Blog Archive

Sunday, October 15, 2006

திருக்குறுங்குடி படங்கள்



இத்தனை அழகுடையது எங்களூர்.

10 comments:

குமரன் (Kumaran) said...

படங்களுக்கு நன்றி வல்லியம்மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க குமரன்.

போன வாரம் என் தம்பியும் குடும்பமும் நவதிருப்பதி (பாண்டி நாட்டு) பயணம் சென்றார்கள்.
சில படங்கள் எனக்குக் கிடைத்தன.

தாமிரபரணி நடக்கும் ஆழத்தில் தான் இருந்ததாம்.

Thekkikattan|தெகா said...

இந்த திருக்குறுங்குடி எங்கங்க இருக்கு? அடடா, அருமையான இயற்கை கொஞ்சும் இடமாக இருக்கிறது...

வல்லிசிம்ஹன் said...

தெகா, வாங்கப்பா.

திருநெல்வேலியிலிருந்து 45 கிலொமீட்டரில் எங்களூர் இருக்கிறது.
அந்த ஊரில் பிறந்த சில தொழிலதிபர்களின் இடைவிடாத முயற்சியால் கோவில்கள் நன்கு பராமரிக்கப் பட்டு வருகின்றன.
அதேபோல நில வளம் நீர்வளம்
இரண்டும் செம்மையாக இருப்பதாகக் கேள்விப் பட்டேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தெளிந்த நன் நீரோடை - முதல் இரு படங்களும் அழகோ அழகு

அடுத்த படம் அழகுன்னு நாம சொல்லத்தான் முடியுமா?
வடிவழகிய நம்பி ஆயிற்றே?
எம்பெருமான் நம்பி என்றே அழைக்கப் பெறுகிறான். அதுவும் ஒரு நம்பி அல்ல. நின்ற நம்பி, இருந்த நம்பி, கிடந்த நம்பி, வைணவ நம்பி, மலைமேல் நம்பி, திருப்பாற்கடல் நம்பி..ஆகா

வாமன அவதாரத் தலம்; அதனால் தான் குள்ளமாக உள்ளான் இங்கு! திருமங்கை ஆழ்வார் பரமபதித்த தலம்; கைசிக ஏகாதசியின் பெருமை ஆகா...இது அல்லவோ திருக்குறுங்குடி...

ஆகா நம்பி புராணம் பாடி உங்களை மறுந்துட்டனே...வல்லியம்மா...உங்க ஊர் இதுவா? கொடுத்து வச்சவங்க நீங்க! அடிக்கடி போவீர்களோ?

அண்மையில் சில சர்ச்சைகளுக்கு உள்ளானாலும், ஊரின் அமைதியே அழகு!
TVS-இன் சொந்த ஊரும் கூட.

துளசி கோபால் said...

இந்த ஊர் எங்கே இருக்கு? சூப்பரா இருக்கேப்பா!!!!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். நீங்க சொன்னவங்க நாங்க எல்லாரும் உறவுதான்.
நம்பி புராணம் அழகேதான்.
எங்க ஊரு இதேதான்.நாந்தான் ஒரே ஒரு தடவை போயிருக்கேன்.
எங்கள்தாத்தா காலத்திலேயே--1955
மதுரை வந்துட்டாங்க.புலம் பெயர்ந்து!!!
பிறக்க ஒரு ஊர்.பிழைக்க ஒரு ஊர்.
கண்ணபிரான் இதற்கு முந்திய பதிவு.....திருக்குறுங்குடி நம்பி
போட்டபோது வராத பின்னூட்டம் இப்போது விஷுவல்ஸ்க்கு வந்து இருக்கு.
:-))
நன்றி கண்ணபிரான்.ஷ்ரவண் எப்படி இருக்கான்?

வல்லிசிம்ஹன் said...

துளசி நட்பு வட்டம் நல்லா இருக்கா.?
எங்க ஊர் திருநெல்வேலியிலிருந்து 30 மைல்னு நினைக்கிறேன்.

இவங்க எல்லாம் போயிட்டு வந்து கதை கதையா சொல்லறாங்க. தண்ணீர் அப்படித் தெளிவா இருக்காம்.
என்ன செய்யறது சாமியைப் பாக்கணும்னா பூசாரி வரணும் இல்லியா?:-)0

தி. ரா. ச.(T.R.C.) said...

வல்லியம்மா போனவாரம் போட்டிருக்ககூடாதோ நான் கல்லிடைகுரிச்சி போயிருந்தேன் அப்படியே இங்கேயும் போயிருப்பேனே. அழகான் ஊர்.

வல்லிசிம்ஹன் said...

கல்லிடைக்குறிச்சி கூட அழகான ஊருதானே.
அதைப் பத்தியும் நீங்க எழுத வேண்டும் தி.ரா.ச.
எங்க வீட்டுக்காரரின் தாத்தா ஊர் அது. எல்லாம் சம்பந்திகள் முறை.