Blog Archive

Sunday, March 11, 2007

THE QUEEN......படம் பார்த்த கதை

அமெரிக்கா வந்ததிலிருந்து வேறு ஒரு முனைப்பே இல்லாமல் ராப்பகல் காத்து கண்விழித்து


வேலை வேலை என்று உழைத்து இதோ நாலு மாதமும் ஆச்சு.
ஒரு சினிமா உண்டா, ஒரு பைத்தியக்கார டிராமா உண்டா
ஒரு பொதிகை சானல் உண்டா, சுடச்சுட குபீர் சேதிகள் கொடுக்க தமிழ் சூரியன் தான் உண்டா என்று புலம்புவது
எப்படியோ:-) என் பெண்ணின் காதில் விழுந்துவிட்டது.!!
ராமச்சந்திரா புலம்பாதெயேன்.'
இது அவள்.
குளிர்ல வாக்கிங் போக முடியலை, எனக்காவது கார்பெண்ட்ரி,கார் ரிபேர்,
கராஜ் ஒழிக்கிறது இப்படி பொழுது போறது.
அம்மா பாவம்:-( இது எங்க சிங்கம்.
அடப்பாவி மன்னாரே!
சென்னைலே மூலைக்கு மூலை சபா. சத்யம் பக்கத்தில இருக்கு.ஏதோ ஒரே ஒரு படம் போகலாம்னா,
''lost interest in movies ma.
take muniyammaa and go.''
எனக்கு அந்த சத்தம் ஒத்துக்கலை.''
இப்படிச் சொல்லிக் கழுத்தை அறுப்பவர்,இங்கே
வந்து பெண்ணு கிட்டே சிபாரிசு செய்கிறார் என்று
ரோசமாக இருந்தாலும்,
படம் எதாவது ஒன்று பார்க்க வேண்டும்.
அதுவும் பாப் கார்ன் சாப்பிட்டுக் கொண்டு பார்க்கணும் என்ற ஆசை
தீவிரமானது.
ஆச்சு. ஆஸ்கார் நைட்.
ரெட் கார்பெட். ஏதோ நடுவில பாப்பாவும் அழாம, சமையலும் ஒரு மிளகுரசம், சுக்கினி கூட்டு,சலாட்
என்று முடிவாகிச் செய்துவிட்டு
என் அரசாங்கத்திலிருந்து இருபதடி தள்ளி இருக்கும்
டிவி பக்கத்தில் வந்து உட்கார்ந்து விட்டேன்.
அடடா, இப்படிக்கூட இன்னோரு உலகமா ஆஆ
என்று லயித்துப் பார்க்கும்போது இந்த ஹெலன் மிர்ரன் அம்மா வந்தாங்க.
கொஞ்சம் வெள்ளைத்தலையா இருக்கே
ஒரு வேளை ஹீரோயினியோட அம்மாவோ
என்று பெண்ணைப் பார்த்து கேட்க,
ஆஸ்கார் நாமினிம்மா இவர்.
ஒப்ரா ஷோ ல கூட வந்தாங்களே.
''ஓ நீ அதைப் பார்க்கலியா. சரி சரி, இவங்க க்வீன் படத்தில ராணி எலிசபெத்தா வந்து இருக்காங்க.
செலக்ட் ஆவாங்களொ என்னவோ''
சட்டுனு பேச்சைத் திசை மாற்றி மேலெ பார்க்க
ஆரம்பித்தோம்.
எல்லென் என்கிற பெண் ஆஸ்கார் நிகழ்ச்சியைப் பிரமாதமாகத் தொகுத்து அளித்தார்.
ஒரு தொய்வு இல்லை. அவரே ஒரு தொலைக்காட்சி அமைப்பின் நடத்துனராம்.
ஆஸ்கார் முடிந்து பெஸ்ட் ஆக்டிரெஸ்
அவார்டும் இந்த ஹெலன் அம்மாவுக்குக் கிடைச்சு,
அடுத்த நாள் ஒப்ரா ஷொவிலயும் வந்துட்டாங்க.
இப்படி 61 வயதில உடம்பைச் சிக் னு வச்சுக்கிட்டு
ஒரு டிராமடிக் ரோல் வேற செய்து
ஆஸ்கார் வேறத் தட்டியாச்சு.
ஹ்ம்ம். எங்களுக்கெல்லாம் சான்ஸ் இருந்தா எங்கேயோ போயிருப்போம்.
எங்கே ஆசை,தாசில்,மாடு என்று நான் பழமொழிகள் உதிர்க்கும் முன்ன என் பெண் ''இந்தப் படம் நாம பர்க்கணும்ம்மா' என்று டிக்ளேர் செய்தாள்.
நடைமுறைக்கு ஒவ்வாத பேச்சா இருக்கேனு நான் முறைத்துக் கொண்டேன்.
எல்லாம் முகத்தில் காட்ட மாட்டேன்.
அன்னியன் மாதிரி உள்ள ஒரு குரல், வெளில ஒரு
குரல்.!:-)
ஆனால் பாருங்கள் ஒரு வெய்யில் அடிச்சுது நேற்று.
வீடே கலகலத்துப் போச்சு.!!
சுறுசுறுப்புன்னாச் சொல்லி மாளாது!
கார் சீக்கிரம் கிளம்பறது. கதவு சீக்கிரம் திறக்கிறது.
சமையல் சீக்கிரம் முடிகிறது.(கத்திரிக்காய் கலந்த சாதம்,வெங்காயப் பச்சடி, உருளை கொத்சு)
எல்லாம் ஆதித்தனோட பெருமை!
சனிக்கிழமையா வேற போச்சா.
மாப்பிள்ளை,மாமனாரோடு குடும்பத்தை மேய்ப்பதாகச் சொல்லவும், விட்டோம் சவாரி ..
ஏஎம்சி காம்ப்ளெக்ஸுக்கு.
ஆன்லைன்ல டிக்கெட் விலை அதிகம்.
நேரிலேயே வாங்கிக்கலாம் என்று பத்துமைல்கள் கடந்துவந்தோம்.
வரிசை நீளமோ.கைக்குக் கிடைச்சு வாய்க்குக் கிடைக்காதொ என்று பயம் வந்தது. ஏனெனில் பார்க்கிங் லாட் பூராவும் ஒரே கார்கள்மயம்.
அப்புறம் தெரிந்தது 20 தியெட்டர்கள் இருக்காம்.
நாங்க பார்க்க வந்த 'குவீனு'க்கு எகப்பட்ட இடம் காலியாக இருந்தது.
பாப்கார்ன், ப்ரெட்சல் சகிதம் உள்ளே வந்தாச்சு.
ஒரே நிசப்தம். எண்ணிப் பதினைந்து பேர் இருப்பார்கள்.



படமும் ஆரம்பித்தது.
இளவரசி டையனா விபத்துக்குள்ளாகி,
இறந்து அரச குடும்பம்
பிரச்சினையில் மூழ்கிய ,பத்துவருடங்களுக்கு முன்பு நடந்த கதை.
லேசா நம்ம ஊரு மாமியார்,மருமகள் சண்டைதான்.
ஆனால் இத்தனை அரசு கட்டுப்பாடுகள், விதிமுறைகள்,கணவனின் தப்பான போக்கு எல்லாவற்றையும் கணித்து ,அதையும் மீறி அந்தப் பெண்ணுக்கு இருந்த தைரியம் அசர வைக்கீறது.
ஏற்கனவே ' ஹர் ராயல் ஹைனெஸ்' பட்டத்தை இழந்துவிட்ட டயானா ,தன் காதலனுடன் வெளியில் சுற்றினாலும் மக்கள் மனதில் இடம் பிடிக்க, அதுவரை ஏகபோக கவனிப்பிலிருந்து விலக்கப் படுவது
யாருக்குமே கஷ்டம்தான்.
அதுவும் பரம்பரைக் கௌரவம், ரிஜிட் ரூல்ஸ்,
இறுக்கமான முகம் இதை ஒன்றுமே விட்டுக் கொடுக்காமல், எலிசபெத் மகராணி இதை எப்படிச் சமாளிப்பார் என்று நான் அப்போது வேடிக்கை பார்த்தேன். டிவியில்தான்.
இப்போது இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஹெலன் மிர்ரன்
அப்படியே அரச முகபாவத்தைக் கண் முன்னால் கொண்டுவந்துவிட்டார்,.
குற்றம் சொல்ல முடியாத நடிப்பு. இயல்பான
வலு இழந்த ராணியைக் காட்டி இருக்கும் முகம்.
'என் மக்களை நான் புரிந்து கொள்ளவில்லை'
என்று பிரதம மந்திரியிடம் ஒப்புக்கொள்ளும் விதம்
தனிமையில் ஒரு பாறையின் மேல் உட்கார்ந்து மறைந்த மருமகளுக்காக அழுவது.,அது தன்னிரக்கமாகவும்
இருக்கலாம்,
தன் அம்மா குவீன் மதரிடம் மனம் விட்டுப் பேசுவது,அசட்டுத்தனமாகப் பேசும் கனவனை ஒரு பார்வை பார்ப்பது, பேரன்களின் நலனில் ,யோசனையில் முகம் குவிவது,,
அத்தனையும் வெகு அழகாகக் காட்டி இருக்கிறார்.
இவரைத்தவிர டோனி ப்ளேறாக நடிக்கும்
மைக்கேல் ஷீனும், பிரின்ஸ் பிலிபாக ந்டிப்பவரும் வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள்.









நல்லதொரு படைப்பு.
தைரியமாகப் பார்க்கலாம்.
இந்தப் படத்துக்கான ரெவியூக்கள் இணையத்தில் நிறைந்திருக்கின்றன.
லின்க் இதோ.
THE QUEEN..
www.thequeenmovie.co.uk/

18 comments:

VSK said...

நானும் பார்த்து விட்டேன் வல்லியம்மா!

மெய்சிலிர்க்க வைக்கும் நடிப்பு.

அனைத்துப் பாத்திரங்களுக்குமான தேர்வு கனகச்சிதம்!

ஒரு இரண்டு மணி நேரம் பக்கிங்ஹாம் பாலஸில் இருந்து வந்தது போன்ற உணர்வு!

அதுவும் அந்த கலைமானோடு நடக்கும் உரையாடல், அது மரித்து அவருக்கு புரியவைக்கும் நடப்புநிலையின் தீவிரம் எனக்கு மிகவும் பிடித்த காட்சி!

டைரக்டர் தனது கற்பனைக்கு கிடைத்த ஒரே காட்சியில் படம் முழுவதையும் புரிய வத்திருப்பார்.

அனைவரும்கட்டாயம் பார்க்க வேண்டிய படம்!

இதே போல எம்.ஜி.ஆர் மறைந்த போது கருணாநிதியின் மனநிலையை மணிரத்னம் இருவர் படத்தில் ஒரு துளி காட்டியிருப்பார்.

இதையே விரிவாக எடுத்தால் எப்படி இருக்கும் என எண்ணவைத்தது!

வல்லிசிம்ஹன் said...

அதுவும் அந்த கலைமானோடு நடக்கும் உரையாடல், அது மரித்து அவருக்கு புரியவைக்கும் நடப்புநிலையின் தீவிரம் எனக்கு மிகவும் பிடித்த காட்சி//
எத்தனை இயல்பான நிலை. எந்தப் பெண்ணும் நிலைமை தன்னைக் கடந்துவிட்டால் வெளியில் தான் போக முயற்சிப்பாள். ராணியும் அதைத்தான் செய்கிறாள்.அந்தக் கலைமான் பார்க்கும் பார்வை அற்புதம்.அதுவும் பின்னால் துப்பாக்கி சத்தம் கேட்கும்போது பொ போ என்று விரட்டும் விதம், அதில் காட்டும் பாசம் ,எல்லாமே கனிவைக் கூட காட்டமுடியாத சூழ்நிலையில் அவள் தன்னையே உணரும் வேளை,ரொம்ப உருக்கம்.நன்றி எஸ்.கே சார்.

வல்லிசிம்ஹன் said...

ஒரு இரண்டு மணி நேரம் பக்கிங்ஹாம் பாலஸில் இருந்து வந்தது போன்ற உணர்வு!//
அதேதான் வெகு நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு படம் பார்த்தது
திருப்தி.
மணிரத்தினத்தின் இருவர் படத்திலும் உணர முடிந்த பல செய்திகள் ஒரெ காட்சியில் இருக்கும். ப்ரகாஷ்ராஜ் அந்தநேரத்தில் காட்டும் முகபாவமும்
இயலாமையை,இரக்கத்தை,ஒரு 'அப்பா முடிந்ததுடா ''என்கிற சப்தமில்லாத நிம்மதியைக் காட்டி இருப்பார்.

இலவசக்கொத்தனார் said...

நான் இன்னும் பாக்கலை. பையனை வெச்சிக்கிட்டு நம்ம பாக்குற படமெல்லாம் கார்ஸ், ஹேப்பி ஃபீட், இப்படித்தான்!!

வல்லிசிம்ஹன் said...

இங்கேயும் அதே கதை. பெரிய பேரன் பார்ப்பது ஸ்பஞ்ச் பாப்
அந்த வகை. இல்லாவிட்டால் சயன்ஸ் சானல்.அதனால் நாங்கள் இருவரும் மட்டும் போனோம்.

துளசி கோபால் said...

நானும் இன்னமும் பார்க்கலை.

வெய்யல் இருந்தாலும் நேரம் கிடைக்கலை(-:

டிவிடி வர்றவரைக்கும் காத்திருக்கவா?

வல்லிசிம்ஹன் said...

test

வல்லிசிம்ஹன் said...

துளசி, வெய்யில் இன்னும் குறையலியா. அப்போ குளிர் வந்ததும் பார்த்திடுங்க. :-) நிஜமாவே நல்லா இருக்கு.
இந்த ஹெலன் மிர்ரன் அப்படியே
எலிசபெத் ஆகவே மாறிடராங்க.
கஷ்டம்பா ராஜா வீட்டு மாமியார் வேலை:-)

மெளலி (மதுரையம்பதி) said...

நன்றி வல்லியம்மா, மிஸ் பண்ணாம பார்த்துவிடுகிறேன்....

//கஷ்டம்பா ராஜா வீட்டு மாமியார் வேலை:-) //

இப்போதெல்லாம் மாமியார் வேலையே கஷ்டம் தான்....இதில் ராணியே மாமியாரும் என்பது அதிகம்....எல்லாம் "டெரிடஷன்" மெயிண்டெய்ன் பண்ணணும்ன்னு நினைப்பதால்தான்.....இதற்கும் நமது வீடுகளில் ஆச்சாரம்/அனுஷ்டானம் பார்பதற்கும் ரொம்ப வித்தியாசம் தெரியவில்லை...என்ன ராணிக்கு இருப்பது பணபலம், நமக்கு இருப்பது ஆன்ம பலம்...அஷ்ட்டே..

ambi said...

நானும் பார்த்து விட்டேன், உங்கள் பதிவின் மூலமாக. ஹிஹி.

செலக்டிவாக சில காட்சிகளை நீங்கள் விவரித்த விதம் மிக அருமை!

//test
//
டெஸ்ட் பாஸ்!
மார்க் - 98/100

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி. விடுப்பா. அதான் காணோமா?
ஒண்ணு சொன்னாலும் நல்லாச் சொன்னீங்க.
மாமியாரா இருக்கிறது கஷ்டம்தான்.
எப்போ இந்த நிலைமை மாறுமோ:-)ஆச்சாரமும் அனுஷ்டானமும் ஒரே ஒரு பகுதிதான்.
அடிப்படையில் விட்டுக்கொடுப்பது , இப்ப்போது இல்லை.

வல்லிசிம்ஹன் said...

வரணும் அம்பி.ரசிச்சு வார்த்தைகள் சொன்னதற்கு நன்றி.
புடவை என்ன கலர் என்றே தெரியவில்லையே.
எத்தனை வாங்கினீங்கன்னும் தெரியவில்லை.
பனகல் பார்க் கடைகள் பூராவும் போன் செய்து, அவங்களுக்கு
விளம்பரப் பிரிவு அதிகாரியா இருக்கணும்னு கேட்டாங்களாமே?:-)

செல்லி said...

வல்லி
இனிமேல்த் தான் இந்தப் படம் பாக்கப் போறேன்.
//ஒரு வெய்யில் அடிச்சுது நேற்று.
வீடே கலகலத்துப் போச்சு.!!
சுறுசுறுப்புன்னாச் சொல்லி மாளாது!//
உண்மைதான், வல்லி
எனக்கும் வெயில் என்றால் அப்பிடி ஒரு உற்சாகம் வருவது இயல்பு. இங்கு ஆடியில் வரும் winter இல் வெயிலை காணாவிட்டா ஏதொ ஒரு மந்தமாக இருக்கும்.
கெதியா இந்தப் படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது உங்க இந்த பதிவு.
பகிர்ந்தமைக்கு நன்றி,வல்லி

ambi said...

//புடவை என்ன கலர் என்றே தெரியவில்லையே.
எத்தனை வாங்கினீங்கன்னும் தெரியவில்லை.//

ஆஹா! நீங்களும்மா? சரியா போச்சு!
அதான் சொல்லி இருக்கேனே அந்தத கலர்!னு. :p


//பனகல் பார்க் கடைகள் பூராவும் போன் செய்து, அவங்களுக்கு
விளம்பரப் பிரிவு அதிகாரியா இருக்கணும்னு கேட்டாங்களாமே?//

என்னை வெச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணலையே? :)

இன்னிக்கு ஒன்னும் எழுதலையா? இட்லிக்கு மாவரைக்கற வேலை இருந்ததா? :))

வல்லிசிம்ஹன் said...

வாங்க செல்லி.
கண்டிப்பாக நீங்க இந்தப் படத்தைப் பாருங்கோ.
நிஜமான வாழ்க்கையை பார்க்கிறம்மாதிரி எடுத்து இருக்காங்க.
வெய்யில் தான் நமக்குப் பழகிப்போன ஒண்ணு.
குளிரைத்தாங்க உடல் பக்குவம் போதாது.

வல்லிசிம்ஹன் said...

அம்பி,
மாவரைக்க நன் என்ன இட்லிவடை கடை வைக்கலியே.
கீதாகிட்டேயும் இதே கேள்வி கேட்டீங்களோ.
தாமிரபரணித் தண்ணீ நல்லாவே பேசுது.

Geetha Sambasivam said...

பட விமரிசனம் ரொம்ப அருமை வல்லி, அதை விட அம்பிக்குக் கொடுத்த டோஸ் இன்னும் அருமை!!!!:)))))))))))
நான் இன்னும் இந்தப் படம் பக்கம்லாம் போக முடியலை. எங்கே? சாயங்காலம் ஆச்சுன்னா ஒரே கச்சேரி மயம் தான் டி.வி.யிலே. இதிலே எங்கே வாங்கிப் பார்க்கிறது? :D அங்கே வந்தால் பார்க்கலாம்.
அப்புறம் அம்பி ஆரெம்கேவி திருநெல்வேலியில் இல்லை புடவை எடுத்திருக்கார்? இன்னொரு தரம் அவரோட பதிவைப் போய்ப் பாருங்க. எனக்குக் கூட ரிவர்சிபில் புடவை, 50,000/-ரூபாய்க்கு!!!! :D

வல்லிசிம்ஹன் said...

படிச்சேன் கீதா. அவர் புடவைக் கலர் பார்த்த அழகும் செலக்ட் செய்த நேர்த்தியும் சென்னைக்கே வந்துவிட்டதுன்னு சொல்ல வந்தேன்.
உங்களுக்கு 50 ஆயிரம?
அப்போ எனக்கு 75 ஆயிரம் புடவையவது அம்பி எடுக்கணுமே. ஐய்யொ பாவம். இத்தனை அத்தைகள் நெட்டில இருப்பாங்கனு தெரியாமப் போச்செனு அம்பி புலம்பரது காதில விழரதா:-)