Blog Archive

Wednesday, January 10, 2007

சாரங்கபாணி கோவில்,கும்பகோணம் ஒரு மீள்பதிவு

Posted by Picasaமுதல் தடவை இந்த கோவில் போகும்போது ,நடந்து எல்லா சன்னிதியும் பார்க்க முடியுமா என்ற நினைவு வந்து மலைப்பாக இருந்தது.
அந்த நினைப்பு இந்த யானையைப் பார்த்ததும் ஓடிவிட்டது.
சோழ அரசன் கட்டின எத்தனையொ கோவில்களில் ஸ்ரீ சாரங்கபாணி கோவிலும் ஒன்று. சோழ அரசன் ஆரம்பித்து அவன் பரம்பரையால் பாதுகாக்கப்பட்ட இந்த கோவில் நிர்மாணப் பணி,
சமீபத்தில் புனருத்தாரணமும் கண்டது.
இங்கே எழுந்து அருளியிருக்கும் அப்பன் ஆராவமுதன் பள்ளிகொண்ட பெருமாளாய் காட்சி கொடுக்கிறான்.

கும்பகோணம் கோவில்கள் பற்றி எழுத ஒரு பதிவு போதாது என்று எல்லோருக்கும் தெரியும்.
ஆனாலும் அடிப்படையில் ஒரு தென் மாவட்டத்தைச் சேர்ந்தவளாக இருப்பதால் எனக்கு முதல் முறையாக இத்தனை கோவில்களையும் பார்ப்பது நிறைய பிரமிப்பாக இருந்தது.
பிரயாணத் திட்டமோ 2 நாட்களுக்கு. பார்க்க வேண்டிய கோவில்களொ 7, 8 இருக்கும்.
10 வருடங்களுக்கு முன்னால் :-)))))))
திடம் நிறைய. இருந்தாலும், திட்டம் போடும் திறன் என்னவோ இப்போது இருப்பதுதான். மாறவில்லை என்றுதான் சொல்கிறேன்.

கும்பேஸ்வரர்,இராமசாமி கோவில், நாச்சியார் கோவில்,
திருவிண்ணகரம் ஒப்பிலிஅப்பன், திருநாகெஸ்வரம்....
இதைத்தவிர கும்பகோண்த்தைச் சுற்றி உள்ள கோவில்கள் வேறு.
சாரங்கபாணி அப்பனை உடனே பார்ப்பதற்குக் காரணம், நாஙகள் தங்கி இருந்த விடுதி அதை ஒட்டி இருந்ததால் தான்.
விடுதி சன்னலில் இருந்து பார்க்கும்போது கண்ணீல் பட்ட விமானமே கம்பீரமாக மனதுக்கு இதம் அளிப்பதாக இருந்தது.

கோபுர வாசலைத் தாண்டி ஸ்ரீ கோமளவல்லித் தாயைத் தரிசிக்கிறோம்.
அவளைப் படிதாண்டாப் பத்தினி என்றுதான் அழைக்கிறார்கள். கோவில் பிரகாரத்தை விட்டு வெளியே வரமாட்டர்களாம்.ஏன் இந்த ஏற்பாடு என்று எஙளுக்கு விளக்கப் படவில்லை.


ஆனால் எல்லா ஐயமும் தாயின் அழகையும், ஐச்வர்யத்தையும், கருணையையும் உணர்ந்தபோது விலகிவிட்டது. பெயருக்கு ஏற்றபடி கோமளமாகத்தான் காட்சி தருகிறாள் அன்னை.
அப்படியே நம்மை அரவணைத்துக் கொள்ளும் தாய்மை.
தாயைப் பார்த்த பெருமையுடன் வெளியே வருகிறோம். தந்தையின் சன்னிதி கண்ணில் படுகிறது. கம்பீரமான யானைகளும், குதிரைகளும் இழுக்கும் தேர்தான் கருவறையாகக் காட்சி தருகிறது.

அதைதான் இந்த பதிவுக்குக் கொடுக்க வேண்டும் என்றுதான் தோன்றியது. அப்பன் சாரங்கபாணியாக வில்லேந்திய கையுடன் மணமகளைக் கைத்தலம் பற்றுகிறான்.
கருவறையில் பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கும் பெருமான் சற்றே எழுந்தகோலத்தைப் பற்றீகேட்டபோது,
அங்கிருந்த பட்டாசாரியர் சொன்னது இது.
பெருமாளைத் தரிசனம் செய்ய ஆவலோடு வரும் திருமழிசை ஆழ்வார் உற்ங்கிக் கொண்டிருக்கும் அப்பனைப் பார்த்துத் தான் வந்து இருப்பதை அறிவிக்கிறார்.
உடனே அதுவரை சயனித்து இருந்த மால் சற்றே எழுந்து பார்க்கிராராம்.
ஏற்கனவே களைத்து உறங்கும் உன்னை மீண்டும் எழுப்ப எனக்கு மனம் வரவில்லை ,அதனால் மறுபடி உறங்கப்போ என்றாராம். அதனால் பெருமாள் அப்படியே இருந்து விட்டார்.இப்போதும் அதே பாதி சயனித்தப், பாதி எழுந்த நிலையில் இருக்கிரார்.
ஆராவமுதனும், கோமளவல்லித்தாயும் எல்லொரையும் சுகமாக வைத்திருக்கட்டும்.

10 comments:

துளசி கோபால் said...

சூப்பர் கோயில் & சூப்பர் யானை.

இன்னும் மத்த கோயில்களையும் பத்தி எழுதுங்களேன்.

லலிதாராம் said...

SaarangapaaNi is a great temple and an interesting one too.

Gopura vaayillai, assault-aa thaaNDi pOiteengaLE. The interesting part in the gopuram is that, u find quite a few sculptures related to Shiva.

Saivite sculptures in a vaishnavite temple? kuzappam varudhaa? yes! during the nayak regime several dilapidated temples were reconstructed. In that process, many a times, remains of 3-4 temples were used to build as one temple. It was probably on such happening that has resulted in saiviteicons on the vaishnavite temple Gopuram.

The speciality of the gopuram theriyuma?

There are only 3 attempts in south indian temples that try and show case all the 'natya karaNas' described in the dance literature 'Natya Sastra' by Bharatha. The earliest is the incomplete work thanjai periya koil (Rajarajeeswaram). The other one is Chidambaram gopuram. The third one is at sarangapaaNi temple's gopuram. 'daNdu' a member of shiva's court, who is said to have learnt the bharatha natya from lord shiva himself, is portrayed as dancer in the sculptures. (of course, there are some scholars who identify the dancing icon as Shiva, Krishna and murugan too).

The temple built in the form of a chariot has several other beautiful dance sculptures.

வல்லிசிம்ஹன் said...

நன்றி லலிதாராம்.
முதல் டைம் வருகைக்கு.

கோபுரம் பார்க்காமல் விட்டது தப்பு தான். நான் எப்போதும் தடுக்காமல் இருக்க நிலம் பார்த்து நடக்கும் ஒல்ட் லேடி. விழுவதில் ரொம்பப் பழக்கம்.அடுத்த தரம் கண்டிப்பாகப் பார்க்கிறென்.

ஜெ. ராம்கி said...

//கும்பகோணம் கோவில்கள் பற்றி எழுத ஒரு பதிவு போதாது என்று எல்லோருக்கும் தெரியும்.
ஆனாலும் அடிப்படையில் ஒரு தென் மாவட்டத்தைச் சேர்ந்தவளாக இருப்பதால் எனக்கு முதல் முறையாக இத்தனை கோவில்களையும் பார்ப்பது நிறைய பிரமிப்பாக இருந்தது

We need a person like you to get ur experience. Pl. keep it up!

வல்லிசிம்ஹன் said...

ramki, thak you for taking time ti visit my blog. yes i am gathering few more details. will share my good " kovil times with you."

தி. ரா. ச.(T.R.C.) said...

உன் அடியாரான நான் வ்ந்திருக்கிறேன் நீ படுத்துக்கொண்டு இருக்கிறாயா என்றார் திருமிழிசை ஆழ்வார். உடனே ஆண்டவனும் பதறி கொண்டு எழுந்தானாம். அதைப் பார்த்ததும் ஆழ்வாருக்கே மனம் பொறுக்காமல் அப்படியே"கிடந்தவாறு எழுந்திறுந்து பாரும்" என்றரம். அதனால்தான் தலையை மாத்திரம் தூக்கிய நிலையில் தரிசனம்.

Anonymous said...

வல்லி
இப்பதிவு கும்பகோணம் சாரங்கபாணி கோவிலுக்கு போய் வந்த்துமாதிரி ஒரு உணர்வை தந்தது,பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

நல் வரவு தி.ரா.ச.

உங்கள் பரமாச்சார்யார் பதிவும் பார்த்தேன்.அதற்கும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

செல்லி,
வாங்கப்பா.
கோவிலில் அனுபவித்ததில் கால்வாசி கூட எழுதவில்லை.
நீங்கள் ரசித்ததிற்கு நன்றி.

வடுவூர் குமார் said...

நான் போனபோது எனக்கு வயசு கம்ம்மி,அதனால்...
அது இங்கே வேண்டாம்.:-))
இன்னொறு முறை போகும் போது தவறாமல் போகவேண்டும்.