About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Wednesday, February 21, 2007

சித்திர ராமன்.7......சூர்ப்பனகை வந்தாள்


பஞ்சவடி வருவதற்கு முன்னால் ராமன்சீதா லக்ஷ்மணர்கள் , அத்ரி அனுசூயா ரிஷிகளின் ஆசிரமத்திற்கு வருகிறார்கள்.
அதற்கு முன்பு இருந்த சித்திரகூடத்தில்
மனதுக்கு அமைதியான வாழ்க்கை கிடைத்தாலும் ,பரதன் வந்து போனதில் ராமனுக்கு துக்கம் வதைக்கிறது.
தந்தையை நினைத்து வருந்துகிறான்.
ராமனுக்கு,த் தான் தெய்வ அவதாரம் என்பதும் மறந்து போய்விடும் சமயங்களில் இதுவும் ஒன்று.
அவனுக்கே இந்த கதி என்றால் நாமெல்லோரும் எம்மாத்திரம்!
அத்ரி மகரிஷியின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளும் ராமன் விடைபெறும் தருணத்தில் அனுசூயா ,அவளே ஒரு மகா தபஸ்வினி, சீதையிடம் தன் சர்வ
ஆபரணங்களையும் தருகிறாள்.அன்புடன் அவைகளை
வாங்கி அணிந்து கொள்ளும் சீதையைப் பார்த்து எல்லோரும் மகிழ்கிறார்கள்.
இதில் இரண்டு உண்மை தெரிய வருகிறது.
கதை சொல்பவர் எடுத்துக் காட்டுகிறார்.
'சதி அனுசூயா ஞானி.
அவளுக்குப் பின்னால் நடக்கப் போகும் விஷயங்களை
அறிய முடிகிறது.
சீதையின் நெறி தவறா பதிபக்தியும் அவளை நெகிழ வைக்கின்றன.
அன்புடன் சீதையைத் தழுவி இத்தனை ஆபரணங்களையும் கொடுக்கும் போது ,
சீதையும் எந்த வித அகம்பாவமும் காட்டாமல்
ஏற்றுக் கொள்கிறாள்.
ஏனெனில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குக்
கொடுத்து வழக்கம் இருக்கும்.
ஏற்பது அத்தனை சுலபமாக வராது.
நம்மிலேயே சிலரைக் காணலாம்.
'யார்கிட்டேயிருந்தும் எனக்கு எதுவும் வேண்டாம்'
என்கிற மனோபாவம்.
வாங்கிக்கொள்வதும் ஒருவித அடக்கம் தான்.
சீதையும் ராமனும் ஒத்துப் போகும் விஷயங்களில் இதுவும் ஒன்று.
இங்கிருந்து சரபங்கர்,சுதீஷ்ணர் ஆசிரமங்களை அடைந்து அவர்களிடம் அசுரர்களின் கொடுமைகளைப்
பற்றி அறிந்து அதை விலக்குவதே தங்கள் தர்மம் என்பதத ராமன் எடுத்துச் சொல்லி ஆறுதல் தருகிறான்.
எல்லா முனிவர்களும் ராமன் தங்களுடன் தங்க வேண்டும் என்று ஆர்வம் காட்டினாலும், இன்னும்
வனத்துக் குள்ளே சென்றால் தான் மேற்கொண்டு கார்யம் நடக்கும் என்று மூவரும் செல்கிறார்கள்.
பஞ்சவடி அடையும் முன்னால் விராத வதமும் நடக்கிறது.
ராமன் அவனை வீழ்த்தியதும் சாப விமோசனம் அடைந்த கந்தர்வனாக அவன் மோக்ஷம் அடைகிறான்.


இதற்குப் பிறகு, ராமனுக்கும் சீதைக்கும் நடக்கும் தர்மத்தின் வழிகளைப் பற்றிய சம்பாஷனை நடக்கிறது.
விராத வதம் முடிந்து, வனத்தில் வசிக்கும் அத்தனை முனிவர்களின் சரணகதியையும் ஏற்று அதைச் சேயலிலும் க்ஆட்டும் ராமனிடம் சீதை கேட்கிறாள்.
'ராமா உன் தர்மம் என்ன?'
அசுரர்களை அழித்து சாதுக்களைக் காப்பற்றுவது தான் என் தலையாய கடமை.தர்மம் ' என்று
ராமன் பதிலுரைக்க,
எனக்காக தர்மத்தை விடுவீர்களா என்றால் யாருக்காகவும் தர்மத்தை விடமாட்டேன்.
உன்னையும் விடஎனக்கு மேலான தம்பி லக்ஷ்மணனுக்காகக் கூட தர்மத்தை விட மாட்டேன்' என்கிறான்.
அது சரி,
இத்தனை முனிவர்களூக்காக, ' உங்களை' ஒரு போதும் தொந்தரவு செய்யாத ராக்ஷசர்களை ஏன் வதைக்கிறீர்கள்?
அவர்களைக் கொல்ல என்ன காரணம்?
என்று ஜானகி மீண்டும் கேட்கிறாள்.
நான் ஒரு க்ஷத்ரியன்.
எனக்கு நேர்மையும்,சொன்ன வார்த்தைப்படி நடப்பதும், துன்பப் படுபவர்களைக் காப்பதும் தான் தர்மம்.
இந்தக் கடமைக்காகவே அசுரவதம் நடக்க வேண்டும்'
என்று சீதையிடம் வல்யுறுத்திச் சொல்லுகிறான்.
உலகத்தில் சிறந்த தர்ம வழி என்ன என்றும் சீதை அவனைக் கேட்க,
''பொய் சொல்லாமல் இருத்தல்,
பிற பெண்களை மதித்தல்,
வலியச் சென்று யாரையும் துன்புறுத்தாமல் இருப்பது இவையே தர்மம்.''
என்று எடுத்துச் சொல்கிறான்.
இப்படியாக வருடங்கள் இனிமையாக ஓட, கடைசி,பதினாலாவது வருடம் ஆரம்பமாகிறது.
நடுவில் பறவை அரசன், ஜடாயுவைச் சந்திக்கிறார்கள்.
அவர் சீதையைத் தான் எப்போதும்
கவனித்துக்கொள்ளுவதாக உறுதி அளிக்கிறார்.
வயது முதிர்ந்த அந்தப் பறவை அரசனிடம் ராமனுக்கும் மற்றவர்களுக்கும் மிகுந்த அன்பு ஏற்படுகிறது.
ஒரு நாள் வருகிறாள் சூர்ப்பனகை அங்கே.
ராவணின் தங்கை. கொடியவள். விகாரமான உருவம்.
பசிக்கு இரை தேட வந்தவள் கண்ணில் அழகு, சுந்தர ராமன்
கண்ணில் படுகிறான்.
எப்போதுமே தம்பதிகளாகப் "பெருமாளையும் தாயாரையும் சேர்த்து வழிபடுபவர்க்கே நன்மை பயக்கும்'
என்ற விதியை
மீறிய
ராவணனும் அவன் தங்கையும்
இருவருமே துர்க்கதி அடைந்ததற்கு அவர்களின்
முறை தவறிய ஆசைதான் காரணம் என்று வரிகள் வருகின்றன.
தாயாரை மட்டும் எண்ணிய ராவணனும் ம்அடிந்தான்.
பெருமாளைத் தனியாக விரும்பிய சூர்ப்பனகையும் அழிந்தாள்.
இருவரின் நாட்டங்களுக்கும்
பலி அவர்களின் முழுக்குடும்பம்.
விபீஷணனைத் தவிர.
விபரீத ஆசைதான் காரணம்.
மாயமான் வ்அருகிறது.
ராமன் அதன் பின்னே செல்ல, சீதை இலக்குவனைச்
சொற்களால் சுட,
பாதுகாப்பு ரேகையைச் சுற்றிப் போட்டுவிட்டு அவனும்
கிளம்ப தனித்திருந்த சீதை கபட சன்னியாசியினால்
அபகரிக்கப் படுகிறாள்.
குலசேகர ஆழ்வார்,
ராமனை நினைத்து வருந்துகிறார்.
''எத்தனை தூரம் ,ராமா நீ நடந்தாயோ
எவ்வளவு கால் வலித்ததோ/
நான் உன் உதவிக்கு வரட்டுமா//
என்று.
நாமும் மீண்டும் அவனைக் கிஷ்கிந்தாவில்
பார்க்கலாம்.