Blog Archive

Wednesday, April 11, 2007

சந்தோஷம் இது சந்தோஷம்




இன்ரு சந்தோஷமாக இருப்பது எப்படி என்று எல்லோருக்கும் அறிமுகமான ஓப்ரா ஒரு நிகழ்ச்சி நடத்தினார்.
அதில் ஐந்து நபர்களை மேடையில் அறிமுகம் செய்து ,அவர்களின்
வாழ்க்கை பற்றி சுருக்கமாகச் சொல்லி,
அவர்களின் மன சந்தோஷத்தின்(ஹாப்பினஸ்) லெவலை
அளவிடச் சொன்னார்.
ஒரொருவருக்கும் ஒரு அளவு. பிறகு இங்கிலாண்திலிருந்து வந்திருக்கும் ஒரு ஸ்பெஷலிஸ்ட்
ஆனந்த நிலையை அடைவது எப்படி,
மனதுக்குப் பயிற்சி கொடுப்பது ,என்று நிறைய புத்திமதிகள் சொல்லி, நிகழ்ச்சி முடிந்தது.
நிகழ்ச்சி ஒரு விதத்தில் நிறைவாக இருந்தாலும்,
நம்ம கலாசாரம், பெரியவர்கள் ஆசீர்வாதங்கள்,
கோவில்கள், யோகக் கலை
இதெல்லாம் இவர்களுக்குக் கிடைக்கவில்லையே.
எல்லோரும் ஏதாவது புத்தகம் எழுதி, ஒரு சிடி போட்டுச்
சொன்னால் தான் வெளிச்சம் கிடைக்கிறது என்று புரிந்தது.
ஏன்னு கேக்கிறதுக்கு யாராவது இருந்தாலே பாதி துன்பம் போய் விடுகிறது.
மற்றவர்களைக் கவனிக்க எல்லோருக்கும் எங்கே
நேரம்?
அவர்களுக்கு,
ஒரு நாளுக்கு உண்டான வேலைகளைப் பார்த்தால்
என் பிரமிப்பு இன்னும் அதிகரிக்கிறது.
நடுவில் 'டேக் அ பிரேக்''
என்று சொல்லக் கூட ஒரு புத்தகம் வாங்கி விடுவார்கள் போலிருக்கிறது.
highly stressed.
இதுதான் சின்னக் குழந்தையிலிருந்து
70 வயது பெரியவர் வரை நிலைமை.
ஒரு வேளை நம்ம ஊரிலும் இப்படி ஆகிவிட்டதோ?
நான்தான் கவனிக்காமல் விட்டேனோ.
காத்தாட ஒரு நடை,
கோவில் தரிசனம்,
நல்ல பாட்டு,
அறிஞர்களின் உரையாடல்,
ஆத்மார்த்தமான, தெய்வம் சம்பந்தப்பட்ட
உபன்யாசங்கள்
குழந்தைகளோடு சம்பாஷணை,
நண்பர்களின் அன்பு
இவை இருந்தால் போதும்னு தான் தோன்றும்.
அவரவர்களுக்கு ஆனந்தம் கொடுப்பது எது என்று
கேள்வி கேட்கலாம்னுதான் நினைத்தேன்.
இப்போதுதானே அழகு சுற்றில் இருக்கிறார்கள்!!
பிறகு பார்த்துக் கொள்ளவேண்டியதுதான்.:-)




14 comments:

அபி அப்பா said...

வல்லியம்மா!சந்தோஷம் எனக்கு சந்தோஷம், இப்போ முதல் நான் தான் என்பது முதல் எல்லாமே எனக்கு சந்தோஷம்:-)))))

VSK said...

பாதி படித்து வரும் போதே நினைத்தேன்.

அது போல கடைசி வரியில் சொல்லியும் விட்டீர்கள்!

இந்த அழகுல்லாம் கொஞ்சம் அடங்கட்டுங்க!

அடுத்த சுற்றை அப்புறமா ஆரம்பிக்கலாம்.

ஆனந்தம் அவரவர்க்கு தனிப்பட்ட ஒரு அனுபவம்.

[பி.கு.: அப்படியே பாரா பிரிச்சும் போட ஆரம்பிங்களேன்.
ஒண்ணுமில்லை; எங்கே பத்தி பிரிக்கணும்னு நினைக்கிறீர்களோ, அங்கே 2 முறை 'enter'ஐ தட்டவும்!]

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா!வரணும். பாப்பாபடம் பார்த்ததும் அபி பாப்பாதான் நினைவுக்கு வந்தது.
எங்க பேத்தியயும் நினச்சுக் கொண்டு போட்டேன்.
எப்பவுமே சோர்வில்லாமல் சந்தோஷமா இருங்க.

நீங்களும் எழுதி வேற இன்னொருத்தரையும் எழுத சொல்லுங்களேன்.
உங்க பதிவுகளைப் படிப்பதே சந்தோஷம்தான்.
இருந்தாலும்,
உங்களுக்குனு ஒரு தனிப்பட்ட ஆனந்தம், இன்பம் கொடுக்கக் கூடிய விஷயம் இருக்குமில்லையா?

வல்லிசிம்ஹன் said...

வரணும் வி.எஸ்.கே சார்.

காமாட்சி அம்மாவைத் தினமும் நினைத்துப்பாட வைக்கிறீகள்.
இது சந்தோஷம்.

நீங்க சொன்ன மாதிரி அழகு முடிந்தவுடன் ஆனந்தம் தொடங்கட்டுமே.
விட்டுப்போன சந்தோஷம்,
பழைய சினிமாப் பாடலகள்:-)
ஓஹோ!! ரெண்டுதரம் தட்டணுமா.
சரியாப் போச்சு.
நான் பதிவு எழுதிப் பிரபலம் ஆறதுக்கு இன்னும் கொஞ்ச நாளாகும் போல இருக்கே:-)

அபி அப்பா said...

//நீங்களும் எழுதி வேற இன்னொருத்தரையும் எழுத சொல்லுங்களேன்.//

ஆமாம்மா நானும் நெனச்சேன், அதனாலதான் நானும் என் தம்பியும் போனில் பேசும் விஷயங்களையே பதிவா கூட போட்டேன். பிறகு அவனையே பிளாக் ஆரம்பிக்க சொல்லிட்டேன், விரைவில் வரும்.

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா,
ரொம்ப நல்ல விஷயம் செய்தீங்க. நானும் எங்க உறவினர் ஒருத்தரை,(என்னை விட வெகு மூத்தவர்)
சொல்லி இருக்கிறேன்.
அவரோட சந்தோஷமும் இன்னும் நல்ல வைப்ரேஷன் கொடுக்கட்டும்.
பார்க்கலாம்.

துளசி கோபால் said...

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே.

ஆனந்தத்தை அடுக்குப்பானையில் கூடத் தேடலாம்:-)

உங்களைப் பிரிக்காம ( பாராவைச் சொன்னேன்) விடமாட்டார்போல நம்ம
டாக்டர் ஐயா:-)))

அதெல்லாம் பெரிய பதிவர் ஆயாச்சு. இன்னுமா சந்தேகம்? :-))))

மெளலி (மதுரையம்பதி) said...

ஆஆனந்தம்,ஆஆனந்தம், ஆனந்தமே...

வல்லியம்மா பதிவுகள் ஆனந்தமே, அவர், பாடிய கும்மியும் ஆனந்தமே.

சித்திர இராம்யணமும் தருவாரே - அவர், காட்டு பங்களாவும் பதுவாரே.

வல்லியம்மா பதிவுகள் ஆனந்தமே,
ஆஆனந்தம்,ஆஆனந்தம், ஆனந்தமே...

அமாம், ஆனந்தமும், சந்தோஷமும் ஒன்றுதானே?....

ambi said...

இதோ வந்துட்டேன். ஆஹா! இன்னொரு டேக்கா? சபாஷ் சரியான போட்டி.

வல்லிசிம்ஹன் said...

நீங்க சொல்லறது நமக்கு நல்லாவே பொருந்தும்.
எண்ணம் தான் சந்தோஷம் கொடுக்கும்.

நிஜமாவே ராம் சொன்னது போல் டெம்ப்லேட் ஏதோ தப்புப்பா.

இப்படியே குழம்புசாதத்தை உருட்டிப் பொத்துனு இலைலே போட்ட மாதிரி பாரா வராமலேயெ
போகுது.
பாரா பாராமலியே போறதோ.
அடுக்குப் பானை அஞ்சறைப்பெட்டி இதெல்லாம் ஆனந்தம் தாம் அரிசியும் காசும் அதில் இருக்கும் வரை.:-)

அப்போ நான் த்ரிசங்கு இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
வந்தனம் வந்தனம் துளசி:-)
தான்க் யூ.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி.
கல்யாண மேளம் இன்னிக்கே வாசிச்சாச்சா?
நாளைக்குப் புத்தாண்டு. ஆனந்தம் பொங்கட்டும்.
சந்தோஷம் என்கிற வார்த்தையே சந்தோஷம் கொடுக்கிறதுனு ஒரு அடிகள் டிவியில் சொல்லுவார்.
வெட்டவெளி ஞானம் என்று பேசுவார்.
அவர் பேச்சும் கைகள் அசைக்கிற வேகமும் ஆனந்தமாக இருக்கும்.
அவர் பேர் ஒம் காரானந்தா என்று நினைக்கிறேன்.
நல்ல தமிழில் வெகு உற்சாகமாகப் பேசுவார்.
சந்தோஷத்தில் '' ஷா' இருக்கு.
அதைத் தவிர வேற தோஷம் அதில் இல்லைனு நினைக்கிறேன்.
மற்றப்படி ஆனந்தம் கூத்தாடினால்
அதுவும் சந்தோஷம்தான்.:-)

வல்லிசிம்ஹன் said...

வரணும் அம்பி.
நீங்களும் எழுதுங்களேன் ஆனந்தத்தைப் பற்.

எவ்வளவு அழகான நேரம் இப்பொது.
இன்னும்ம் முப்பது நாட்கள் காத்திருக்கணும்.
அப்ப்றம் ஜாலி லைஃப். ஜாலி லைஃப்.தம்பதியானா ஜாலி லைஃப் தான்.
அதை இப்பவே எழுதலாமே.
வாழ்த்துக்கள் அம்பி.
தமிழ்ப் புத்தாண்டு உங்களுக்கும் வரப்போகும் இலிலத்தரசிக்கும்
இனிமைகளைக் கொண்டு நிறப்ப வேண்டும்.

காட்டாறு said...

ஆனந்தம் பற்றி எழுத தமிழ்மணம் போதாதே அம்மா. நாம் நாமாக வாழும் ஒவ்வொரு நொடியும் ஆனந்தம் தானே. தொடரெல்லாம் தேவையா? நம்மை நாமே கட்டுக்குள் கொண்டுவருவது போல் இல்லையா அது?

வல்லிசிம்ஹன் said...

ஆனந்தம் பற்றி எழுத தமிழ்மணம் போதாதுதான் காட்டாறு.

எல்லாரும் படிக்கும்போது அவர்களுக்கும் சந்தோஷம் வரும் இல்லையா. அதுதான் சொன்னேன்.

let's share our happiness and celeberate our friendship.:-0)))