Blog Archive

Friday, January 05, 2007

தொடரும் குளறுபடிகள்---------3



நான் நினைத்தது, பழகின இடம் தானே. ஒன்றும் தொந்தரவு இருக்காது.

எளிமையான இடம்.

விமானத்தை விட்டு இறங்கினதும், கஸ்டம்ஸ் பிறகு வெளியே நடக்க வேண்டியதுதான்.
கீழே போனால் ரயில்வே ஸ்டேஷன்.

நேரே எங்கே போய் இறங்க வேண்டுமோ அங்கே போக வேண்டியதுதான்.
இங்கே உதவி என்று நான் எதிர்பார்த்தது
நம்மூர் போர்ட்டர் மாதிரி ஒரு ஆளை.
இந்த மாதிரி ஒரு நல்ல
அழகான வாட்டசாட்டமான பெண்ணைப் பார்த்ததும்., ஒன்றும் புரியவில்லை.
ஸ்விஸ்காரங்களுக்கு அவ்வளவாக ஆங்கிலத்தின்
மேல் ஈடுபாடு இல்லை.
அதனால் அவள் என்னைக் கையைப்பிடிக்காத குறையாக ,

'will you follow me?'
என்றதும் யோசனையாக இருந்தது.

விடி விடுவென்று நடந்த அந்தப் பெண்மணி நான்
பின்னால் வருகிறேனா என்று கண்காணித்த வண்ணம்
முன்னே போய் ஒரு சின்ன பிளாஸ்டிக் கார்ட்
வைத்து மடமட வென்று வெளியே கொண்டு
வந்துவிட்டாள்.
அங்கெ இருந்தது ஒரு சின்னக் கார்.

அதில் ஏறிக்கொள்ளச் சொல்லிக்
கதவையும் திறந்து விட்டாள்.

கார் போய் நின்றதும் நமது பெட்டிகள் வரும்
இடத்தில்,
என்னுடைய பெட்டிகளை அடையாளம் கண்டு
எடுத்துத் தள்ளுவண்டியில் வைத்துக் கொண்டாள்.

அத்தனை பயணிகள் நிற்கும் இடத்தில் நான் மட்டும் தனிப் படுத்தப் பட்ட நினைவு எனக்குப் பழக்கமில்லாத
கோபத்தைக் கொடுத்தது.

மறுபடியும் அவளுடன் நடக்க வாயிலில்
என் மகனைப் பார்த்தேன்.

''என்னடா பையா இது''
என்று கேட்டதற்கு இதுதாம்மா இங்கே கிடக்கிற
எஸ்கார்ட் சர்வீஸ்.
என்ன நம்ம ஊரில 20ரூபாயோட போற
செலவு இங்கே கொஞ்சம் ஜாஸ்தி'' என்றான்.
மேலே கேட்கப் பயமாக இருந்ததால்
நநன் அமைதியாகி விட்டேன்.


காப்பி குடிக்கும் இடத்திற்குப் போனதும்,
''தம்பி எனக்கு இதெல்லாம் இனிமேல் வேண்டாம்.
அம்மா நல்லாதான் இருக்கேன்.''
என்று சொல்லி நிறுத்திவிட்டேன்.
இரண்டு நாள் கழித்து சிகாகோ
பயணித்தோம்.

6 comments:

கோவி.கண்ணன் [GK] said...

//''என்னடா பையா இது''
என்று கேட்டதற்கு இதுதாம்மா இங்கே கிடக்கிற
எஸ்கார்ட் சர்வீஸ்.
என்ன நம்ம ஊரில 20ரூபாயோட போற
செலவு இங்கே கொஞ்சம் ஜாஸ்தி'' //

வல்லியம்மா...!

அங்கேயும் இப்படியா ?
:((

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கண்ணன், ஸ்விட்சர்லாண்ட் ரொம்ப காஸ்ட்லி .

பிள்ளைக்கு செலவு வைத்துவிட்டோமே என்று கவலையாக இருந்தது.

siva gnanamji(#18100882083107547329) said...

//பிள்ளைக்கு செலவு....கவலையா..//

பிள்ளய இவ்வளவு சம்பாதிக்க வச்ச
மகிழ்ச்சி இல்லையா?

குமரன் (Kumaran) said...

தனிமைப்பட்டதாக ஏன் அம்மா நினைக்கிறீர்கள். அடுத்த முறை இப்படி நடந்தால் ராஜ மரியாதை கிடைத்ததாக எண்ணிக் கொள்ளுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க சிஜி, நாமதான் படிக்க வைக்கிறோம் ,சம்பாத்தியம் செய்யறது எல்லாம் தெரியுது.

ஆனாலும் வேண்டாத செலவுதான் அது.ஊரில உலகத்துல பாட்டி தாத்தா சிரமப்ப்பட்டு எல்லாம் செய்கிறார்கள்.
இதுல எனக்கு மட்டும் ஒரெ ஒரு ஆளுக்காக ,ஏண்டாப்பா என்று தோன்றியது.மனுஷ புத்திதானே.

வல்லிசிம்ஹன் said...

குமரன் ராஜ மரியாதை ஏத்துக்கிறதுக்கும் ஒரு தகுதி வேணும் இல்லியா.
என் ஒருத்திக்கு இப்படி செலவாயிற்றே என்று நினைத்தேன்.
எல்லோரும் குடும்பஸ்தர்கள்.

இனிமேல் ஜாக்கிரதையாக இருப்பேன்.
இதற்கப்புறம் நடந்த கூத்து இன்னும் பிரமாதம்.