Blog Archive

Thursday, February 01, 2007

ஆக்கபூர்வமான எழுத்து.,பேரன் தந்த பாடம்



எழுதும் ஆர்வம் எல்லோருக்கும் இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.
படிக்கும் எல்லோரையும் கட்டிப் போடும் கதைகள்,சரித்திரம் சொல்லும் நாவல்கள்,
பயணக் கட்டுரைகள் ,அறிவை மேம்படுத்தும்

எண்ணங்கள், நகைச்சுவை என்று எத்தனையோ களங்களில் ஆயிரக்கணக்கன புத்தகங்கள்
வெளிவரும்
இந்தக் கால கட்டத்தில்
நம் எண்ணங்களையும் பதிக்க ஆசைப் படுகிறோம்.
ஆசைப் படாதவர்கள் உள்ளே நுழையத்
தயக்கம் காண்பிப்பதற்கு
ஒரே ஒரு காரணம் நாம் எழுதுவதை யாராவது படிப்பார்களா என்ற பயம் தான்.

என்னைப் பொறுத்தவரை எழுதுவதை
ஆரம்பித்துவிட்டால் நம்பிக்கை கூடவே வரும்.
தளராமல் எழுதப் பொறுமையும்
விடாமுயற்சியும் தான் வேண்டும்.

எழுத்தைப் பற்றி இவ்வளவு நான் நினைப்பதற்குக்

காரணமாக அமைந்தது எங்கள் பேரனின்
கிரியேடிவ் ரைட்டிங் வகுப்புகள் தான்.
அவனிடமிருந்து கற்றுக் கொண்ட முறைப்பாடுகளை இங்கே எழுதுகிறேன்.

ஏதாவது தெரிந்து கொள்ளணும்னால்
குரு தட்சிணை கொடுக்கணுமே.
அவனுடைய நாலு வகுப்புக்கு நாலு கதைகள்

நகைச்சுவை,வில்லத்தனம், பயங்கர
ரத்தக் களறியாக, மசாலாவுடன் நான்
சொல்லுவதாக ஏற்பாடு.
ஒப்பந்தம்(!) கையெழுத்துப் போட்டவுடன்,அழகான
பெரிய நோட்புக் கொண்டுவந்தான்.
ஹ்ம்ம்! இங்கெ எல்லாப் பேப்பரும் என்ன ஒரு வழவழப்பாக இருக்கிறது!

ஒரு பேனா எடுத்துக் கொண்டு,
எனக்கு எதிரில் உட்கார்ந்து
''பாட்டி, ''there are five points you have to notedown''

சீரியசாக என்னை நோக்கும் அந்தக் கண்ணாடி போட்டச் சின்ன முகத்தைப் பார்த்ததும்,
எனக்குக் கொஞ்சம் பிரமிப்பு,கொஞ்சம் கண்ணில தண்ணீர் என்று வந்துவிட்டது.

எட்டு வயசுக்கு இது தீர்க்கமாத் தான் யோசிக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.
என் எட்டுவயசில் தாத்தா முன்னால்
வாய்ப்பாடு சொல்லக் கைகட்டி நிற்பேன்.
பாட்டி புடவையில் தொங்கி முறுக்குக் கேட்டு இருப்பேன்.
அவ்வளவுதான்.

காலம் நிறையத் தான் மாறிவிட்டது.!

இதோ குழந்தை சொன்ன குறிப்புகள்.


எழுதுவதற்கு ஒரு நிலைக் களன்......

1 நேரம், இடம்.
2, கதையில் வரும் நபர்களின் பட்டியல்
3,

ஒரு சம்பவம்,ஒரு கஷ்டம் அதாவது
ப்ராப்ளம்.
4, முக்கிய சம்பவங்கள்.

5,எப்படி அந்தக் கதாநாயகன்
பிரச்சினையை எதிர்கொள்கிறான்.

6.முடிவு.கண்டிப்பாகக் கதையின் நாயகன்

வெற்றி பெறுவான்.:-00)

ஆச்சு, இவனும் கதைவிட ஆரம்பிச்சுட்டான்.

உங்களுக்கும் இது உதவி இருந்தால்
எனக்கு எழுதுங்கள். :-)
.

11 comments:

Anonymous said...

நல்லாத்தான் சொல்லறாரு உங்க கதை எழுதச் சொல்லும் வாத்தியாரு. அவரையே ஹீரோவா போட்டு ஒரு கதை எழுதுங்க. ஹாரி பாட்டர் கணக்கா போகும்!!

வல்லிசிம்ஹன் said...

வாங்க கொத்ஸ்.
தமிழிலும் நன்றாகப் பேசுவான்.

எழுத்து கற்றுக் கொடுக்கவேண்டும்.

ஹாரிபாட்டர் கடைசி புத்தகம் படித்துக் கொண்டு இருக்கிறான்.
எப்பப் பார்த்தாலும் ஒரு 'ட்ரீமி லுக்' கண்களில்.:-)

Anonymous said...

என்ன வல்லியம்மா, ஊறுகாய் போடவிடாத பேரன் இப்போ ஒங்களூக்கு எழுதவும் சொல்லித்தர ஆரம்பிச்சிட்டானா?.....

Anonymous said...

நானும் வகுப்பு எடுத்துக்கிட்டேன்னு சொல்லுங்க குரு கிட்ட.:))

வல்லிசிம்ஹன் said...

வாங்க லட்சுமி,

சொல்லறேன்.
அவனிடம் ஓரு ப்ளாக் எழுதச்
சொல்லி இருக்கேன்.
அவன் உலகம் தனி.
அதிலே எனக்கு ஒரு தனியா குட்டி இடம் கொடுத்து இருக்கிறான்.

Anonymous said...

பேரன் ஹாரிபாட்டர் படிக்கிறானா? இந்த வயதில் நானே அதைப் பயித்தம் போல படிக்கையில் குழந்தை தாராளமாகப் படிக்கலாம்.

கொத்ஸ் சொன்னது போல....தமிழ் ஹாரிபாட்டரை நீங்கள் ஏன் எழுதக் கூடாது?

துளசி கோபால் said...

இப்பெல்லாம் 'குரு'க்கள் எந்த ரூபத்தில் வர்றாங்கன்னே தெரியலை.
தகப்பன் சாமிகளா மட்டும் இல்லை பாட்டி சாமி, அம்மா சாமின்னு போய்க்கிட்டு இருக்கு.
ஆனா.......... பாடம் கத்துக்கறது நம்ம கையிலே. இப்படிச் சந்தர்ப்பம் கிடைக்கும்போது
ச்சிக்கெனப் பிடிச்சுக்கணும்.
யாராவது 'சிக்கன்'னு நினைச்சுக்கப்போறாங்கப்பா:-)

பேரனுக்கு வாழ்த்து()க்)கள். நல்லா இருக்கட்டும்.

'ச்சிக் என'

வல்லிசிம்ஹன் said...

ராகவன் ரொம்ப நன்றி.
ஆர் யூ அ ரைட்டர் பாட்டி னு
கேட்பான்.
அப்படியும் சொல்லலாம்னு அவன்கிட்டே ஜோக் செய்வேன்.
ஹாரிபாட்டர் மந்திரக்கோல் எங்க வீட்டு ஆயுதம்.
எட்டு.ஒன்பது ஸ்பெல்ல்ஸ் சொல்லிக் கொடுத்திருக்கிறான்.
வேறு வேலை இல்லாதபோது
அந்த 'ரோபை'யும் மாட்டிப்பான்.
அமர்க்களம்தான்.என்னை இவ்வளவு உயர்வான வேலை செய்யச் சொன்னதற்கு நன்றிப்பா.
முடியுமான்னு தெரியாது.:(

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி, ச்சிக்கெனப் பிடிக்க வேண்டியதுதான்.:-)
இப்போதைக்கு.

உங்க ஆசீர்வாதங்கள் அவனுக்கு
நிறைய இருக்கட்டும்.

Anonymous said...

வல்லியம்மா,
குருக்கிட்ட இருந்து கதை எழுத கத்துக்கறேனு சொல்லுங்க...

அப்படியே தலைவருக்கு திருஷ்டி சுத்தி போடுங்க...

வல்லிசிம்ஹன் said...

அப்படியே பாலாஜி.

செய்கிறேன்.
குரு சார் ஹோம்வொர்க் செய்யறார்.
முடித்ததும் 'ஸ்பஞ்ச் பாப்'
பார்ப்பார்.
பயங்கர த்ரில்லாக இருக்கும், இத்தனை காமெண்ட்ஸையும் படித்துக் காண்பித்தால்.:-)