About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Saturday, February 10, 2007

சித்திர ராமன்......5 ராமன் ஆளும் வனம்





































ராமன்





நட்பு பாராட்டிய ஜடாயு, தசரதனுக்குச் சமமாக அவனால்




மதிக்கப் பட்டவர்.










அவர் வரும் ஆரண்ய காண்டத்துக்கு நாமும் செல்லப் போகிறோம்.


இப்பொழுது ராமனுக்கு மன்னனும் வசிஷ்டரும் குறித்த தினத்தில்





பட்டாபிஷேகம் நடக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.





தன் மக்களுடனும் ஆலோசனை நடத்தி விட்டு





மன்னன் கைகேயின் அரண்மனைக்கு விரைகிறான்.





அவள்தானே ஆசைக்காக மணந்துகொண்ட காதல்





மனைவி.





அவளிடம் முதலில் இந்தக் குதூகலத்தைப்





பகிர்ந்து கொள்ள வேண்டும்.










அங்கே அதற்கு முன்பேயே கூனி வந்து





புயலைக் கிளப்பிவிட்டுப் போய்விட்டாள்.










தெளிந்த தடாகமாக இருந்த கைகேயியின் மனது





கலங்கின சேற்றுக் குளமாக ஆனது.





நமக்குத் தெரியும்.




தசரதன் உல்லாசமாகக் கைகேயியின் அந்தப் புரத்தில் நுழைகிறான்.




அவளோ கோபாக்கிரகத்தில் தலைவிரிகோலமாகக் கிடக்கிறாள்.








இங்கே கதை சொல்பவர் விவரிக்கும் விதம் அழகு.




அந்த நாட்களில் கோபத்துக்கு என்று தனி இடமாம்.




வசந்த மாளிகை, அரச தர்பார்,அந்தப் புரம்




இதெல்லாம் நமக்குத் தெரியும்.








அரசி கோபித்துக் கொண்டால் ,




அரசன் வந்து சமாதானம் செய்து அழைத்துப் போகும் வரை,




அரசி இந்த இடத்தில்தான் இருப்பாளாம்.!!








வாஸ்து பார்த்து இப்போது என்னவொ சொல்கிறார்கள்.




அப்போது நல்ல வார்த்தைகள்,சம்பவங்கள்,




மகிழ்ச்சியுடன் நடைபெறும் உரையாடல்கள்




எல்லாவற்றிற்கும் இடங்கள் தனியே இருந்தன.








அரசியல் அந்தப்புரத்துக்கு வருவது கிடையாது.








அதுபோல குழந்தைகள் நடுவே கோபதாபங்கள்




அதிகம் காட்டக் கூடாது என்பதற்காகவே இந்த மாதிரி கோபாக்கிரகங்கள் இருந்தனவோ.!!








கைகேயி மன்னன் வருவதைப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.








தசரதனுக்குப் பயம் வந்துவிட்டது.




அவளுக்கு ஏதோ உடல்நலம் சரியில்லை




என்றுபயந்து ,




அருமையாகத் தலையை வருடிக் கொடுத்து




நலம் விசாரித்தான்.


வெடித்தது எரிமலை. இராமன் காடாள பரதன் நாடுஆள வேண்டும்.


முன்னால் கொடுத்த இரு வரங்களை ஞாபகப் படுத்தி,தசரதன் உயிரைப் பறிக்க வந்த கூற்றுவன்


போலக் காட்சி அளிக்கிறாள்.அவனோ மன்றாடுகிறான்,ராமனை என்னிடம் இருந்து பிரிக்காதே


என்று.


மன்னனின் நிலைமையைக் கண்டு,தானே இராமனைக்


கூப்பிடுகிறாள்.


தந்தை ஆணைப்படி ,ராமா நீ மரவுரி தரித்துக் கானகம் ஏக வேண்டும்,


என்னவும்......


'தந்தை அரசாளுகிறாயா 'என்னும்போது இருந்த அதே மனநிலையில் இந்தச் சுடு சொற்களையும்


ஏற்றுக்கொள்ளுகிறான் ரகுநந்தனன்.




தந்தை என்ன ,நீயே சொன்னாலும் நான் வனம் போகத் தயார் அம்மா'என்று சொல்லி, தன் அன்னையைப்


பார்க்க வருகிறான்.


கௌசலையப் பார்த்ததும் ராமன் சொல்லும் முதல் வார்த்தை, அம்மா பரதன் நாட்டை ஆளப் போகிறான்.


அரசு விவகாரங்களில் சூக்ஷ்மம் ஓரளவு தெரிந்த








கோசலை, நீ இங்கே இருக்கலாம் அல்லவா என்று கேட்கிறாள்


இந்த பேச்சு வார்த்தைகளுக்கு இடையில் அங்கெ வரும் சீதையிடம், நடந்ததைச் சுருக்கமாகச் சொல்லுகிறான்.


அவள் உடனெ போய் கானகத்துக்கான மரவுரியைத் தரித்து வருகிறாள்.




'ராமா நீ இல்லாத இடம் எனக்குச் சொந்தமில்லை.


வனவாழ்க்கை உன்னுடன் என்றால்


அதுதான் வேண்டும்'


என்று உறுதியாக இருப்பவளை மாற்ற


ராமன் எடுத்துரைக்கும் வாக்குவாதம் அவளைக் கோபிக்க வைக்கிறது.


'என் அப்பா ஏமாந்து போய் ஒரு ஆண் உடை தரித்த பெண்ணை எனக்குத் திருமணம் செய்து


வைத்துவிட்டாரே'


சுடுசொல் ராமன் மேல் தெறித்துவிழுகிறது.


பின்னால் வரும் லக்ஷ்மணனனயும்


தடுக்கப் பார்த்தும் முடியாத நிலையில்


மூவரும் அமைச்சர் சுமந்திரனோடு


தேரில் ஏறும் செய்தி தசரதனுக்கு வருகிறது.


சீதையுமா போகிறாள்?


''காட்டிலே பிழைக்க உணவு,உடை எல்லாம் அவர்களோடு போகட்டும் ' என்று சொல் அனுப்புகிறான்.


ஜனகனை நான் எப்படி எதிர்கொள்வேன்,


'வாழ வந்த பெண்ணை வனத்துக்கு அனுப்பினாயா ' என்று


கேட்பானோ?


இல்லை அவன் ஞானி.


இப்போது அவன் கூட இங்கில்லையே என்று மீண்டும்


மயக்கத்தில் வீழ்கிறான்.


சுமித்திரா, லக்ஷ்மணனிடம் இனி உனக்கு


தந்தை ராமன்,தாய் சீதை.


வனமே உன் நாடு.'


பதினான்கு ஆண்டுகள் கழிந்து பார்ப்போம் என்று ஆசி கூறி அனுப்புகிறாள்.
அன்னையரிடம் விடைபெற்று,
மயங்கிக் கிடக்கும் தந்தையைக் கவனம் கொள்ளுமாறு சொல்லிக் கிளம்புகிறான் ஸ்ரீராமன்.ராவணனுக்கு இடி முழக்கம் கேட்தாம் அப்போது.
அயோத்தியே துன்பத்தில் ஆழ்கிறது.
அடுப்படிப் பாலைக் குடிக்க வந்த பூனைகூட அதை
மறந்து வீதிமுனையில் ராமன் கிளம்புவதைக்
காண வந்துவிடுகிறதாம்.
அவன் செல்வது வெல்வதற்குத்தானே!
ஜய ஜய ராம் ஸ்ரீரகுராம்..