Blog Archive

Friday, March 02, 2007

சித்திரராமன்..8 கபந்தன் சபரி மோட்சம்,அனுமன் வந்தான்




அனுமன் அருள் புரியும் அழகு மிகு காண்டம் கிஷ்கிந்தா காண்டம்.


சீதையைப் பிரிந்த சோகத்தில் ராமன். அவனைத் தேற்ற வழி தெரியாமல் வருந்தும் லக்ஷ்மணன்.

தானே கேள்விகேட்டுத் தானே பதில் சொல்லிப் புலம்பிக் கொண்டே அலைபாயும் தமையனை ஆதரவுடன் வழி நடத்தி வருகிறான்.

மரம் செடி கொடி நதி எல்லாவாற்றையும் கேட்கிறான் ராமன். என் சீதையைப் பார்த்தீர்களா என்று.

கோதாவரி நதியையும் பார்த்து கேள்வி தொடுக்கிறான்.

உன்னிடம் சீதை ஏதாவது சொன்னாளா என்று.

எப்போதும் சல்சலக்கும் கோதாவரி அப்போது மவுனமாகிவிடுகிறாள், ராவணனுக்குப் பயந்து.






















அப்போதுதான் குற்றுயிராய்க் கிடக்கும்
ஜடாயுவைப் பார்க்கிறார்கள். அந்த பறவையின அரசன்,
தான் சீதைக்குக் கொடுத்த வாக்குப் பிரகாரம் ராவணன் ரதம் சென்ற திசையைக் காண்பித்து,
சிறு விவரம் சொல்லி ராமனின் கைகளில் அமைதியாகீறார்.
கண்களில் சீதையைக் காப்பாற்ற முடியாமல்
போன தவிப்பு.
தந்தையைப் பிரிந்த துன்பத்திலிருந்தே வெளிவராத ராமன்
அவருக்குச் செய்ய வேண்டிய ஈமக் கடன்களை ஜடாயுவுக்குச் செய்து கரைஏற்றுகிறான்.
ஏதோ ஒரு அடையாளமாவது தெரிந்த தெளிவில் மதங்க முனிவரின் ஆசிரமம் அடைகிறார்கள்.
வழியில் எதிர்ப்பட்டக் கபந்தனுக்கும் ராமன் கையால் விடுதலை கிடைக்கிறது.
'' தாயும் பிள்ளையும் ஒண்ணு வாயும் வயிறும் வேறு''
நமக்குத் தெரியும்.
இங்கே கபந்தனுக்கோ வயிறே வாய்.
அப்படி ஒரு சாபம்.
இரண்டு கைகளாலும் ராமலட்சுமணர்களை வாரியெடுத்து
வாயில் போட வந்தவனை ராமலட்சுமணர்களின்
சமயோசிதம் வெல்கிறது.
அவர்களின் ஆசிகளோடு சொர்க்கம் அடைகிறான்.
அவனிடமிருந்து வழியறிந்து சபரியிருக்கும் மதங்க
மாமுனிவர் ஆசிரமம் அடைகிறார்கள்.
தன் குரு வார்த்தை மீறாத சபரியின்
கைகளிலிருந்து அவள் சுவைத்து ருசி கண்ட
பழங்களை உண்கிறான்.
ராமன், சபரியின் விருப்பப்படி அவளைத் தன்
குருவுடன் வைகுண்டம் சேர்வதற்கு
வழி செய்கிறான்,.
அவள் ரிசியமுக பர்வத்துக்குப் போகும் வழியைச் சொல்லுகிறாள்.
பம்பை நதி, சுற்றுச் சூழல் அழகு அமைதி
எல்லாம் ராமனின் கலக்கத்தை அதிகரிக்கின்றன.
லக்ஷ்மணா, விடியுமா. சீதையைப் பார்க்கும் நாள் வருமா என்று அதீதமான சோகத்தில் புலம்பும்போது வருகிறான் நம் ஸ்ரீராம பக்த ஆஞ்சனேயன்.
அனுமானே நீ எப்படிப் பட்டவன்!
அஞ்சனை மைந்தா ஸ்ரீராமன் சோகத்துக்கே முடிவு கண்டாயே.
எங்கள் துன்பம் உனக்குக் குளத்து அளவு நீர்தானே?
ஒரு கண்பார்வையில் எங்களை
ஞானக்கரையில் அமர்த்திவிட மாட்டாயா?
ஆஞ்சனேயன் அடிபோற்றி.







3 comments:

துளசி கோபால் said...

நம்ம 'நேயடு' வந்துருல்லே? இனிமே வெற்றியோ வெற்றிதான்.
எக்ஸ்ப்ரெஸ் வேகத்துலே கதை சொல்றீங்க:-)))


ஆமாம்,
சபரி மலையில் அந்தக் காலத்தில் இப்போ இருக்கும் 'சாஸ்தா கோயில்' இருந்திருக்க
வாய்ப்பில்லைதானே?

வல்லிசிம்ஹன் said...

வரணும் துளசி.
நம்ம இப்போ இருக்கிற காலப் பம்பையும் அந்தக் கால பம்பையும் கொஞ்ச நீளம் அகலத்தில் வித்தியாசப் பாட்டு இருக்கின்றது. சாஸ்தா கோவில் பற்றிக் கம்பராமாயண உரையில் இல்லை.
பந்தள மகராஜா காலம் வேறயா இருந்திருக்கலாம்.
நேயடு வந்தாலே உத்சாகம் தான்.:-0)

மெளலி (மதுரையம்பதி) said...

9 நாட்கள் விடுப்பு முடிந்து வந்தால் எத்தனை பதிவுகள்......நிதானமா படிக்கிறேன்....

அஞ்சனா புத்ரனுக்கு எனது நமஸ்காரங்கள்....