Blog Archive

Sunday, February 04, 2007

பூனை பூனை




நடக்கிற கதை நிஜம், அசல்.சாதாரணமான ஒரு நாளில், மழைப் பெய்ய வேண்டாத,மழை நின்னால் போதும் என்று தோணும் நேரத்தில் ,குட்டிப் பூனை அம்மாவைத் தொலைத்து விட்டது,.
அம்மா சொன்ன இடத்திலேயே இருந்து பார்தது பசி பொறுக்காமல் வெளியில் வந்துவிட்டது. அம்மாவைப் பற்றிக் கவலையில்லை, பசிதான் தாங்க முடியலையென்னு யோசிச்சு தான் இருந்த பால்கனிக்கு வெளியே எட்டிப் பார்த்தது.
பொட்டு பொட்டுனு தெரிக்கிற மழைத்துளிக்கு கொஞசம் சிலிர்த்துக் கொண்டு மேலேயும் சுத்தியும் பர்த்தது.
அந்த விளிம்புக்கு கீழே இருந்த வீட்டில் ஒரு அம்மா தன்னோட குட்டிப் பொண்ணோட ஏதோ மியாவைக் கூப்பிட்டுகிட்டு வந்தாங்க.
அவங்க வீட்டு செல்லத்தை தேடிகொண்டு இருந்தாள்.'பென்னி,பென்னி'' என்று கூவியும் பென்னி வரும் வழியாகக் காணொம்.
குட்டிப்பொண்ணொ அழுகையை சுருதி கூட்டி அழைத்துக்கொண்டு இருந்தாள். அவளுக்கு பென்னி திரும்பி வருமென்று ந்ம்பிக்கையில்லை. அம்மாதான் பென்னிக்கு சிப்ஸ் கொடுக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்களெ, அதாலே பென்னி நிறய லே"ஸ் சிப்ஸ்கிடைக்கிற வீட்டைத்தேடிப் போயிருக்கும்.''என்றபடி மேலே பார்த்த பொம்மிக்குப் ,
பூனைக்குட்டி கண்ணில் பட்டது.ஆச்சர்யத்தில் வாயை மூட மறந்து அம்ம கையைப் பிடித்து இழுத்தது பொம்மி. 'அம்மம அங்கே பாரு பூனை ''என்று குதிக்க ஆரம்பிதது.
சூ சூ என்று விரட்டப் போனாள் அம்மா.அவள் விரட்டின வேகத்தில் பயந்த ந்ம்ம குட்டி அவங்க வீட்டு வராந்தாவிலேயெ விழுந்து விட்டது.ஒரு நிமிடம் ஸ்டன் ஆகி அடுத்த நிமிடம் எழுந்துவிட்டது.குட்டிகளுக்கே உண்டான சினேகத்தொடு பொம்மி பக்கத்திலே நின்று கொண்டு மீஈஈஇயாவ்வ் என்று இழுத்தது.
இந்தச் சோகப்பாடலைக் கேட்ட பொம்மிக்கு தன்னுடைய'பென்னி' மறந்து விட்டது.
அடுத்து வந்த அரை மணி நேரத்தில் பால், படுக்கை பாஸ்கெட் என்று கொடுக்கப்பட்டு,பூனைக்குட்டி,வெள்ளையாக இருந்ததாலும்,பொம்மியோட அம்மா தமிழ் பேசும் வித்தை அறிந்தவளாக இருந்ததாலும் ,வெள்ளி என்கிற பெயர் சூட்டிக்கொண்டு பக்கத்து வீட்டு பூனைகுட்டி..
கன கம்பீரமாக நிமிர்ந்த கழுத்து ,சிவப்பு பட்டை ரிப்பன் சகிதம் உலா வர ஆரம்பித்தது. பூனையாகவும் ஆகிவிட்டது.அதான் மழை வந்துபோய் 6 மாதம் ஆகிவிட்டதே !!
வெள்ளியும் பெண் பார்ப்பதாகக் கேள்வி.// posted by manu @ 10:20 AM Comments:அட! இந்த போஸ்ட் எப்பப் போட்டீங்க? ஏன் தமிழ்மணத்துலே 'அளி'க்கறதே இல்லை?அளிச்சாத்தானே ஆட்கள் பார்க்க முடியும்? ஓசைப்படாமப் பூனைமாதிரிஇருந்தா என்ன அர்த்தம்?# posted by துளசி கோபால் : 8:43 AM அடப் போஙகப்பா.அளி அளின்னு அளிச்சாச்சு.பூனைனா அப்படித்தான் இருக்கும்.GK சார் எப்படி இருக்காங்க.சரித்திரம் நாளை உண்டா? இப்போ இன்னொருதரம் டிரை செய்யறேன்.# posted by manu : 11:49 AM GK நலம். நாளைக்கு சரித்திரவகுப்பு இருக்கு.# posted by துளசி கோபால் : 12:56 PM Post a Comment Links to this post:See links to this post%20


6 comments:

இலவசக்கொத்தனார் said...

ஆஹா! பூனைக்குட்டி வெளிய வந்திருச்சா?!!! ;)

VSK said...

கற்பனைகளை விட, நிகழ்வுகள், அது எவ்வளவு சிறியதாக இருப்பினும், மிகவும் சுவையானவை என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம், வல்லியம்மா!

வல்லிசிம்ஹன் said...

வாங்க கொத்சு சார்.
ஆமா!! த கட் இஸ் அவுட் ஆஃப்
த பாக்:-)

வல்லிசிம்ஹன் said...

வரணும் எஸ்.கே.சார்.

தைரியமும் புத்திசாலித்தனம் என் சொத்து இல்லை.இல்லாவிட்டால் இவைகளை நம்பி
இயற்கையோடு ஒண்ணா வாழ்க்கை நடத்த ஆசை.
பார்க்கலாம்.

துளசி கோபால் said...

மீள்- ரசித்தேன்.

பூனை ஜிஞ்சுவாக இருக்கே. உண்மையில் அது கருப்பாச்சேப்பா:-)

வல்லிசிம்ஹன் said...

தூளசி, வேணாம்.:-0)
நானே பொத்தம்பொதுவா வெள்ளினு வைச்சுட்டேன். வெள்ளைப் பூனைப் படம் கிடைக்கலை. சரி, ஜிஞ்சராவது போடலாம்னு,
இவங்களைப் போட்டேன்.
இப்ப என்னடான்னா கடசி ரெண்டு பூனைக்கூட்டிகளைப் பதிவு ஒளிச்சு வச்சிருக்கு,.
எங்கே தேடுவேன்???