About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Saturday, January 06, 2007

மீண்டும் பாட்டி...உதவியா..உபத்திரவமாஒரே இருட்டாக இருக்கிறதே மணி நாலரை தானெ ஆகிறது என்று நினைத்ததை(நான்) வாய்விட்டு சொல்லிக் கொண்டே வெளியே வந்து காரில் ஏறி வீட்டுக்குத்
திரும்பினோம்.
இங்கே குளிர்காலம் இன்னும் ஆரம்பிக்கலையாம்.
ஆனாலும் இலையுதிர்காலத்திலேயெ இதுபோல

சீக்கிரம் சூரிய அஸ்தமனமாகிவிடுமாம்.

'சரி போ, நாம என்ன யோகா பண்ணப் போறோமா
எப்போ சூரியன் உதிக்கும்,, எப்போ சன்செட் என்று யோசிக்க ?'
கூடவே வந்த பேரனின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டே வந்தேன்.

பயணம் நீண்டு ஒரு மணி கடந்து வீட்டுக்கு வந்தோம்.சென்னையில்,
மீனம்பாக்கத்துக்கும் நம்ம வீட்டுக்கும் மிஞ்சி மிஞ்சி 30 நிமிடம் ஆகும்.

போக்குவரத்து அதிகமான நாட்களில் இன்னும்
கொஞ்ச நேரம்.

இங்கு எல்லாமே பெரிய அளவு.
குரல்,சில மனிதர்கள்,
அவர்கள் வீட்டு நாய்கள்,சுற்றிவரும் முயல், அணில்
எல்லாம் ஆ,'என்றுதான் பார்க்க வைக்கின்றன.

அக்கம்பக்கத்தில் நம்ம ஊர்க்காரர்களும்
நிறைய. எல்லாம் பத்துவருடங்கள் முன்னமே
இங்கே வீடு வாங்கிக் கொண்டுவந்துவிட்டவர்கள்.

ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதைப் பார்க்கும்போது மிகவும் இனிமையாக இருக்கிறது.

எல்லாருமே சமவயதினர்.அதனால்
நோக்கம்,முன்னேற வேண்டும் என்ற துடிப்பு
ஒன்றாகத்தான் இருக்கிறது.

அவர்களில் ஒரு பெண் என்னைக் காய்கறிக்கடைக்கு அழைத்துப் போவதாக ஏற்பாடு.
அவரும் தன் வண்டியை எடுத்து வந்து விட்டார்.
நானும் குளிருக்கு மாற்று உடைகளைப் போட்டுக்
கொண்டு
(ஆமாம்மா, இங்கே,, இந்தக் காலிலே செருப்பு மாட்டு,
கடைக்குப் போ'' வழக்கமெல்லாம் கிடையாது.)
காய்கறி அங்காடி என்று பேரு. எல்லாம் இருந்தது அங்கே.
முறுக்கு,லட்டு,மிக்ஸர் எல்லா இந்தியப் பண்டங்களும்

அரிசி மாவு,உளுந்து மாவு,கடலை மாவு என்று வகை வகையாக மாவுகள் வரிசை,
மசாலா பொடிகள் இன்னும் எத்தனையோ.
அம்பிகா அப்பளம் ஏன் இன்னும் கடை விரிக்கலை
என்று தெரியலை.

கொள்வோர் ஏகம்.
மசாலாமோர்(more) ஒரு இந்தியக் கடை.
அங்கே காலையில் பக்கோடா பார்த்தால்
உடனே வாங்கிடணும். அப்புறம்னு நினைச்சால் வெறும் தட்டைப் பார்த்து விட்டுத் திரும்பலாம்.

இப்ப மட்டும் எனக்கு முறுக்கு சுத்த வந்தால்
(அத்தைக்கு மீசை)
எவ்வளவு சம்பாதிக்கலாம்னு நினைச்சுப் பெருமூச்சு வந்தது.
காய்கறி, அரிசி,பருப்பு வகையறா எல்லலம் வாங்கி வீட்டில் வைத்துவிட்டதும்,
ஒரு டிபன் செய்யலாமேனு ஐடியா.
கொத்தமல்லி ,கருவேப்பிலை,பச்சைமிளகாய், அரிசிமாவு கடலை மாவு
கலந்து மிளகாய் பஜ்ஜி செய்யலாம்.
எல்லோருக்கும் பிடிக்கும் என்று
இந்த ஊரில் விற்கும் ஒரு தாவர எண்ணையை
அடுப்பில் வ்ஆணலியை ஏற்றினேன்.
நல்ல அழகான ரத்னா ஸ்டோர் பிடி வைத்த
வாணலி.

மற்ற பண்டங்களைக் கலந்து ரெடி செய்து
மிளகாயை மாவில் தோய்த்தேன்.
அடுத்த நிமிடம் விபரீதமாக ஒரு அலார்ம் அடிக்க ஆரம்பித்தது.
மாடியிலிருந்து பேரன்,
என் வீட்டுக்காரர்,மாப்பிள்ளை,பெண் வந்து இருந்த உறவு எல்லோரும்
ஃபையர் அலாரம். ''''நிறுத்துங்கொ நிறுத்துங்கோ''
என்றால் எனக்கு அது எங்கே இருக்கு என்றே
தெரியவில்லை.

மாப்பிள்ளைதான் நிறுத்தினார்.
அதற்குள் பெண் வந்து அடுப்பை நிறுத்தினாள்.
இப்பொ எதுக்கும்மா இந்தக் கோட்டை அடுப்பை ஏத்தினாய் என்று ஒரே சிரிப்பு.
கோட்டை அடுப்பா இது என்று ஆராய்ந்தேன்.


''ஆமா, இருக்கீறதிலேயே இதுதான் பெரிய பர்னர்.
அதுல நல்ல புகையிற எண்ணை, அதுக்கு
மேலே ஒரு பைத்தியக்கார பிடி வச்ச பாத்திரம்.
மணி அடிக்காம என்ன பண்ணும்!!'''

ஆனால் அதிலேருந்து(அலார்மிலிருந்து)தண்ணீர் ஒன்றும் தெளிக்கலியே என்று கேட்டேன்.

அது டெட்ராய்ட் கதைமா.
(அங்கே கற்பூரம் காட்டி அபாய அறிவிப்பு செய்தேன்:-0)
இங்கே வெறும் அலார்ம் மட்டும்.
பாட்டரியைப் பிடுங்கினால்தான் நிக்கும்

கையெடுத்துக் கும்பிடாத குறையாக
எனக்கு மத்த பாத்திர அடுப்பு
விசேஷங்களையுமெடுத்துச்
சொன்னாள்.

பார்க்கலாம்....

ரொம்பக் கவனமாகக் கேட்டுக் கொண்டேன்.

12 comments:

SK said...

என்னங்க நீங்க!

அடுப்புக்கு மேலெயே ஒரு வெண்ட் ஃபேன் ஸ்விட்ச்[vent fan switch] இருக்குமே அதைஇப் போட்டுக்கலியா?
இல்லை, உங்க பொண்ணுதான் அதைச் சொல்லலியா?
என்னமோ போங்க!

நிறையக் கத்துக்க வேண்டியது இருக்கு நீங்க!

அப்புறம் அம்பிகா அப்பளம்லாம் இங்கே கிடைக்குதே!

அந்தப் பக்கத்து வீட்டுப் பொண்ணு ஒர்ரு வட இந்ந்ஹியாக் கடைக்கு கூட்ட்கிட்ட்டு போயிருச்சுன்னு நினைக்க்கிறேன்.
அடுத்த தடவை நம்ம ஆளுங்க கடைக்க்கு போங்க!

படிச்ச வரைக்கும் உபத்திரவம்னுதான் தோணுது!
ம்ம்ம்...போகப்போகப் பார்க்கலாம்!

தொடர்ந்து எழுதுங்க!

வல்லிசிம்ஹன் said...

எஸ்.கே சார், அதெல்லாம் போட்டும் புகை இந்தக் கைப்பிடியிலேருந்து வந்ததுனாலே இந்தப் பாடு.
அதற்கு என்ன பெயர் மறந்து போச்சே.
அதுதான் எண்ணையை விட அதிகமாகப் புகைந்து கழுத்தை அறுக்கிறது.சட்டுனு ஏதாவது செய்தோமா வெளில வந்தோமானு கிடையாது.
ஹைஃப்ளேம் கூடாது:-)

sivagnanamji(#16342789) said...

ஹரி ஓம்னு சமைக்க ஆரம்பிச்ச அன்னிக்கு ஏற்பட்ட பதட்டம் இன்னிக்கும் வந்ததா?

வல்லிசிம்ஹன் said...

ஆஹா சிஜி சார். விருந்து மசால் வடை வாசனை இங்கே
வந்திடுச்சே.

ஹரி ஓம்னு சொன்னது,லஸ் பிள்ளையாரை வேண்டிக்கிட்டது எல்லாம் அவங்களுக்கு மறந்து போச்சு.:-)
நாமும் பதட்டமும் சகோதரிகள்.எங்க மாமியாரைக் கேட்டால் தெரியும்!!

வல்லிசிம்ஹன் said...

எஸ்.கே சார்.அம்பிகா அப்பளம் விக்கிற கடைக்கு இன்னும் போகவில்லை.
நான் சொன்னது சரவணபவன் மாதிரியே அவங்களும் இங்கே கடை ஆரம்பிக்கலாமேனு தான்.
என்னை மாதிரி சுக வாசிகளுக்கு அது உபயோகமா இருக்கும் இல்லையா.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அம்பிகா அப்பளம் ஏன் இன்னும் கடை விரிக்கலை என்று தெரியலை//

பாருங்க நீங்க கேட்ட நேரம், கடை விரிச்சிடுவாங்க! :-)
இங்கே ஏற்கனவே வடகம் முதற்கொண்டு விற்கிறார்களே! SK சொன்னது போல அடுத்த முறை தென்னிந்தியக் கடைக்கும் போங்க வல்லியம்மா!

அது சரி, கடைசியில் பஜ்ஜிக் கதையைச் சொல்லவே இல்லையே! மொத்தம் எத்தனை பஜ்ஜிகள் பரிமாறப்பட்டன?

கீதா சாம்பசிவம் said...

"இப்போ மட்டும் எனக்கு முறுக்குச் சுத்த வந்தா" (அத்தைக்கு மீசை முளைச்சா), ஹிஹிஹி, வல்லி, இப்போத் தான் நான் கொஞ்சம் முறுக்கு நிஜம்மாவே சுத்தி வச்சிருக்கேன். அங்கே அனுப்பி வைக்கிறேன். ஒரு முறுக்கு 10 டாலருக்குக் கொடுத்துடுங்க. உங்களுக்குப் பாதி, எனக்குப் பாதி, சரியா? ஜிலேபி கூடச் சுத்துவேன். வேணும்னா முன்னாலேயே ஆர்டர் வாங்கி வச்சுக்குங்க.

கீதா சாம்பசிவம் said...

smoke detector என்னையும் பாடாப் படுத்தி இருக்கு. exhaust fan மட்டும் பத்தலை,. உங்க பொண்ணு வீடு தனி வீடுன்னு நினைக்கிறேன். கொஞ்சம் ஜன்னல் கதவுகளையும் திறந்துக்கலாம். கொஞ்ச நேரத்துக்கு மட்டும்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க ரவி சார்.பஜ்ஜி நன்றாக வந்தது. என்னால் சாப்பிட முடியாது. அதனால் பெருந்தன்மையாக(?)
விட்டுக் கொடுத்துவிட்டேன். என்ன ,, இந்த களேபரத்தில் ஒவ்வோரு பஜ்ஜியும் ஒரு ஒரு பட்சிபோல உருவம் கொண்டு வந்தது.
குண்டு குண்டாக, இல்லாட்டாத் தட்டையாக:-)

வல்லிசிம்ஹன் said...

தென்னிந்தயக் கடைக்கும் போகணும்.புடலங்காய்,அவரைக்காய் பார்த்தே நாள் ஆச்சு. போயிட்டு வந்து சொல்றேன்.

வல்லிசிம்ஹன் said...

கீதா ,ஏன் உங்க பயணக் கட்டுரைய நான் பாக்கலை?
ஆமாம் இது தனி வீடுதான்.அப்பாப்போ ஜன்னலைத் திறந்து விட்டுக்கறேன்.
ஊசி மாதிரி காத்து வரது.

வல்லிசிம்ஹன் said...

கீதா, நல்ல வழியா இருக்கே.
சொல்லுப்பா. செய்துடலாம்.
ஆனால் கடை வரை முறுக்கு போகணுமே.:-)
வீட்டிலேயே காலியாச்சுனா?
உங்களுக்கு 50
எனக்கு 50.