடா! நீங்கள் குறிப்பிட்ட அந்த பாலத்தின் படங்கள் எனக்கு ஈமெயிலில் வந்தது. டெலிட் பண்ணிட்டேனே! :(


//பூலோகத்துக்கு இறங்க வேண்டிய நாள்
வந்துவிட்டது//

நகைச்சுவையாக இருந்தாலும், சிறிது வேதனையை தருகிறது.

வல்லிசிம்ஹன் said...

அம்பி, எதுக்குப்பா வருத்தம்.
நான் மலையை விட்டுக் கீழெ இறங்கரதைத்தானே சொன்னேன்.
ஸோ நோ வொரி.

cheer up.
mm yaruppaa angge!!
மாப்பிள்ளையை கவனிங்க.
களைச்சுப் போயிட்டாரு.:-)

Geetha Sambasivam said...

padathileye ungaloda sernthu parathachu, nanri, Valli.

துளசி கோபால் said...

அருமை வல்லி.

'சட்'னு முடிச்சுட்டீங்க.

கண்ணாடித்தரை ஒரு 'அனுபவம்தான்' இங்கே ஆக்லாந்து ஸ்கை டவரில்
இருக்கு. கீழே ரொம்பச் சின்னதா எறும்புபோல ஆட்களும், கார்களும் பார்க்கும்போது
கால் அப்படியே குழைஞ்சுரும் பயத்துலே:-)

வல்லிசிம்ஹன் said...

கீதா,
ஒரு பதிவர் சந்திப்பு நடத்திக்கிட்டு இருக்கோம் இப்ப கிராண்ட் கான்யானில்:-)
நன்றி.

வல்லிசிம்ஹன் said...

துளசி, கிளம்ப நாளாச்சு இல்லையா.
நேரம் குறுகல். வேலை நிறைய.
அதான் சுருங்கிவிட்டது.:-)
அன்பவிச்சு எழுதணும். அப்போ இன்னும் நல்லா இருக்கும்.

Geetha Sambasivam said...

ada, sollave illaiye, bloggers meeting pathi, nanum vanthirupene?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அந்த மூனாவது படம் என்ன வல்லியம்மா...
ஏதோ கோவில் குளம் படிக்கட்டு மாதிரி எல்லாம் தெரியுதே! என கண்ணுக்கு மட்டும் தானா? :-)

Skywalk அண்மையில் கட்டி முடிக்கப்பட்டு வந்த ஒரு attraction!
ஒரு ரெண்டு மாசம் முன்னாடி வெள்ளோட்டம் வச்சாங்க!

அதைப் பழங்குடியினர் நிர்வகித்து வருகிறார்கள். சுற்றுலாப் பணம் வெறும் ஓட்டல்களுக்கும் மற்றவைக்கும் மட்டும் போகாமல், மண்ணின் மைந்தர்க்கும் இப்போது போக ஆரம்பித்துள்ளதாக அரசு அறிக்கை சொலகிறதாம்!

வல்லிசிம்ஹன் said...

ரவி, நீங்க சொன்னாட்டுத் தான் பார்த்தேன்.
ஏதோ அகழ்வாராய்ச்சினு நினைக்கிறேன்.

அங்கே சில இடங்களில் விளக்கத்தோடு வரைபடமும் போட்டு இருந்தாங்க.
என்னனு படிக்காம க்ளிக் செய்தது.

விஷ்ணு,சிவன்,பிரம்மா,புத்தானு சிகரத்துக்கு எல்லாம் பேர் வச்சு இருக்காங்களே.
அதனாலே உங்க கண்ணுக்கு கோவில் தென்பட்டால் அதில் அதிசயம் இல்லை:-)

காட்டாறு said...

போட்டோ எல்லாம் நீங்க எடுத்ததா? நல்லா வந்திருக்கு. நாங்க போன போது fog கீழிருந்து மேலெழும்பி... ரொம்ப அழகா இருந்தது பார்ப்பதற்கு. நீங்க பின்னூட்டத்துல சொன்ன மாதிரி அனுபவிச்சி எழுதியிருந்தா இன்னும் அருமையா இருந்திருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

போட்டோ எல்லாம் நான் எடுத்தது தான்.
அந்த ஸ்கைவாக் மட்டும் கூகிள்.
நன்றி காட்டாறு.
மீண்டும் சந்திக்கலாம்.

ஜெயஸ்ரீ said...

நல்ல பயணக் கட்டுரையும் வல்லியம்மா.

போட்டோவும் அருமை.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஜெயஸ்ரீ.
உங்கள் எழுத்துக்களைப் படிக்க எப்போது சந்தர்ப்பம் தரப் போகிறீர்கள்?

Anonymous said...

க்ராண்ட் கேன்யன் பாத்திட்டு ஊருக்கு கிளம்பியாச்சா? அத்தனை வருஷம் இருந்திட்டு பாக்காம வந்திட்டேன்! நீங்க ரொம்ப லக்கி! :)

நீங்க சொல்ற மாதிரி நிறைய ட்ரைவ் பண்ண வேண்டியிருக்கும் அப்படின்னு ஒத்தி போட்டு ஒத்தி போட்டு, கடைசியில மிஸ் பண்ணீட்டேன். கான்ஃபரன்ஸ் முடிஞ்சு சனி ஞாயிறுகுள்ள எத்தனை ஊரு பாத்தாலும், இந்த க்ராண்ட் கேன்யன் விட்டு போச்சு - அம்மாம் தூரம் இருக்கதால ...

கீழ கேம்பிங் பண்ணலாமா? ஐ! திரும்ப சான்ஸ் கிடைச்சா கட்டாயம் போகணும். அந்த பாலமும் ஆவலை தூண்டுது!

வல்லிசிம்ஹன் said...

அன்பு மதுரா,
எப்படிப் பாக்காம விட்டீங்க.
அடுத்தபயணத்தில் நேர வந்திடுங்க.
அத்தனை தொல்லையும் ஒரு பிரமாண்டமான அனுபவத்தைக் கொடுக்கும்.
ஏகப்பட்ட காம்பிங் கிரௌண்ட்ஸ்.
வசதிகளும் நிறைய.

SathyaPriyan said...

ஒரு தகவலுக்காக இதை குறிப்பிடுகிறேன்.

அதற்கு Grand Canyon Skywalk என்று பெயர். அது வடக்கு பகுதியிலும் அல்ல, தெற்கு பகுதியிலும் அல்ல. அது இருப்பது மேற்கு பகுதி. தனி விமானத்தில் செல்ல வேண்டும். ஏனென்றால் அங்கு செல்ல முறையான பாதை கிடையாது.

பார்க்க http://www.grandcanyonskywalk.com/

வல்லிசிம்ஹன் said...

நன்றி சத்யப்ரியன்.
அங்கிருக்கும் போது கேள்விட்டதை எழுதினேன்.
உங்கள் பின்னூட்டம் வசதியாகக் குற்ய்த்துக் கொடுத்திருக்கிறது.
அடுத்து அங்கே போக சந்தர்ப்பம் கிடைத்தால் போக வேண்டும்.

Vetirmagal said...

கொன்னுப்புட்டீங்க!

2007ல் போனது. அப்போலேந்து எழுத ஆசை. பார்த்த்தே ஒரு மலைப்பு, அதை எழுத வேண்டும் என்ற செயலை தள்ளி போட்டேன்.

இனி எழுத வேண்டியதில்லை. என் மனதில் புதைந்து இருந்த சொற்களையும் உங்கள் பதிவில் காண்கிறேன்.

அது எந்த நாடாக இருந்தால் என்ன , இயற்கையின் அதிசயத்திற்கும் இறைவனின் கருணைக்கும் அரசியல் பிரிவுகள் அநாவசிய்ம் என்றே எனக்கு தோன்றியது.

அந்த இரவில் வானத்தில் தொங்கும் நட்சத்திரங்கள் இப்போதும் நினைவில் நிற்கின்றன.

அருமையான பதிவு, படங்கள்.

நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

ரொம்ப சந்தோசம் அம்மா !

வல்லிசிம்ஹன் said...

நன்றிப்பா வெற்றிமகள்.இப்படிப் பாராட்டினால் இன்னும் ,நிறையப் பயணக்கட்டுரைகள் வந்துவிடும்.இப்பவே சொல்லிட்டேன் ஆமாம்;)அந்த இடம் என்ன ஒரு கட்டுரைக்குள் அடங்கக் கூடியதா.
எங்களை அழைத்துப் போன மகளையும் மாப்பிள்ளையையும் தான் பாராட்டணும்.மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு எல்லா வேலைகளையும் முடிப்பார்கள்.
மிகவும் நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். தவறாமல் வந்து பின்னூட்டம் இடுகிறீர்கள். மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன்.

மாதேவி said...

இனிய பயணம். கண்டுகொண்டோம் பல இடங்கள்.