Blog Archive

Thursday, November 02, 2006

அமுதசுரபி இல்லையா?

இன்று வேடிக்கை வினை இரண்டும் கலந்த

இரு செய்திகளை இப்போது பார்த்தேன்.

தொலைக்காட்சி செய்திகளில்.
ஒன்று மூன்று மாதமே ஆன பெண்குழந்தை
குற்றம் சாட்டப் ப்டது.
செய்த குற்றம் பஸ்ஸில் கொள்ளை அடித்ததாம்.
அந்த இளம் மொட்டு குட்டிப் பாப்பா


அம்மா கையில் தூங்கிய காட்சி

எனக்கு தொண்டை அடைத்தது.
காவல்காரர்களுக்கு
என்ன ஆச்சு?
Fஐஆர் பதிவு செய்து விடுதலை செய்தார்களாம். இப்படிக்கூட நடக்குமா?
அடுத்து நான் பார்த்தது
நகைச்சுவை காட்சிகள் தரும் அரசியல்வாதி ஒருவரின்

அபத்தம்.
வெளிநாட்டு அரசகுடும்பம் வந்து இருக்கிறது.
அவர்களைக் கிராமப் பஞ்சாயத்து

நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றவர்,
பேசினது என்ன தெரியுமா?

எங்கள் இந்தியாவில் பிச்சை எடுக்கும் பழக்கும் ஆதிகாலத்திலே இருந்து இருக்கிறது.
அதனால நானும் அதை
செய்யப் போகிறேன்,
மாண்புமிக்க அரசரும் அரசியும்
என் பிச்சை பாத்திரத்தில் உதவி
இட வேண்டும்.
'பவதி பிட்சாம் தேஹி'

அவர் யாருக்கும் உதவி வாங்கித் தரட்டும்.
ஆனால் பாரத பாரம்ப்ியம் என்று ஏன் சொல்ல
வேண்டும்?

நம்ம ஊரில் தானம் செய்தவர்களே இல்லையா?
கர்ணன்,தர்மர் என்று ஆரம்பித்து

கடையேழு வள்ளல்கள், ஆபுத்திரன்,மணிமேகலை
என்று வளர்ந்து, ஏன் இப்போ
நம்ம எம்.எஸ் அம்மா செய்யாத
தர்மமா.
தனக்குக் கிடைத்த அத்தனை செல்வங்களையும்
கொடுத்தவர்கள் தானே அவர்கள்?
ஒரு அரசியல் வாதி, பொறுப்பில் இருப்பவர் பேசும் சொற்களா இவை./
தவறு இருந்தால் எனக்கு சொல்லுங்கள்.
எதற்காக இப்படிப் பேச வேண்டும்?

7 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வல்லி!
நம்ம பொலிஸ் கருவில் இருக்கும் சிசுவுக்க்குக் கூட குற்றப்பத்திரிகை தயார் செய்வாங்க??,இந்த அரசியல் வாதி யாருங்க???இவங்க கொள்ளையடிப்பதை விட்டாலே பாதிப் பிச்சைக்காரரை வசதியாக்கலாம். இதெல்லாம் நடக்குமா?,
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வல்லி!
நம்ம பொலிஸ் கருவில் இருக்கும் சிசுவுக்க்குக் கூட குற்றப்பத்திரிகை தயார் செய்வாங்க??,இந்த அரசியல் வாதி யாருங்க???இவங்க கொள்ளையடிப்பதை விட்டாலே பாதிப் பிச்சைக்காரரை வசதியாக்கலாம். இதெல்லாம் நடக்குமா?,
யோகன் பாரிஸ்

வல்லிசிம்ஹன் said...

வாங்க யோகன்.
என்னமோ நடக்குது நம்ம ஊரில.

அரசியல்வாதி நம்ம தமிழ்னாட்டுக்காரர் தான். பெல் ஐயர் என்போம் நாங்கள்.
நீதி நேர்மை இதற்கெல்லாம்
ஒரு அவ்வையாரோ, ஒரு ஒட்டகூத்தரொ வந்து
அறம் பாடவேண்டும் அனியாயத்தை எதிர்த்து.

துளசி கோபால் said...

வல்லி,

சீக்கிரம் ஒரு இருவது கைகள் வேணும் எனக்கு.

நிலமை அப்படி அவசரம்.

அடிச்சுக்க ரெண்டு கை போதாது:-)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

யார் யார் எதற்கு எதற்கு 'பவதி பிட்சாம் தேஹி' என்று சொல்வது என்ற விவஸ்தை இல்லாமல் போனதால் வந்த அவஸ்தை, இது!

இவர் என்ன துறவியா, ஞான குருவா, இல்லை குருகுல சிஷ்யனா? அடக் கடவுளே! ஊற் சொத்தைக் கொள்ளை கொள்வது போதாதென்று பாரம்பரியத்தையும் சேர்த்தே கொள்ளை கொள்கிறார்களே! இவர்களை எல்லாம் திருத்த ஒரு பெரியார் வரமாட்டாரா?

வல்லிசிம்ஹன் said...

துளசி, இருபது போதுமா:-0)

பாக்க பாக்க பிபி ஏறுது எனக்கு.
honoured Royalties,

in India we have an age old system of begging for alms.
it is called '
'' bavathi bikshaam dhehi''
I will take the bowl now and .......
சிஸ்டம் தெரியாம பேசினால் இவங்களை என்ன செய்யறது.

வல்லிசிம்ஹன் said...

ரவி,
உபனயனத்தின் போது கற்ற சப்தங்களை
சிறார்கள் சொல்லும்போது
மகிழ்ச்சியாக இருக்கும்.
ஸ்ரீ சங்கர பகவத் பாதர்
இந்த வார்த்தைகளை சொல்லி
கனக தாரை வரவழைத்தார் ஒரு ஏழைப் பெண்ணுக்காக.
சரியில்ல இவர்கள் போக்கு.