About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Wednesday, February 14, 2007

பாட்டி கொண்டாடிய பேரன்கள் தினம் ஃபெப் 14

ஃபிப்ரவரி14
காதலர்கள்மட்டும்தான் கொண்டாட வேண்டுமா என்ன.?கல்யாணமானவர்களும் கொண்டாடலாமே என்பதுபோல் கடைகளில் ஏகப்பட்ட வாலண்டைன் டே' வாழ்த்து அட்டைகள்.பள்ளிகளில் குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் கொடுத்துக் கொள்ள சின்னச்சின்ன கார்டுகள். பரிசுப் பொருட்கள்.ரோஜாக்கள்.இதயங்கள்.இளம்சிகப்பு வண்ண பலூன்கள்.எல்லாம் சரிதான்.இந்த ' ஸ்னோஸ்டார்ம்' வந்து எல்லோரையும் வீட்டுக்குள் அடைத்துவிட்டது.நேற்று அடித்த பனிப் புயலில் பள்ளிகள் மூடியாச்சு.இன்று உண்டா என்று இன்னும் கொஞ்ச நேரத்தில் இணையத்தில் சொல்லி விடுவார்கள்.வரலாறு காணாத குளிராம்.நாம இங்கே வந்தது தெரிஞ்சு போச்சோ?:-0)


அலுவலகம் போக முடியாமல் பனிக் காற்று. எடு அந்த 'ஸ்னோஷோவலை.'விலை அதிகமானாலும் அடுத்த விண்டருக்குள் அந்த யந்திரத்தை வாங்க வேண்டியதுதான் என்று முணுமுணுத்தபடி வீட்டுஅங்கத்தினர்கள்(நான் இல்லைப்பா) எஸ்கிமோ உடை மாட்டியபடி மதியம்வெளியே போனார்கள்.'ஐய்யொ பாவம் த்சு த்சு, குளிரப் போகிறதே ' என்றபடி நானும் க்குட்டிப் பேரனும் கண்ணாடிக்கதவுக்கு இந்தப் பக்கம்.கொஞ்ச நேரம்தான்.எதிர்த்த வீட்டிலிருந்து வந்தார் 'ஸ்னோ த்ரோவருடன்'ஆபத் பாந்தவர்,அனாத ரக்ஷகராகபேர் தெரியாத நண்பர்.மே ஐ ஹெல்ப் யூ?என்றபடி , திணறிக் கொண்டிருந்த எங்க வீட்டு ஆட்களைக் கேட்டு விட்டு,அவர்கள் கண் இமைத்து மூடுவதற்குள்ஒரே சுற்றில், எம்.ஜீஆர் கத்தி சுழலும் லாவகத்தில்,சூப்பர்மேன் உடை மாறும் அளவில்ஹாரி பாட்டர் 'ஸ்பூஃபியோ !!' சொல்லும் வேகத்தில்நீலமலைத் திருடனில் ரஞ்சன் குதிரை ஓட்டும்நடையில்,பனிக்கட்டிகள்,குன்றுகளாக நடைபாதை வரைதள்ளப் பட்டன.நான் ஒரு சூடான டீ எல்லோருக்கும் கொடுக்கலாமாஎன்று செயல் படுத்துவதர்கு ம்உன்னாள் அவர் ட்ஹன் வீடு வரை பனியை விரட்டிக் கொண்டே போய்விட்டார்.சாதரணமாக 3 மணி நேரம் பிழிந்து எடுக்கும் வேலைஇன்று அரை மணி நேரத்தில் முடிந்தது.


கலியாவது ஒண்ணாவது,''chivalry is still there''....


அப்படியே உள்ளே வந்து பாப்பாவுக்காகப் பாடல் போடலாம் என்று 'மலர்ந்தும் மலராத'பாட்டுக்காக ராகா.காம் போனால் மயங்குகிறாள்ஒரு மாது பாடலும் கண்ணில் பட்டது.சாவித்திரிகணேஷ் என்றே தன்னைஇக் கூபிடச் சொல்லும் நடிகையர் திலகத்தின் ம்உகமும் அவர் நடிப்பும் ஞாபகத்துக்கு வர,


திரையில் மிகவும் அழகான காவியம் காதல் காட்சிகளில் படைத்த அவர்கள் இருவரையும் நினைத்தேன்.இங்கே அந்தப் பாடலைச் சேர்க்க முயற்சி செய்து விட்டு விட்டேன்.நீங்களும் கேட்டுப் பாருங்களேன்.எல்லோருக்கும் அன்பு அன்பர்கள் தின வாழ்த்துகள்.இதோ பனியும் போய்க் கொண்டு இருக்கிறது. சூரியனும் வந்துவிட்டான்.


13 comments:

முத்துலெட்சுமி said...

உங்களுக்கும் அன்பர்கள் தின வாழ்த்து வல்லி.:))

இலவசக்கொத்தனார் said...

ஆமாம், இங்கயும் அதே நிலமைதான். நேத்திக்கு சாயங்காலம் பூரா இந்த வேலண்டைன் கார்டுகள் செய்யறது கழிந்தது. அதுல வீட்டில் இருதய வடிவில் க்ரேயான் எல்லாம் செய்து கார்டில் ஒட்டினோம்.

இன்னிக்கு ஸ்கூல் லீவு. அதனால பையன் ஒரே கடுப்பு. பனிப் பொழிவு அதிகமில்லை. ஆனா குளிரும் காற்றும் படுத்தி எடுக்குது.

மு.கார்த்திகேயன் said...

வல்லியம்மா, காதலுக்கு வயது கிடையாது..

வெள்ளிக்கம்பிகளில் ஆசைகளை கோர்த்து, முகச் சுருக்கத்தில் கனவுகளை பதுக்கி வாழ்வதும் காதுலுக்கு அழகே..

உங்களுக்கு அன்பர்கள் தின வாழ்த்துக்கள்!

பொன்ஸ்~~Poorna said...

பாட்டி,
பாட்டெல்லாம் விடுங்க,.. அந்த ஸ்னோ, ஸ்னோவைத் தள்ளின ஷோவல் அதெல்லாம் ரெண்டு போட்டோ சுட்டுப் போட்டிருக்கலாம்ல.,.. நானும் பார்த்திருப்பேன்.. :)

வல்லிசிம்ஹன் said...

லெட்சுமி என்கிற முத்துலட்சுமி
நன்றி.
உங்கள் குடும்பத்துக்கும் எங்கள் அன்பான வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

கிட்டத்தட்ட 34 கார்ட்.
அதில நெருங்கின தோழனுக்கு ஸ்பெஷல் கார்ட். வாத்தியாரம்மாவுக்கு கடிதம் என்று ஒரெ பிஸி.

தம்பிக்கும் கார்ட் செய்து அவனிடம் காட்டினான்.
அதுவும் ஈன்னு பார்த்தது. இரண்டு மாதத்தில அதால முடிஞ்சது வாய் நிறைய சிரிப்பு.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கார்த்திக்,
உங்க ஊரில நிறையப் பனியா?

இப்போதுதான் ஆரவாரமில்லாமல் அமைதியா வாலண்டைன் கொண்டாடலம்.:-0)
எதிர்பார்ப்பு, ஏமாத்தம் கிடையாது.

துளசி கோபால் said...

//தம்பிக்கும் கார்ட் செய்து அவனிடம் காட்டினான்.
அதுவும் ஈன்னு பார்த்தது. இரண்டு மாதத்தில
அதால முடிஞ்சது வாய் நிறைய சிரிப்பு. //

கற்பனை செஞ்சு பார்த்தேன். so cute:-)))))

என்னோட வாலண்டைன் ச்சீனாவில் (-:

நேத்து ஃபோன் செஞ்சப்ப ஹேப்பி வாலண்டைன் சொல்ல மறந்துட்டேன்(-:
போட்டும், நமக்கு தினம்தினம்தான் காதலர் தினம்:-))))

வல்லிசிம்ஹன் said...

வாங்க பொன்ஸ். பனி பத்தி எழுதினதான் வருவீங்களோ?:-)
ஷோவல் தானே ,அதான் நீங்க கத்துக் கொடுத்த மாதிரி போட்டொ போட்டாப் போறது.
பாட்டு இல்லாம பாட்டி என்ன பண்ணுவேன்.
அதாம்பா நம்ம லைஃபே.

வல்லிசிம்ஹன் said...

பாவமே துளசி.வந்தப்புறம் கொண்டாடிடுங்க.
என்ன வாங்கிட்டு வரார் பார்ப்போம்:-)
சரியாச் சொன்னீங்க நமக்கு என்னாளும் காதலர்தினம் தான்.
யாது ஊரே யாவரும் கேளிர் இல்லையா,.

Mathuraiampathi said...

எத்தனை நடிகர்கள் காதலர்களாக நடித்தாலும், எத்தனை டெக்னாலஜி சிறப்புகளை உபயோகித்து படப்பிடிப்பு நடத்தினாலும், காதலர்களாக ஜெமினி-சாவித்ரி போல யாரையும் நினைத்தும் பார்க்க முடிவதில்லை....அந்த படங்களில் வந்த பாடல்களூம், ஆகா, ஆகா, மிஸியம்மா ஒன்று போதுமே...

டீச்சர் சொன்னது போல நானும் தம்பிக்கும் கார்ட் செய்து காட்டிய காட்சியை கற்பனை செய்து பார்த்தேன். அருமை.

நன்றி வல்லியம்மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க மௌலி,
இப்போ வேணும்னா இந்த மாதிரிக் காதல் காட்சிகள் எடுபடுமோ என்னவோ.

மனசுக்கு ரொம்ப இதமான காட்சிகள் நடிப்பதில் இருவரையும் மிஞ்ச முடியாது.
உங்க குடும்பத்துக்கும் எங்க அன்பு வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

போட்டாச்சு!! போட்டாச்சு!!
படங்கள் போட்டாச்சு பொன்ஸ்.

ஷோவலும் மனிதரும்.
படையப்பாலே ஒருத்தர் ரஜினிகிட்ட கேப்பார்,'ஏன்ங்க நீங்க அந்தப் பாம்பு புத்தில எப்படீங்க கைய விட்டீங்கனு''
மறுபடி மறுபடி கேப்பார்.
உங்க பின்னூட்டத்தைப் பார்த்ததும் அந்த நினைவு வந்தது.:-)
நன்றி பொன்ஸ்.