About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Friday, October 20, 2006

பொய் உரைக்கலாமா---மே

இதோ இருக்கிறார் ஹரிச்சந்திர மஹராஜா.
அவர் காலமா இது/
அந்த யுகம் முடிந்தது.
துவாரபர்யுகத்தில்

கண்ணன் வந்து கொஞ்சம் பொய் கலந்த
உண்மைகளை, உண்மைக கலந்த பொய்களைச் சொல்லி
பூமி பாரத்தைக் குறைத்தான்.

அவன் துவாரகைக்கு வெளியே பிபாச ஏரிக்கரையில் படுத்து ஓய்வு எடுக்கும் போது ஒரு வேடன்,
அவரது முழந்தாளை,
ஒரு மான் முகம் என்று நினைத்து
அம்பு விட பகவான் உயிர் விடத் தீர்மானிக்கிறான்.

வேடன் பதைத்து பக்கம் ஓடி வர அவனையும் சமாதானப் படுத்தி வான் ஏறி வைகுண்டம் ஏகுகிறார்.
போகும்போதே கலி வந்து விட்டதை அறிவிக்கிறார்.
இப்போதும் துவாரகையில் அந்தப் புனித இடத்தைத் தரிசிக்கலாம்.

கண்ணபிரான் மற்றவர்களைக் காக்கப்

பொய்யுரைத்த, இல்லை உண்மையை மறைத்த இடங்கள் மஹா
பாரதத்தில் உண்டு.
அபிமன்யு அராஜகமான சக்கிரவியூகத்தில் மாட்டிக் கொள்ளுகிறான்.
வயதில்,நேர்மையில் ,அரசியலில், தர்மத்தில் தேர்ந்தவர்களைக் கொண்ட வியூகம் அது. அத்தனை
பெரியவர்களும் சேர்ந்து,
அவன் வீழ, உயிர் துறக்கக் காரணமானார்கள்.
இதைக் கேட்ட சுபத்திரை,அர்ஜுனன், கண்ணன்,யுதிஷ்டிரர்
அனைவரும் நெருப்பில் வீழ்ந்தது போல் தவிக்கிறார்கள்.

அவர்கள் அவனுடைய வீர மரணத்தில் அவர்களுக்குத்
திருப்திதான். ஆனால் ஒரு சிங்ககுட்டியை நரிக்கூட்டம் போன்ற நயவஞ்சகத்தோடு அம்புகளால்
அடித்துப் போட்டதை அவர்களால் சகிக்க முடியவில்லை.

சபதம் செய்கிறான் அர்ஜுனன். இன்று இரவு முடிவதற்குள்

அபிமன்யுவைக் கொன்றவனைச் சாய்ப்பேன். இல்லை
நான் மரிப்பேன் என்கிறான்.

கண்ணனும் ஆமோதிக்கிறான்.
துரியோதனாதிகள் அபிமன்யுவைக் கொன்ற
ஜயத்திரதனை போர்நடக்கும் களத்திலிருந்து தனிப் படுத்துகிறார்கள்,.
அர்ஜுனனும் அவன் சாரதி கண்ணனும் குருக்ஷேத்திரம்

முழுவதும் தேடிக் களைத்தார்கள்.
அந்தி நெருங்குகிறது. சூரியன் மறையும் நெரம் வந்துகொண்டிருக்கிறது.

கண்ணனுக்கு அர்ஜுனனும் அலுப்பின் எல்லையை
அடைந்துவிட்டதை உணர்கிறான்.

நிலைமையைச் சமாளிக்க யோசித்த அடுத்த
கணத்தில் தோன்றுகிறது சுதர்சனம்
அவன் கையில்.
பிரயோக சக்கிரமாகப் பாய்கிறது.

கண்ணன் மனம் அறிந்த சக்கிரம் சூரியனைச் சென்று மறைக்கிறது.
அந்தியும் முடிந்து இரவு வந்துவிட்டதாகக்
களியூட்டம் போடுகிறான் துரியோதனன்.
மறைவிடத்திலிருந்து
வெளியே வருகிறான் ஜயத்ரதன்.

அவன் கண்ணன் கண்ணில் பட்ட மறுகணம்
சுத்ர்சனம் ஆதவனைவிட்டு விடுகிறது.
மறுபடி வெளிச்சம் பரவ
அதிர்கிறது கௌரவ முகாம்.


கண்ணன் கைசேர்ந்து ஓய்கிறது சுதர்சனம்.
பார்த்தனை அழைத்து ஜயத்ரதன் இருக்குமிடம்
வருகிறது ரதம்.
ஆத்திரமும் பெற்றபாசமும்

மேலோங்க
காண்டிபம் அதிர,

எடுத்தான் அம்பை, விடுத்தான் சரங்களை.

அனுமன் உட்கார்ந்த கொடி வீரவிலாசமாகப் பறக்கிறது.

கிருஷ்ணனின் பாஞ்சஜன்யம்,
கேட்பவர் நெஞ்சங்களை நடுங்க வைக்க ,


முடிகிறது அபிமன்யுவைக் கொன்றவனின்
கதை. இது கண்ணன் செய்த பொய்தான்.
அடுததது ,
யுதிஷ்டிரர் சொன்னச் சின்னப்பொய்.
துரோணரின் ரதம் சென்ற இடமெல்லாம்

உயிர்விட்டவர்களின் எண்ணிக்கை உயர்கிறது.
இதைத் தடுக்காவிட்டால்
தோல்வி நிச்சயம் பாண்டவருக்கு.
கண்ணனுக்குத்தான் அவர்களைக்காப்பதே தர்மம்.

அவனுக்குத் தோன்றிய திட்டம் தர்மருக்குத் தெரிவிக்கப் படுகிறது.
பிறவி எடுத்ததிலிருந்து பொய் என்பதைக் கருத்தில் கூட
நினையாதவர்.
அவருக்குப் பொய் நாவில் வரமுடியாது.
அவரிடம் கண்ணன் கூறியது,''அஸ்வத்தாமா ஹதஹ''
//அஸ்வத்தாமா கொல்லப்பட்டான்//
துரோணரின் உயிர்நாடி அவர் மகன் அஸ்வத்தாமன்.
அவன் இறந்தான் என்ற சொல்லைக் கேட்டால் அவர் வில்லைத் துறப்பார், போர் முக்கால்பங்கு முடிந்தது போல்தான்.
ஆனால் அஸ்வத்தாமனோ யாராலும் அழிக்க முடியாதவன்.

அதனால் கண்ணனால் கற்பிக்கப்பட்டப் பொய் ,,
அஸ்வத்தாமா என்ற பெயர் கொண்ட யானையைத்
தர்மன் வதம் செய்தவுடன் ,

கூவ வேண்டியது'' அஸ்வத்தாமா(என்ற யானை )
கொல்லப்பட்டது உண்மை.''
என்ற வாக்கியம்.
தர்மன் மனமில்லாமல் அஸ்வத்தாம என்ற யானையயும்
அதன்மேலிருந்த வீரனுடனும் போர்புரிந்து
யானையையும் கொன்றுவிடுகிறான்.

அதெபோல் சொல்லிக் கொடுத்த வசனத்தையும்
சங்கு ஊதி,
போர் நடுவே ஏற்படும் அமைதியில்
சத்தமாகச் சொல்கிறான்.
அவன் யானை என்ற சொல்லை உச்சரிக்கும் போது கண்ணன்,பார்த்தன் இருவரது சங்குகளும் எக்காளமிடத் துரோணர்,
அஸ்வத்தாமா மடிந்துவிட்டான் என்ற உணர்வு தாக்க
ரதத்தை விட்டு இறங்கி விடுகிறார்.

இதே போல இன்னும் சில இடங்களில்
கையாளப்படும் தந்திரங்களில்\பொய்கள்

நிறையவே இடம் பெறும்.
கௌரவர்கள் சொன்ன ப்ஒய்களைக் கணக்கு எடுக்க முடியாததால் விட்டு விடலாம்.

கவிதையில் பொய் சொல்லலாம்,
காதலில் பொய் உண்டு.
கல்யாணத்திலும் அதே.

இல்லறத்திலும் மட்டும் இல்லையா.
அங்கும் பொய்யில்லாமல் ஏதாவது நடக்குமா என்ன.

நான் எப்போதுமே உண்மைவிரும்பி என்று ,
கூடப் படிக்கும் மாணவியின்
உருவ அவலட்சணத்தைக் கூறு போடுபவர்களையும்
பார்த்திருக்கலாம்.

பொய்யும் நலமெ.
அதனால் நன்மை விளையுமென்றால்.
உங்கள் கருத்தென்ன?

14 comments:

வல்லிசிம்ஹன் said...

parisodhanaip pinnuuttam

துளசி கோபால் said...

யப்பா..... பாரதக் கதையை இத்தனை ஸ்வீட் & ஷார்ட்டா சொல்லிட்டீங்களே வல்லி.

அருமை.

பிடிச்சிருக்கு.

வல்லிசிம்ஹன் said...

துளசி, ஸ்வீட்டாவா?
:-)0
அணுவளவு கூட என்னால் சொல்ல முடியாது.

பொய்னு ஒரு பழைய நாடகம் டிடியில் பார்த்தேன். அப்போ வந்த நினைப்புகளை எழுதிட்டேன்.
இன்னும் எத்தனை பொய்கள் மஹாவா பாரதத்தில் ஒளிஞ்சு இருக்கு. குருவோட சிஷ்யனை இன்னும் காணோம்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குருவோட சிஷ்யனை இன்னும் காணோம்//

அடியேன் இங்கு உள்ளேன், வல்லியம்மா...

1. சக்கரத்தால் கதிரவனைச் சிறிது காலம் மறைத்தது பொய் ஆகாது. மாயம்/யுக்தி ஆகும்; போர் முறைகளில் ஒன்றான திருஷ்டவா அபகரணம் என்பதின் பாற்படும். எதிரியின் கண்ணில் இருந்து மறைத்துக் குழப்புவது என்பது பொருள்.
இந்தக் காலத்தில் decoy என்று சொல்கிறோமே. பெரிய தலைவரைப் போலவே தோற்றம் அளிக்கக் கூடிய ஒருவரை, பாதுகாப்புக்காக, convoy-இல் கூட்டிச் செல்வதும் இதே வகை தான்.
எதிர் அணியிலும் இதே போல், துரோணர், எதிரியின் கண்ணுக்குப் புலப்படாமல் இருக்க வல்ல ஆடையை, துரியனுக்கு அளித்தார்.

2. இது நிச்சயம் பொய்யே தான்! சொல்லத் தூண்டியது பரமாத்மா; சொன்னது தருமர்; சொன்னவுடன் தருமனின் தேர்ச்சக்கரம் பூமிக்குச் சிறிது அங்குலம் மேல் சென்ற வழக்கம் குலைந்து, பூமியைத் தொட்டு, அவன் பெற்ற வரத்தைப் பொய் ஆக்கியது.
தூண்டிய பரமாத்மாவும் சாபம் பெற்றான்; ஆனால் அதை மரியாதையுடன் ஏற்றும் கொண்டான்.

ஆகப் பொய் உரைக்கலாம்; மெய் மறைக்கலாம்.
பொய்ம்மையும் வாய்மை இடத்த; புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்!,
என்பது ஐயன் குறள்.
"புரை" தீர்ந்த நன்மை பயக்கும் என்றால் ஓகே தான் என்கிறார்.
ஆனால் எது "புரை தீர்ந்த" என்பதில் தான் சிக்கல்!

பரமாத்மா செய்தது "புரை தீர்ந்த" என்ற கணக்கில் வராது.
கவிதையில் பொய், சக மாணவியின் அழகைக் கொச்சைப்படுத்தாமல் மெல்லிய கவிதையாகச் சொல்லும் பொய் இதெல்லாம் "புரை தீர்ந்த" கணக்கில் வந்து விடும்;

ஆனால் அடுத்தவர் (நல்லவரோ / கெட்டவரோ) அழிவுக்கும், துன்பத்துக்கும் காரணமான பொய் தான் பரமாத்மா சொன்னது. துரோணரின் உயிரை வாங்கியது.

ஆனாலும் செய்தான். அப்படிச் செய்யும் போது, அதனால் வரும் விளைவையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்பதைக் காட்டிச் சென்றான்!

அதுவும் தனக்காக பொய் சொல்ல வில்லை; தன்னை நம்பி வந்தவரைக் காப்பதற்காகச் சொன்னது!
பெரிய அறத்தைக் காப்பதற்காக சிறிய மறம் செய்தான்.
இருந்தாலும் பொய் தானே! அதனால் சாபம் பெற்று தன் கண் முன்னே தன் நகர் அழிவது கண்டான்.

பின்னாளில் அற்ப மனிதர்களாகிய நாமெல்லாம் அவனை விமர்சிக்கும் படி ஆகும் என்று தெரிந்தும், தர்மம் காக்கத் தவறைத் துணிந்து செய்தான்!


"பொய் சொல்ல வேண்டுமா? சொல்!
அதனால் வரும் விளைவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவாயா? அதையும் யோசி. அதன் பின்னர் சொல்வதா இல்லை வேண்டாமா என்று முடிவு எடு", என்று நமக்கு வாழ்ந்து காட்டிச் சென்றான் ஜகத்குரு!!

கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்!!!

வல்லிசிம்ஹன் said...

ஆஹா.கண்ணபிரான் வந்தே விட்டார்.
அதுவும் எங்க வரப்போகும் பாப்பாவுக்கும் கண்ணன் என்ற பெயர் வைக்கலாமானு யோசிக்கும்பொது நீங்க வந்து
சொன்னது சந்தோஷம்.
அதனால் ரவி,க்ரிஷ்ணனை
ஒண்ணுமெ சொல்லலை. பொய்ப் படையை அழிக்கப் பொய் தேவைப் பட்டது. அதைத் தைரியமாகச் சொல்ல கண்ணனுக்குத்தான் உரிமை.
அவன் பகவானாக இருப்பதால்.
லாமா-மே அதுக்காகத்தான் போட்டேன்.
//பின்னாளில் அற்ப மனிதர்களாகிய நாமெல்லாம் அவனை விமர்சிக்கும் படி ஆகும் என்று தெரிந்தும், தர்மம் காக்கத் தவறைத் துணிந்து செய்தான்!//
:-)
தப்புப் போட்டுகிட்டென் சாமி.

பொய் சொல்லலாம் நல்லது நடக்கட்டும் என்பதற்காகத் தான். இந்தப் பதிவு.சரியா?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//:-)
தப்புப் போட்டுகிட்டென் சாமி.
//

ஹா ஹா ஹா
ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா வல்லியம்மா! ஜாலிக்குச் சொன்னேன்!
அதற்காக நீங்கள் அந்தத் திருட்டுக் கண்ணனுக்கு ரொம்ப இடமும் கொடுத்துடாதீங்க :-)) அப்புறம் சமையல் அறையில் உங்களுக்குச் சாப்பிட ஒண்ணுமே மிச்சம் வைக்காது அவனே எல்லாத்தையும் தின்னுடுவான்! எதுக்கும் ஒரு கண்ணு அவன் மேல இருக்கட்டும்; அப்ப தான் வல்லியம்மா பேரைச் சொல்லி அவனை நானும் பயமுறுத்த முடியும் ஹி ஹி :-))

//அதுவும் எங்க வரப்போகும் பாப்பாவுக்கும் கண்ணன் என்ற பெயர் வைக்கலாமானு யோசிக்கும்பொது//

ஹைய்யா; நல்ல சேதி; மேலும் விரிவாச் சொல்லுங்க! நியூ குட்டிப் பாப்பா?
Congratulations யாருக்குச் சொல்லணும்? என் சார்பில் அவர்களுக்குச் சொல்லிடுங்க!

வல்லிசிம்ஹன் said...

கண்ணபிரான், எங்க விட்டுப் புதுப் பாப்பா கார்த்திகைக் கண்ணனாக

உங்க ஊரிலிருந்து பறக்கிற தூரத்தில், சிவபாலன்,சிறில் அலெக்ஸ் இவங்க இருக்கிற:-)
ஊரில் ஸ்ரீலக்ஷ்மிந்ருசிம்ஹர்
கிருபையில் வரப்ப்போறான்.
மின்னியாபோலிஸ் பாப்பா எப்போ வரதோ? ஞாபகம் இல்லை.

தி. ரா. ச.(T.R.C.) said...

பாரத யுத்தத்தின் ஆரம்பத்தின் போது அரவணனை பலி கொடுக்கும்போது பொய்யான அமாவசையை(போதாயண்)உருவாகியவன் தானே இந்தக் கண்ணன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

குருவும் வந்தாச்சு சிஷ்யனும் வந்தாச்சு.புது வருகைக்கு காத்திருங்கள்.எங்கவீட்டிலும் இப்போது சிட்னியிலிருந்து 10 மாத பேரன் வந்திருக்கான்.ஒரே விஷமம்தான் என் கண்ணாடியும்,லேப்டாப்பும்தான் குறி.

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச வாங்க.
கண்ணாடியும் லேப்டாபுமா?

சரிதான் ஃப்யுச்சர் பதிவாளர் வந்தாச்சு.
பாப்பா பெயரென்ன.

ஆசீர்வாதங்கள் குழந்தைக்கு.

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச அரவான் கதை வேறு.பாருங்க அதை சொல்லாமல் விட்டுட்டேன்.

மாயக்கண்ணன் செய்யறதெல்லாம் சரின்னு சிஷ்யன் சொல்லிட்டுப் போயிட்டார்.
குருவாவது கொஞ்சம் நடு நிலைமையா இருக்காரே:-))))

தி. ரா. ச.(T.R.C.) said...

குழந்தை பெயர் நிம்மல்.நவம்பர் 21 ஆம் தேதி அப்த பூர்த்தி.ஆசிக்கு நன்றிகள்

கீதா சாம்பசிவம் said...

@கண்ணன்,
அப்பாடி, ஒரு பொய்க்கு இத்தனை அர்த்தங்களா? கண்ணபிரானே அவதாரம் செய்திருக்கிறாரோன்னு நினைக்கிறேன். நமக்கு இப்படி எல்லாம் வேறே யார் சொல்லுவாங்க?
@வல்லி, பிறக்கப்போகும் பேரனுக்கும், பிறந்த பேத்திக்கும் வாழ்த்துக்களும், ஆசிகளும். உங்க தத்தாத்ரேயர் பதிவில் எழுத வந்தேன், இதெல்லாம் பார்க்க நேர்ந்தது. ரொம்ப சந்தோஷமா இருக்கு படிக்க.

வல்லிசிம்ஹன் said...

கீதா, நல்வரவு.
எல்லாம் நம் பதிவு நண்பர்கள்
அன்புதான்.

இப்போதுதான் ஆரம்பித்த மாதிரி இருக்கு.
ஓடிப்போய் விட்டது மாதக் கணக்கில்.பேரனும்

பேத்தியும் நலம்.வரப் போகும் பேரனும் நல்லபடியாக வர உங்கள் ஆசீர்வாதங்கள் தேவை.

பெருமாள் கிருபையுடன் நல்லபடியாக