About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Friday, December 15, 2006

(அமெரிக்காவில்)வளரும் குழந்தைகள்

கள்ளம் கபடமில்லாமல் வளரும் குழந்தைகள் உலகமே தனி.

அக்கம்பக்கத்துக் குழந்தைகளின் நாளுக்கு நாள்

மாறும் வார்த்தை ஜாலங்கள், ஈடுபாடுகள்,வழக்கங்கள்,
பெற்றவர்களின் நோக்கம் ,பள்ளிகள் படுத்தும் பாடு

அவைகளையும் மீறி விளையாட்டில் மகிழும்

சின்னதுகளைப் பார்க்க எனக்கு உற்சாகமாக இருக்கும்.

சென்னையில் எங்களுக்குக் (குழந்தைகள்
வழக்கில்) மீனாட்சி வீடு என்றுதான்
பெயர்.

மீனம்மா எப்படி இருக்கிறதோ!
சுறுசுறுப்பாக இருப்பதாகப் பார்த்துக் கொள்பவர் சொன்னார்.
அதுவும் வளரும் குழந்தைதானே:-)

இங்கே இவர்களைப் பார்க்கும் போது ஒரு பக்கம் ரொம்ப வியப்பாக இருக்கிறது.
ஒரு பக்கம் பயமாக இருக்கிறது.

ஏகப்பட்ட அறிவு. சுலபமாக எதற்கும் தீர்வு காணும் திறமை.
பயம் இல்லாமல் மற்றவர்களை அணுகுவது,
எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது.

ஆனால் நம்ம ஊரில் வளரும் குழந்தைகள் அளவுக்கு சூக்ஷ்மம்
போதாதோ??
வாயளுக்கும் நேரம் நிறைய.

பேச்சு பேச்சு & more பேச்சு.
எல்லா இனக் குழந்தைகளும் படிக்கும் பள்ளியில் பெற்றோர்
வளர்ந்த விதம்,
பிள்ளைகள் வளர்க்கப் படுவதில்லை.,
என்பது உண்மை.

எனக்குத்தான் பேரன் ஸ்கூலில் வித்தியாசம் தெரிந்ததே ஒழிய,
அவனுக்கு எல்லா நாட்டவரும் சினேகிதர்கள்.

எல்லாம் "பட்டீஸ்"தான் ''டியூட்ஸ்"" தான்.
வண்டியை விட்டு இறங்கினதும் திரும்பிக் கூட பார்க்க நேரம் கிடையாது.
'பை பாட்டி 'என்று ஓடி விடுகிறான்.
அந்த பள்ளிக்கூடப் பைதான் எவ்வளவு லேசாக இருக்கு.
வீட்டுப்பாட பேபரும், அவன் வகுப்பு டீச்சரோட நோட்டும் தான் பையில்.
வாரந்தோறும் பள்ளிப் படிப்பைத் தவிர மற்ற புத்தகங்களும் படித்து அதை ரிகார்டும் செய்யவேண்டும்.
ஒரு நாள் '' மாட் மாத்''. நம்ம மனக் கணக்குதான்.
இன்னோரு நாள் ஸ்பெல்லிங் டெஸ்ட்.
வார முதலில் கடினமான் வார்த்தைகள் கொடுத்து
எழுதச் ,சொல்ல
பழகி வரச் சொல்லுகிறார்கள்.
அதில் தொடர்ந்து 100% பாஸ் வாங்கி விட்டால் ஒரு

பரிசுக் கூப்பான் வேற.

அதை வைத்துப் போன வாரம் அவனே பீட்சா
வாங்கிக் கொண்டான்.

இவன் மட்டும் என்று இல்லை. அனேகமாக எதித்த வீட்டு
நடாஷா, நம்ம தமிழ்ப் பையன் இன்னொண்ணு
எல்லாமே ஒவ்வொரு விதத்தில்
சமத்துதான்.

இதுகளுக்குப் ''ப்ளே டேட் ' 'வேற,.

என்னன்னால் அந்தக் க்ளாஸ்,
இந்தக் க்ளாஸ் போக, நேரம் இருக்கும் போது
அம்மாக்கள் தீர்மானம் செய்து வாரத்தில்
சனி ஞாயிறில்
மற்ற பிள்ளைகளோடு இரண்டு மணி ,மூன்று மணி என்று விளையாடவிட்டுக் கூட்டி வருகிறார்கள்.

மற்ற நேரம் வீட்டில் முடிந்தவரப் பாதுகாக்கப் பட்டத்
தொலைக்காட்சி
நிகழ்ச்சிகள்.

இதை எல்லாம் பார்த்து எனக்கு நிறைவாக இருக்கிறதா
என்றால் அதுவும் இல்லை.
ஏதோ ஒன்று இல்லை.

சண்டைப் போட்டுக் கொண்டாலும்
சேர்ந்தாலும் ஒரே வட்டத்துக்குள் தான்.
இது பெரியவர்களுக்கும் பொருந்தும்.

லிமிட்டட் எவ்ரிதிங்.
சுத்தம் சுத்தம்.
ஆனால் ஸ்விட்சர்லாண்ட் மாதிரி குழந்தைகள்
அழாதே என்று மிரட்டப் படுவதில்லை.அங்கேதான்
ரூல்ஸ்படி,
எல்லாம்.
நாய்,பூனை,குழந்தை எதுவும் கத்தாது.
பூ வாசனையா இருக்காது.
ஆனால் எல்லாம் அழகா இருக்கும்.

ஒரே புலம்பலாத் தெரிகிறதோ.
இதெல்லாம் நம்ம ஊருக்குத் திரும்பி விடுவோம் என்கிற தைரியத்தில் எழுத முடிகிறது.
இங்கே இருக்கிற பெற்றோர்கள் என்னைத்
தப்பா நினைக்க வேண்டாம்.

என்ன இருந்தாலும் நம்ம ஊரு நம்ம ஊருதான்.
குப்பையா இருந்தா என்ன.
சத்தமாதான் இருக்கட்டுமே.
சரி நாளை பிறக்கும் மார்கழி.
பிள்ளையார் கோவிலில் நாலரை மணிக்குத்
திருப்பாவை ஆரம்பிக்கும்.

மதி நிறைந்த நன்னாட்களில்
புறம் சொல்லாமல் முடிக்கிறேன்.:-)