Blog Archive

Monday, January 15, 2007

குலசேகர ஆழ்வார்



சீறிவிழும் தாயே போல் நீ இருந்தாலும்,
தாயை நினைத்து அழும் சேய் நான் என்று சொன்ன ஸ்ரீ குலசேகர ஆழ்வார் பற்றி எழுதலாம் என்று தோன்றியது.
மலையாள அரசனாக இருந்து
மாலின் மேல் கொண்ட பக்தியால் நாடு துறந்தவர்.
அவர் வணங்கிய தெய்வங்களில் ஒன்றான
வித்துவக்கோட்டு அம்மான் இதோ கருடன் மேல் எழுந்து அருளுகிறான்.

கண்ணனுக்கும் ஒரு கோவில் கட்டி இருக்கிறார் இவர்.
கேரளாவில் செங்கணூர் அருகில்
இந்தக் கோவில் இரூக்கிறதாம்.

இந்த ஆழ்வார் பக்தி நினைக்க நினைக்க அற்புதமாக இருக்கிறது.

முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மிந்ருசிம்ஹாச்சாரியார் ஸ்வாமிகளின் கதைகள் குறையொன்றுமில்லை
என்ற பெயருடன் இதுவரை 7 பதிவுகள் வந்து இருக்கின்றன.
அது எல்லோருக்கும் தெரிந்து இருக்கும்.
அழகாகக் கதைகள்

சொல்வதில் அவருக்கு நிகர் அவர்தான்.
அந்த சொற்பொழிவுகளில் ஒன்றில்
குலசேகர ஆழ்வார் பற்றி சொன்னது
பின் வரும் நிகழ்ச்சி.

குலசேகர ஆழ்வார் ராஜாவாக இருந்த போது,
ராமர் மேல் கொண்ட அதீத பக்தியால்,
அடிக்கடி பண்டிதர்களைக் கூப்பிட்டு ஸ்ரீராமாயணத்தைப் படிக்கச் சொல்லுவாராம்.

அப்படி ஒரு பாராயணத்தின் போது கதையில் மூழ்கிவிட்ட ராஜா காதில்

ராமனைக் கொல்லும் நோக்கோடு கரதூஷணர்கள்
சேனை ஜனஸ்தானத்தில் திரண்டதாகக்
கேட்டதும்,
அரசன் உடனே எழுந்துவிட்டான்!!
ஆணையிடுகிறான் தன் சேனைகளை
உடனே ராமன் உதவிக்கு விரையும்படி.

சபையில் இருப்பார் விரைந்துவந்து அரசனைச் சமாதானப்
படுத்துகிறார்கள்.
நாம் இருப்பது கலியுகம்.

ஸ்ரீராமன் சக்கரவர்த்தி ஆனது திரேதாயுகத்தில்.
கரதூஷணவதம் முடிந்தது.
ராமன் க்ஷேமமாக இருக்கிறான் என்றெல்லாம்
சொல்லி அவரைச் சமாதானப் படுத்துகீறார்கள்.

இப்படி ஒரு பக்தியா என்று ஆச்சரியமாக இல்லை?

எல்லா ஆழ்வார்களுக்கும் தனிக் கோவில்கள் இருக்க
இவருக்கு மட்டும் அப்படி ஒரு ஏற்பாடு இல்லாமல் இருந்ததாம்.

சில பல பேர் முயற்சியில் அந்தக் குறையும் தீர்ந்தது.

வாழி குலசேகரன் நாமம்.
வாழ்க சீர் அடியாரெல்லாம்.

5 comments:

enRenRum-anbudan.BALA said...

வல்லி அவர்க்ளே,

அருமையான பதிவும், அழகான படங்களும் !

வித்துவக்கோட்டு அம்மானை தரிசிக்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி !

//ராமனைக் கொல்லும் நோக்கோடு கரதூஷணர்கள்
சேனை ஜனஸ்தானத்தில் திரண்டதாகக்
கேட்டதும்,
அரசன் உடனே எழுந்துவிட்டான்!!
ஆணையிடுகிறான் தன் சேனைகளை
உடனே ராமன் உதவிக்கு விரையும்படி.

சபையில் இருப்பார் விரைந்துவந்து அரசனைச் சமாதானப்
படுத்துகிறார்கள்.
நாம் இருப்பது கலியுகம்.
//

இதைப் பற்றி வாசித்திருக்கிறேன் !!!

எ.அ.பாலா

ஜெயஸ்ரீ said...

//சீறிவிழும் தாயே போல் நீ இருந்தாலும்,
தாயை நினைத்து அழும் சேய் நான் என்று சொன்ன ஸ்ரீ குலசேகர ஆழ்வார் பற்றி எழுதலாம் என்று தோன்றியது.//


"அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன்று இருந்தேனே"

அம்மா கோபித்தாலும் அடித்தாலும் அவள் அன்பை நினைத்தே ஏங்கியழும் குழந்தைபோல் எத்தனை சோதனை தந்தாலும் உன் தாளன்றி வேறு புகலில்லை.

அம்மா அடிப்பதும் அன்பு மிகுதியாலல்லவா? நம் தவறைத் திருத்த வேண்டியல்லவா ?

கத்தியால் கீறி அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவன்மேல் நோயாளி கோபம் கொள்ளப்போமோ? புரையோடிப்போன நம் பாவங்களை சுட்டெரிக்கும் வைத்தியனல்லவா அவன்?

"வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக்கோட் டம்மா!நீ
ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே"

பொங்கல் நன்னாளில் இதை நினைவு கூர வைத்துவிட்டீர்கள்.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் வல்லி அம்மா !

வல்லிசிம்ஹன் said...

நன்றி பாலா.
முக்கூர் அவர்களின் சொல்லருமை மிக அழகாக இருக்கும். உடனே மனதில் பதிந்துவிடும்.

வல்லிசிம்ஹன் said...

ஜெயஸ்ரீ,
உங்கள் பதிவுக்கும் வரவேண்டும்
என்று நினைப்பேன்.
இயலுவதில்லை.
அரிசினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும்
மற்றவள் தன்அருள் நினைந்தே அழும் குழவியை'' எழுத நினைத்தேன். என் தாயார் நினைவு வந்துவிட்டது. உடனே
அதைத் தாண்டி எழுதிவிட்டேன்.:-0)
நன்றி ஜெயஸ்ரீ.
பாசுரங்களில் இது பிடிக்கும் அதுபிடிக்காது என்று சொல்ல முடியாது. கூடாது.
இருந்தாலும் மனசுக்கு மிகவும் இதமான பாசுரங்களில் இவை அடங்கும்.

Mohan Madwachar said...

நன்றி. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.