About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Monday, February 26, 2007

ஆதவனைக் காண ஆயுள் வளரும்சூரியன் உதிக்க, அதை எட்டிப் பார்க்கும் நேரம்
கூட சென்னையில் கிடைக்காது.
எப்படியோ கோலம் போடும் நேரம் உலகம்
வாசலில் வரும் தவிட்டுப் புறா, தேன் சிட்டு
எல்லோருக்கும் ஒரு அவசர ஹை சொல்லி விட்டுப் பசங்களோட அரட்டைக்காகவும், நெட் சமாசாரங்களை மேய்வதற்கும்
உள்ளே வந்துவிடுவேன்.
அப்போது தெரியாத அதவனின் அருமம இப்போ கண்டேன் கண்டென்னு சூரிய நமஸ்காரம் செய்யலாமா என்று தோன்றுகிறது.
அவர்தான் ரொம்ப ஒளிஞ்சு விளையாடுகிறார்.
இப்போது இங்கே தெரிவதெல்லாம் வெள்ளை வெளேர்னு ஒரு பனி சூட்டின,அடைத்த ரோடுகள்.
ஒரு கரடிக் குல்லாயில் மறையும் முகங்கள்.
என்னதான் குளிராக இருந்தாலும் அடுத்த வீட்டு ஆதிசேஷனோடு வாக் போகும் பாட்டி.(பாட்டியா பேத்தியா?)
பௌர்ணமி எப்போ வரதுனு தெரிஞ்சுக்கணுமா
ஆன்லைன் பஞ்சாங்கம் பாரு.
ஏனென்றால் நிலாவையும் பார்த்து நாளாச்சு.
அதெப்படியோ நாலாம் பிறை என் கண்ணில் படாமல் போன கதையே கிடையாது.
அதுதான் நெட்டில தேடிக் கிடைத்ததைப் போட்டேன்.
இனிமேல் எந்தக் காரணம் கொண்டும் சென்னை வெய்யிலை ஒன்றுமே சொல்ல மாட்டேன்.
ஹீட்டரை அதிகம் செய்தால் தொண்டை வரளுகிறது.
தோல் சுருங்கி விடுகிறது.
அதற்கு நூறு வைத்தியம்.
சரி, ஹ்யூமீடிஃபையரைப் போட்டுக்கலாம் என்றால் குளிருகிறது.
யாரு நடு ராத்திரி எழுந்து அதை நிறுத்துகிரது.?
குழந்தை அழுகிறானே பாட்டுப் பாடி ,தட்டித் தூங்க வைக்கலாம் என்றால் குரல் நடுங்குகிறது.
ஆஃப்கீயில் பாடும் பாட்டியைப் பர்த்து மௌனமாகச் சிரிக்கிறான், அவன்.
வந்த தூக்கமும் போச்சேனு கவலை அவனுக்கு:-)
தொண்டை வரண்டு போவததல் ஃப்ளாஸ்க் நிறைய வென்னீர் போட்டு வைத்துக் கொண்டு கச்சேரிக்காரர்கள் போல அடிக்கடி கனைத்துக் கொண்டு
அலைய வேண்டி இருக்கு.
பக்கத்தில ஒரு வட இந்தியக்கார அம்மா இருக்காங்க.
நாலு வீடு தள்ளி.
அவங்க சொன்னாங்களேனு ஒரே ஒரு நாள் சகல அலங்காரங்களோடு(தலைகுல்லா,காது மஃப்ளர்,
கழுத்து ஸ்கார்f, கைக்கு க்ளௌவ்ஸ் காலுறை, பூட்ஸ் சகிதம் இறங்கி நடக்கப் போனேன்.
சுற்றுமுற்றும் குவித்து வைத்த பனிக்கும்பலைப் பார்த்ததுமே ஒரு நடுக்கம் வந்துவிட்டது.
கடவுளே இத்தனை நாள் அமெரிக்க மண்ணைத் தொட்டு வணங்கவில்லைங்கரதுக்காக
என்னை பதம் பார்த்துடாதேனு ஒரு அபௌட் டர்ன் பண்ணி
படு புத்திசாலியாக மறூபடி வீட்டுக்குள்ளையே
வந்து விட்டேன்.
நடக்கத்தானே வேணும். கணினிலேருந்து டிவி.
அங்கேயிருந்து சமையல் அடுப்புப் பக்கம்.
அங்கே யிருந்து வாசல் கதவு.
மாடிப்படி , எல்லாமே உடல் பயிற்சிதானே!!
என்ன சொல்கிறீர்கள்?