Blog Archive

Saturday, March 17, 2007

நாராயணா! என்னும் திவ்ய நாமம்

















நாராயணன் கோவில் என்றதும் உடனே சரி, பார்க்கவேண்டும் என்று நினைத்தேன்.
அப்புறம் சொன்னாங்க அது ஒரு குருவுக்காக எழுப்பபட்ட மந்திர் என்றார்கள்.
நமக்குத்தான் பம்பாய்க்கு மேலே போன வழக்கமே இல்லை.
கண்ஷாம் என்று வேறு போட்டு இருக்கிறது.
பிள்ளையார் கோவில் போலிருக்கிறது.
நல்லதாப் போச்சு ,இதெல்லாம் என் மனதில் ஓடிய எண்ணங்கள் இந்த நாரயண் மந்திர் பற்றிக் கேள்விப் பட்டதும்.
இன்று துளசி எழுதி இருப்பதைப் பார்த்ததும் தான்
ஆதியோடு அந்தமாக எல்லாம் புரிந்தது.
இந்தக் கோவிலில் என்னை ரொம்பக் கவர்ந்தது
இந்த ஹவேலிதான்.
கலாச்சார மையத்துக்கு அப்படிச் சொல்லுவார்களம்.
எனக்கு 'புனியாத்'' தொடர் ஹவேலிராம் ஒண்ணுதான் தெரியும்.:-0)
அதில் கூரையில் பதித்திருந்த
யானைகள் முகம்.!!
யானை என்பது குறிக்கும் தத்துவம் தான் என்ன.?
ஏன் அதற்கு இத்தனை முக்கியம்?
சாது, பெரிய உருவம், தும்பிக்கை,குட்டிக் கண்,
முறமான காது,தந்தம்
இவ்வளவுதானே.
ஏன் இந்த யானையப்பனைப் பார்க்கும்போது இத்தனை சந்தோஷமா இருக்கு.
நமக்கு முன்னாடியே டீச்சரம்மா
இந்தக் கோவில் தல புராணம் எல்லாத்தையும் சொல்லிட்டதாலே அவங்களோட பதிவுலக
நட்புக்கு இந்தப் பதிவு.
அப்புறமா எந்த வார்த்தை வேணா போட்டுக்கலாம்.
அர்ப்பணம்,வாழ்த்துக்கள் இப்படி......
படம் அத்தனையும் இணையத்தில இருந்து எடுத்தது.
அங்கே ' காமிரா நாட் அல்லௌட்'
இத்தாலியிலிருந்து பளிங்கு.
துருக்கியிலிருந்து லைம்ஸ்டோன்!
இதையெல்லாம் இந்தியாவுக்கு வரவழைச்சு,
அங்கே செதுக்கிக்,
கப்பலில் ஏற்றி, இங்கே கொண்டுவந்து
கட்டி இருக்காங்க சாமி.
எட்டு மாதங்கள் ஆச்சாம் கட்டி முடிக்க.
இந்த ஊருக்கு வரவங்க பார்க்க வேண்டிய முக்கியமான் இடம் இந்தக் கோவில்.





11 comments:

வல்லிசிம்ஹன் said...

டெஸ்ட்

துளசி கோபால் said...

பதிவுக்கு ஆதரவா இன்னொரு பதிவா?

ஐடியா சூப்பர் போங்க.

எல்லாம் 'குருவுக்கு மிஞ்சின சிஷ்யர்கள்':-)))))))


படங்கள் அருமையா இருக்கு வல்லி.

டெடிகேஷன்னு சொல்றதுக்கு பூரண அர்த்தம்
இந்தக் கோயில்களில் இருக்குப்பா.

வல்லிசிம்ஹன் said...

பதிவுக்கு ஆதரவா?
துளசி. இது ரொம்பத்தான்.
ஏதோ யானையைப் பார்த்தோமேனு பாதி எழுதிட்டு,
துளசிதளம் வந்தா அங்கேயும் அக்ஷர்தாம் வந்திருக்கு.
சரிதான் இந்தப் பதிவு துளசிதளத்துக்குப் பரிசா இருக்கட்டும்னு நினைத்தேன்.:-)
நீங்க சொன்ன டெடிகேஷன் ரொம்ப உண்மை.அசந்துபோயிட்டேன் அந்த சிற்பங்களையெல்லாம் பார்த்து.

Geetha Sambasivam said...

ஸ்வாமிநாராயண் கோவிலுக்குப் போனீங்களாக்கும்> குஜராத்தில் ரொம்பவே பிரசித்தி. முதல் கோவில் "கட்ச்" மாவட்டத்தில் உள்ள "புஜ்'ஜில் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு மேல் பெண்கள் போக அனுமதி இல்லை. அஹமதாபாத்தில் உள்ள "அக்ஷர்தாம்" தான் தீவிரவாதிகளால் உலகப் பிரசித்தி ஆயிடுச்சே!!!!!! நாங்க இருந்தப்போ கட்ட ஆரம்பிச்சு இருந்தாங்க. ஹூஸ்டனிலும் ஒரு ஸ்வாமிநாராயண் கோவில் sugarland என்னும் இடத்தில் இருக்கிறது. இந்தியச் சிற்பிகளும், கட்டிடக் கலை வல்லுனர்களும் கட்டிக் கொண்டிருந்தார்கள். 2004-ல். இப்போ எப்படினு தெரியலை.

செல்லி said...

//இந்த ஊருக்கு வரவங்க பார்க்க வேண்டிய முக்கியமான் இடம் இந்தக் கோவில்.//
எந்த ஊரு?
குஜராத்திலா?நானும் ஒரு கோயில்ப் பைத்தியம். எந்த இடத்துக்குப் போனாலும் அங்குள்ள கோயிலைத்தான் முதலில் பாக்க விரும்புவேன்.
பகிர்ந்தமைக்கு துளசிக்கும் சேர்த்து நன்றி.

வல்லிசிம்ஹன் said...

சென்னையிலேயே ஹரே கிருஷ்ணா கோவில் அவ்வளவு அழகா இருக்கிறதோ சொல்வாங்க. நான் போனதே இல்லை. இங்கெ வந்து வெளில குளிர் படாத இடமா பர்த்துப் போக இந்த மாதீரி கோவில்கள் வசதியா இருக்கு.
மனசுக்கும் இதமா இருக்கு.நன்றி கீதா.

வல்லிசிம்ஹன் said...

இந்த ஊரு சிகாகோ.:-)

மெளலி (மதுரையம்பதி) said...

ஆம்! நான் லண்டன் அருகில் உள்ள ஸ்வாமி நாராயணா கோவிலுக்கு சென்றிருக்கிறேன்.....

ambi said...

இதோ வந்துட்டேன்!

ஆபிஸ்ல வேலை எல்லாம் செய்ய சொல்றா! சரி, valli மேடம் போஸ்ட் மட்டும் படிச்சுட்டு வேலை பாரு!னு சொல்லிட்டா. :)

சுந்தர காண்டம்-II அருமையான வரிகள்.

@geetha madam, அடடா! உடனே விஜயகாந்த மதிரி புள்ளி விவரங்கள அடுக்கனுமா? :p

வல்லிசிம்ஹன் said...

மௌலி, அனேகம் பேர்களின் இந்தக் கோவில்கள் உருவாகின்றன. அழகை நம் ரசிக்க முடிகிறது.வியக்க முடிகிறது.ஏன் தியானம் கூட செய்யலாம். ஆனால் நம்மூர்க் கோவிலின் திருப்தி....

வல்லிசிம்ஹன் said...

அம்பி, ஆஃபீஸ்ல வேலையா???
அடப் பாவமே. என்னாச்சு !!

வல்லி அம்மா பதிவைப் படிக்க விடுங்கோனு நேத்திக்கு தான் ஒரு ஆர்டர் அனுப்பினேன். வந்துவிட்டதா:-))
நன்றி.தொடர்ந்து படிக்கிறதுக்கு.