Blog Archive

Friday, December 08, 2006

தாத்தா பாட்டி எக்ஸ்பிரஸ்



உங்களுக்குத் தெரியுமா சென்னையிலிருந்து நாள் தோறும்,
மாதங்கள் தோறும் இரவு புறப்படும்
விமானங்கள் பாட்டி,தாத்தாக்களைச் சுமந்து கொண்டு அமெரிக்காவோ,
இங்கிலாந்தோ,ஆஸ்திரேலியாவொ
போகின்றன.
அவைகளுக்கு கிராண்ட் பேரண்ட்ஸ்
எக்ஸ்பிரஸ் என்றும் பெயர்.

எதற்கு அந்தப் பெயர் வைத்தார்கள் என்பது
ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை.

இதுவரை விமானமே ஏறியிருக்க மாட்டார்கள்.
ஆனால் ஒரு பெண்ணொ இல்லை மகனோ

தங்கள் குழந்தைச் செல்வங்களை எதிபார்க்கிறார்கள்
என்றால் முதல் டெலிபோன் இரண்டு சைட் அம்மா அப்பாவுக்குத்தான்.

அப்போது ஆரம்பிக்கும் இந்தப் பயணத்தின்
விறுவிறுப்பு.
அமெரிகன் தூதரக வாசல், நேர்காணல்,அத்ற்கான படபடப்பு,
டிடி சரியா இருக்கா,
பாஸ்போர்ட்?

சரியாப் பார்க்கிறபடி உடை உடுத்தி இருக்கோமா/
அவன்(தூதரக அதிகாரிகள்)
ஏதாவது இடக்கு மடக்கா கேப்பானோ.
அதற்குள்
ஏற்கனவே போய் வந்தவர்கள் சொல்லும் புத்திமதிகள் பயமுறுத்தல்கள்
... ''உண்மையைப் பேசினா விட்டு விடுவான்''

எதுக்கும் பேரன் பிறப்பதற்கு உதவிக்குப்
போறேன்னு சொல்லாதீங்க.''

விஸிட் விசானு சொல்லிடுங்க.'

சில சமயம் கொடுக்க மாட்டான்.
எதுக்கும்ம்...'' இப்படித் தொடரும்.
ஒரு வழியா அங்கே விசா கௌவுண்டரில்
இரண்டே இரண்டு கேள்விகளுக்கு' வழிந்துவிட்டு'

அட இத்தனை சுலபமா விசா கிடைச்சுடுத்தே
என்று அதிசயப் பட்டால்
ஓ, உங்களுக்கு வயசு அறுபதுக்குப் பக்கம்

இல்லையா, அதான் மல்டிபிள் எண்ட்ரி கொடுத்திட்டான்
என்று சைட்ல காமெண்ட் கேக்கும்.

இதுக்கா இத்தனைப் பதட்டம் என்று
யோசிக்கும்போதுதான் புரியும்
நாம் சாதாரண இந்தியப் பிரஜைகள்
அவங்க ஊருக்கு ,அவங்க டூரிஸத்துக்கு
இன்னும் கொஞ்சமா இருந்தாலும்

பணம் சேர்க்கப் போறொம்னு மண்டையில் உறையும்படி
அறியாமை என்னும் பெரிய ஆமை
சொல்லும்.
அவசரம் அவசரமாக வாங்கிச் சேர்த்த பொருட்களுடன்,

நாம் மெதுவாக நாட்களைக் கடந்து

கிளம்பும் நேரமும் வந்துவிடும்.

அந்தப்பக்கம் பிள்ளையார், இந்தப் பக்கம் ஆஞ்சனேயர்னு எல்லா சாமிகள் கிட்டயும் சொல்லிட்டுக் கிளம்பி

நம்ம ஆகிருதிக்கும், முட்டு வலிக்கும் பொருந்தாத
எகானமி சீட்டில் அமர்ந்து,
பக்கத்தில் இருக்கிற வெள்ளைக்காரன் மேல் படாமல்

சுருக்கிக் கொண்டு,தூங்கும் நேரம் பார்த்து எழுப்பும்
விமானப் பணிப்பெண் கொடுக்கும் மசாலா மிகுந்த'' ஆசிய
சைவ உணவை''க் கடித்து,
நாசூக்காக வாய் துடைத்து
மறுபடியும் அந்தப் பெண் வந்து சாப்பாட்டுத் தட்டை
விலக்கும் வரை மோட்டு(விமான) வளையைப் பார்த்து

சாமி, கடவுளே எல்லாம் சரியா இருக்கணும்னு
வேண்டிக் கொண்டு இறங்கி,

கஷ்(ஸ்)டம் கடந்து,
அப்பாடா என்று நிமிரும்போது
பாட்டீ...
என்னும் குரல் காதில் விழும். முன்னைக்கு இப்போது
மிகவும் வளர்ந்துவிட்ட பேராண்டியைப்
பார்க்கும்போது அத்தனை களைப்பும்
எங்கேயோ போகும்.

சீக்கிரமே மற்ற இருவரையும் இன்னும்
ரெண்டு பெற்றுக் கொள்ளச் சொல்ல வேண்டும்
என்ற எண்ணத்தோடு ...
பயணம் தொடரும்.

21 comments:

சேதுக்கரசி said...

தத்ரூபம்!!

துளசி கோபால் said...

பேரன் போட்டோதானே?

சூப்பர்.

தோ நானும் கிளம்பறேன் மோட்டுவளையைப் பார்க்க:-))))

என்னோட பதவியை தாற்காலிகமாவோ அல்லது நிரந்தரமாவோ நம்ம சேதுக்கரசிக்குக் கொடுக்கலாமுன்னு ஒரு நினைப்பு கொஞ்சநாளா மனசுலெ இருக்கு:-))))

வல்லிசிம்ஹன் said...

அதே அதே!

வடுவூர் குமார் said...

அப்பாடி சிங்கப்பூர் வர இவ்வளவு கெடு பிடி கிடையாது.
கடைசி வரி" இன்னும் இரண்டு" அவுங்களுக்கு தோனும்!
எங்களுக்கு??
:-))

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி.
என்னது பதவியைத் தியாகம் செய்யறீங்களா.

குடிமக்கள் ஒத்துக்கொள்ளமாட்டோம்.:-)0
நினைப்பை விடவும்.

வல்லிசிம்ஹன் said...

யாரங்கே சிங்கப்பூரில் இருக்கும் குமாருக்கு இரண்டு ட்வின்ஸ்'
ஆர்டர் கொடுங்க.

Anonymous said...

அமெரிக்க தூதரகத்தில் என்னதாங்க நடக்குது.என் நாத்தனார் தனியாவே பிரசவம் பார்த்துகிட்டா. அவ மாமியார் மாமனாருக்கு ஒரு கேள்வி எத்தனை பையன் அவ்வளதான் முடியாது ன்னு சொல்லிட்டாங்க ..அப்பா அம்மா க்கு நேர்முகத்தேர்வு தேதி மாத்தி மாத்தி இப்போ பாப்பா முகம் பார்க்கும் போது தான் கிடைத்திருக்குது.[ ரெண்டு பேரும் ஒரே வயது ஜோடி தான்]
எதுக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணும்போல.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தாத்தா பாட்டி எக்ஸ்பிரஸ் சூப்ப்ர் ஃபாஸ்ட் வல்லியம்மா...

//பாட்டீ...
என்னும் குரல் காதில் விழும். முன்னைக்கு இப்போது
மிகவும் வளர்ந்துவிட்ட பேராண்டியைப்
பார்க்கும்போது அத்தனை களைப்பும்
எங்கேயோ போகும்//

ரொம்பவே அனுபவிச்சு லயிச்சு எழுதி இருக்கீங்க போல!

தாத்தா பாட்டி எக்ஸ்பிரஸில் back ground music என்னவோ? தாலாட்டா?
நாளை உங்களுக்காகவே பிள்ளைத் தமிழில் தனிப்பதிவு போடுகிறேன்!
Easy to sing தாலாட்டு!

SP.VR. SUBBIAH said...

இப்பொது இருக்கும் பெற்றோர்களுக்கு அவர்களுடைய மகன் அமெரிக்கக் குடியுரிமை கிடைக்க எவ்வளவு சிரமப் பட்டான் என்று தெரியும். அவன் அவர்களுக்கு இங்கே பிறந்த போது பிரசவச் செல்வு Rs.500 க்கு மேல் ஆகியிருக்காது.

ஆனால் தங்கள் பேரக்குழந்தை Rs.10 லெட்சம் செலவில் வந்து பிறந்தாலும் அமெரிக்காவில்தான் பிறக்கவேண்டும் என்று தீராத ஆசை

ஏன். அவன்/அவள் பிறக்கும்போதே அமெரிக்கக் குடியுரிமையோடு பிறக்கின்றானே/ளே!

பிறந்த அன்றே அதைவிடப் பெரிய பரிசு வேறு என்ன கிடைக்கப்போகிறது?

ஆனால் அதே குழந்தை பத்தாவது வயசில் தன்னைப் பார்க்க வந்திருக்கும் தஙகள் தாத்தாவின் அறிவுறைகளைக் கேட்கப் பிடிக்காமல், இப்படிச் சொல்வான்:

"You old man, no more advice to me! If you advice me again, I will call the police!"

கற்பனையல்ல - நடந்த சம்பவம் இது!

SP.VR.SUBBIAH

SP.VR. SUBBIAH said...

இப்பொது இருக்கும் பெற்றோர்களுக்கு அவர்களுடைய மகன் அமெரிக்கக் குடியுரிமை கிடைக்க எவ்வளவு சிரமப் பட்டான் என்று தெரியும். அவன் அவர்களுக்கு இங்கே பிறந்த போது பிரசவச் செல்வு Rs.500 க்கு மேல் ஆகியிருக்காது.

ஆனால் தங்கள் பேரக்குழந்தை Rs.10 லெட்சம் செலவில் வந்து பிறந்தாலும் அமெரிக்காவில்தான் பிறக்கவேண்டும் என்று தீராத ஆசை

ஏன். அவன்/அவள் பிறக்கும்போதே அமெரிக்கக் குடியுரிமையோடு பிறக்கின்றானே/ளே!

பிறந்த அன்றே அதைவிடப் பெரிய பரிசு வேறு என்ன கிடைக்கப்போகிறது?

ஆனால் அதே குழந்தை பத்தாவது வயசில் தன்னைப் பார்க்க வந்திருக்கும் தஙகள் தாத்தாவின் அறிவுறைகளைக் கேட்கப் பிடிக்காமல், இப்படிச் சொல்வான்:

"You old man, no more advice to me! If you advice me again, I will call the police!"

கற்பனையல்ல - நடந்த சம்பவம் இது!

SP.VR.SUBBIAH

வல்லிசிம்ஹன் said...

லக்ஷ்மி,
ஒரு மாதிரி தான் அமெரிக்கத் தூதரகம் இருக்கு. எங்க சம்பந்திகளுக்குக் கூட கிடைக்காமல் 3 மாதங்கள் கழித்துதான் போனார்கள்.
நாம இங்கே வந்து என்ன செய்துடப் போரோம்னு அவங்க பயப்படராங்கனு தெரியலை.
எங்க மருமகன் இங்கே 15 வருடமா இருக்காரு.அதனாலே போய்விட்டு வானு அனுப்பீட்டாங்களோ?

வல்லிசிம்ஹன் said...

ரவிசங்கர்,
புதுப் பேரன் குரல் கோரஜனை இல்லாமலே சூப்பர்.
அதனாலே அவன் பாடிதான் நாங்க ஆடறோம்:-)
பிள்ளைத்தமிழ் பார்க்கிறேன்.
ஷ்ரவண் பாட்டு எப்படி இருக்கும்?:-0)

வல்லிசிம்ஹன் said...

500ஆ?
இல்லை ஐயா 210ரூபாய்க்கு மேல் எங்க வீட்டுக்காரருக்கும் அம்மா அப்பாவுக்கும் செலவு வைக்க வில்லை நான்.

ஆனால் அதுவே அப்போ பிரமிப்பாக இருக்கும்.
நீங்க சொல்றது அத்தனையும் உண்மை.
என்னாலே பல விஷயங்களி ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அதுவில் இந்தக் குடியுரிமையும் ஒன்று.
ஆனால் மத்தவங்களை அவங்க விருப்பத்துக்கு விடுவதுதான் சரினு விட்டுவிடுவேன்.
எல்லாமே வேறு இல்லையா?

சேதுக்கரசி said...

//என்னோட பதவியை தாற்காலிகமாவோ அல்லது நிரந்தரமாவோ நம்ம சேதுக்கரசிக்குக் கொடுக்கலாமுன்னு ஒரு நினைப்பு கொஞ்சநாளா மனசுலெ இருக்கு:-))))//

இதெல்லாம் ரொம்ப ஓவருங்க துளசி :-)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அரசி,
பூச்சாண்டி காட்டறாங்க.

மெளலி (மதுரையம்பதி) said...

//"You old man, no more advice to me! If you advice me again, I will call the police!"//

இது மட்டுமானா பரவாயில்லை....911க்கு போன் போட்டு, போலிஸ் வந்து, பின் மகன்/மருமகள் வந்து அவர்கள் போலிஸிடம் பேசி, ஆனாலும் 1 நாள் முழுவதும் போலிஸ் ஸ்டேஷனில் கழித்து பின் அந்த நாள் இரவே இந்தியா திரும்பிய தாத்தா-பாட்டியை நான் அறிவேன்.

அந்த முதியவர்கள், மற்றும் மகன் - மருமகள் மன உளைச்சல்களை எப்படி எழுதுவதென்று எனக்கு தெரியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

அடக் கொடுமையே.
சில பசங்க இப்படித் தடம் மாறுவதற்குக் காரணமே அவங்க பெற்றவர்களின் அறியாமையும்,attitudeம்
ஒரு காரணம்.
இருந்தாலும் இது ரொம்ப ஓவர் இல்லையா.ஐயோ பாவம் அந்த வயதான தம்பதி.

குமரன் (Kumaran) said...

மிக மிக இயல்பா எழுதியிருக்கீங்க வல்லி அம்மா. உங்க பேரனும் அழகா இருக்கான். தாத்தா பாட்டி எக்ஸ்ப்ரஸ் வந்து கொண்டே தான் இருக்கிறது.

வாத்தியார் ஐயாவும் மௌல்ஸும் சொன்னது நடந்திருக்கலாம். ஆனால் அவை விதிவிலக்கு. 1% அல்லது 2% ஆகத் தான் இருக்கும். மிக நல்ல அனுபவங்கள் தருகின்ற பேரக்குழந்தைகள் தான் பெரும்பான்மையினர். ஆனாலும் அந்த ஓரிருவரின் கெட்ட அனுபவங்களும் பாவம் தான்.

வல்லிசிம்ஹன் said...

குமரன் வாங்கப்பா.
ஆமாம் நாம் நல்லதே செய்வோம்.
அரோரா
கோவிலில் நன்றாகப் பாடும் ஒரு 12 வயது சிறுவனைப் பார்த்தேன்.
அவன் பெற்றோர்கள் அவனை
நன்றாகத்தான் வளர்க்கிறார்கள்.

நம்ம ஊரிலும் எதிர்த்துப் பேசும் பேரப் பசங்களும் இருக்கிறார்கள்.
இது கலம் காலமாக இருந்து வருகிறது என்றுதான் தோன்றுகிறது.

Anonymous said...

அருமை , அத்தனையும் உண்மை

வல்லிசிம்ஹன் said...

சுண்தர்,நல் வரவு.முதல்தடவை வரீங்க போல.
உண்மையை எழுதறது ரொம்ப ஈஸி:-))