Blog Archive

Wednesday, January 03, 2007

தொடரும் குளறுபடிகள்.........2 ----வி.ஐ.பி



துபாயில் ,குளிர்காலத்துக்குத் தேவையான வேஷங்களை எல்லாம் வாங்கிக் கொண்டு
கிளம்பும் நேரம் அம்மா
தனியாகப் போறதுனாலே
சூரிக் ஏர்போர்ட்டில் அஸிஸ்டன்சுக்கு சொல்லுடா
என்று தம்பியிடம்
உத்தரவு போட்டான்.

காலை 5.30 மணிக்கு இறங்கும் நேரத்தில் இரண்டு டெர்மினல் கடந்து வருவதற்குள் அம்மா தொந்து போயிட்டா என்ன செய்யறது என்று பயம்.
இல்லைன்னால் திருவிழாக் குழந்தை
மாதிரி திரு திருனு பயணப் பெட்டி எடுக்கும்
இடத்திலேயே நின்று விடப் போகிறேன் என்று நினைப்போ.

எப்படியோ போய் சேர்ந்தால் போதும் என்று
விமானத்தில் உட்கார்ந்தாச்சு.
''மேம்/?
ஏசியன் டையபடிக்?
என்று ஸ்விஸ் தேவதை கேட்டாள்.
ஓ யெஸ் அது நான் தான் என்றேன்,.

அனுசரணையாக தட்டில் வைத்து விட்டுப் போனதைத் திறந்தால்
அதில் பச்சையாக ஏதோ ஒன்று.
கீரையோ தெரியவில்லை.
பிறகு வளைவு வளைவாக ஒருமாதிரி பழுப்புக் கலரில் ஏதோ ஒன்று.
மிக்க ஜாக்கிரதையாக அதை ஸ்பூனால் குத்தினால் வழுக்கியது.
நம்ம சாப்பாடு வழுக்காதே என்று நினைத்து,
அந்த அம்மாவை விளித்து
உணவின் பெயரைக் கேட்டேன்.

முட்டையும் டூனாவும் சேர்ந்த ஒரு கலவை.
அது உனக்கு நல்லது.

உனக்காகச் செய்த சுகர் ஃப்ரீ.
என்றாளே பார்க்கலாம்.

அப்போதுதான் பெரியவன் அம்மா எதாவது பூந்து விளையாடப் போகிறாரே என்று
சொன்ன சர்க்கரை நோய்க்கான சாப்பாடு இப்படி வந்துவிட்டது என்று புரிந்தது.
என் முணுமுணுக்கும் வயிற்றையும்
மனசையும் சமாதானப் படுத்தி

உறங்க முயற்சிப்பதற்குள் விமானம் தரை இறங்க ஆரம்பித்தது.
எதிரே உள்ள கணினி+டிவியில் இறங்க வேண்டிய டெர்மினல்,போகும் பாதை,வெளியே போகும் வழி என்று
எல்லாவற்றையும் விளக்கமாக வரைபடமாகக் காண்பித்தாலும் சரியாகக் கண்டுகொள்ளவில்லை.
எல்லாம் இறங்கிய பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று
மேலே இருந்த உடமைகளை எடுத்துக் கொண்டேன்.
'மாம் நீட் ஹெல்ப்? ' என்று புன்னகைத்த
பக்கத்துசீட்டுக்காரர், எனக்கு லக்கேஜை
எடுத்துக் கொடுத்தார்.
நன்றி சொன்னபடியே வாயிலுக்கு வந்தால் அங்கு நின்ற இன்னொரு பணிப்பெண்,
நீங்கதான் ஸொ &ஸோ/ என்று விசாரித்தார்.
எனக்கு முதலில் தோன்ரியது லேசான பயம்.

பெட்டியில்ல் ஏதாவது தகராறொ?
அப்படி ஒண்னும் கொண்டு வரலியே. அப்பளம்,மாவு,எண்ணை, திரவ பதார்த்தம்
என்று கணக்குப் போட்டுக் கொண்டே
நிமிர்ந்தால் எதிரே நீல வர்ண சீருடையில்
இன்னோரு பெண்.
அவளிடம் என்னை ஒப்படைத்த விமானப் பெண் கொஞ்சம் புன்னனகைத்தாள்.

நானும் பலியாடு மாதிரி மற்றவர்கள் என்னை ஏதோ மாதிரிபார்க்க புதிதாய் வந்த பெண் பின்னால் நடந்தேன்...

6 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

போங்க போங்க
அங்கே போனதும்
புது டிஃபன் கொடுப்பாங்க.....

வல்லிசிம்ஹன் said...

ஏன் சிஜி சார்,
நான் பட்டினியா வெளில வரேன். சுலபமா சொல்லீட்டீங்களே.
இருக்கட்டும் இருக்கட்டும்.:-)

கோவி.கண்ணன் [GK] said...

//
முட்டையும் டூனாவும் சேர்ந்த ஒரு கலவை.
அது உனக்கு நல்லது.

உனக்காகச் செய்த சுகர் ஃப்ரீ.
என்றாளே பார்க்கலாம்.
//

வல்லிசிம்ஹன்,

டயபெடிக் காராவங்களுக்கு வெளியில் எதும் கிடைக்காது... அதிலும் சைவ ஆசாமிகளாக இருப்பவர்களுக்கு பெரும் திண்டாட்டம் :(

//நானும் பலியாடு மாதிரி மற்றவர்கள் என்னை ஏதோ மாதிரிபார்க்க புதிதாய் வந்த பெண் பின்னால் நடந்தேன்...//

தொடர் சுவையாக உள்ளது,

சஸ்பென்ஸ் வைத்து முடித்திருக்கிங்க ... அடுத்த பகுதி எப்போது ?

வல்லிசிம்ஹன் said...

சஸ்பென்ஸே தான்.
என் படபட்ப்பு எனக்குத் தெரியும்.
மந்தமா இருக்கலாம் கண்ணன், படு மந்தம் சார். இந்தப் பதிவாளர்.:-)
நன்றி கோவி.

அடுத்த படைப்பு இன்று இரவு எல்லோரும் தூங்கிய பிறகு.
எல்லப் பலகாரமும் சாப்பிடலாம்னு
பார்த்தால் வெண்ணை,இல்லாட்ட ஒரு முரட்டு பன்:-0)
பயணம் இனிதாக இருக்க சர்க்கரை கூடாது.

குமரன் (Kumaran) said...

தொடரைத் தொடர்ந்து படிச்சுக்கிட்டு வர்றேன் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க குமரன் அப்புறம் எப்படி இருக்குனு சொல்லுங்க.;-0)