Blog Archive

Tuesday, November 28, 2006

கிருஸ்துமஸ் வருகிறது





அக்கம்பக்கம் வீடுகளில் "தான்க்ஸ் கிவிங் '' நாட்கள் நடக்கும்போதே
கிரிஸ்துமஸ் விளக்குகள், வீட்டைச் சுற்றி அமைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஓ,நம்ம கார்த்திகை இவர்களுக்கும் வந்து விட்டது என்று சந்தோஷமாக இருக்கிறது.
அத்தனை அழகாக அமைப்பு.
இருள் சேரும் நேரம், விளக்குகள் ஒளிவிட்டுவருவதைப் பார்க்கும்போது,
ஒவ்வொரு நாட்டுக்கும் கொள்கைகள் வேறு மாதிரி இருந்த
போதிலிம் ஒளி இருட்டுக்கு ஒளிதானே விடுதலை தரும்.!

அங்கே கார்த்திகைக்கு இரண்டு அகல்விளக்குகள் தினமும்

அந்திநேரத்தில்.

மார்கழி மாதம் காலை பிரம்மமுஹூர்த்ததிற்கும்

வாசலில் கோலம் போடுவதற்கும், நிலைப்படி அருகே

அகல்களின் தீபஒளி,

பக்தி,பெருமாள் என்றெல்லாம் நினக்காவிட்டலும் கூட

''தீப மங்கள ஜோதி நமோ நம.'' என்று கைகூப்பத் தோன்றும்.

இந்த ஊரில் வீடுகளில் மத பேதம் இல்லாமல் எல்லோருமெ சீரியல் லைட்ஸும்,ரெயிண்டீர்,ஸாண்டாக்ளாஸ் என்று வகை வகையான

காற்றைடத்த பலூன்கள்.

அதுவும் மாலையில் 4 மணிக்கு இருட்டு வரும்போது

இந்த விளக்குகள் , சத்தமில்லாமல் ஓடும் உலகுக்கு சாட்சியாக

ஒளிகொடுக்கின்றன.

அதுவும் ஒரு வீட்டில் கோவில் கோபுரம் போலவே அலங்காரம் செய்து இருந்தார்கள்.

இந்த உலகமும் நல்லதுதான்.

கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்.




2 comments:

துளசி கோபால் said...

ஆமாம் வல்லி. கவனிச்சுப் பார்த்தோமுன்னா எல்லா மதப் பண்டிகைகளும்
அடுத்து அடுத்துதான் வருது.

இந்த அமெரிக்க ஃபேஷன் ( அலங்கார விளக்குகள்) இப்ப
இங்கேயும் பிரபலமாப் போச்சு.

ஒரு குறிப்பிட்ட சப் டிவிஷனில் எல்லார் வீட்டுலேயும் இந்த அலங்காரம்.
நாங்களும் திருவிழாப் பார்க்கற 'மூட்'லே ஒரு ரைடு போயிட்டு வர்றதுதான்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி.. எங்க வீட்ட்டில இன்னும் போடலை.
வாசலில் கிரிஸ்ட்ம்மஸ் மரம் இருக்கிறது.
அதைச் சுற்றி லைட்ஸ் போடணும். ஊரோட ஒத்து வாழணும் இல்லியா.

காம்ம்பெடிஷன் எல்லாம் இருக்கு.
லைல்'' என்ற மில்லியனர்ஸ் இடத்தில் பெரீய பங்களோக்கள் பூராவும் ஜொலிக்கிறது.