Blog Archive

Saturday, December 02, 2006

வந்ததே பனிஅருவிச் சாரல்



ஒரு இரவில் உலகமே மாறுமா என்ன?

வானிலை ஒளிபரப்பில் மதியம் 2 மணிக்கு ஸ்னோ வரும் என்றார்கள்.
வரவில்லை.
நமக்கு இது பழகின விஷயம்தானே. சொன்னால் மழை பெய்யாது.
சொல்லாவிட்டால் பெய்யும்.
அதுபோலத் தானா என்று நினைத்தேன்.
குளிர் தோலுக்குள்போய், நரம்பைத் தொட்டு,தசையைத் தாண்டி ,ரத்தத்தை ஊடுறுவியது.
தெர்மலுக்கும் பெப்பே க்ளௌவ்ஸுக்கும் பெப்பே என்று விட்டது.

நமக்குச் சென்னை நவம்பர் காற்றே
பழகின இதமான தென்றல்.
காரிலோ,பஸ்ஸிலொ போனால் காத்து முகத்தில் அடிக்கும்போது, ' கொஞ்சம் குளிர்தான் இன்னிக்கு'ம்னு போவோம்.

புத்தகக் கண்காட்சியும், கச்சேரிகளும், கச்சேரிக்குப் போகும் பட்டுப் புடவைகளும்,
அறுசுவை காண்டீன்களும்
விமரிசனங்களும் எல்லாத்துக்கும் மேலே தமிழ்ப் பத்திரிகைகளும்
மார்கழி உத்சவம் ஜெயா டிவியும்,
காலைப் பிரவசனங்களும் , சானல் மாற்றி, மாற்றிப் பார்க்கும்
கேட்கும்
பாட்டுக் கச்சேரிகளும்
ம்ம்.

இது எல்லாத்துக்கும் மாறுதல்

இப்போது இருக்கும் நிலைமை.
காலையில் பனி பூராவும் படர்ந்த வெளி.
முதல் நாள் இருந்த புல் படுக்கையைக் காணோம்.
பின்னால் இருக்கும்' யார்டி'லும் பனி.
வெள்ளை,வெள்ளை வெள்ளை.
கண்கூசும் வெள்ளை.

இந்த வாடையிலும் வெளியில் வந்து எட்டிப் பார்க்கும்
பக்கத்துவீட்டு அல்சேஷர்.
விளையாடும் பெரிய சைஸ் அணில்.
ராமர் பார்க்காத அணில்னு நினைக்கிறேன்.

கோடுகளில்லாமல் காட்சிகொடுக்கிறது.
முயல்கள் இந்தப் பனியில் அழகாக
பாதங்கள் பதித்து இருக்கின்றன.

எதிர்த்த பக்கத்து வீடுகளில் பனி விழுந்த
இடங்களில் குழந்தைகள் விளையாட ஆரம்பித்துவிட்டன.
அப்பாக்கள் பனி திரட்டியை வைத்து தள்ள,
வசதி படைத்தவர்கள் அவர்கள் ஸ்னோமஷினை வைத்து
இன்னும் வேகமாக சுத்தம் செய்ய ,

அம்மாக்களும் வேகமாக உதவி செய்ய
பாதைகள் பனியைவிட்டு விலகின.

எங்க வீட்டில கொஞ்சம் வலிமையான
அம்மா நான்தான்.
மத்தவங்களைத் தப்பு சொல்லவில்லை.
ஏதோ நம்மால் ஆனது கையில்
அந்த ஷோவலை எடுத்துப் போட்டோவுக்குப் போஸ் கொடுத்துவிட்டு

சின்னப் பசங்களுக்கு விட்டுக் கொடுத்துவிட்டேன்.
இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு

சுத்தமானது நடைபாதை.
இதையே சென்னையில் செய்து இருப்பேனா
என்று தெரியாது.
முதலில் காலை வேளையாக இருந்தால்
காய்கறிக்காரர்களிலிருந்து எல்லோருடனும்

பேசிவிட்டு,போனுக்குப் பதில் சொல்லி
வெளியில் வந்தால் வெய்யில் வந்துவிடும்.

அப்புறம் இருக்கவே இருக்கிறது
தமிழ்மணம்,தேன்கூடு
பதிவு,பதில் என்று.

நல்லவேளை எனக்கும் வேறுவிதமான வேலைகள்
கிடைக்கின்றன.
அதைப் பற்றி எழுத இப்போதைக்கு நேரமும் இருக்கிறது.
நான்கு மாதங்களை ஓட்டிவிடலாம் என்றுதான் நினைக்கிறேன்.

14 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷோவலை எடுத்துப் போட்டோவுக்குப் போஸ் கொடுத்துவிட்டு//

அமெரிக்காவில் வெள்ளிப் பனி மலையின் மீது உலாவிய வல்லியம்மா, வாழ்க!

அது சரி! பேசினப்புறம் காபி போட்டீர்களா? மாலைச் சிற்றுண்டி என்னவோ??? :-)) அதுவும் பனியில் சுடச்சுட!!

பொன்ஸ்~~Poorna said...

ஷோவல் கையோட ஒரு போட்டோ எடுத்துப் போட்டிருக்கலாம்ல? :))

பனி ரொம்ப நல்லா இருக்கு பார்க்க.. எல்லாம் நீங்க எடுத்த படங்களா?

துளசி கோபால் said...

சேஷர் நல்லா இருக்கார்.

பத்திரம். கவனமாக இருக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

ரவி,மாலைச் சிற்றுண்டி வடை என்று சொல்ல ஆசைதான்.
செய்யவில்லை.
''சரவணபவன்தான் வாராதோ
தெருக் கார்னரில் இருக்காதோ''
னு பாடிக்கொண்டே,
தூய பிரௌன் ப்ரெட்டை
டோஸ்ட் செய்து சாப்பிட்டேன்.அதுவும் அடுப்புப் பக்கத்தில் இதமான சூடு இருந்ததால் தான்.

வல்லிசிம்ஹன் said...

ஹலோ பொன்ஸ்.
முதல் இரண்டு படம் தம்பி பொண்ணு காமிரா.
அதுகூட அந்த ஆதிசேஷரை எடுத்ததும் கொஞ்சம் கலக்கமாகத் தான் இருக்கு.
ஏன் எங்க வீட்டு.......
போட்டொ எடுத்தேனு வழக்குப் போட்டா?

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி, அவர் மஹா
விசுவாசி.
நம்ம சைட் கேட் டைத் திறந்தால் அவர்
பாஞ்சு வரார்.
நடுக்கமாத்தான் இருக்கு.
அவங்களும் ஐரொப்பாக் கண்டத்துக் காரங்க.தனியா இருக்கிற பாட்டி.
இரண்டு பேரும் வாக்(ரன்)
போகும்போது அதிசயமா இருக்கும்.
:-)

வடுவூர் குமார் said...

முதுகில் கோடு இல்லாத அனிலை,சூசகமாக சொல்லிட்டீங்க!
நல்லா இருக்கு.

Geetha Sambasivam said...

நீங்க சிகாகோ போனதே தெரியலை. அவ்வளவு தூரத்தில் இருக்கேன்னு புரிஞ்சு போச்சு. பதிவும் சரி, படமும் சரி, நல்லா இருக்கு. ரொம்ப நாள் கழிச்சு இணையத்துக்கு வந்திருக்கிறதாலே எல்லாமே புதுசாத் தான் இருக்கு. நீங்க இருக்கிறது பையனோடா? பெண்ணோடா? பேரன் பிறந்தாச்சா? வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

கீதா உடம்பு சரியில்லைனு படிச்சேன்.
ரெண்டு மூணு நாளைக்கு இங்கே ஸ்னோ பெய்து தொடர்புகள் சரியில்லை.
பதிவில் சொல்லிவிட்டுத் தான் கிளம்பினேன்.
சாரிம்மா.
உடம்பு பரவாயில்லையா.
இங்கே பொண்ணுவீட்டில்தான் ஜாகை.
பேரன் வர இன்னும் 2நாள்.
பெருமாள் கிருபையில் எல்லாம் நல்லா நடக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் குமார்.
அதிசயமா இருக்கு. கோடுகள் இல்லாத அணில்கள். அதுவும்
பூனை சைஸ்.
ஒரே சுறுசுறுப்பு.

சேதுக்கரசி said...

உங்க பதிவிலிருந்து மறுமொழி திரட்டப்படற மாதிரி தெரியலியே?

வல்லிசிம்ஹன் said...

மறுமொழி திரட்டப் படுதே.
தேன்கூட்டில தெரியுது.
தமிழ்மணத்தில வர மாட்டேங்குது.
நானும் விட்டுட்டேன்.
இப்போ அரசி வந்தது தெரியுதே;-)

குமரன் (Kumaran) said...

கண்கூசும் வெண்மைன்னு சரியா சொன்னீங்க அம்மா. எனக்கும் அப்படித் தான் ஒவ்வொரு முறை பனி பெய்து முடிந்த பின்னும் தோன்றும். பின்னர் பழகிப் போய்விடும். :-)

எங்க ஊர் குளிரைப் பத்தி என்ன நினைச்சீங்க? நீங்க எத்தனை அடுக்கு உடை அணிந்து கொண்டு வந்தாலும் இண்டு இடுக்குகளில் புகுந்து வாட்டிவிடாது?! :-)

அல்சேஷரா? நல்லா தான் மரியாதை கொடுக்கிறீங்க. பாருங்க அல்சேஷர்ன்னு சொன்னவுடனே பொன்ஸும் துளசியக்காவும் வந்துட்டாங்க. :-)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம், குமரன்
பொன்ஸும் துளசியும் நீங்களும்

எல்லோரும் படிப்பது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.
குளிர்னா குளிர் அப்படிக்குளிருது.
இன்று கொஞ்சம் பரவாயில்லை.
மாப்பிள்ளை ஹீட்டரை (டெம்ப்)ஏத்திவிட்டாரோ என்னமோ.
ஆட்டொக்காரங்க மாதிரி சூடு வைக்க வேண்டி இருக்கிறது.:-)