About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Thursday, February 08, 2007

சித்திர ராமன்....4 மன்னர் முடி தரித்தால்
திருமணங்கள் முடிந்து திரும்பும்போது தசரதராமனை வெற்றிகொள்ள வரும் பரசுராமனைக் கர்வபங்கம் செய்து கிடைத்த விஷ்ணுதனுசுடன் ஜெயராமன் சீதாராமனாக அயோத்தி வருகிறான்.
இனிமையாகப் பனிரண்டு வருடங்கள் கழிகின்றன.


இப்போது இன்னும் ஒரு சம்பவம் விட்டுப் போச்சு சொல்வதற்கு.


இராமன் அவதாரம் எடுப்பதற்கு எது காரணம், அவதாரம் எடுத்ததால் என்ன பிரயோசனம்


என்று சில பேர் தர்க்கம் செய்தாகளாம்.


இது என்ன பெரிய விஷயமா.


சாதுக்களைக் காப்பத்தவும்,


கெட்டவர்களை அழிக்கவும் தான் என்று எல்லோரும் விவாதிக்க ஒரே ஒருவர் மட்டும் ஒரு நீண்ட கதை சொன்னாராம்.
இதெல்லாம் ஒண்ணும் காரணமில்லை.


''தாயாருக்கும் பெருமாளுக்கும் ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு நாலு பேச்சு பேசக் கூட முடியாதபடி பக்தர் கும்பல்,கோஷ்டி சேர்ந்து போய்விட்டதாம்.


பார்த்தாராம் தாயார்.


பூலோகத்தில கணவன் மனைவி எப்போதும்


பேசிக் கொண்டே இருக்கிறார்களே நாமும் அங்கேயே


போகலாமே என்று தன் நாயகனிடம் கேட்க பெருமாளும் சரின்னு வந்துவிட்டாராம்.


இங்கே திருமணத்திற்குக் காத்திருந்து


அயோத்தி வந்தால் அங்கே ராமனை எப்போதும்


அழைக்கும் மாமனார்.


அவர் கூப்பிடுவாராம்.


இவர் நடந்து போவாராம்.


ஒன்றும் விஷயம் இல்லை ராமா' என்று அன்போடு அனுப்புவாராம்.


மீண்டும் அழைப்பாராம்.


என்னடா செய்தி என்று பார்த்தால்


அவருக்கு ராமனின் அழகு நடையில் அத்தனை விருப்பமாம்.!!


இது தான் இப்படி என்றால் மாமியார்கள் அதற்கும் மேலே ஒரு படி.


ராமா இந்த உடைகள் வாங்கலாமா.


இந்தப் பலகாரம் சாப்பிடுகிறாயா.


'சீதே இங்கே வா , அலங்காரம் செய்து நாழியாகி விட்டது. மாற்றிக் கொள்ளலாம் '' என்று சீதையை


மாமிகள் மூவரும் அழைத்துச் சென்று விடுவார்களாம்.
இதை மாற்றத்தான் இருவரும் வனம் போகத் தீர்மானம்


செய்தார்களாம்.


இது மானசீகத் தீர்மானம்தான்.!
உண்மையில் ராமனுக்கு முடிசூட நாள் குறித்து சொல்லி
அனுப்பி அவனும் வருகிறான்.
தந்தையின் சொல்லைக் கேட்டு பட்டாபிஷேகம் செய்துகொள்ள ஒத்துக் கொள்கிறான்.
வசிஷ்டர் 'ராமா, சீதையை அழைத்துக்கொண்டுபோய்
உங்கள் குல தெய்வமான ஸ்ரீரங்கனாதனை
மனதாரப் பூஜித்துவா' என்கிறார்.
ராமன் மனதில் சிந்தனை. என்ன இது நாம் வந்த
வேலையை முடிக்க வேண்டுமே,
ராவண வதம் நடக்கணும்
இங்கே அரசன் ஆனபிறகு அயோத்தி நிர்வாகமே
பெரிதாகிவிடும்,
இந்தக் கூனி ஏன் இன்னும்
அன்னை கைகேயியைப் பார்க்கப் போகவில்லை ,
கலகம் வந்தால் தானெ, பகவத்சன்கல்பம் நிறைவேறும் என்று நினைத்தவாறே,
சீதை கையைப் பிடித்துக் கொண்டு கோவிலில் நுழைகிறான்.


அங்கே சபையில் தசரதன் தன் மந்திரி,மக்களோடு ஆலொசனை செய்கிறான்.


உங்களுக்கு ராமன் என் வாரிசாக வருவதில்


ஆக்ஷேபனை கிடையாதே என்று கேட்கிறார்.


உங்களுக்கு அடுத்தபடியாக எங்களை காபந்து


பண்ண ராமனை விட்டால் வேறு யார்?


என்று ஒரே மகிழ்ச்சிகோஷம் எழுகிறது,.
அயோத்தியா மங்களக் கோலம்
பூணுகிறது.
ஸ்ரீராம ஜயராம தசரத ராமா.
ஸ்ரீராம ஜயராம கோசலை ராமா.
திருவெனும் தாமரை
மனதில் குடிகொண்ட
சீதா ராமனே சரணம்.
கண்கள் தாமரை
கைகள் தாமரை
பதமும் தாமரை
பாதம் சரணம்.12 comments:

செல்லி said...

படங்கள் நல்லாயிருக்கு.எங்கே எடுத்தீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க செல்லி.
கூகிள் ஆண்டவர் தான் வழிகாட்டி.:-0)

ஜடாயு said...

மிக அழகான படங்கள், வல்லி அவர்களே. என் போன்ற ராமபக்தர்களின் கழுகுக் கண்களில் கூட ஒற்றிக் கொள்ளத் தக்க படங்கள் :))

சென்ற நூற்றாண்டில் கூட தன் குடும்பத்துடன் காவிரியாற்றங்கரையில் தியாகராஜருக்கு தரிசனம் தந்திருக்கிறான் ராமன் !

பக்தியில் தோய்ந்த உங்கள் பதிவுகள் வாழ்க!

வல்லிசிம்ஹன் said...

ஜடாயுவா!
நம்பமாட்டீர்கள் அடுத்த பதிவுக்காக பக்ஷிராஜன் படங்களைத் தேடி எடுத்தேன்.

பெரியோர்கள் தொட்ட இதிகாசத்தை நாமும் பதிந்தால் கொஞ்சமாவது மனம் தெளியுமா என்கிற நப்பாசைதான் என்னை எழுதத் தூண்டுகிறது.
நன்றி. ராமனே துணை.

துளசி கோபால் said...

/பூலோகத்தில கணவன் மனைவி எப்போதும்

பேசிக் கொண்டே இருக்கிறார்களே //


க்குகூம்...............உங்களுக்கு ரொம்பத்தான்.:-))))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

சித்திர ராமாயாணம் தரும் வல்லியம்மாவுக்குச் சித்திரப் பின்னூட்டம் எப்படிப் போடுவது? :-)

குகப் படகுப் பயணப் படம் அருமை!

அது சரி, ராமனுக்கு மாமனார் வீட்டில், இப்படி விழுந்து விழுந்து கவனித்தால், அங்கேயே தங்கி விடப் போகிறான்! அங்கு அந்தத் துணி நல்லா இருக்குமா, இந்த ஆபரணம் நல்லா இருக்குமா என்று அத்தைமார்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தால், அப்பறம் அயோத்தியின் கதி என்னவாகும்?

சீக்கிரம் ஜனகரிடம் பேசி அனுப்பி வையுங்கள் வல்லியம்மா! :-)

வல்லிசிம்ஹன் said...

துளசி,
தாயார் வெறுமனே அங்கேயிருந்து பார்த்தால் சப்தம் கேட்கவில்லை.
ஆக்ஷன் தான் தெரிந்ததாம்.:-)
என்ன அன்யோன்யம் என்று ஆச்சரியமாம்.உபன்யாசகர் சொன்னதுப்பா.
நான் என்னத்தைக் கண்டேன்.:-)

வல்லிசிம்ஹன் said...

வரவேண்டும் ரவி.
நேற்றுக் கூட நினைத்துக் கொண்டேன்.
பயணம் போய் வந்தாச்சோ என்று.
ராமன் அயோத்தியாவில் தான் இருக்கிறார்.
இதோ வனம் ஆளத் தயாராகிக் கொண்டு இருக்கிறார்.
ரொம்பக் கஷ்டமான படலம் இது:-(

Mathuraiampathi said...

அருமை வல்லியம்மா, ஆமாம் தலைப்பு வைக்கும் சமையத்தில் ஹிந்தோள கிருதி நினைவில் வந்ததோ?.....

வல்லிசிம்ஹன் said...

கண்டுபிடித்துவிட்டீர்களா.:-)
'ராமனுக்கு மன்னர் முடி தரித்தாலே
நன்மையுண்டொருகாலே'
அருமையான பாடல்.

பாட்டுக் கேட்பது சரி. நீங்களும் பாடுவீர்களா மௌலி?

Mathuraiampathi said...

வயலின் கற்றுக் கொண்டேன், ஆனால் இப்போ கடந்த 10 வருடமா பிராக்டிஸ்ல இல்லை...

வல்லிசிம்ஹன் said...

பாடப் பாட தானே ராகம்.
வயலினைத் தூசி தட்டி ஆரம்பியுங்கள்.