About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Tuesday, April 03, 2007

நானும் 150 வந்தாச்சு...

ஒரு வருடமும் ஓடி விட்டது.

என்னதான் துளசி மாதிரி சத்தம் போடாம இருக்கணும்ன்னு பார்த்தாக் கூட

முக்கால் குடம், நிறைகுடம் இந்த வகை
இல்லை .
அதனால் அப்பப்போது,
பார்த்தியா நானும் நானும்
என்று கூவ வேண்டும் போலத் தோன்றியதால் சொல்லி விட்டேன்
நீட்டோலை வாசியா நெடுமரமாக(நிற்காமல்) என்னை விட்டு வைக்காமல்
பள்ளியில் சேர்த்த அப்பா,
சிலேட்டும் கையுமாக உட்கார வைத்த அம்மா,
போட்டிக்காகக் கூடப் படித்த
என் தம்பிகள்,
என் ஆசான்,ஆசிரியைகள்

தமிழ் மன்றம்,
இப்பொது தமிழ்மணம்.
பிழையோடு எழுதினாலும் பொறுத்துக் கருத்தை மெச்சும்
என் இனிய நண்பர்கள்.
மஞ்ஜுர் ராஜா, தமிழ் எழுத்துருவை விளக்கி
இ.கலப்பை அறிமுகம் செய்து வைத்து
மற்றொரு உலகத்துக்கு அழைத்த உதவி செய்தவர்.
நன்றி அவருக்குத்தான் சொல்லணும்.
வலை நட்புகள்.

என்னப்பானு கேட்க துளசி,
கூடவே வளர்ந்த கீதா,
பிரேமலதா, அன்பு மதுரா
பின்னூட்டம் இட்டுப் பெருமை சேர்த்த ஓகை,
குறும்பன்,வடுவூர் குமார்,

நம்ம கொத்ஸ்,

மௌலி மதுரையம்பதி,ரவி கண்ணபிரான்,(புதுக் குரல் அறிமுகமாக என்னைப் பாடச் சொல்லி அன்பர்களைக் காண்பித்துக் கொடுத்தார்கள் இருவரும்)
குமரன் திரு எஸ்.கே, தி.ரா.ச,
கோவி.கண்ணன்,
ஜெயஸ்ரீ,
பிரியா, சந்தர் ,
பின்னூட்டம் போட ஓடி வரும் நாகை சிவா,

நம்ம பொன்ஸ்.யானை,பூனைப் படங்களை எங்கே தேடலாம்னு சொல்லிக் கொடுத்தவர்.:-)


அம்பி,(கல்யாண மாப்பிள்ளை. மே மாதம் டும்டும்டும்)
ஷைலஜா
சர்வேசன்(பாட வைத்தார்)
முத்துலட்சுமி,மங்கை ,செல்லி,
மழை ஷ்ரேயா,கஸ்தூரிப் பெண்,மாதங்கி,
காட்டாறு..... இப்படிப் போகிறது என் வலைக் குடும்பப் பட்டியல்.
இன்னும் எத்தனையோ பெயர்கள் விட்டு இருக்கும்.

இன்று சொல்லிவிட வேண்டும் என்று தோன்றியதை எழுதிவிட்டேன்.
பின்னூட்டம் போடாமல் அம்மாவை ஊக்குவிக்கும்
நான் பெற்ற செல்வங்களையும் சொல்லணும்.

எல்லாவற்றுக்கும் மேலெ வலையில் படித்துத்
தெரிந்துகொண்ட விஷயங்கள் எத்தனையோ!!

அதில் உலகம் சின்னது என்று சொல்ல வைத்தது
தமிழ்மணம் தான்.

ஓவர் செண்டிமெண்ட் வேண்டாம் இல்லையா?
மீண்டும்.பார்க்கலாமே.

32 comments:

மதுரையம்பதி said...

வாழ்த்துக்கள் வல்லியம்மா!....மேன்மேலும் தாங்கள் பதிந்து ஆன்மிகத்தையும், தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள அன்னை மீனாஷி தங்களுக்கு அருள் புரியட்டும்.

மேலும் பின்னூட்டம் மட்டுமே இடும் என்னையும் இணைத்துக்கொண்டதற்கு நன்றி.

இலவசக்கொத்தனார் said...

150 வந்தாச்சா! வாழ்த்துக்கள் அம்மா!

நாகை சிவா said...

//"நானும் 150 வந்தாச்சு..." //

வாழ்த்துக்கள்

நாகை சிவா said...

//"நானும் 150 வந்தாச்சு..." //

வாழ்த்துக்கள்

நாகை சிவா said...

//இன்னும் எத்தனையோ பெயர்கள் விட்டு இருக்கும்.//

ஆமாங்க, என் பெயர் விட்டுறுச்சு பாருங்க....

அபி அப்பா said...

வாழ்த்துக்கள் வல்லியம்மா!
இப்படிக்கு
அபிஅப்பா, அபிஅம்மா, அபிபாப்பா மற்றும் டைகர்

OSAI Chella said...

அருமையான செண்டிமென்ட் என்று சொல்ல மனம் வரவில்லை. நன்றியுணர்வு என்று புரிகிறது. மென்மேலும்எழுத புதியவனான என் வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மௌலி.
நீங்களும் பாட்டு கொடுக்க, ரவி வழிகாட்ட, புது இடம்,மனிதர்கள் என்ற தயக்கத்தை விட்டு வெளியே வந்தது அதுதான் முதல்.
நீங்களும் ரவியும் காரணம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் வந்துட்டேன்.

நீங்கள் எல்லாம் இருக்கக் கொண்டுதான்.

வல்லிசிம்ஹன் said...

சிவ சிவா. இதுக்குத்தான் எழுந்ததும் கணீனிப் பக்கம் போகக் கூடாதுனு சொல்லறது.
காலை அவசரத்துல சூடான் புலியை விட்டேனே.
சாரிம்மா.

சேர்த்தாச்சு.:-)

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா:-0)
வாங்க.
ஆனந்தம் கொடுக்க இருக்கும் சில பெயர்களில் நீங்களும் ஒருவர்.
வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி. நீங்க எழுதரதைப் படிக்க எனக்கு நிறைய வாய்ப்புக் கொடுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஓசை செல்லா. சரியாகச் சொன்னீர்கள். நன்றிதான் சொல்லுகிறேன்.
உங்கள் பதிவிலும் புதிய விஷயங்களை அறிகிறேன்.
இணையத்தில் இவ்வளவு புது கருவிகள் சாஃப்ட்வேர் எல்ல்லாம் பார்க்கும்போது உத்சாகம் வருகிறது.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

150 ரன்களா?
அடடா...வல்லியம்மா செய்தது போலவே இந்தக் கிரிக்கெட் வீரர்கள் செய்ய முடியாதா?
வாழ்த்துக்கள் வல்லியம்மா!

//முக்கால் குடம், நிறைகுடம் இந்த வகை, இல்லை//
இது அந்தக் குடம் இல்லை வல்லியம்மா!
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல்! அவையே நாச்சியார் பதிவுகள்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//புதுக் குரல் அறிமுகமாக என்னைப் பாடச் சொல்லி அன்பர்களைக் காண்பித்துக் கொடுத்தார்கள் இருவரும்//

அடுத்த பாடல் ரெடி!
நாங்க ரெடி! நீங்க ரெடியா? :-))

முத்துலெட்சுமி said...

வாழ்த்துக்கள்..வல்லி. என் பெயரெல்லாம் நினைவு வச்சு பதிவுல போட்டு என்னமோ போங்க..
[உள்ளுக்குள்ள ஒரே சந்தோஷம்]
உலகம் ரொம்ப சின்னது தாங்க
எங்க எங்க யோ இருக்கற நம்மள எல்லாம் சேர்த்து இருக்கே இந்த பதிவுகள்.

வல்லிசிம்ஹன் said...

ரவி, இவ்வளவு அன்புக்கும் அருமைக்கும் என்ன பதில் சொல்ல முடியும்.
மௌலி,நீங்கள், குமரன் ,ராகவன் எல்லோரும் எழுதுவதைப் படிக்கும்போது தமிழுக்கு இன்னும் சக்தி நிறைய வந்திருப்பதுதான் தெரிகிறது.
பக்தியும் தமிழும் சேரும் அழகு தமிழ்மணத்திலும் இணையத்திலும் எளிதில் படிக்கக் கிடைப்பதே பாக்கியம்.

வல்லிசிம்ஹன் said...

அடுத்த பாடல் ரெடியா?
என்ன பாடல் .கண்ணன் அருளால் பாடிடலாமே.சொல்லுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

முத்துலட்சுமி, வரணும். உங்க வியர்டூ பதிவு படிச்சதில் சந்தோஷப்பட்ட ஆளு நான்தான்.

ஆஹா, சமையல், பதட்டம் எல்லாம் நம்மளை மாதிரியே இருக்கேனு நினைச்சேன்.

சாதாரணமா சமைச்சால் பிரமாதமா வரும். யோசிச்சு செய்தால் குழப்பம்தான்.
வீட்டுக்கு வரவங்களே உதவி செய்துட்டுப் போவாங்க.:-)

துளசி கோபால் said...

என்னப்பா வல்லி,

ஒன்னரைதானா? சதத்தைச் சொன்னேன்.

ரொம்பநாளா பரிச்சயமான எழுத்தாப் போச்சேப்பா உங்கது.
அதுலேயும் இந்த ராமகதை சொல்றதுதான் டாப்பு. அதுலேயும்
பொருத்தமான படங்களைத் தேடிப்போடறது சூப்பர் டாப்பு.

நல்லாத்தான் வொர்கவுட் ஆகுது இந்த கெமிஸ்ட்டிரி:-)))))

நல்லா இருங்க. வாழ்த்து(க்)கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி,
பார்க்கிறபோதே வளர்ந்துவிடற குழந்தை போல
இந்தப் பதிவும் தானே வளர்ந்தது.

உரம் போட்டவங்க நீங்க தான்.
ராமன் துணையில் நல்லபடியாக எழுத வேண்டும்.

காட்டாறு said...

வாழ்த்துக்கள் வல்லி! 150 வந்தாச்சி. சீக்கிரம் 200 வந்துடுவீங்க.
புதுசா வந்த என் பெயரெல்லாம் நினைவு வச்சு பதிவுல போட்டு... எனக்கு சந்தோஷம் தாளல போங்க..... எங்க எங்கயோ இருக்கற நம்மள எல்லாம் இந்த பதிவுகள் சேர்த்து வைத்து உலகம் சிறியதுதான்னு சொல்லுது பாருங்க....

ambi said...

//வாழ்த்துக்கள் வல்லியம்மா!....மேன்மேலும் தாங்கள் பதிந்து ஆன்மிகத்தையும், தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள அன்னை மீனாஷி தங்களுக்கு அருள் புரியட்டும்.//

நான் இதை வழிமொழிகிறேன். வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.
என் கல்யாணத்தை டும் டும் டும் போட்டு சொல்லியாச்சா? :)

வல்லிசிம்ஹன் said...

வரணும் காட்டாறு.
புதுசு பழசு ஒண்ணும் கிடையாதும்மா.
எத்தனையோ நாள் மனசில இருந்ததை வழி கிடைத்ததும் எழுதுகிறோம். நின்ங்க 200,300னு நல்ல பதிவுகள் போடறதை நானும் பார்க்கத்தான் போகிறேன்.!

வல்லிசிம்ஹன் said...

அம்பி, பின்ன கல்யாணம்னால் எல்லாருக்கும் சொல்ல வேண்டாமா?:-)

நீங்க எல்லாம் சரளமாக எழுதறதைப் போல நானும் எழுத முயற்சிக்கிறேன்.
அப்போ வந்து வயசு ,வாழ்த்து எல்லாம் சொல்லுங்கோ.:-)

ambi said...

//நீங்க எல்லாம் சரளமாக எழுதறதைப் போல நானும் எழுத முயற்சிக்கிறேன்.
//

ஆஹா! அனுமனை போல தன்னடக்கம். :p

இன்று ஒன்னும் எழுதலையா? பிக்னிக் முடிந்து விட்டது தானே! :)

தி. ரா. ச.(T.R.C.) said...

வாழ்த்துக்கள்.கண்ணியம் மிகுந்த பதிவுகளும் மறுபடியும் படிக்கத் தோன்றும் பதிவுகளைத்தரும் வல்லியம்மா வாழ்க பல்லாண்டு

குமரன் (Kumaran) said...

இன்னைக்குத் தான் பார்த்தேன் அம்மா. வாழ்த்துகள் வணக்கங்களுடன்.

Geetha Sambasivam said...

அட?? என்னையும் நினைவு கூர்ந்திருக்கீங்களே! இந்தப் பதிவையே இப்போத் தான் பார்க்கிறேன்.

ezhil said...

வாழ்த்துக்கள் அம்மா... நானும் இணைகிறேன் உங்கள் வாசகர் வட்டத்தில்``

Asiya Omar said...

வாழ்த்துக்கள் வல்லிமா.

வல்லிசிம்ஹன் said...

.
அன்பு கீதா. எத்தனை பெரிய நட்பு வட்டம் அப்போ. இங்க எல்லாரும் இருக்கோம். தொடர்பில் த்தான் இல்லை... நானும் உங்கள் பதிவுகளை மிஸ் பண்ணி இருப்பேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு எழில் ,அருமையான இன்னொரு நட நட்பு இதோ உங்கள் வடிவில் வந்துவிட்டது பாருங்கள். மிக நன்றி