Blog Archive

Friday, April 20, 2007

சித்திர ராமன்....17...விபீஷண சரணாகதி, சேது பந்தனம்


அனுமன் கூறிய சொற்படி முப்பது நாட்களில் சீதையை
மீட்பேன் என்று
சபதம் செய்து ஸ்ரீராம,லக்ஷ்மணர்கள் மலைகள் வனாந்தரங்களில் இருந்த அத்தனை வகை வானரங்களையும் கரடிகளையும் படைதிரட்டி,
கிஷ்கிந்தையிலிருந்து
புறப்பட்டு மகேந்திர பர்வதத்தை வந்தடைய
பதினொரு நாட்கள் ஆயின.








கிட்டத்தட்ட ஒரு லட்சத்து பதினேழு
ஆண்டுகளுக்கு முன் சேது அந்த இடத்தில் இருந்ததோ.?
கரையில் ஒரு பாறையில் அமர்ந்த ராமனின் முன்னால் சமுத்திரம் பரந்து விரிந்து கிடக்கிறது.
அப்போது வானில் ஆரவாரம் எழுகிறது.
மேலே நோக்கினால் ஐந்து
அரக்கர்கள் தெரிகிறார்கள் கூப்பிய கைகளுடன்.
ராமகாதையில் சற்றே பின்னால் போனால்
ராவணின் சபையில் விபீஷணனின்
கவலையும் அவன் அண்ணனின் அலட்சியமும் தெரியும்.
விபீஷணன் மன்றாடுகிறான் அன்னையை விடுவிக்கும்படி,
ராவணன் செவி மடுக்கவில்லை.
அநீதியின் பக்கலில் இருக்காமல்
உலக உத்தமன் பாதங்களைச் சரணென,
உடுத்த உடையுடன் மனைவி,நாடு,சுற்றம் விட்டு
கிளம்பி சேதுக்கரைக்கு வந்துவிட்டான்.
அவனைக் காணும் சுக்ரீவ சேனை மிரண்டு
ஆத்திரப் படுகிறது.
ராமனுக்கு ஆபத்து வந்ததோ என்ற கவலையில் சுக்ரீவனும் மறுப்பு சொல்கிறான்.
அண்ணனை விட்டு வந்தவன் உனக்கு எப்படி நன்மை செய்வான்/?
ராமா இவனை ஏற்காதே என்கிறான்.
ராமன் எல்லோருடைய வாதங்களையும் கேட்டு விட்டு அமைதியாக நிற்கும்
அனுமனையும் பார்க்கிறான்.
அனுமன் விபீஷணனின் குண நலன்களை எடுத்துச் சொல்லிவிட்டு
ராமா நீதான் தீர்மானிக்க வேண்டும் என்று
ஒதுங்குகிறான்.
ராமன் எல்லோருக்கும் பொதுவில் பதில்
சொல்ல ஆரம்பிக்கிறான்.
இவன் அரக்கன்.
ஒரு மதிகெட்ட ராவணனின் தம்பி.
தீய செயல் புரியும் நோக்கத்தோடு வந்தாலும்,
இல்லை வேறு எந்த நோக்கத்தோடோ,
ராஜ்ஜியத்தை எதிர்பார்த்தோ
வந்தாலும் என்னைச் சரணடைந்தவனைக் காப்பது என் கடமை.
இஷ்வாகுக் குலத்தில் பிறந்தவன் நான்.
வேறு எந்தவிதத்திலும் நடப்பது இழிவு''
என்று சிபிச்சக்கரவர்த்தி கதையையும்
வனத்தில் மாட்டிக்கொண்ட ஒரு மனிதனின்
சரணாகதியை ஏற்று
அவனைப் புலியிடமிருந்து சமயோசிதமாகக் காப்பாற்றிய
குரங்கின் கதையையும் சொல்கிறான்.
சிபிச்சக்கிரவர்த்தியின் வழியில் வ்அந்த என்னிடம் இவன் சரண் புகுந்தான்.
இவனே ராவணனாக இருந்தாலும் நான் அவனுக்குப் புகல் அளிப்பேன்.
என்னை இம்சைப்படுத்துவானோ என்று நீ வருந்த வேண்டாம் சுக்ரீவா
என் சுண்டுவிரல் நுனியால் இத்தனை ஆயிரம் அரக்கர்களையும் ஒழிப்பேன்.
சரணடைந்தவனை ரக்ஷிப்பது என் தர்மம்''
என்று சொல்லி அவனை அனுப்பி
விபீஷணனை அழைக்கிறான் தசரத மைந்தன்
''ராமா, மகா பாவம் புரிந்தவர்காளையும் காப்பேன் எண்ற வார்த்தை எங்களுக்குக்காகச் சொன்னாயோ?
உன் பாதம் சரணடையும் தெளிவையும் நீயே கொடு''
சுக்ரீவன்னழைத்துவர,
பாதங்களில் வீழ்ந்த விபீஷணனை
இன்னுமொரு சகோதரனாக ஏற்றுக் கொண்டதும்
விபீஷண சரணாகதி பூர்த்தியாகிறது.
இலக்குவனை விபீஷணப் பட்டாபிஷேகம்
நடத்திவைக்க அறிவுறுத்துகிறான்.
இலங்கை அந்தக் கணமே விபீஷணனிடம்
வந்துவிடுகிறது.
அடுத்து சேது பந்தனம் நடக்க
ஆயத்தம்.
கடல்காவலனிடம் முறைப்படி அனுமதி
கேட்கிறான் தர்ப்பசயன ராமன்.
மூன்று நாட்கள் உபவாசம்.
நான்காவது நாள் ராமனின் வில் பேசுகிறது.
அம்பு புறப்படுமுன் எழுந்துவருகிறான்
சமுத்திர ராஜன்.
திருமகள் கேள்வன் கோபம் எல்லை தாண்டவேண்டாம்
என்று மன்னிப்புக் கோருகிறான்.
ராமனின் அம்புக்கு இலக்கு கொடிய அரக்கர் வாழும் ஒரு தீவுக்குச் சென்று அழித்துவிட்டுத் திரும்புகிறது
அடுத்து மலைப்பாறைகள் மரங்கள்.
என்று வானரங்களால் கடல் நடுவே
இலங்கையை நோக்கி ஒரு பாலம் அமைகிறது.
உற்சாகத்துடன் கட்டப்படும் அந்தப் பாலத்திற்கு உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும்
உதவுகின்றன.
அணில்கள் கொத்தனார் வேலையாம்,
வானரங்கள் சித்தாட்களாகச் செயல் பட்டனராம்.
இவர்கள் கொண்டுவந்து போட்ட கற்களுக்கு அணில்கள் பூச்சு மணல் கொடுத்துக் கெட்டிப் படுத்தினவாம்.
சேதுராமன் இலக்குவனுடன்,
மற்ற சேனை பலத்துடன்
இலங்கையில் காலை வைத்தான்.
''விபீஷணின் நட்பைக் கொண்டான்
ராவணனை வென்றான்
வீர மாதா ஜானகி தேவியைத் தீக்குளிக்கச் செய்தான்
கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று
அயோத்திநகர் மீண்டான்.
கலங்கிய மக்கள் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான்
அரசுரிமை கொண்டான்.''
யுத்த காண்டம் சில காட்சிகளுடன்
அடுத்த பதிவில்
ஸ்ரீராமன் சீதா கருணையுடன்
பட்டாபிஷேகமும் கண்டு களிக்கலாம்.











8 comments:

துளசி கோபால் said...

அரசுரிமை கொண்டான்
அரசுரிமை கொண்டான்

ஆஆஆஆஆஆ


ஜெகம் புகழும் புண்யகதை ராமனின் கதையே
அதை செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே.

இப்பத்தான் ஒரு பத்து நாள் முன்னே 'லவகுசா' பார்த்தேன்.

எல்லோருக்கும் மங்களம் உண்டாகட்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி. என்னவோ ஒரு பைத்தியம் சம்பூர்ண ராமாயணம் மேலேயும், லவகுசா மேலேயும்.
அதிலும் நம்ம சிவாஜி,
ராமரைப் பார்த்து ராமா....ராகவா என்று ஓடி வரும்போதும் உங்களைப் போல எனக்கும் கண்ணில் நீர்.
இத்தனைக்கும் அது சினிமா.!!
என்ன ஒரு குரல் இல்லை சுசீலா, லீலாவுக்கு. அமிர்தம்.

Geetha Sambasivam said...

Yesterday heard Thiruchi Kalyanaraman's Sundarakandam part. Today heard Vijay"s Kamba Ramayanam Pattabisheham part. Now your post about Vibishana Charanagathi. No end to it. Thank You. Nice post.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா.
உங்களுக்கு இன்னும் தமிழ் ஃபாண்ட்ஸ் கிடைக்கலியா.

நன்றிப்பா.
படித்ததற்கு.
விஜய்னு ஒருத்தர் சொல்றாரா?
ராமன் சொல்லும் புறாக்கதையை விரிவாக எழுத ஆசைதான்.
நேரம் போதவில்லை.
பின் ஏன் எழுத ஆரம்பித்தேன் என்றும் நான் என்னையே கேட்டுக் கொள்கிரேன்:-)

தி. ரா. ச.(T.R.C.) said...

@வல்லியம்மா ராமர் தான் பட்டாபிஷேகம் செய்துகொள்வதற்குமுன் மூன்று பட்டாபிஷேகங்களை நடத்திவைத்து இருக்கிறார்.
பாதுகா பட்டாபிஷேகம்
சுக்ரீவ பட்டாபிஷேகம்
விபீஷண பட்டாபிஷேகம்
எவ்வளவு பெரிய மனது.
வல்லியம்மா ஆறு கிறுக்குத்தனம் போட்டுவிட்டேன் வந்து பாருங்கள்

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் திரா.ச.
தன் பட்டாபிஷேகத்துக்கு முன்னால்
பல பட்டாபிஷேகம் பூர்த்தி சேய்கிறான்.

உங்அள் கிறுக்கு(?)த்தனங்களைப் பார்த்து மிக சந்தோஷம்.
தலையில் அடிபட்டு வாத்தியார்,வைத்தியர் ஜோகெ சொன்னது நீங்க ஒருத்தராகத் தான் இருக்க முடியும்.:-)
நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

நல்ல பதிவம்மா! எப்போதும் போல அருமையான படங்கள்....நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி.
படங்களைப் பார்த்தபிறகு த்ன் ராமனை எழுதிப் பதைக்கு வழி தேடணும்னு யோசனை வந்தது.
நன்றி இந்த சத்சங்கத்துக்குத் தான்.