About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Sunday, October 29, 2006

வேண்டாத பொய்கள்

இப்பொ ஒருத்தர்கிட்ட நீங்க எங்க வீட்டுக்கு
வரீங்களா என்று கேட்டால், சரி, முடியாது
இதுதானெ எதிர்பார்ப்போம்?

1, ஓ அதுக்கென்ன வரோமே . எப்போனு சொல்லு.

இது ஒரு பதில்.

2,ஒரு இரண்டு வாரமா ஒரே வேலை,அலைச்சல்
உடம்பு வேற படுத்தறது
முடிஞ்சா பாக்கலாம்
.நீ தப்பா நினைச்சுக்காதே என்ன,.

இதில் என்ன தப்பு.அவங்களுக்கு உண்மையாவே
நிறைய வேலை இருக்கலாம் என்று கேட்கலாம் நீங்கள்.

இந்த மாதிரி பதில் சொல்வது உங்க பக்கத்து வீட்டு ஐயாவோ அம்மாவாகவோ,
தினம் அவங்க வீட்டு நடவடிக்கை உங்களுக்குத் தெரிந்ததாக
இருந்தால்?
அதாவது 20 வருடங்களாகத் தெரிந்தவராக இருந்தால்?
இதுக்குப் பெயர் தான் வேண்டாத
பொய் சொல்வது.
அவசியமே இருக்காது.

கேள்வி கேட்டோம் இவர்களை!!!!!!
தொலைந்தோம். !
பொய் சகட்டு மேனிக்கு வரும்.
அப்படியாவது கேள்வி கேட்கணுமா என்ன
என்பீர்கள்.
சரி , இதோ ஒரு உதாரணம்.
ஒரு ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டு இருக்கும்

எங்கள் நண்பர் வருகிறார்.
அவர் இன்னும் சில நாளில் வேறு
இடம் வேலை நிமித்தம்
வெளிநாடு போகப் போகிறார்.
விசா,டிக்கட் எல்லாம் வந்தாச்சு.

எப்படித்தெரியும்னு கேக்கறீங்க. அவங்க
இல்லாளும் நமக்குத் தோழிதான்.

புதிய சூட்கேஸ், தைத்த துணிவகைகள், அரைத்து வைத்த
(வெளிநாடு எடுத்துப் போக)ப் பொடிவகைகள்
முதல் நம்மிடம் கேட்டுவிட்டு,,
அவங்க வீட்டுக்கு வரச் சொல்லி

பார்க்க வைத்து அனுப்பும் வெகுளி அந்த அம்மா.

.
இவ்வளவு ஆன பிறகு நம்ம வீட்டுக்கு வர மனிதரிடம்
என்ன கேட்போம்?
என்ன சார் ஊருக்குக் கிளம்பராப்பில இருக்கு. எத்தனை நாள் போவதாக உத்தேசம் என்றால்,
அவர் ச்ஒல்லும் பதில் என்ன தெரியுமா?
" அதை ஏன்மா கேக்கறீங்க,
இன்னும் முடிவா ஓண்ணும் தெரியலை.
எங்க ஆபீசில் அப்படி ஒண்ணும் சீக்கிரமா

முடிவு செய்துற மாட்டாங்க.
கடைசி நிமிடத்தில் மாத்திடுவாங்க
நாளை.
எல்லாம் ஏர்போர்ட்டில் காலை வைத்து
ப்ளேனில் ஏறினாதான் நிச்சயம்''
என்று பதில் வரும்.
அய்யோடா ஏண்டா கேட்டொம்னு இருக்கும்.

அப்புறம் இன்னோரு ரகம்.
அவங்களுக்கு உண்மையே வாயில வராது.

எனக்குத் தெரிந்த மனிதர் அவர் பொண்டாட்டிகிட்ட
வீட்டை விட்டுக் கிளம்பும் போது

"இந்தப் பாரு எங்கே போறேனு கேக்காதே.
உன் கிட்ட கிழக்கே போறேனு சொல்லுவேன், ஆனால்
மேற்காலே தான் போவேன்.
என்னைப் பொய் சொல்ல வைக்காதே''

அந்த அம்மா சிரிச்சுப்பாங்க.
50 வருஷக் குடித்தனமாச்சே.

''சரி, கழுதை கெட்டா குட்டிசுவர்''
எனக்குத் தெரியாதானு சொல்லுவாங்க.
நான் அந்த அம்மாவோட பொறுமையைப்
பார்த்து அதிசயப் படுவேன்.

அவங்க '' இளமையிலே நிறையாக் கவலைப் பட்டாச்சு.

எனக்கே 64 ஆச்சு.
அவரோட சினேகிதர்கள் எல்லோரும்

எப்படிப் பட்டவர்கள் என்றும் தெரியும்.
அவரைத் தேடி அவர்கள் இங்கே வருவார்கள்,
பின்னாலேயெ அவரும் வருவார்.

எல்லோருக்கும் இங்க தானெ காஃப்பி'
என்பார்.
அப்பாடி இவ்வளவு இருக்கானு நினைப்பேன்.
நமக்கும் இத்தனை வயசானா
புத்தி தெளியுமோ என்னவோ:-)

குடும்பப் பொய் இருக்கட்டும்,எங்க வீட்டு
முனி(உதவி செய்யும் அம்மா)
இருக்காங்களே,,
அவங்க பெண்ணும் வேறு இடத்தில் வேலை
செய்பவர்.அவரும் வருவார்.
இந்த அம்மாவைப் பத்தி அந்தப் பெண்ணுகிட்ட
கேட்டா,''ஐய்ய எனிக்கு இன்னா தெரியும்
அது எங்கியோ போவும் வரும்.
நானா காண்டேன்''
என்பார். ஒரே வீட்டில் இருப்பவர்கள் இருவரும்.

என்ன ,,அம்மா அயனாவரம் போயிருப்பார்.
பொண்ணு அம்மா என்கிட்ட சொல்லாமல் இரண்டு

நாள் விடுமுறை எடுத்ததை மறைக்க
ஹார்ம்லெஸ் லைஸ்// சொல்லுவார்.

பொய் சொல்லலாமே என்று பதிவு
போட்டதற்கு மாற்று இந்தப் பதிவு.:-)

10 comments:

துளசி கோபால் said...

வல்லி,

சிலபேருக்கு நிஜமாவெ அவுங்க டூர் ப்ரோக்ராம் கடைசி நிமிஷம் வரை தெரியாது. எங்கே போணுமுன்னாலும்
( இந்தியாவைத் தவிர)விஸா வேண்டாத பாஸ்போர்ட். இப்ப என்னன்னா O C I லைஃப்டைமுக்கு கிடைச்சிருக்கு.
இப்படியும் இருக்காங்கப்பா எனக்கு ரொம்பவே தெரிஞ்ச மனுஷர் ஒருத்தர்.

32 வருசத்துலெ எல்லாம் அதுப்படின்னு கயித்தை நீளமா விட்டுருக்கேன்:-))))
ஆமா, இது பொய்யிலே சேர்த்தியாகுமோ? :-)))))

umagopu said...

kallakkal post,super,first time padikaren unga blog,first comment naadan,

ambi said...

Nice writeup. regualaraa varathaan mudiyalai, ennala. sari, paarpoom.

prev post is also nicely written. (mahabharat stories) :)

வல்லிசிம்ஹன் said...

துளசி, வாங்க.
சே,சே நம்மல்லாம் பொய் சொல்லுவோமா. அப்படி இப்படினு
கொஞ்சம் பேசுவோம்.
சத்தியம் நீயே, தருமத்தாயே அப்டீனு சொல்லறவங்க.
கற்பனை வளம் பொய் ஆகாது இல்லையா:-)

நிஜமாவே தெரியாதவங்களைப் பத்தி சொல்லலை.கண்ணு பட்டுடும்னு சொல்லாம இருக்கிறவங்களைத் தான் சொன்னேன்.:-)

வல்லிசிம்ஹன் said...

உமா,
ரொம்ப தான்க்ஸ்.
புதுசா ஒரு முகம் பார்க்க சந்தோஷமா இருக்கு.

அல்ட் ரா க்ரைண்டரில் தேங்காய்த் துருவியும் இருக்கே.அதைப் பெண்ணுக்கும் சொல்லிக் கொடுக்கலாம்:-)

வல்லிசிம்ஹன் said...

ஹை அம்பி,
உங்க தீபாவளிப் பதிவைப் படிச்சேன்.

உங்க எல்லோரோட கலக்கல் மொழி எனக்கு சீக்கிரம் வர மாட்டேங்கறது:-)
ரொம்ப ஃபார்மலா எழுதிடுவேனோனு பயம்.
அவ்வளவுதான்.
தான்க் யூ அம்பி. உங்க தம்பி கணேசன் எப்படி இருக்கார்?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இதெல்லாம் நம்ம தெரு, வீதி, பக்கத்து வீட்டு அரசியல்ல ரொம்ப சகஜம் வல்லியம்மா :-))

என்ன, ரெண்டு மாசம் கழிச்சு நாமளே யோசிச்சுப் பாத்தோம்னா, நமக்கே சிரிப்பு வரும்!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ரவி,
அதெல்லாம்தாண்டிதான் லைஃப் ஓடறது.

அடுத்த பதிவு நியு ஜர்சி வைரமாமிகளைப் பற்றி

நீங்க எழுத்ய்ங்களேன்.
நானே கேள்விப் பட்டு இருக்கிறேன்.

கீதா சாம்பசிவம் said...

அது யாரு நியூ ஜெர்ஸி வைர மாமிகள்? எனக்குத் தெரியாது. எழுதுங்க பார்க்கலாம். ஒரு பொய் என்ன நூறாயிரம் பொய் தினமும் கேட்டுட்டுத் தான் இருக்க வேண்டி இருக்கு. டி.வி.யிலே. :D

வல்லிசிம்ஹன் said...

கீதா யுஎஸ்.எ போய் வந்தவர்களுக்குத் தெரிந்த விஷயம் தானே.
இதோ நான் எழுதிண்டு இருக்கறதும் அதுதான்.:-)