Blog Archive

Saturday, January 13, 2007

ஆடினானே கண்ணன் ஆடினானே





சிற்றம்சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன் பொற்றாமரை அடியே
போற்றும் பொருள் கேளாய் .
வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கப் ப்அறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்டெரியல்
பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உறைப்பான் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.


திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே1
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயர் அரங்கற்கே கண்ணி உகந்து அளித்தாள் வாழியே!
மருவாறும் திருமல்லி வளநாடு வாழியே!
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப்பதங்கள் வாழியே!
ஆண்டாள் திருவடிகளே சரணம்.


மார்கழி முப்பதும் மகிழ்வித்த ''கண்ணன் பாட்டும் '' வாழியே என்று சேர்த்துக் கொள்ளுகிறேன்.

13 comments:

VSK said...

அங்கும், இங்கும், எங்கும், வந்து, படித்து, பாராட்டி, மகிழ்ந்து, மறுமொழியிட்டு, மகிழ்வித்த உங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

ஷைலஜா said...

பார்க்கப் பதினாயிரம் கண் வேண்டுமே- பரந்தாமனின் அழகினைப்
பார்க்க பதினாயிரம் கண் வேண்டுமே

சீரார் மதில்கள் சூழ் அரங்கநகர் ஆளும்
காரார்ந்த மேனியன் எந்தன் கண்ணன் கருமணியைப்( பார்க்க)

பன்னிரு ஆழ்வார்கள் தமிழ்
இன்னிசைத்துப்பாட அதில்
மண்ணவரும் விண்ணவரும்
மனம் மகிழ
எண்ணிலா மகிழ்ச்சியிலே
மண்ணிடைக்காவிரியாள்தன்
தெந்நீர்கொண்டு
தேவனவன் அடிவருட
வெண்ணை உண்ட கண்ணன் புகழ்
வேதமும் எடுத்துரைக்க
அண்ணல் அரங்கராஜன்
ஆண்டாளைக்கரம் பிடிக்க(பார்க்க)

பாதம் கண்டதும் கற்பனையில் பாட்டு வந்துவிட்டது வல்லிம்மா..
சீக்ரமா பாடி ஒலிவடிவில் உங்களுக்கு அனுப்பறேன்.பரந்தாமன் பாதம் கண்ணிலேயே நிற்கிறது
திருவரங்கப்ரியா

Anonymous said...

வல்லி!
பாடல்கள் அழகுதமிழ்; படங்களோ!!கொள்ளையழகு!!
யோகன் பாரிஸ்

வல்லிசிம்ஹன் said...

எஸ்.கே சார் என்ன ஒரு அருமையான வாழ்த்து.
இப்படி ஒரு நட்பு உலகம் எனக்குக் கிடைக்க எங்கேயோ நானும் தபஸ் செய்திருக்கணும்.
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் போகி,பொங்கல்,கனு ,காணும் பொங்கல் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

ஷைலஜா, வரணும் வரணும்.
சீக்கிரம் பாடி அனுப்புங்க.

வரப்பிரசாதம் தான் உங்களுக்கு. அரங்கனை நினைத்ததும் பாடல் வந்துவிட்டது.

இத்தனை பாசமா அவன்மேல்?
கொடுத்து வைத்தவர்கள் நாங்கள்தான்.
என்னால் ஆண்டாள் பாடியதைப் பதிவிடத்தான் முடிந்தது. நீங்கள் அவள் உள்ளம் கவர் கண்ணனையே பாடிவிட்டீர்கள்.
மனம் நிறைந்த வாழ்த்துகள்.

கனுப்பிடி வைத்து, காக்காய்ப் பிடி வைத்து என்னாளும் பொன்னாளாக இருக்க அரங்கனையே பிரார்த்திக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

யோகன், கண்ணனிப் பாட ஆண்டாள் எடுத்தது ஒரு பிறவி.
நாமெல்லோரும் இந்தப் பிறவி இன்னும் எத்தனை பிறவி அவன் கொடுத்தாலும் மறக்காமல் அவன் தாள் நினைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
உங்களுக்கும் குடும்பத்திற்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துகள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

வல்லி அம்மா படங்கள் அற்புதம் நேரே பார்ப்பது போல் இருக்கிறது.பொங்கல் வாழ்த்துக்கள்.பையனும் மாட்டுப் பொண்ணும் வந்திருக்கிறார்கள்.அதுவும் அந்தக்கால்கள் இருக்கிறதே ஊத்துக்காடு சொன்னதுபோல்

"ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட
மயிலின் இறகாட, மகர்க்குழையாட, மதிவதன்மாட,
மயக்கும் விழியாட,மலரணிகளாட,மலர்மகளும்பாட,
இது கனவோ நனவோ என மனம் நிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட" போல இருக்கிறது.

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஷைலாஜா மேடம் பாடல் பாடியவுடன் எங்களுக்கும் தெரியப் படுத்துங்கள்

ரங்கா - Ranga said...

சிறுவயதில் மார்கழியில் தினமும் திருப்பாவை சொல்லி முடித்து நீங்கள் பதிந்த பாடலோடும், இந்தப் பாடல்களையும் சொன்னதுண்டு. புத்தகத்தில் பார்க்காமல் செவிவழியாகவே இந்தப் பாடல்களைச் சொல்லியிருக்கிறேன், என் தம்பியுடன் சேர்ந்து. பிழையிருந்தால் திருத்தவும் :-)

கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடம் தோன்றுமூர் நீதியால்
நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர்.

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்திற்கும் வித்தாகும் கோதைதமிழ்
அய்யைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு.

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச பொங்கல் இனிக்கணுமானால் குடும்பம் கூட வேண்டும்.

இன்றுபோல என்றும் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகள்.
கண்ணன் எப்பவும் ஆடட்டும்.
ஆடி நன்மைகளைப் பெருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

ரங்கா,
உங்களுக்கு மறதி என்பது கிடையாது,
எனக்குத் தெரியும்.
தம்பியும் நீங்களும் சொன்ன பாடலையும் பதிந்து இருக்க வேண்டும்.
நான் பூர்த்தி செய்யாததை நீங்கள் செய்துவிட்டீர்கள்.
பொங்கல்,கனு,மாட்டுப்பொங்கல் வாழ்த்துகள்.சென்னையில் இருந்தால் மாடு வசலுக்கு வரும் மணியைச் சத்தமிட்டுக் கொண்டு:-))

Geetha Sambasivam said...

கண்ணன் ஆடினதுக்கு அப்புறம் ஒன்றும் எழுதவில்லையா? வல்லி, தாமதமான பொங்கல் வாழ்த்துக்கள். சிகாகோ குளிரிலும் இந்த மாதிரி நல்ல பதிவுகளைத் தரும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

வல்லிசிம்ஹன் said...

கீதா, இரண்டு மூணு பதிவு எழுதிட்டேனே.
உங்க கண்ணனும் இணையத்துக்கு வந்துட்டார் போல இருக்கு.
அவருக்கு வாழ்த்துகள். அத்தையைப் போலவே பரிவான பதிவுகள் எழுதணும்.
குளிர் என்னைப்பிடி உன்னைப்பிடினு இருக்கு.
கையில் கிளவ்ஸ் போடாதபோது எழுதலாம்.!!